கதையாசிரியர் தொகுப்பு: இரமணிஷர்மா

7 கதைகள் கிடைத்துள்ளன.

நீரும்…நெருப்பும்…

 

 1 குகைப்பாலத்திற்குள் எப்பொழுதும் போல் இயல்பாக நுழைந்த இரயில், வெளியேறுகிறபோது தீப்பிடித்தபடி வந்துகொண்டிருந்தது. பாலத்திலிருந்து வெளிவருகின்ற இரயிலின் ஒவ்வொரு ஜன்னலிலும், நெருப்பு தகதகவென பரவிக்கொண்டிருந்தது. பிரயாணிகளின் அபாய கூக்குரலும், மரண ஓலமும் வானில் மோதியது. இரயில் கடந்துபோனதும், அங்கிருந்து வெறிநிறைந்த கூச்சல் கும்மாளத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தவர்களின் கைகளில், தீப்பந்தங்களும், கொடூர ஆயுதங்களும் இருந்தது. அவர்களின் கேசம் முழுவதும் புழுதி படர்ந்திருந்தது. அவர்களின் ஆடைகளில் தெறித்திருந்த இரத்த துளிகளில் இருந்து, ஈரம் காயாத வாடை வீசிக்கொண்டிருந்தது.


சினம்

 

 ஆளவந்தாரை இன்று ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய வேண்டும் என்பதால் சீக்கிரம் எழுந்து ரெடியாக வேண்டியிருந்தது. நாளைக்கு காலையில் அவருக்கு ஆபரேசன் என்பது முடிவாகியிருக்கிறது. ஆபரேசனின்றி அவர் குணமாகிவிட எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதற்கு அவருடைய முழு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. முதலில் அவருக்கு ஆஸ்பத்திரிக்கு வருவதற்கே இஷ்டமில்லை. வேறுவழியில்லாமல் கட்டாயத்தின் பேரில்தான் ஒத்துக்கொண்டார். ஆளவந்தார் உறவுக்காரர் ஒன்றுமில்லையென்றாலும் கூட நீண்ட வருடங்களாக நட்பையும் தாண்டி வேண்டியவராக இருக்கின்றவர். சொந்த ஊரில் ஈஸ்வரன் (அண்ணன்) அவருக்கு அமர்த்தியிருந்த ரூமிலும், இங்கு


குடித்தனம்

 

 வேலைக்கு போய்வருவதற்கு சௌகரியமாயிருக்கும் என்றுதான் வீடுபார்க்க வேண்டியிருந்தது என்றாலும், பார்த்த முகங்களையே பார்த்து… பேசிய விஷயங்களையே பேசி என்பதிலிருந்து விடுபட்டு, புது இடத்திற்கு போனால் நன்றாக இருக்கும் என்பதும் காரணமாக இருந்ததினால், சித்தப்பாவிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு சந்தர்பத்திலும், ஒவ்வொரு காரணத்திற்காகவும், சித்தப்பாவிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று சொல்வது வழக்கமாகத்தான் இருக்கிறது. சொந்தவீடு என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் பொருளாதாரத்தில், ஒரு நல்ல வீட்டில் நிம்மதியாகவும், சௌகரியமாகவும் குடியிருப்பதற்கு கூட வாய்ப்பற்ற


ஜீவிதம்

 

 கருகருவென்று மேகம் சூழ்ந்திருந்ததில், எந்த நேரத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாய் இருந்தன. “ரெண்டு நாளைக்கு முன்ன மூர்த்தி வந்து தேடிட்டுப் போனான்டா”- என்று அம்மா சொன்னது மட்டுமில்லை, ஞாயிற்றுக்கிழமை என்பதும் கூட காரணமாக இருந்தது மூர்த்தி என்கிற ராமமூர்த்தியைப் பார்க்க. அவனைப் பார்க்கக் கிளம்பிய பிறகுதான், அவன் வீட்டில் இல்லையென்றால் எங்குபோவது என்கின்ற சந்தேகம் வந்தது. இதற்கு முன் ஒரு சில தடவை மூர்த்தியை பார்க்க வேண்டுமென்று கிளம்பி, வேறுயாரையாவது பார்த்துவிட்டோ, பேசியிருந்துவிட்டோ வர நேர்ந்திருக்கிறது.


அந்திமம்

 

 குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தடைந்த பேருந்திலிருந்து இறங்கியதுமே, இந்த தடவைக்கான மாறுதலாய் நெடுக சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது. முன்பெல்லாம் ஒரே மணல் தான். ஒரு தடவை தெருவில் நடந்து போய்விட்டு வந்தால், காலெல்லாம் புழுதியாகிவிடும். சைக்கிளில் போய்விட்டு வந்தால் மேல் மூச்சு… கீழ்மூச்சு வாங்கும். அந்தளவிற்கு மணலிருக்கக் காரணம் பக்கத்திலேயே கடல். கடலிருக்கும் ஊரில், அதுவும் கடலுக்கு பக்கத்திலேயே குடியிருப்பதன் அனுபவங்கள் தனியானது. கடல்… கரையோர தென்னந்தோப்புகளின் வரிசை… உப்பளம்… மாலை நேரத்தில் ஊர் சிநேகிதர்களுடன் வத்தையில் அமர்ந்தபடியான


தரிசனம்

 

 கோவிலுக்கு போகலாம் என்று முடிவு செய்ததே தாமதமாகத்தான் என்பதால், புறப்பட்டு கோவிலுக்கு வந்து சேர இன்னும் தாமதமானது. மற்ற இடங்களுக்கு புறப்படுவது போலில்லை கோவிலுக்கு புறப்படுவது என்பது. வெள்ளிக்கிழமை வழக்கத்திற்கு அதிகமான கூட்டம் இருக்கும் என்றாலும், சுந்தரியின் வற்புறுத்தலின் பேரில் மறுக்க முடியாது கிளம்ப வேண்டியதாயிற்று. வரிசை வளைந்து, நெளிந்து வெளிவீதி வரைக்கும் இருந்ததை பார்க்கும் போது, எப்படியும் தரிசனத்திற்கு இரண்டு மணி நேரமாவது பிடிக்கும் என்று பட்டது. போதாததற்கு சுற்றுலா வந்தவர்கள் வேறு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.


அம்மாவும்… திராட்சைப்பழக்கூடையும்…

 

 நாகம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றியதும் அல்லது முடிவெடுத்ததும் என்னால் வரையப்பட்டுக்கொண்டிருந்த ஓவியம் என் கவன ஈர்ப்பிலிருந்து தூரமாகிப்போனது. நீல நிற உடை உடுத்திய இளம் பெண்ணொருத்தி இடதுகையை உயர்த்தி திராட்சைக் கொத்தைப்பறிக்கும் லாவகத்துடன்… அவளது வலதுகை ஏற்கெனவே பறிக்கப்பட்ட திராட்சைக் கொத்துக்களை ஏந்தியிருந்ததாய்… அழகின் பொருட்டாய் பக்கச் சுவரொன்று… சுவற்றில் தரையிலிருந்து துவங்குகையில் அடர்த்தியான நிறத்தில் ஆரம்பித்து சற்றே வெளிறியதாய்… நன்றாக வெளிறி என்று மூன்றடுக்கு நிறங்களுடன் கற்கள் இடம் பெற்றிருந்தன. நடைபாதைக்குண்டான வழியின்