கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ஜூலியட் மரியலில்லி

4 கதைகள் கிடைத்துள்ளன.

வள்ளி அத்தை

 

 தீபாவளி வரப்போகிறது என்றால், எல்லோருக்கும் ஆனந்தமாக இருக்கும். எனக்கோ வயிற்றைக் கலக்கும். காரணம்… வள்ளி அத்தை! தீபாவளிக்கு முன்னமே எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள் வள்ளி அத்தை. அதற்கான முன்னேற்பாடுகளில் அதிகம் பாதிக்கப்படுவது, நான்தான். ”சாரு… வள்ளி அத்தை வரப்போவுது. வீட்டை ஒட்டடை அடி, புத்தகத்தை எல்லாம் அடுக்கி வை…” என்று அம்மாவும், ”சாரு… தோட்டத்தை எல்லாம் சுத்தப்படுத்தக் கூடாதா… வள்ளி அத்தைகிட்டே திட்டு வாங்கிட்டுத்தான் செய்யணுமா..?” என்று அப்பாவும் பரபரப்பார்கள். ”வள்ளி அத்தை வருதுனா… ஏம்மா அப்பாவும்


மித்ர தோஷம்!

 

 ”குமார்… நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து வர்றாங்க. எனக்கு ஒண்ணும் ஓடாது. நீ பக்கத்துல இருந்தா தைரியமா இருக்கும். வர்றியாடா?” – பரமேஸ்வரன் போனில் கேட்டார். குமார் சிரித்துக் கொண்டார். ”உன் மகளைத்தானே பொண்ணு பார்க்க வர்றாங்க. உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்ற மாதிரி படபடப்பா இருக்கியே! சரி… சரி… காலையில ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடறேன்…. ஸாரி, வந்துடறோம். சுலோசனாகிட்டே டிபனுக்கு புதினா சட்னி அரைச்சு வைக்கச் சொல்லு!” – போனை வைத்துவிட்டு அமர்ந்தார் குமார். வாழைப்பூ அரிந்து


பொங்க சீர்

 

 சின்னச் சின்ன கருவேலங்கன்றுகளை குழிகளில் வரிசையாக நட்டுக்கொண்டிருந்தான் ஜெயபாலு. “பொண்ணுக்கு பொங்க சீர்வரிச வைக்க சாமாஞ்செட்டு எடுக்கப்போயிருக்கு உங்கம்மா. ம்… எது தவறினாலும் உங்க தங்கச்சிக்கு பண்டிகைக்குப் பண்டிகை சீர் தவறதில்ல…” – குழிகளில் தண்ணீர் ஊற்றும்போதே சேர்த்து போதித்தாள் கோமளா. வீட்டில் தனித்துப் பிறந்தவள் என்பதால், இங்கே மலருக்கு சீர், செனத்தி செய்வதைப் பார்த்தாலே கோமளாவுக்குப் பற்றிக் கொண்டுவிடும். ஆனாலும், ஜெயபாலுக்கு மனைவி சொல்லே மந்திரம். “ம்… உரம் வாங்கணும்னு 500 ரூபா கேட்டேன். பதிலே


வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு

 

 வயிராத்தா வந்து விட்டாள் என்பதை சமையலறையிலிருந்து கசிந்த மீன் குழம்பின் வாசனையே உணர்த்தி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை சமையல்காரர்களையும் நிறுத்தி மீன் குழம்பு வைக்கச் சொன்னாலும், வயிராத்தா குழம்புக்கு ஈடாக, ஒரு ஓரம்கூட வர மாட்டார்கள். மீன் குழம்பு என்றில்லை… அவள் ஒரு குப்பைக் கீரையை வதக்கி வைத்தாலும் வாசனையும் ருசியும் ஆளைத்தூக்கும் என்று எங்கள் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அத்தனை பேரும் சத்தியம் செய்வோம். வயிராத்தா கைப்பக்குவத்துக்காகவே லீவுக்கு வீடு செல்லாமல் விடுதியில் தங்கிவிடும்