தொடு மணற் கேணி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 11,629 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புரொபசர் நாராயண சர்மா, தம் இருக்கையில் வசதியாகச் சாய்ந்தபடி பார்த்தார். ‘டேபிள் வெயிட்’டில் அடியில் படபடத்த தாள்களில் அவர் பார்வை ஒருகணம் சென்ற நிலைத்தது.

‘ஆர் தி மிண்டியன் விமன் லிபரேட்டட்?’. இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் இன்டர்நேஷனல் செமினாரில் தாம் படிக்க வேண்டிய ‘ரிசர்ச் பேப்ப’ரின் தலைப்பைக் கண்ட அவரது இதழ்க் கடையில் ஒரு புன்னகை மின்னி மறைந்தது.

உலகில் உள்ள சர்வ தேசப்புகழ் பெற்ற விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவு சிறப்புப் பெற்ற “ஆன்த்ரோபால ஜிஸ்ட்’டுகளில் ஒருவர் நாராயண சர்மா, இந்தியாவில் உள்ள சமூகக் கட்டுப்பாடுகள், மகளிர் முன்னேற்றத்தை எந்த அளவு பாதித்திருக்கின்றன என்பதைப் பற்றிய தீசீஸுக்காகப் ‘போஸ்ட் டாக்ட்ரல்’ பட்டம் பெற்றவர். பி.எச்.டி. பட்டம் பெற அவரது ‘கைடன்ஸ்’காகக் கியூவில் காத்திருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளம். அவரே ‘கைடா’க அமைய வேண்டும் என்பதற்காக ‘மினிஸ்டீரியல் லெவல்’ வரை சிபாரிசுக்குப் போனவர்களும் உண்டு.

kalki1980-03-09_0060-picஅன்றைய செமினாரில் வெண்கலக்குரலில் ‘பேப்ப’ரை வாசித்து முடித்த சர்மா பார்வையாளர்களின் மீது தமது கம்பீரமான பார்வை யொன்றைப் படரவிட்டார். கம்பிக் கூண்டு வண்டியிலிருந்து வெளியேறி ‘டிரெயின’ரின் சோதனைகளுக்குத் தயாராக மைதானத்தின் நடுவில் நிற்கும் ‘சர்க்கஸ்’ சிங்கத்தைப் போல… ‘ஆடியன்’ஸின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ளத் தம்மைத் தயாராக்கிக் கொண்டார். பத்துப் பதினைந்து நிமிடங்கள்…தொடர்ச்சியாக வினாக்களும், விடைகளும் அந்தக் ‘கான் ஃபரன்ஸ்’ மாஸ் அதிர வைத்தன. தம் ‘ரிசர்ச்’ மாணவர்கள் வீடு வீடாகத் தெருத் தெருவாக…கிராமம் கிராமமாகச் சென்று சேகரித்த புள்ளி விவரங்களுடன், இந்தியாவில் மாநில வாரியாக… இனவாரியாக…சாதிவாரியாக நிலவும் பெண்ணடிமைச் சாபக்கேட்டை அவர் பிட்டுப்பிட்டு வைத்த பாங்கைக் கண்டு கேள்வி கேட்டவர்களெல்லாம் வியந்து போனார்கள். இந்த ‘செமினா’ரில் கலந்து கொள்ள வென்றே மாஸ் கோவிலிருந்து வந்திருந்த பேராசிரியர் ஒருவர் மேடைக்கு ஓடிச் சென்று சர்மாவைக் கட்டியணைத்து அவரது இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டார். பல கோணங்களிலிருந்தும் காமிராக்கள் பளிச்சிட்டன.

சர்மா வீட்டு முன் ஹாலில், தரையில் பவ்யமாகக் குனிந்து மண்டியிட்டபடி அவரது ‘ஷூ லேஸை’ அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாள் வாழ்க்கைத் துணைவி பர்வதம்.

“எங்கே அந்தக் குட்டியைக் காணோம். படிச்சிண்டிருக்காளா?”

மெல்லிய நரவில் நடுங்கியபடி வந்தது பர்வதத்தின் பதில்: “இல்லே! இன்னிக்குச் சாயங்காலம் காலேஜுலே என்னவோ ‘ஃபங்ஷன்’ இருக்காம். கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்குன்னு அஞ்சு மணிக்கு ‘ஃபோன்’ பண்ணினா! எப்படியும் ஏழரைக்குள்ளே வந்துடறதா…”

“மணி ஒன்பது அடிக்கப் போறதே! ராத்திரி எட்டு மணிக்கப்புறம் பொம்மனட்டிகள் வீட்டங்கி இருக்காமே சுத்திண்டிருக்கிறது எனக்குப் பிடிக்காதுன்று உனக்குத் தெரியாது?”

சர்மா கர்ஜித்துக் கொண்டிருக்கும்போதே லதா சினேகிதியின் காரில் வந்திறங்கி அவளுக்கு ‘பை’ சொல்லிவிட்டுப் படியேறி வந்தாள்.

மிரட்டல்களை யெல்லாம் விட அந்த வீட்டாரை ரொம்பவும் பயமுறுத்தும் சர்மாயின் மௌனம். சாப்பாட்டு மேஜையில் மெள்ளக் கலைந்தது.

“அப்படி என்னம்மா..இத்தனை நாழி வரைக்கும் ‘ஃபங்ஷன்’ உங்க காலேஜிலே! காலேஜ் டே கூட இல்லையே?”

“அது வந்துப்பா…இன்னிக்கு என்.எஸ்.எஸ். யுனிட் இனாகரேஷன், அதுக்கு ‘சோஷியல் வெல்ஃபேர் மினிஸ்டர் வந்து அட்ரஸ் பண்னினதாலே ‘மீட்டிங்’கை அட்டெண்ட் பண்ணாமப் போக யாருக்கும் ‘எக்ஸம்ப்ஷன் ‘ தரமாட்டேன்னுட்டா.”

“அப்படி என்ன ஸ்பெஷலா பேசினார் உங்க மினிஸ்டா?”

அப்பாவின் ‘மூட்’ கொஞ்சம் ‘லைட்’ ஆகி விட்ட தைரியத்தில் உற்சாகமாக உரையாடினாள் லதா.

“எல்லாம் உங்க ‘டாப்பிக்’தான்ப்பா”

“என்னது. என் ‘டாப்பிக்கா?”

“ஆமாம். ‘விமன் இமான்ஸிபேஷன்’ தான் டாப்பிக். பொருளாதார சுதந்திரம் இல்லாம இருப்பது பெண்கள் அடிமையாய் இருக்க ஒரு காரணம்! அதை ஓரளவுக்குக் கிராமத்திலே இருக்கிற பெண்களுக்கும் எடுத்துச் சொல்லி, அவாளையும் ‘இண்டிபெண்டண்ட்’டா ஆக்க முயற்சி பண்ணணும்! அதுக்கு என்னென்ன வழியிலே எல்லாம் செயல்படலாம்னு…”

புரொபசரின் குரல் லதாவின் ஊக்கத்தை இடைவெட்டியது.

“ஆமாம்! ஏறுகிற குரங்குக்கு ஏணி வச்சி வேற கொடுக்கணுமாக்கும்?”

தம் ஜோக்கைத் தாமே ரசித்துச் சிரித்த வண்ணம் கைகழுவி விட்டு வந்தார்.

லதா மலைத்துப் போய் நின்றாள். அப்பாவின் ‘டியூயல் ரோல்’ – இரட்டை வேடம் அவளுக்கொன்றும் புதிதல்ல வென்றாலும்…இந்த வார்த்தைகள்…இத்தனை ‘குரூ’டாக அருவருப்பாக…எப்படி?

“குரங்கு…ஏணி…?”

படுக்கையில் விழுந்த பின்னரும் கூட. அப்பாவின் வார்த்தைகள் அவளைத் துரத்தித் துரத்தி அலைக்கழித்தன. நேரே…அவரோடு பேச முடியாதவற்றை மானசீகமாய்…மனசுக்குள் பேசித் தீர்த்தாள்.

“அப்படிப் பார்த்தா…உங்க ‘தீஸிஸ்’ கூட ஒரு வகையிலே ஏணிதானேப்பா?”

“நோ… நாட் தட்! அது அவர்களுக்காக வைக்கப்பட்ட ஏணியில்லே. தன்னோட ‘ஸ்டேட்டஸ்’ உயரத்துக்காக அப்பா தனக்குத் தானே வச்சுண்ட ஏணி!”

“என்னதான் இருந்தாலும் தான் ஏணியிலே ஏறக் கருவியா இருக்கறவாலைப் பத்தி… அவாளுக்கு ஒரு ‘ஸோல்யூஷன்’ ஏற்படறதைப் பத்திக் கொஞ்சம் கூடவா அவருக்குக் கவலை இருக்காது?”

“ஏன் இல்லே! நிறையவே இருக்கு! பட்…தி அதர் வே! ‘ப்ராப்ளம்ஸ்’ இருந்திண்டே இருக்கிற வரைக்கும்தானே அப்பா மாதிரி ஆட்களுக்கெல்லாம் ‘மாக்னிமம்’ டேட்டா கலெக்க்ஷன் பாஸிபிள்! ‘போஸ்ட்டாக்ட்ரல்’ என்ன… அதுக்கும் மேலே ஏதானும் ‘டிகிரி’ இருந்தால் கூட ‘அச்சீவ்’ பண்றது கஷ்டமா என்ன! பட்… ‘செல்யூஷ’ன்னு ஒண்ணு ஏற்பட்டுப் போச்சுன்னு – கேணியிலே நீர் வத்திப்போயிட்டா…அந்த குளத்து அறுநீர்ப் பறவைகள் எங்கே போகும்?”

– 09-03-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *