கதையாசிரியர் தொகுப்பு: ஆடூர் ஆர்.வெங்கடேசன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

கல்லறை ஜன்னல்

 

 சேதுராமன் தன் மூத்த மகனைப் பற்றி அடுக்கடுக்காய் சொன்னதும் என்னால் நம்ப முடிய வில்லை. கண்ணபிரான் சிசுபாலன் பேரில் சொல்லும் குற்றச்சாட்டுகள் போல ஒவ்வொன்றாய் வரிசைப் படுத்திச் சொல்லவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கவலையை விடுங்கள் நான் வந்து பேசுறேன் நான் சொன்னால் அவன் ஓரளவுக்கு கட்டுப்படுவான் என்றேன் நான் முந்திரிக் கொட்டையாக. வேண்டாம் உங்களை எடுத்தெறிஞ்சு பேசுவான், வீணா மனக்கஷ்டம் வரும். நீங்க கேட்க வேண்டும் என்பதற்காக நான் சொல்லலை, மனுஷாலை புரிந்து கொள்ள வேண்டும்


உறவுக்கு மரியாதை

 

 காதல் என்பது ஆணும் பெண்ணும் பிறக்கும் போதே மூன்றாவது அனுக்களாய் ரத்தத்தில் உருவாயிடுது. வெளிப்படுத்தும் வயசும் விதமும் ஒவ்வொருத்தர் வாழ்கையில் வெவ்வேறாக அமைகிறது. ஒரு சிலரின் வாழ்க்கையில் காதல் ஊனமடைந்து சலனமின்றி ஊமையாகி விடுகிறது. உற்சாக மிதப்பில் உரக்கச் சொல்ல வைக்கும் காதல் வாலிப வயதினர்களை பாடாய் படுத்துகிறது. காதல் படுத்தும் பாடு சொல்லி வைக்க மாளாது. புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட இந்துவை ஒரு நாற்காலியோடு நாற்காலியாக கைக்கால்களை கட்டிப் போட்டுருந்தனர். மூன்று மணி


சங்கம வேளையில்…

 

 சனிக்கிழமை விடியற்காலை மணி 5.30. மூச்சு இரைக்க ஓடி வந்த வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் எழும்பூர் ஸ்டேஷனில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. ராஜரத்தினமும் சிவகாமியும் தம்முடன் கொண்டு வந்த லக்கேஜ்களுடன் கீழே இறங்கினார்கள். இனி, அவர்கள் பஸ் பிடித்து திருவொற்றியூர் செல்ல வேண்டும். சரவணனும் சங்கீதாவும் போர்வைக்குள் வெற்றுடம்புடன் முடங்கி கிடந்தனர். உடுத்தி இருந்த லுங்கியும், நைட் கவுனும் கட்டிலிலிருந்து நழுவி தரையில் விழுந்து கிடந்தன. சங்கீதா வலது புறமாக ஒருக்களித்து காலை மடக்கி தூக்கம் கலைந்தும்


கிரஹப்பிரவேச காபி

 

 நகராட்சி எல்லைக்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட புறநகர் பகுதி அது. ஆட்டோகாரரிடம் வழி சொல்லி போக வேண்டிய ஓம் சக்தி நகரில் தான் கிரஹப்பிரவேசம். குடியிருந்த வீட்டை வாங்கி செப்பனிட்டமையால் அது சஷ்ட்டகர் மகளுக்கு புது வீடு. அவளின் தாய் வழி உறவுகள், தந்தை வழி உறவுகள், தந்தையின் மூன்று சம்பந்தி உறவுகள், இரு வேறு துறையைச் சேர்ந்த கணவன் மனைவியின் சக கொலீக்கள், மேலாளும் உயர் பதவியினர்கள், பழைய வீட்டு அக்கம் பக்கத்து


தாலி வரம்

 

 நீலவேணி, ஏ.இ.இ.,யின் அனுமதியுடன் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு கிளம்பினாள். அலுவலக உதவியாளர் கணேசனிடம் அண்ணா இந்த ஃபைலை கொண்டுப் போய் ஏ.இ.இ.,பில்டிங்க் செக்‌ஷன் டேபிள்ல வைச்சுடுங்க என்றாள். சரிங்க மேடம் என்று உத்திரவுக்கு பணிந்த கணேசன், என்ன மேடம் அவசரமா கிளம்புறதா தெரியுது, ஏதாவது நல்ல செய்திங்களா.,? என்று ஆர்வமாக கேட்டான். பெருசா ஒண்ணுமில்லை, வழக்கமா வீட்டிலே சாப்பிட்டு ஆபிசுக்கு வந்திட்டு போறமாதிரி இன்னிக்கு ஒரு மாப்பிள்ளைக்கு இந்த மூஞ்சியை காட்ட வேண்டியதிருக்கு, அதான்


மகளைப் பெற்ற மகராசன்

 

  ஊர் மெச்சும் அளவில் தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரம்மாதமாக கல்யாண ஏற்பாடுகள் செய்திருந்தார் மாணிக்கம். கனத்த இதயத்துடன் கண்களில் கண்ணீர் திவலையுடன் கன்னிகாதானம் செய்து வைத்து புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வேளையில், மகளின் பிரிவு மூச்சையும் பேச்சையும் திணறடித்தது. வேதனை தாளமையால் அழுகின்ற தந்தைக்கும் மகளுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. கன்னிப் பருவம் வரையில் மாசு மரு இல்லாமல் கஷ்டம் எதுவும் படாமல், ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’, என்று வளர்ந்த குணவதியை பிரிவதென்றால் பெற்ற


கல்யாண மாலை

 

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வதுண்டு. கணவனை போற்றி பேசுகிற போதும், திட்டி தீர்க்கின்ற போதும் இந்த முதுமொழி அவ்வப்போது புது மொழியாக பேச்சு வழக்கில் இருந்து வருகிறது. கணவனின் நிலை (?) குறித்து இப்படி சொல்லி நேர்மறையாக சந்தோஷம் கொள்வதும், எதிர்மறையாக சமாதானம் அடைவதும் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த ஒரு விஷயம். அதுவே ஒரு மனைவிக்கு, ‘கணவன் வாய்த்ததெல்லாம் இறைவியின் வரம்’, என்று யாரும் சொல்வதில்லை. ‘பிடித்து வைத்தால் பிள்ளையார் வழித்தெறிந்தால் சாணி’


கணவனும் நானே! கயவனும் நானே!

 

 கார்த்தியும் கயல்விழியும் கூடி கலவி செய்த களைப்பில் பிரிய மனமில்லாமல் கட்டித் தழுவியபடி படுக்கையில் இருந்தனர். ஒற்றை வஸ்த்திரம் போர்த்திய நிலையில் உடுத்தியிருந்த ஆடைகள் யாவும் கட்டிலிலும் தரையிலுமாக கிடந்தன. கயல்விழி, நான் ஒவ்வொரு சமயமும் உன்னை விட்டு பிரிய முடிவு எடுக்கும் போதெல்லாம், இப்படி வளைச்சு போட்டு கொல்றீயே டீ.. நான் என்ன செய்யட்டும் சொல்லு.? வயசும் வாலிபமும் இருக்கிற வரையில் அனுபவிக்கப் போறோம், என் பையனும் உன் பொண்ணும் வளர வரையில் கூடிக்களித்திருபோம், அவர்களுக்கு


கவிதாவும் கயல்விழியும்

 

 திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி திருக்கோயிலின் திருக்குளம் மிகப்பெரியதாக பார்க்க அழகாக இருந்தது. பாசி படிந்திராத படித்துறையும், பெருத்த அலைகள் இல்லா தெளிந்த நீரும், காணப்பெறுவது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. காலம் போன காலத்தில் குளம் நிறைந்து இருப்பதும், அதில் இருக்கும் மீன்கள் எந்த அடக்கு முறைக்கும் ஆளாகாமல் உடலை வளைத்து, நீட்டி சுதந்திரமாக நீந்தும் காட்சியும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. கழிந்த பொழுதில் வேண்டும் வேண்டும் என்னும் வேட்கையுடன் இறைவனைத் தேடி பிரார்த்தனை செய்து பேறுப்பெற்ற முகிற்குழலி, நன்றிக்கடன்


தோழா.. தோழா..

 

 நாய்களில் அகிடாஇனு, பிட்புல், புல்டெரியர், கிரேட்டேன், பிரேசிலியன் மஸ்டிஃப், டாபர்மேன் பின்ஸ்சர்ஸ், பொம்மரேரியன், ஹஸ்கீஸ், ராட்வெய்லர், சிப்பிப்பாறை, தால் மாட்யன், லெப்ராடோர், அல்சேஷியன் என்கிற ஷெஃபர்டு, இப்படி பல வகை இனங்கள் இருக்கின்றன. இருப்பினும் ராஜபளையம் நாட்டு நாய்க்கு எதுவும் ஈடாகாது. பழங்காலத்தில் ஜமீன்தார், பெரும் நிலக்கிழார்கள் வேட்டைக்கு செல்லும் போது இந்த வகை நாயைத் தான் பயன் படுத்தினார்கள். நாய்கள் எந்த வகையாக இருந்தாலும் அதனை குட்டியிலிருந்து எடுத்து வளர்த்தால் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.