கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.வெங்கடேஷ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பின் முகங்கள்!

 

 “நான் வேணா இருக்கட்டுமாப்பா… அப்பாகிட்ட சொல்லிக்கலாம். ஒம்பதாம் மாசத்தை ஒட்டிகூடப் போகலாமாம்,’ சௌம்யா காதருகே வந்து கேட்டபோது, ஒரு கணம் “இருந்துவிடச்’ சொல்லிவிடலாமா என்று மனசு அடித்துக் கொண்டது. கட்டுப்படுத்திக் கொண்டேன். “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ கௌம்பு. நான் பார்த்துக்கறேன். பாம்பே இங்கு இருக்கு. நான் வந்து பார்த்துக்கறேன்… நீ ஏன் டென்ஷன் ஆகற…?’ சொன்ன வார்த்தைகள் அனைத்தும் பொய். முடிந்தால், கூடவே இருந்துவிட வேண்டும் என்றுதான் பரபரத்தது. இல்லை, அவளோடு பாம்பேவரை போய்விட்டு வரலாம். எப்படி


அவள் ஒரு தொடர்கதை!

 

 நந்தினி பால்கனி கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டு இருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில் மங்கை வீட்டைப் பெருக்கித் தள்ளிவிட்டுப் போகும்போது எல்லாவற்றையும் அடைத்திருக்க வேண்டும். ஜன்னல் கர்ட்டன்களைக்கூட விலக்கி வைக்கவில்லை. எல்லாம் பழைய பழக்கம். பால்கனியில் நின்றுகொண்டாள் நந்தினி. இரண்டாம் மாடி. பால்கனியில் இன்னும் ஈரம் உலரவில்லை. மதியம் வரை மழை பெய்துகொண்டு இருந்தது காதில் விழுந்தது. தெரு முழுவதும் உலராத ஈரம். கார்களின் தலை மேல் பூக்கள் சிதறிக்கிடந்தன.


ஷிவ் கேரா

 

 செல்வன் சரியான ஜோதிடப் பைத்தியம் என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தால்கூட உங்களால் நம்ப முடியாது. அத்தனை நாகரிகமாக இருப்பான். அவன் தோற்றத்தை வைத்து நீங்கள் அவனை ஒரு மென்பொருள் தொழிலாளி என்றோ, உயர் நிறுவன அதிகாரி என்றோதான் கற்பனை செய்துகொள்ள முடியும். சாதாரண குமாஸ்தா என்றல்ல! தினசரி, தொலைக்காட்சியில் விரல்களில் எல்லாம் வண்ணக்கற்களில் மோதிரங்கள் அணிந்துகொண்டு பேசும் அந்தப் பெரியவர் சொல்லும் நாள் பலன்களைச் செல்வன் தவறவிடுவதே இல்லை. பொதுவாக, அவர் உத்தியோ கஸ்தர்களுக்குச் சொல்லும்