கதையாசிரியர் தொகுப்பு: எம்.ஏ.சுசீலா

21 கதைகள் கிடைத்துள்ளன.

இடைவெளிகள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நீமாவின் அன்றைய பொழுது ஒரு செல்லச் சிணுங்கலோடு அழகாகப் புலர்கிறது. போர்வையிலிருந்து நீண்டு வெளிப்பட்ட அவளது தந்த நிறக் கரங்கள், காப்பிக் கோப்பையை மெள்ள ஏந்தி உதட்டருகே கொண்டு செல்ல, “என்ன மம்மி…இன்னிக்கு என்ன அவசரமாம்? ஏழு மணிக்கே என்னை எழுப்பறீங்க?” என்று தன் தாயை உரிமையாகக் கடிந்து கொள்கிறாள், “நீதானேம்மா ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொன்னே?” “ஓ! ஹெல் வித்


மண்ணில் விழாத வானங்கள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்னப்பா… ‘ஜுயிவில் சிப்போர்ட், எல்லாம் கொடுத்தாச்சா?” பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கணித ஆசிரியர் கந்தசாமியின் குரல் கணீரென்று சுப்பையாவை வரவேற்கிறது. “ஆமாம் சார்! காலையிலேயே ‘ரிப்போர்ட்’ பண்ணிட்டேன். இப்ப ஆஃபீஸ்ல சர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாம் சரி பார்த்துக்கிட்டு இருக்காங்க. அது தான் கொஞ்சம் தாமதமாயிடுச்சு” என்றவன், சற்றுத் தயங்கியபடி அவரிடம் கேட்கிறான்: – “இன்னிக்கு ஷாருக்குக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு போலிருக்கே? ஸ்கூல்விட்டு நாலரை மணிக்கே


தொடு மணற் கேணி

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புரொபசர் நாராயண சர்மா, தம் இருக்கையில் வசதியாகச் சாய்ந்தபடி பார்த்தார். ‘டேபிள் வெயிட்’டில் அடியில் படபடத்த தாள்களில் அவர் பார்வை ஒருகணம் சென்ற நிலைத்தது. ‘ஆர் தி மிண்டியன் விமன் லிபரேட்டட்?’. இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் இன்டர்நேஷனல் செமினாரில் தாம் படிக்க வேண்டிய ‘ரிசர்ச் பேப்ப’ரின் தலைப்பைக் கண்ட அவரது இதழ்க் கடையில் ஒரு புன்னகை மின்னி மறைந்தது. உலகில் உள்ள சர்வ


விரிசல்

 

 கையில் வைத்திருந்த பனையோலை விசிறியால் வீசிக்கொண்டே ‘தோல் தலகாணி’யைத் தலைக்கு வைத்துக்கொண்டு வளவின் ஒரு பக்கம் கண்ணை மூடிப் படுத்திருந்தாள் சாலாச்சி. அது ஆழ்துயில் இல்லை, அறிதுயில் என்பது அங்கிருந்த எல்லோருக்குமே தெரிந்ததுதான். “ஏ தெவ்வி, இங்ஙனே கொஞ்சம் வா” என்று இரண்டாம் கட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்குக் குரல் கொடுத்தபடி தானும் அதை உறுதிப்படுத்தினாள் ஆச்சி. கழுவிக்கொண்டிருந்த சாமானை அப்படியே போட்டு விட்டு முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வந்த தெய்வானை, “என்ன ஆத்தா வேணும்?


வட்டங்களும் பரிமாணங்களும்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிளை நடையில் சாத்தி வைத்து விட்டு அவன் கூடத்தில் நுழைந்தபோது அங்கே ஏக இரைச்சலும், சிரிப்புமாயிருந்தது. வீட்டில் இரண்டே பேர், ராதா, அவன் மகாவி; பாலு. அவன் தம்பி, கிரிக்கெட் வர்னனையை டிரான்ஸிஸ்டர் உச்ச ஸ்தாபியில் முழங்கிக் கொண்டிருக்க, அதுவும் போதாதென்று அதற்குள்ளேயே தலையை நுழைத்துக் கொள்கிற மாதிரி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்த விதம், அவனுக்கு இலேசான எரிச்சல் கலத்த கோபத்தை கட்டியது.


ரோக்ஸானாவுடன் ஒரு மாலை…

 

 எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கி்றேன். இப்போது இதுதான் பிடித்திருக்கிறது. கையில் எடுத்திருக்கும் வேலைக்குத் தேவையாகவும் கூட…! வெற்று ஆரவாரங்களிலிருந்து……., அன்றாடவாழ்வின் ஆயாசமூட்டும் அசட்டுக்கூச்சல்களிலிருந்து விடுபட்ட தனிமை…….! மொழியின்…….பேச்சின் ஊடாட்டமற்ற தனிமை ! எப்போதோ ஒரு வருடம் பள்ளியில் ஒன்றாய்ப் படித்த ஆச்சி…,….இந்த மடத்தை நிர்வகித்துவரும் அந்த ஆச்சிதான் அதை எத்தனை லாவகமாக…அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? நான் எப்போது அங்கே வந்து தங்கினாலும் எனக்கே எனக்கான ஒதுக்கமான அந்த அறை எனக்காகவே காத்திருக்கும். பிரதானக் கட்டிடத்திலிருந்து ஒரேயடியாய் விலகியும் இல்லாமல்…அதே


ஒரு கணம் ஒரு யுகமாக…

 

 வலுவனைத்தையும் செலுத்தி விலக்க விலக்கப் பிடிவாதத்தோடு படர்தலைத் தொடர்கிற பழங்குளத்து நீர்ப்பாசியாகக் குறிப்பிட்ட அந்தக்கணத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள சுலோ முயல்கிற ஒவ்வொரு முறையும் அது முன்னை விட வீரியத்தோடு முண்டியடித்துக்கொண்டபடி தன்னை அவளுக்குள் உட்புகுத்திக் கொண்டிருந்தது. அது ஒன்றும் அவள் வாழ்க்கையில் அப்படி முக்கியமானதும் உன்னதமானதுமான ஒருகணம்அல்ல ; சொல்லப்போனால் அப்படிப்பட்ட அசம்பாவிதமான ஒரு கணம் தன் வாழ்நாளில் சம்பவித்திருக்கவே கூடாதென்றும், அதை மட்டும் தன்னால் நீக்கி விட முடியுமென்றால் இதுவரை இருந்த நிம்மதியை மீட்டெடுத்துக்கொண்டு விடலாமே


சாத்திரம் அன்று சதி

 

 அமுதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த ஒரு மௌனத் தவத்தில் ஆழ்ந்தவனாய் அரண்மனை மேல் மாடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இராமன். எதிரே வெள்ளி ஓடையாகச் சலசலத்து ஓடும் சரயு ஆறு அவனுள் பல எண்ணக்குமிழிகளை அடுக்கடுக்காகக் கிளர்த்தியபடி வேதனைப்பள்ளத்தாக்குகளின் விளிம்புகளுக்கே அவனை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. இதே இடத்தில் இருந்து கொண்டு இந்த நிலவொளியில் தகதகத்து ஓடும் சரயுவின் ஜொலிப்பைக் குழந்தைப்பருவத்தில் கைகொட்டி ரசித்திருக்கிறேன்


இழப்புக்கள் எதிர்பார்ப்புக்கள்…

 

 ஸ்கூல் விடுகிறநேரம் இந்தமழைக்கு எப்படித்தான் இவ்வளவு கணக்காய்த் தெரிகிறதோ தினம் நாலரைக்கு பெல் அடிக்க வேண்டியதுதான்…என்னவோ தனக்காகவே அது அடிக்கப்படுகிற மாதிரியல்லவா நினைத்துக்கொள்கிறது! எப்படியோ கடந்த மூன்று நாட்களாக உமா ஒருமாதிரி தப்பி விடுகிறாள்.ஒருநாள் கிருஷ்ண ஜெயந்தியைக்காரணம் காட்டி மூன்று மணிக்கெல்லாம் பர்மிஷன் போட்டாயிற்று; இரண்டு நாட்களாக வேறொரு ஸ்கூலில் டீச்சர்ஸ் மீட்டிங் ஒன்று இருந்ததை முன்னிட்டு இரண்டு மணிக்குப்போய் நாலு மணிக்குள் விடுபட்டு பஸ் ஸ்டேண்டுக்கு வந்து விட முடிந்தது. இன்ரு வேறு வழியில்லை, மழையில்


உயிர்த்தெழல்..

 

  ஒரு முன் குறிப்பு; கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் [பெயர் சுட்ட விரும்பவில்லை] ஒரு அனைத்துக் கல்லூரிக்கலை விழா நடந்து கொண்டிருந்தபோது மின் இணைப்பைத் துண்டித்து விட்டுப் பல மாணவியரைக் கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கின சில சமூக விரோத சக்திகள்.அதன் பிறகு பலப்பல ஆண்டுகள் அந்தக்குறிப்பிட்ட கல்லூரி மாணவி என்றால் அவளுக்குக் கல்யாணம் நடப்பதே கேள்விக்குறியாயிற்று. அப்போது எழுதப்பட்ட ஒரு சிறுகதை இது[1999] . நம் சமூகத்தின்