கதையாசிரியர் தொகுப்பு: இ.ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்

1 கதை கிடைத்துள்ளன.

ஊஞ்சலின் குறுக்கும் மறுக்கும் புனையப்பட்ட நிகழ்கால ஒப்பனைகள்

 

 அபூபக்கர் நின்றுகொண்டிருந்தான். ஊஞ்சலின் கிரீச் ஒலியில் அவன் உம்மும்மா கால்களை மடக்கி உறங்கிக்கிடந்தாள். அந்த ஊஞ்சலுக்குப் பின்னால் ஏதோவொரு மாய உலகம் நிகழ்கால ஒப்பனைகளைக் கடந்துபோய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான். சிகப்புதான் அந்த உலகின் பிரதான நிறமாக இருந்தது. அபூபக்கர் ஊஞ்சலைக் கடந்து அங்கு நுழைந்தான். கும்மென்ற இரைச்சலுடன் மேகங்கள் விரைந்துகொண்டிருந்தன. உடைந்துபோன மேகத்துண்டுகளை வாரிச் சுருட்டியெடுத்தபடி முழு நிர்வாணத்துடன் ஒருவன் எதிர்ப்பட்டான். அவன் தலையில் சித்திர எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. அபூபக்கருக்குப் பயம் தொற்றிக்கொள்ளவே மேகத்துண்டு ஒன்றைக் கெட்டியாகப் பிடித்தபடி