கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.எஸ்.முருகராசு

1 கதை கிடைத்துள்ளன.

சித்திரத்தையல் பிரிவு

 

 பகல் ஷிஃப்ட் தொடங்கியது. இன்று எப்படியாவது சுபாவிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்போடுதான் கம்பெனிக்குள் நுழைந்தேன். எனது ஷிஃப்ட் ஆட்கள் யாரும் வரவில்லை. கண்ணாடி ஃபிரேம்களால் சூழப்பட்ட மெஷின் அறையை நோக்கி நடந்தேன். ஹாலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரவு ஷிஃப்ட் ஃபிரேமர், ஹெல்ப்பர்கள் காலை வணக்கம் வைத்தனர். சிரித்தபடி கை அசைத்துவிட்டு, கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு மெஷின் அறைக்குள் புகுந்தேன். ஜில்லென்று இருந்தது ஏசி. ”வாங்க பாஸு” என்றான் தினகரன். நட்போடு தலை அசைத்துவிட்டு,