கதையாசிரியர் தொகுப்பு: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

10 கதைகள் கிடைத்துள்ளன.

குயில்களும் கழுகுகளும்

 

 மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்… டி.எம்.செளந்தரராஜனுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். “சின்னையா, அடுத்தது ஒங்க பாட்டுதான். ஸ்டேஜுக்கு வாங்க…” பேங்கோஸ் வாசிப்பதில் ஜேம்ஸ் ஓர் அசகாய சூரன். ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்; நிலவில் குளிரில்லை…’ என்கிற எம்ஜிஆர். பாடலில் வருகிற நீளமான


ஸ்வீட் சர்வாதிகாரி

 

 மூணாந்தேதி. “டாளிங், பேப்பர்லாம் கொண்டு வந்து போடு.” “எதுக்கு ?” “பழைய பேப்பர்க்காரன் வந்திருக்கான்.” “பழைய பேப்பர்க்காரன யார் கூப்ட்டா ?” “நாந்தான்.” “பேப்பர் இப்பப் போட வேண்டாம். பேப்பர்காரனப் போகச் சொல்லுங்க.” “பேப்பர் நெறைய சேந்துருச்சேம்மா?” “இப்ப வேண்டாம்னா வேண்டாம்தான். அவனத் திருப்பியனுப்புங்க.” முறைப்பும் முனகலுமாய்ப் பேப்பர்க்காரன் திரும்பிப் போனான். ‘அடி சர்வாதிகாரீ’ என்று சபித்து, அவளுக்கு டூ விட்டு விட்டு ஆஃபீஸுக்குக் கிளம்பிப் போனேன். முப்பதாந் தேதி. பாக்கெட்டும் காலி, வாலட்டும் காலி. “இன்னிக்கி


அரசியல் வியாதிகள்

 

 மசூதிக்குப் போகிற வழியில் ப்ளாட்ஃபாம் ஓரத்தில் அந்த அற்புதமான ஓவியத்தைப் பார்த்தேன். சரஸ்வ தி. வெள்ளைத்தாமரைப் பூவில் வீற்றிருக்கிற சரஸ்வதி, வீணை மீட்டிக் கொண்டிருக்கிற சரஸ்வதி. வசீகர முகம் ஒளிரும் சரஸ்வதி. கூட்டத்தோடு கூட்டமாய் நின்று அந்த ஓவியத்தை ரசித்தேன். வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் வீணை செய்யும் ஒலியிலிருப்பாள் என்று முன்னொரு காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த பாடல் ஞாபகத்துக்கு வந்தது. இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்த ஓவியக்கலைஞன் ப்ளாட்ஃபாமில் பின்புறச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். தரைமட்டத்திலிருந்து கொஞ்சமே


நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்

 

 அவளைப் பார்த்ததும் அசடு வழிவதைத் தவிர்க்கப் பிரயத்தனப் பட்டேன். நடிப்பு வரவில்லை. “யார்ங்க அது” என்றாள். “அது, நம்ம செல்வராஜ்.” “நம்ம செல்வராஜா, அது யார்ங்க நம்ம செல்வராஜ்?” “நம்ம எக்ஸ் ஸ்டாஃப், நம்ம கடையில வேல பாத்த பையன். அதுக்குள்ள மறந்துட்டியா நீ?” “என்னமோ கவர் குடுத்துட்டுப் போன மாதிரியிருந்ததே? இன்விடேஷனா? அவனுக்குக் கல்யாணமாமா?” “ஆமா” என்கிற ஒரே வார்த்தையில் நான் தப்பித்திருக்கலாம். முடியவில்லை. நடிக்கத்தான் வரவில்லை, இழவு பொய் சொல்லவாவது வருகிறதா! “என்னன்னு காட்டுங்களேன்”


கார் வித்த காசு

 

 கார்த்தால கண்ணு முழிக்கறச்ச மணி பதினொண்ணரை. பதினொண்ணரை கார்த்தால சேர்த்தியா மதியத்துல சேர்த்தியா? அஞ்சரை மணிக்கி எழுந்துண்டு, மெரினாவுல ஒரு டிரைவ் போய் வந்து எக்ஸஸ்ஸைஸ் சிட்டு அந்த நாளை ஸ்டார்ட் பண்ணி, நைட் பத்துப் பதினொண்ணு வரைக்கும் பம்பரமாய் சுத்திண்டிருந்த காலமெல்லாம் மலையேறிடுத்து. கார்த்தால ஒம்போதிலயிருந்து நைட் ஒம்போது வரைக்கும் நம்மக் கடையிலதான் வாசம். நடுவுல நடுவுல வேற ஆக்ட்டிவிட்டீஸ். வியாபாரிகள் சங்கத்துல தீவிர உறுப்பினர். ரோட்டரி க்ளப் செக்ரட்ரி. ஃபில்ம் ஸென்சார் போர்டுல மெம்பர்.


யாழ் இனிது! யார் சொன்னது?

 

 உறக்கம் தடைபட்டுக் கண்விழித்துப் பார்த்தான் ரமணன். புன்னகையுடன் பக்கத்திலே வேணி. “என்ன வேணி, சுகமான நித்திரையிலிருந்தனான், கலைச்சிப் போட்டீர்” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டான். “துப்பாக்கிச் சத்தத்திலையும், பொம்மர்களின் இரைச்சலிலையும், ஷெல் பயத்திலையும் வடிவா உறங்கிக் கன காலமாச்சுதுதானே! இண்டைக்கித்தான் ஹெலிக்கொப்ரர் சத்தங்கூட இல்லை, வரப்பிலை கொஞ்சம் படுக்கலாமெண்டா….” வேணி சட்டென்று எழுந்து கொண்டாள்.”அப்ப நீங்க படுங்கோ, நான் போறன்.” “எங்கை போறீராம்?” “அம்மாவும் அப்பாவும் இந்தியாவுக்குப் போகினம். உங்களுக்குப் பிடிக்கலையெண்டா நான் மட்டும் எதுக்கு இங்கை


ஃபெயில் காலம்

 

 “பெரியப்பா மெட்ராஸ்க்கு நாளக்யாம்மாப் போறாவ?” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட செல்லம்மாவைக் கூர்மையாய்ப் பார்த்தாள் அம்மா. “என்ன, பெரியப்பா போறாவளான்னு மொள்ளமாக் கேக்க? நீயுந்தானட்டி அவியக் கூடப் போற! ராத்திரி ஏழு மணிக்கி ரயிலாம். வீராவரத்ல போய் ரயிலேறணும். நாலு மணிக்கெல்லாம் பெரியப்பா வந்துருவாவ. அப்ப அளுதுட்டு நிக்யாத. உடுப்பெல்லாம் எடுத்து வச்சிட்டியா?” செல்லம்மாவுக்கு இப்போதே அழுகை வரப் பார்த்தது. கடந்த ஒரு வாரமாய், நாள் தவறாமல் அம்மா இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிற சமாச்சாரம் தான். ஆனாலும்


தனியே தன்னந்தனியே..!

 

 யாழ்ப்பாணத்து மக்கள் திருச்சி வானொலியையும் சென்னை வானொலியையும் குறிப்பிடுகிறபோது, ‘திருச்சி ரேடியோ சிலோன், மெட்ராஸ் ரேடியோ சிலோன் எண்டுதான் சொல்லுவினம்’ என்பார் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் என் நண்பர் சாந்தன். டால்டா என்றாலே வனஸ்பதி என்று ஆகிவிட்ட தைப் போல, டார்ட்டாய்ஸ் என்றால் கொசுவத்தி என்று இருப்பதைப் போல, 25 வருஷத்துக்கு முன்னால் வானொலி என்றால், ரேடியோ சிலோன் தான். அதைப் போல, ஸ்கூட்டர் என்றால் லாம்ப்ரெட்டாதான். பிற்காலத்தில், லாம்ப்ரெட்டா சுருங்கி லாம்பியாக ஆனபோதுதான் ஸ்கூட்டர் ஓட்டுகிற பேறு


இன்று அவர்கள் நாளை நாம்!

 

 விஸ்வநாதனின் அப்பா இறந்த தகவல் கிடைத்ததும், அண்ணா நகரிலிருந்து பொடி நடையாக வில்லிவாக்கத்துக்குப் புறப்பட்டேன். ஏ.ஸி. காரில் பந்தாவாகச் சென்னையைச் சுற்றி வந்த காலமொன்று இருந்தது. பிசினஸ் மந்தமான பிறகு, இப்போதெல்லாம் பஸ் அல்லது பொடி நடைதான்! உடம்பைப் பள்ளிக்கூடத்தில் வைத்திருந்தார்கள். விஸ்வநாதனின் தாத்தா கட்டின பள்ளிக்கூடம். வாரிசு முறைப்படி தாத்தாவுக்குப் பிறகு அப்பா, அப்பாவுக்குப் பிறகு விஸ்வநாதன்தான் இப்போது கரஸ்பாண்டன்ட்! நான் செழிப்பாக இருந்த காலத்தில் ஏற்பட்ட நட்பு, நொடித்துப் போன பின்பும் தொடர்வது பெரிய


மறைமுகமாய் ஒரு நேர்முகம்!

 

 அந்த இன்டர்வியூவுக்கு நண்பன் பிரபுவின் பைக்கில் நானும் தொற்றிக்கொண்டு கிளம்பினேன். எங்கள் இருவரில் ஒருத்தருக்குக் கட்டாயம் இந்த வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. வழியில்… ஒரு எண்பது வயது மூதாட்டி, சாலையைக் கடக்கத் தடுமாறிக்கொண்டு இருக்க, ‘கொஞ்சம் பொறுடா!’ என்று இறங்கி ஓடினேன், அந்த மூதாட்டிக்கு உதவ! இன்டர்வியூ அவசரத்தில், ‘நீ நிதானமா அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வா’ என்று பைக்கைக் கிளப்பிக் கொண்டு பறந்துவிட்டான் பிரபு. இன்டர்வியூ கோவிந்தா! அந்தப் பாட்டியம்மாவுக்கு உதவி பண்ணி