கதையாசிரியர் தொகுப்பு: உடுமலை நன்னன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

தேடி வந்த நன்றி

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புகைந்து புகைந்து அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. வீடு முழுக்கப் புகையின் பரவல். நொர நொர சத்தத்தில் வெந்து கொண்டிருந்த சோற்றைக் கரண்டியால் கிளறி விட்டாள் ஆண்டாள். கிழிந்து போன கோரைப் பாயில் பாலன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எழுதிக் கொண்டிருந்த வீட்டுப் பகூம் பாதியில் நின்று விடப், பாட ஏடு விரிந்து கிடந்தது. அதன் மேல் எழுதுகோல் படுத்திருந்தது. இலாந்தர் விளக்கு வெளிச்சத்தில்


தலை எழுத்து

 

 ஊறுகாய் பாட்டில்களை, வாய் அகன்ற பையில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தாள் புனிதா. வாசலில் டாட்டா சுமோ ஓசைப்படாமல் வந்து நின்றது. தன்னுடைய பையில் ஊறுகாய் பாட்டில்களை வைத்துக் கொண்டிருந்த ராமலிங்கம் “”அம்மா… பெரியம்மா வீட்டுக் கார்” என்று சொன்னான். புனிதா எழுந்து பார்த்தாள். டிரைவர் முத்து வந்தான். “”வா முத்து… எதாவது விசேஷமா?” சற்று கலவரப்பட்டவளாகக் கேட்டாள். “”உங்க அக்கா, உங்களை வரச் சொன்னாங்க” “”சரி வர்றேன் போ” “”டிரைவர் போய்விட்டான். “”அம்மா எதுக்கு பெரியம்மா வரச்


குட விளக்கு

 

 நகரத்துக்கு வெளியே மூன்று கிலோமீட்டர் தொலைவில் எந்தவகை இரைச்சலும் இல்லாமல், அமைதியின் பிறப்பிடமாக இருப்பது வளர்மதி காலனி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் வக்கீல் வீட்டு போர்டிகோவில் வழக்கம்போல கலந்துரையாடல் மும்முரமாக இருந்தது. வக்கீல் ஒன்று பேச, வாத்தியார் ஒன்று பேச, இடைமறித்து டாக்டர் பேச, குறுக்கிட்டு போஸ்ட் மாஸ்டர் பேச, உற்சாகத்தில் ஆடாத குறையாக, இடத்தைவிட்டு எழுந்த ஜோஸ்யர், உரக்கத் தம் கருத்தை நுழைக்க அவர்கள் பேச்சில் கலகலப்பு, வெடிச்சிரிப்பு, கிண்டல் எல்லாம் மாறி மாறி கூத்தடித்தன. அந்தக்