கதையாசிரியர் தொகுப்பு: அய்க்கண்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மண்

 

 அன்று சூரப்பட்டி. மாரியம்மன் உற்சவம் போல். விழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் நுழைவாயில் கோயில் எதிரே கொட்டகை போட்டு, வாழை மரங்கள் கட்டியிருந்தார்கள். அங்கிருந்து. கிராமத்தின் ஓரே “தேசிய சாலை’ யான வீதியில். இரண்டு பக்கங்களிலும் ராமாயி வீடு வரை, கம்பங்கள் நட்டு, தென்னங் குருத்து, மாவிலைத் தோரணங்கள் காற்றிலே மெல்லச் சலசலத்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பெரிய பெரிய கோலங்களில் பெண்களின் கைவண்ணம் மிளிர்ந்தது. அந்த ஊரில் பிறந்த சின்னத்தாயி, இங்கிலாந்திருந்து பெற்றோருடன் –


மாண்புமிகு மாணவன்

 

 எனக்குள் பதற்றம் பொங்கிப் பரவிக் கொண்டிருந்தது. தாலி கட்ட இன்னும் சில நிமிடங்கள்தான் இருந்தன. சோதிடர் குறித்துக் கொடுத்த நேரப்படி அழைப்பிதழில் போட்டிருந்த நேரப்படி, இன்னும் பத்து நிமிடங்களுக்குள் தாலி கட்ட வேண்டும். திருமண வீட்டில் யாரும் இதைப்பற்றி பரபரப்படைந்ததாகவே தெரியவில்லை. எல்லாரும் வடக்கே தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணமகன் தாலிகட்ட வேண்டுமானால், மாண்புமிகு அமைச்சர் வருகை தந்து, தன் கையால் தாலிச்சரடை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுக்க வேண்டுமே?…இன்னும் அமைச்சரைக் காணோம்…! உண்மையில் எங்களையெல்லாம் விட மாண்புமிகு


மாணிக்கம் சார்

 

 ”ஹலோ… வணக்கம் சார்… நல்லாயிருக் கேன் சார்… கடையிலதான் இருக்கேன். வாங்க சார்!” பேசி முடித்ததும் முகத்தைச் சுளித்தபடி போனை ‘டொக்’ என்று வைத்தான் நாச்சியப் பன். முதலாளியின் முகமாற்றத்திலிருந்து ஏதோ ஒரு கெட்ட செய்தி என்று புரிந்துகொண்டார் கணக்குப்பிள்ளை வடிவேலு. ‘என்ன விஷயம்?’ என்ற ஆர்வத்தை அடக்கி, நாச்சியப்பனது முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார் அவர். ”நம்ம மாணிக்கம் சார்தான் பேசினார்!” என்றான் நாச்சியப்பன். தன் மனதுக்குள் ஏற்பட்ட நமைச்சலை யாரிடமாவதுபகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற துடிப்பு