கதையாசிரியர் தொகுப்பு: ஆரார் மிதுன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

நான் பீச்சுக்குப் போகணும்!

 

 நீனி ஸ்கூலிலிருந்து வருவதற்காக நான் காத்திருக்கிறேன். பெரிய நீல நிற கேட்டும் பெரிய மரமும் இருக்கும் அந்த ஸ்கூலில் அவள் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். சுவற்றில் கலர் கலராய் பறவைகளின் படங்களும் மிருகங்களின் படங்களும் வரைந்திருக்கும். நீனி வந்ததும், அவள் தன் ஸ்கூல் பையை மேஜை மேல் வைப்பாள். பிறகு ஷூவையும் ஸாக்ஸையும் கழற்றுவாள். வாஷ்பேஸினுக்குப் போய் கையைக் கழுவிக்கொள்வாள். அப்புறம் அதோ அந்த குட்டி சேரில் அவள் உட்கார, நாங்கள் இருவரும் பிஸ்கட்டும் பாலும் சாப்பிடுவோம்.


கேள்விகள்

 

 ”அம்மா, நீ இப்ப கோபமாவா இருக்கே?” “இல்லடா கண்ணா, ஏன்? என்ன வேணும் என் ராஜேஷுக்கு? இங்க வா.” “ம்….ஒண்ணுமில்லம்மா. வந்து…..வந்து…..” “எ பி சி டி எல்லாம் எழுதி முடிச்சிட்டியா?” “ஓ! பெருசு, சின்னது ரெண்டுமே முடிச்சாச்சும்மா.” ”குட்! அப்புறமா அம்மாக்கு காட்டு, என்ன?” ”சரிம்மா. ம்……அம்மா!” “சொல்லுடா.” ”போன வாரம் கூட என்ன உன் ஸ்கூலுக்கு கூட்டிண்டு போன இல்ல?” “ஆமா. ஒனக்கு புடிச்சிருந்ததா?” ”ரொம்ப புடிச்சிருந்தது. அப்புறம்…….போன மாசத்தில ஒரு நாள், அதுக்கு


டோக்கன் நம்பர் 24

 

 ஆரார் மிதுன் Subject: டோக்கன் நம்பர் 24 கதை: India சில நேரங்களில், நாம் ஒருவருக்கு உதவுவதாக நினைத்து செய்யும் செயல்கள் வேறு சிலரைப் பாதிப்பதோடல்லாமல் அவர்களின் எரிச்சலையும் சம்பாதித்துக் கொடுக்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. எந்த சூழ்நிலையிலும், கொஞ்சம் யோசித்து, நிதானமாக செயல்பட்டால், முடிந்தவரை இம்மாதிரியான இக்கட்டான நிலைமைகளை நம்மால் தவிர்க்கமுடியும். —————– நேற்று காலை என் மகள் ஜானவி – பி.இ. முடித்துவிட்டு மேற்கொண்டு படிப்பதா அல்லது வேலைக்குச் செல்வதா என்று இன்னும் முடிவு