கதையாசிரியர் தொகுப்பு: உதயகுமார்.ஜி

2 கதைகள் கிடைத்துள்ளன.

வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்

 

 விடுமுறையன்றும் வழக்கம் போலவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது நியூயார்க்கின் அந்த சாலை. வாகனத்தின் இரைச்சல்கள் சுவர்க்கோழிப் போல் ஓயாமல் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன. அருணுக்கு மெல்ல விழிப்பு வந்தது. கண்ணைத் திறக்க விருப்பமில்லாமல் மெதுவாய்த் திறந்தான். நேரம் பத்தைத் தாண்டி பதினொன்றை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. “என் செல்லக் குட்டி எழுந்திருடா” என்று அம்மாவின் கொஞ்சலும் கெஞ்சலும் கலந்து வரும் சொற்கள், “கூ கூ” என்று ஏதோ ஒரு மரத்திலிருந்து கூவும் குயிலின் ஓசை, எப்போதுமே ஆரத்


அந்த மாதிரி பொம்பளை

 

 மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து என்னைப் பார்த்து கொள்கிறாள். இருந்தும் கோபத்தின் கனலில் மனம் பின்னோக்கி சென்று எண்ணிப் பார்த்தது. எங்கள் தெருவில் வசித்து வந்த பவானி அம்மாள் இறந்து விட்டாள். அம்மாவை விட நான்கைந்து வயது இளையவளாக இருக்கக் கூடும்.என் சிறுவயது பருவத்தில் இதே தெருவில்தான் வசித்து வந்தாள். குழந்தைகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் நானென்றால் சொல்லவே