கதையாசிரியர் தொகுப்பு: ஆ.கிருஷ்ணகுமார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

‘காலம்’ எனும் மலைப்பாம்பு

 

 அவனுக்கு மேலாளர் மீதான கோபம் பீறிட்டு எழுந்தது. நேற்று அவர் பேசியது இவன் உடலில் அனல்கொட்டிவிட்டது போல் தகித்துக்கொண்டிருந்தது. அவரைத் தாக்கி தாடை சிதறும் அளவுக்கு நையப்-புடைத்துவிடலாம் என்றெல்லாம் எண்ணிப்பார்த்தான். சற்று பயமும்,அடக்கமும் சேர்ந்துகொண்டதால் மனதினுள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவரை கிழித்து திருப்தி அடைந்துகொண்டான். அன்றைய தின சாயங்காலப்-பொழுது.காற்றின் உரசல்களில் இலைகள் உதிர்ந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கும் நேரம். குளிர்ந்த இரவுக்குப் பழகிவிட்ட அனைத்து பொருட்களும் தங்களை அந்த சூழலுக்குத் தயார்படுத்திக்-கொண்டிருக்கும். நரம்புக்-கிளைகளினூடே பரவிய ஒளி சிறிது


செம்பினாலியன்ற பாவை

 

 கதவு சாற்றப்பட்ட அறையிலிருந்து வெளுத்துப்போய் வெளியில் வந்தான். சளித்துசளித்து விரயமாக்கிய எதிர்காலத்தை அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு வெதும்பி சிறிய துக்கத்துடன் உடல் சந்தோசத்துடன் தன்னை ஆக்கிரமணம் செய்த ப்ரக்ருதியை நினைத்தவாறு தன் நோயினறிவையும் எண்ணிக்கொண்டே தனது மனையை நோக்கி விரைந்தான். அதற்கு முந்தைய நாள் இரவின் விளிம்பில் மாலையில் துளிரிய புஷ்பத்தை மோந்த தருணத்தில் திரியொளியும் ஓரணுவும் தானும் ப்ராணத்தியாகிக்க ஆயத்தப்பட்டதை அவ்விரவு முழுதும் சப்தமித்த முனகலினொலி வரிந்துகொண்டு காட்டியது. அது நிசப்தம் களைந்த