கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.வி.சரவணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சிலை தலைவர்

 

 நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதிக் கொள்ளும் நான்கு முனை சந்திப்பு அது. அப்படியொன்றும் அது பரபரப்பான சந்திப்பு இல்லைதான். பக்கத்து மெயின் ரோட்டில் பாலம் கட்டப்படுவதால் அங்கே போக்குவரத்து நெருக்கடி அதிகமானதன் காரணமாக சில நாட்களாக போக்குவரத்து இந்த வழியாய் திருப்பி விடப்பட்டிருந்தது. சாதாரணமான அந்த நான்கு முனை சந்திப்புதான் இன்று எல்லாரையும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. கேமரா, மைக் சகிதமாக பர பரப்பான செய்தி தேடி அங்குமிங்கும் மீடியாகாரர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஒரு


பக்கத்து சீட் தேவதை

 

 பேருந்தில் என் பக்கத்து சீட்டில் வந்தமர்ந்த சிகப்பு நிற சுடிதார் தேவதையைப் பார்த்தவுடனே சட்டென்று மாறுது வானிலையாகி விட்டது எனக்கு. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே விட்டு அவளை கவனிக்க ஆயத்தமானேன். வேக நடையில் வந்திருக்க வேண்டும். மூச்சிரைத்தது அவளுக்கு. முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. நான் பார்த்துக் கொண்டிருந்ததை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவளது செயல்கள் பின் வருமாறு இருந்தன. ஹேண்ட் பேக் திறந்து கர்ச்சீப் எடுத்து முகம் துடைத்துக் கொண்டாள். செல்போன் எடுத்து முகம்