கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.பாரதிராஜா

5 கதைகள் கிடைத்துள்ளன.

மன்றம் வளர்த்த காதல்

 

 மொத்த சொந்தமும் பந்தமும் ஓர் இடத்தில் சேர்ந்து ஒருவரை ஒருவர் நையாண்டி செய்துகொண்டு இருக்க , குழந்தைகள் பட்டாளம் யார் வார்த்தைகளையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் குறுக்கே நெருக்கே ஓடி விளையாடி கொண்டு இருக்க, எந்நேரமும் அடுப்பில் ஏதோ சமையல் வேலை நடந்து கொண்டு இருக்க, வயதான தாத்தா பாட்டி தன் வாழ்க்கை நிகழ்வுகளை மற்றவர்களுடன் அசைப்போட்டு மகிழ்ந்து கொண்டு இருக்க, வீட்டின் பெண்கள் என்றைக்கும் இல்லாமல் கூடுதல் அழகோடு மின்ன, வீடே பூக்களின் வாசனையில் மிதந்து கொண்டு


ஆனந்தி

 

 இன்றோடு சரியாக மூன்று வருடம் ஓடிவிட்டது . இந்த மூன்று வருடங்களில் பல விஷயங்கள் மாறி இருந்தன என்னை சுற்றியும் என்னிடத்திலும். இந்த மூன்று வருடங்களில் இந்த இடம் தளைகீழாக மாறி போய்விட்டது. இப்போது இந்த வீதி பரபரப்பாக இயங்கி கொண்டு இருகின்றது. சாலையை அகல படுத்துவதற்காக இங்கே இருந்த அரசமரம் அகற்றப்பட்டு இருகின்றது. வெட்டவெளியாக இருந்த இடத்தில இப்போது அழகிய பூங்கா வந்துவிட்டது. அரசமரம் பக்கத்தில் இருந்த முருகன் அண்ணன் டீ கடை இடம் மாறி


தொலைந்தது போனவன்

 

 மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை தி நகர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. சூரியனின் வெட்பத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் நகரம் நகர்ந்து கொண்டு இருக்க தனது பயணத்திற்கான இறுதி கட்ட ஷாப்பிங் செய்து கொண்டிருந்தான் திலீபன். திலீபனின் தந்தை தமிழ் ஈழத்தின் மீது கொண்ட பற்றால் திலீபன் என்று இவனுக்கு பெயர் வைத்தார். அலுவல் காரணமாய் திலீபன் ஆறு மாத ஆஸ்திரேலியா நாட்டு பயணத்திற்கு தயார் ஆகிவிட்டான். தனது நண்பர்களுக்கு எல்லாம் ட்ரீட் கொடுத்து முடித்தாகிவிட்டது. முதல்


யாழினியுடன் மாலை பொழுதின் மயக்கத்தில்

 

 மாலை பொழுதின் மயக்கத்தில் இசைச்சாரல் வானொலி வாயிலாக உங்களோடு இணைந்து இருப்பது உங்கள் யாழினி. இந்த இரவு நேரத்தில் உங்கள் கவிதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்க முதல் காதல், கவிதை, காதலி , இணைந்த காதல் , பிரிந்த காதல், தொலைத்த காதல் , தொலைந்த காதல் இப்படி நீங்க எழுதிய, எழுதி டைரியில் மறைத்து வைத்து எப்பவாது யாருக்கும் தெரியாமல் இரகசியமா நீங்க மட்டும் உங்க மனசுக்குள்ள படித்து உங்கள் கடந்த காலத்தை அசைபோடும்


தெருவிளக்கு

 

 ஒரு ஐப்பசி மாதம் மாலை நேரம். மழை பொழிந்து எங்கும் மண்வாசனை வீசிக்கொன்ட்டிருக்க, காந்தள் மலர் போல தூறல் மெதுவாய் விழுந்துகொண்டு இருந்தது. கருமேகங்கள் மழையாய் கரைந்துபோக, வானம் லேசாய் வெளுக்க ஆரம்பித்தது. பறவைகள் வேகமாய் தன் கூடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தன . தேய்பிறை நிலவு வெண்மேகங்களின் உள்ளே இருந்து எட்டி பார்த்தபடி தயங்கி தயங்கி வெளியே வந்தது. ஆறுகள் வந்து சங்கமிக்கும் கடல் போல , நெடுஞ்சாலையில் வந்து இணையும் ஒரு தொடர் சாலையில் உள்ள