கதையாசிரியர் தொகுப்பு: ஆதி தாமிரா

1 கதை கிடைத்துள்ளன.

பற்றிப் படரும் பசலை

 

 ‘ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வரவேண்டாம், வீண் அலைச்சல்தானே.. நீங்கள் வீட்டிலேயே இருங்கள். நான் போய்க்கொள்கிறேன்.. ஒவ்வொரு முறையும் வந்து வழியனுப்ப நான் என்ன விருந்தாளியா, இல்லை சின்னப்பிள்ளையா?’ என்று முதலில் கிண்டலாகவும், பின்னர் அழுந்திச்சொல்லியும் கேளாமல் அதன் பின் வாக்குவாதமாகவும், சண்டையாகவும் மாறும் இதே வாக்கியங்கள்.. ஒவ்வொரு தடவையும் நான் ஊருக்குச்சென்று திரும்பும் போதும் இது நிகழ்கிறது எனக்கும் என் அம்மாவுக்கும் இடையே. அப்படி அவர் ரயிலடி வரை வருவதில்தான் எனக்கு என்ன குறைந்துவிடப்போகிறது? அவரும்தான் வீட்டில்