கதையாசிரியர் தொகுப்பு: இராசேந்திர சோழன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

முனைப்பு

 

 அழைப்பிதழைப் புரட்டி நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மாநாட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். காரியத்தில் ஒன்றுமில்லாமல் சடங்கு போல வெறும் மாநாடாக நடத்திக் கொண்டிருப்பதிலோ, வேண்டுதல் மாதிரி சும்மா அதற்குப் போய் வந்து கொண்டிருப்பதிலோ என் பயன் என்பது இவனுக்குக் கேள்வியாயிருந்தது. என்றாலும் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க போய் வருவது என்று முடிவு செய்து கொண்டான். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த மைதானத்தின் நடுவில் திருமணக் கூடம் போல் அமைந்திருந்த அரங்கில் மாநாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். முகப்பிலேயே


சூரப்பன் வேட்டை

 

 ஏமாளித் தேசம் கடும் வறட்சியில் திண்டாடியது. தேசத்தின் வயல்களெல்லாம் காய்ந்து பாளம் பாளமாக வெடித்திருந்தன. வறுமையில் மக்கள் நண்டு நத்தைகளைப் பிடித்துத் தின்றும், எலிக்கறி சாப்பிட்டும் நாளைக் கழித்தனர். பலர் பஞ்சம் பிழைக்க அண்டை நாடுகளை நோக்கிப் புறப்பட்டனர். சிலர் எந்த வழியும் புரியாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர். ஏமாளித் தேசத்தின் மேற்கே ஏமாற்றுத் தேசம் இருந்தது. இந்த இரு தேசங்களையும் இணைத்து பழைமை மிகுந்த ஒரு ஆறு ஓடியது. இது ஏமாற்றுத் தேசத்தில் உற்பத்தியாகி,


சவாரி

 

 தலைமைக்குழுத் தோழர், “நாம்ப தொடங்குவம்” என்றார். “ஒரு பத்து நிமிஷம் பாப்பமே” என்றார் மாவட்டச் செயலாளர். “என்னாத்தப் பாக்கறது, அஞ்சி மணிக்கு கமிட்டின்னு போடறது, ஆறரை ஆயும் இன்னும் வரலன்னா; அவங்க வரும்போது வரட்டும் நம்ப இருக்கறவங்கவச்சி நடத்தினு இருப்பம்” என்றார் த.கு. ஏழுபேர் அடங்கிய குழுவில் இன்னும் இருவர் வரவேண்டியிருந்தது. வந்திருந்த தோழர்களை யோசனையுடன் பார்த்த மா.செ. நடவடிக்கைப் பதிவேட்டைப் புரட்டியபடியே, த.கு. பக்கம் திரும்பி, “தலைமை யாரப் போடறது தோழர்” என்றார். “ஏன் நம்ப


பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்

 

 இவன் கட்சிக்கு வந்த இந்த ஏழெட்டு ஆண்டுகளில் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் போகாமலிருந்ததில்லை. ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம், மாநாடு, ஆர்ப்பாட்டம், தர்ணா என, எல்லாவற்றுக்கும் – பல நிகழ்ச்சிகள் இவனுக்கு நேரடியாக சம்பந்தமற்றவை என்றாலும்கூட – எல்லாத் தோழர்களையும் சந்திக்க, அளவளாவ ஒரு வாய்ப்பு என்று தோளில் பையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான். மாநாட்டில் பேராளராகக் கலந்து கொள்வது என்பது பெரும் வாய்ப்புதான் என்றாலும் இந்த மாநாட்டில் இவனால் கலந்து கொள்ளமுடியவில்லை. அலுவலகத்தில் தணிக்கை நடந்து கொண்டிருந்தது.


கிட்டுதல்

 

 நண்பரது கடிதம் வீட்டில், இந்த அளவு பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணும் என்று இவன் எதிர்பார்க்கவில்லை. நண்பர் தில்லிக்காரர். அடிக்கடி சென்னை வந்து போகக் கூடியவர். தமிழ் ஆர்வம் உள்ளவர். எப்போதாவது கவிதைகள் எழுதுவது, வானொலி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது என்று இருப்பவர். சமீபத்தில் வெளிவந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் ஒரு காட்சியில் அவர் மருத்துவராக நடித்திருக்கிறாராம். அநேகமாய் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் ஒளிபரப்பாகலாம். அவசியம் பார்க்கவும் என்று எழுதியிருந்தார். கடிதத்தைப்


கரசேவை

 

 “தோழரே… தோழரே” இரண்டாவது முறையும் குரலைக் கேட்க அதிர்ச்சியுற்று எழுந்தான். கட்டிலில் அமர்ந்தபடியே சுற்று முற்றும் பார்த்தான். தெரு வெறிச் சென்றிருந்தது. பக்கத்தில், தொலைவில், கட்டிலுக்கடியில், வீட்டு முகப்பில் எங்கும் எவரையும் காணவில்லை. மனதில் கிலிபடர பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பதெல்லாம் கேள்விக்குறியாகி விடுமோ என்கிற குழப்பத்தோடு மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “என்னா தோழர் பயந்துட்டீங்களா”. இவனுக்கு என்ன சொல்தென்று தெரியவில்லை. பேசாமலிந்தான். “உங்களோட உங்க ஒடம்புல ஒரு உறுப்பா இருந்தும் எங்களையெல்லாம் ரொம்ப நாளா மறந்துட்டீங்களே”


விசுவாசம்

 

 சாமானிய மக்கள் வாழும் குடிசைகளின் பக்கமாகக் கேட்ட அந்தக் குரைப்புச் சத்தம் வித்தியாசமாக இருந்தது. இதற்குமுன் எப்போதும் கேட்டறியாதது போன்ற ஒரு வசீகரத் தன்மை கொண்டு மக்களை ஈர்த்தது. முதலில் அது வழக்கமாக எப்போதும் கேட்டதுதான் என்பது போல மக்கள் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். பின் சத்தம் வேறு மாதிரி இருக்கவே அது பற்றி ஆறிய ஆவல் கொண்டவர்களாகத் தங்கள் குடியிருப்புகளின் தட்டிப்படல்களையும், சாக்குப் படுதாக்களையும் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். ஒட்டிய வயிறுகளுடன்


தாகம்

 

 “வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் டீ, காபி சாப்புட்றவங்கள்லாம் சாப்புடலம்” நல்ல நண்பகல் வெய்யில். இந்த நேரம் பயணிகள் டீ, காபி சாப்பிடுகிறார்களோ இல்லையோ உணவு விடுதிப் பையன் பழக்கத்துக்கு ஆட்பட்டவன் போல பேருந்தின் பக்க வாட்டுகளைத் தட்டி சன்னலோரமாக சொல்லிக் கொண்டே போனான். பயணிகள் அவரவர் பொருட்களையும் பத்திரப்படுத்தி வைத்தோ, பக்கத்திலிருப்பவரிடம் சொல்லியோ பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். இவன் மடியில் வைத்தருந்த ரெக்சின் பையை எடுத்து சீட்டில் வைத்து முன்பின் பக்கவாட்டு இருக்கைகளைப் பார்த்தான்.