கதையாசிரியர் தொகுப்பு: எச்.முஜீப் ரஹ்மான்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சொல் இனிது சொல்வது இனிது

 

 நான் விழித்தெழுந்து உடைமாற்றிக் கொண்டு கிளம்பும் வேளையில் உம்மாவும் வாப்பாவும் வந்து “உப்பாவைப் பற்றி இப்படியொரு காரியம் நீ செய்வாய் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்றும், உப்பாவைப் பற்றி பேசப் போகாதே” என்றும் கண்டிப்புடன் சொன்னதினால் எனக்கு ரொம்பவும் சங்கடமாக போனது. எனது பெரும் மனக்கோட்டை இடிந்து நொறுங்குவதின் சப்தத்தை நான் உணரத் தொடங்கினேன். எனினும் பெற்றோர் சொல்லுவதை மீற முடியாமல் என் மனதுக்குள்ளே அழுதுகொண்டு, படுக்கையில் புரண்டு விம்மினேன். அன்றிரவு உம்மா சாப்பிட அழைத்த போது


தீயடி நானுனக்கு

 

 இன்று இலக்கிய கூட்டத்தில் எனக்கு கட்டுரை வாசிக்க வேண்டிய முறை.கட்டுரையை ஒருமுறை கூட படித்து பார்த்தேன். நன்றாக வந்திருந்தது.அன்றைய செய்தி தாளில் நகரில் பள்ளியொன்று தீப்பிடித்து பள்ளிகுழந்தைகள் பலர் கருகி இறந்த துக்கச் செய்தி என்னை விசனத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் சாயும் காலம் பஸ்ஸை பிடித்து சங்கத்துக்கு சென்றேன்.நகரின் மையத்திலிருந்த அந்த கட்டிடம் இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்ல தீனி போடும் இடம்.பலமுறை அந்த கட்டிடத்தின் சங்க அறையில் நாங்கள் எல்லோரும் கூச்சல்,கும்மாளம் அடித்தாலும் யாருமே இது பற்றி