கதையாசிரியர் தொகுப்பு: அ.ரெங்கசாமி

2 கதைகள் கிடைத்துள்ளன.

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்

 

 லவுனியா வெட்டவெளிச் சிறையில் இருபது பேருடன் எட்டடிக் குச்சுக்குள் இரவு முழுமையும் முடங்கிக் கிடிந்த அந்தத் தாய், பசியால் அலறி அலறி ஓய்ந்து போன குழந்தையை நெஞ்சில் அணைத்தவாறு வெளியில் வந்தாள். விடிந்தும் விடியாத நேரம். காலைப் பனியும் ஊதல் காற்றும் ஈரல் குலையை நடுங்க வைத்துக் கொண்டிருந்தன. என்றாலும் அந்தத் தாயின் உடல் வியர்வையில் நனைந்து தோய்ந்திருந்தது. ஆயாசத்தோடு ஆங்கொரு மண்மேட்டில் அமர்ந்து கால்களைப் பரக்க நீட்டிக்கொண்ட அவள், நெஞ்சுத் துணியை ஒதுக்கி, குழந்தைக்குப் பாலூட்ட


குறுணைக் கஞ்சி!

 

 நண்பகல் தாண்டிய நேரம். குடிசை வாசலில் கால்களைப் பரக்க நீட்டியவாறு அமர்ந்திருந்தாள் குடிசைக் குரியவளான குள்ளம்மா பாட்டி. அவளின் மடியில் சாய்ந்தபடி பால்போத்தலில் ஊற்றிய வரத்தேநீரைச் சப்பிக் கொண்டிருந்தாள் கடைக்குட்டி யான மூன்று வயதுப் பேத்தி. பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து மதிய உணவாகக் குறுணைக் கஞ்சியைப் பிஞ்சு விரல்களால் குழப்பிக் கொண்டிருந்தான் ஐந்து வயது பேரன். “அம்மா! நம்மப் போல ஏழை பாளைகளுக்கு அரிசிச் சோறுதான் உசிரைப் பிடிச்சு வச்சுக்கிட்டு இருக்கு. இப்ப அதுக்கும் பஞ்சம் வந்துடுச்சாம்.