கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.பஞ்சவர்ணம்

1 கதை கிடைத்துள்ளன.

சரளா என்றொரு அக்கா!

 

 அலுவலக வேலையாக சென்னைக்கு போகிறேன் என்று பெரியப்பாவிடம் சொன்னது தப்பாகப் போய்விட்டது. “அப்படியே சரளாவைப் போய்ப் பார்த்துட்டு வா” என்று சொல்லி விட்டார். இன்றைக்கு நான் வளர்ந்து ஆளாகிவிட்டேன். என்றாலும், பெரியப்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச முடியாது. அப்பாவே இன்று வரை பேசியதில்லை. பெரியப்பா, கிராமத்துக் கூட்டுக் குடும்பத் தலைவர். அவர் என்னைப் புலிப்பால் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். கடினமாக இருந்தாலும் செய்துவிடலாம். சரளாவைப் போய்ப் பார்ப்பது… மெத்தக் கடினம். மனசு கரித்தது. பஸ்ஸில் ஏறி,