கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ராஜகுமாரன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

காட்சிப் பிழை!

 

 இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்தக் கடற்கரைச் சாலை வேறு மாதிரியானது. அரசலாற்றங்கரையிருந்து கிழக்காக இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்காக நீளும். இடதுபக்கம் நெடுக அருகருகே அடப்ப மரங்கள் அணிவகுந்து நிற்கும். கண்ணாடிக் கவசத்தின் அடிப்பகுதிக்குள் கருப்பாக அழுக்கு மண்டி கிடக்கும் நகராட்சிக்குழல் விளக்குத் தூண்கள். கப்பிக்கற்கள் துருத்திக் கொண்டு நிற்கும் சமனற்ற தார்ச்சாலை. வலைகளுடன் நடமாடும் மீனவர்கள் தவிர கடற்கரைக்கு வந்துபோவவோர் எண்ணிக்கையும் குறைவுதான். பட்டம் விடுவதும் கடலில் விளையாடுவதுமாடீநு திரியும் எங்களைப் போன்ற சின்னப்


ரௌத்ரம் பழகாதே!

 

 வானிலிருந்து சின்னச்சின்ன ஊசிகள் பூமியில் விழுவதுபோல் இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. தூறலில் நனைந்தபடி நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டதுமே, தொலைக்காட்சிப்பெட்டி திடீரென கத்தத் தொடங்கியது. தரமற்ற திருட்டுவீடியோ படத்தின் பிரதியில் அண்மைக்கால அதிரடிகதாநாயகன், தொடக்கத்திலேயே குத்தாட்டம் போடத்தொடங்கினான்.அந்த ஒழுங்கற்ற ஓசையை என்னால் தாங்க முடியவில்லை. என்ன செய்வது? பயணங்களில் இயற்கையை ரசிக்கும் காலங்கள் தொலைந்துவிட்டது. ஒழுங்கற்ற வீடியோ ஓசையிலிருந்து கவனம் திருப்ப ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓடவிட்டேன்… எத்தனைபயணங்கள்.எவ்வளவு அனுபவங்கள்…ஒருவகையில் வாழ்வே பயணங்களின் தொகுப்புதானே! பொதுவாக பேருந்துப்


நீர்க்கொடி

 

 நேற்றிரவு கூட வனஜாக்கா, கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் என் கனவில் கேட்டது. சத்தம் என்றால் உருவம் இல்லையா? இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கனவில் காட்சியைவிட ஓசையே மேலோங்கி இருந்தது. பொழுது விடிந்து வெகு நேரத்திற்குப் பின்னும் சங்கிலிச் சகடையின் ஒலி அதிர்வுகள் கசிந்தபடியே இருக்கின்றன. இப்போது என்றில்லை. எப்போதுமே இப்படித்தான். வனஜாக்கா வரும் கனவுகளில் உருவங்களை விட ஓசையே தூக்கலாக இருக்கிறது. கிணற்றடியில் சகடை உருளும் ஓசை. ஒருவேளை சகடைச் சத்தம்தான் வனஜாக்காவின் ஒலி வடிவமாக


முதல் ரேடியோ பாடிய வீடு

 

 அம்மாவின் இடது தாடைக்குக் கீழ் இருந்த மருவையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரு சதை மூக்குத்திபோல் மரு மின்னியது. குழந்தைமையான அம்மாவின் முகத்தில் கூடுதலாகச் சேர்ந்த அழகு அது. பால் குடி பருவத்தில் மார்பு தழுவி பால் அருந்தும்போது, விழிகளை முகம் நோக்கி மேயவிட்ட ஒரு தருணத்தில் முதன்முதலில் தென்பட்டது. அப்போது ஒரு சிறு சதைப் புள்ளியாகத் தெரிந்தது. மரு என்று அறிந்தது சில வருடங்களுக்குப் பிறகு. சதை மூக்குத்தி என்று நான் உருவகப்படுத்திக்கொண்டது ரொம்ப வயசு