கதையாசிரியர் தொகுப்பு: உதயசங்கர்

5 கதைகள் கிடைத்துள்ளன.

கரை

 

 நெல்லையப்பபிள்ளை குறுக்குத்துறையை நோக்கி வேகமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். இரவு மணி பத்துக்கும் மேலருக்கும். அன்று மதியம் தென்காசிக்குப் போயிருந்தார். அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணன் மகள் துர்கா தூக்கு மாட்டிச் செத்துப்போனாள். சவத்துமூதி புருஷனைப் பிடிக்கலைன்னா அத்து எறிஞ்சிட்டு வரவேண்டியது தானே…வர வர பிள்ளைகளுக்குத் தைரியம் காணமாட்டேங்கி… சேதி தெரிந்தபிறகு போகாமல் இருக்க முடியாது. அவர் வேலைபார்த்த அரிசிக்கடையில் ஒரு நாள் லீவு சொல்லி விட்டு துட்டி வீட்டுக்குப் போய்விட்டு இப்போது தான் திரும்பியிருந்தார். உடனே சைக்கிளை


கண்ணாமூச்சி

 

 “ இதுக்குதாம்வே நான் யாரு கிட்டயும் கொடுக்கல் வாங்கல் வச்சிக்கிடறதிலை.. கொடுத்தா வாங்கறதுக்குள்ளே பெரும்பாடு படவேண்டியதாயிருக்கு.. இன்னும் ஒரு வாரம் தாம்வே உமக்கு டைம்.. அதுக்குள்ளே எப்படியாவது கொண்டு வந்து கொடுக்கிற வழியப் பாரும்.. அவ்வளதான் சொல்வேன்.. அப்புறம் எம்மேல வருத்தப்படாதீரும்…” என்று செல்போனில் ராமநாதன் கத்திக் கொண்டிருந்தான். காலை நடைபயின்று கொண்டிருந்த அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனார்கள். நீங்களும் பார்த்தீர்கள் தானே. இவ்வளவு ஆக்ரோசமாக ராமநாதன் கோபப்பட்டுப் பேசியதைக் கேட்ட ஜனசமூகம்


ஒரு வீடு, ஒரு கனவு, ஒரு மனிதன்

 

 இந்தக் கதையின் நாயகன் அவனா அல்லது நானா அல்லது நீங்களா என்பது அவ்வளவு முக்கியமில்லை. ஏனெனில் இந்தக் கதையை வாசிக்கும் வாசகர்களில் பெரும்பாலோருக்கு ஒரு சில இடங்களிலாவது தங்களைப் பொருத்திப் பார்க்க இடமிருக்கும். மேலும் பிரதியின் ஊடே வாசகன் பிரயாணம் செய்வதற்கும் அதில் அவனே ஒரு முக்கிய ரோல் எடுத்து பிரதியின் நாயகனாகவோ, எதிர் நாயகனாகவோ மாறுவதற்கும் பிரதியின் வெளி இடம் தரவேண்டுமல்லவா. என்ன புரியவில்லையா. புரிகிற கதைக்கு வருவோம். இப்போது நீங்கள் ஒரு புதுமனைபுகுவிழா வீட்டிற்குப்


மீனாளின் நீல நிறப்பூ

 

 பத்து நிமிடங்களுக்கும் மேலாக ராகவன் காலிங் பெல்லை அடித்துக்கொண்டே வாசலில் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கும்போது மீனாள் உள்ளே சமையலறையில் மளிகைச்சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்பின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.. காலிங்பெல் அடித்து கொண்டேயிருந்தது. அவளுக்கும் கேட்டது. ஆனால் அவளுக்கு முன்னால் கண்ணாடி பாட்டிலில் இருந்த கடுகு அவளிடம் “ அதெல்லாம் உன் பிரமை.. காலிங் பெல் அடிக்கவில்லை.. நீயே யோசித்துப்பார். சின்னவயசில் ராத்திரி தூங்கிக் கொண்டிருக்கும் போது இரண்டு மிருகங்களின் உறுமல் சத்தம் கேட்டது என்று அலறியிருக்கிறாய்… அப்போதெல்லாம்


ஆனைக்கிணறு தெரு

 

 பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடி ஊரின் முகம் மாறிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர்தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாகத் தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும். நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடிகூட