கதையாசிரியர் தொகுப்பு: அழ.கிருஷ்ணமூர்த்தி

1 கதை கிடைத்துள்ளன.

வறுமைச் சக்கரம்

 

 கரிச்சான் கத்திவிட்டது. மூக்கம்மா படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள். முந்தானை விரிப்பில் பிறவிக் கோலத்தில் தூங்கிக்கொண்டுஇருந்த இரண்டு வயது லட்சுமியைத் தூக்கம் கலைந்துவிடாமல் மெதுவாய் மண் தரையில் உருட்டிவிட்டுச் சேலையை உருவிக்கொண்டாள். ”ஐயோ, விடிஞ்சிருச்சோ? நேரந் தெரியலையே?” என்று அவளின் முதல் பேச்சே அங்க லாய்ப்பாக ஆரம்பித்தது. அவள் விறகெடுத்துப் போக வேண்டும். மேற்கே பத்துப் பன்னிரண்டு கல் போய், காட் டில் மலைபடு பொருளாகக் கிடைக்கும் விறகுகளைக் கட் டிச் சேர்த்துக் கழுத்தொடியத் தலையில் சுமந்து கால்கடுக்க