கதையாசிரியர் தொகுப்பு: அனிதா சரவணன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

எப்பொழுது…?

 

 இருபத்திநான்கு மணிநேரங்கள் மட்டுமே கொண்டதல்ல ஒரு நாள். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப சில நொடிகள் கூடவும் குறையவும் செய்யும். துளி துளியாக சேர்க்கும் அமிர்தம் போல் அந்த நொடிகளே நான்கு வருடத்தில் ஒரு நாளாக நிறைகிறது. அந்த நாளும் வழக்கமாக அருந்தும் காபியைப் போலவே நம் அன்றாட அட்டவணையால் நிறைந்து மறைந்துவிடுகிறது. ஆகவே, ஒரு நாளிற்குள் அன்றாட அட்டவணைக்குள் வராது ரகசியமாக மறைந்திருக்கும் அந்த சில நொடிகளை தேடிப் பாதுகாக்கும் தீவிரத்தில் இருக்கிறேன். காலையில் ஆறிலிருந்து ஒன்பது


பாவனைகள்

 

 பேருந்து விட்டு இறங்கியதுமே காதை வந்தடைந்த மேள சத்தம் நெஞ்சுக் கூட்டுக்குள் இடம் பெயர்ந்து துடிக்க ஆரம்பித்தது. பேருந்து தடத்தினை கடந்து, தண்ணீரும், தாமரையும் இல்லாது பெயரளவில் மட்டுமேயாக இருந்த தாமரை குளத்தைத் தாண்டி, அடுத்திருந்த தெருவில் நுழையும்போதே குறுகுறுத்தது உள்ளங்கால்கள். உள்ளே செல்லச் செல்ல என் கால்கள் நடக்கிறதா இல்லை நடனமாடுகிறதா என்பதை கவனமாகப் பல முறை சோதித்து பார்த்தும் சந்தேகம் தீரவில்லை. மேளத்தின் சத்தம் நிமிடந்தோறும் அதிகரித்துக் கொண்டே சென்று என்னைச் சட்டென்று கை


இறுதியாக ஒரு உறுதி

 

 இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால் தான் என்ன? ஏன் இப்படி அவசர அவசரமாக என்னை நெருக்குகிறாய்? இன்னும் உன் பசி அடங்கவில்லையா? அவ்வளவு பசியா உனக்கு? என் தொண்டையில் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியை நொடியில் பிடித்துத் தின்றுவிட்டாய். சரி போகட்டும், பசியாறிவிட்டுப் போ என்று என் உடலுக்கு மகரந்தத்தைச் சேமித்து விநியோகிக்கும் வேலையை மருந்திடம் ஒப்படைத்துவிட்டேன். ஆனால் அசந்த நேரத்தில் என் மார்புகளிரண்டையும் மிச்சம் இல்லாமல் ருசித்துவிட்டு அறுத்தெறிந்து விட்டாயே. வலி தாள வில்லை


பனிச்சிறை

 

 “கார் பாலத்தின் இடது எல்லையில் போட்டிருந்த அலுமனிய தடுப்பை இடித்தும் நிற்காமல் தலைகீழாக கவிழ்ந்து, காற்றை விலக்கி, ஏரியின் மேல் படர்ந்து இறுகி இருந்த பனித் தகட்டை உடைத்துக் கொண்டு நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது.” கார், தடுப்பை இடிக்கும் என்று தெரிந்தவுடனே ஸ்டீரிங்கை விட்டுவிட்டேன். கார் கட்டுப்பாடு இல்லாமல் மெதுவாக குலுங்கி வழுக்கி கொண்டிருந்தது. மிக விரைவாக சீட் பெல்டை விடுவித்துக்கொண்டு, பக்கத்திலிருந்த சீட்டை இறுக்கமாக பிடித்தபடி தலை, முகம், தோள்பட்டை என்று கணக்கில்லாமல் இடிவாங்கிக் கொண்டு,


செயற்கையாகும் இயற்கை

 

 “விஜய் ப்ளீஸ்….ப்ளீஸ்…..என் செல்லமில்ல, பட்டுல்ல, தங்கமில்ல…..” இன்னைக்கு ஒரு நாள் தான்….. ப்ளீஸ்….. என்று கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்த மதுவிடம்…….இல்லை…..இல்லை…..இல்லை……. என்று வேகமாக தலையாட்டி மறுத்துக் கொண்டிருந்தான் அவளின் கணவன் விஜய். அம்மா…..நானும்….நானும்…..செல்லம்….பட்டு…..தங்கம்….. ‘ஆமாம்….ஆமாம்….நீயும் செல்லம், பட்டு, தங்கம் தான் வினய்க்குட்டி ஆனா சோபாவில் சறுக்காம உட்காரு, விஜய், காலையிலிருந்து எல்லா வேலையும் செஞ்ச தானே இன்னும் அந்த மேஜையை மட்டும் சுத்தம் பண்ணிட்டு வாக்கும் போட்டுவிடு……’ ஷாலினி வர நேரமாயிடுச்சி, இப்ப தான் இந்த வீட்டுக்கு


அவஸ்தை

 

 இட்லி இவ்வளவு சூடா வைச்சா எப்படிம்மா சாப்பிடறது, எனக்கு நேரமாச்சு காலேஜ் பஸ் வந்திடும் நான் கிளம்பறேன். ஏன் ஸ்ரீ, இட்லி ஆற ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா? ஒரு மணி நேரம் குளிச்சப்ப தெரியலையா கல்லூரிக்கு நேரமாகும்னு… சாப்பிடறதே ரெண்டு இட்லி, அதை ஒழுங்கா சாப்பிட்டு போ. நான் ஒன்னும் ஒரு மணிநேரம் குளிக்கலை….. நீங்க முன்னாடியே சுட்டு வைக்க வேண்டியதுதானே. போதும் வாயாடினது, ‘இந்தா….. வாயை திற, நீ கடிகாரம் கட்டிட்டு, பேக்கை எடுத்திட்டு


முளைவிட்ட விதை

 

 மொத்தமாக இன்றே கருமேகங்களை சுத்தமாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருந்த வானம். கருமை நிறத்தை குறைத்தே தீருவேன் என்று தீவிரவாதம் செய்து கொண்டிருந்த தெருவிளக்கின் ஒளியால் , மழைநீரில் குளித்த தார்ரோடு பளிங்கு போல் மின்னிக்கொண்டிருந்தது. விடாது பெய்து கொண்டிருக்கும் மழைநீர் தற்காலிக கண்ணாடியாக மாறி பின்னிருக்கும் புகழ்பெற்ற பிரெசிடென்சி கல்லூரியையும், மரங்களையும், மின் கம்பத்தையும், அதன் அருகில் உள்ள ஓய்விருக்கையையும் தரையில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ‘மழையின் வேகத்தில் கலைந்து கலைந்து ஆடிக்கொண்டிருந்த பிம்பங்களின் நடுவில்


சாதாரணமாகும் அசாதாரணங்கள்

 

 ‘தியா’…… “என் செல்லமில்ல! மணி எட்டரை ஆகுது. சீக்கிரம் படுக்க போம்மா. வருண் அவளை கொஞ்சம் தூங்க வைங்க மணியாகுது, அப்படியே இந்த குப்பையைக் கட்டி வெளியே வைச்சுடுங்க, நாளைக்கு வெள்ளிக்கிழமை. காலையில சீக்கிரமே குப்பை வண்டி வந்திடும்”…. “நீ போய் வை நிதி, நான் தியாவை தூங்கவைக்கிறேன்”… “அப்படியா! அப்ப நீங்க கிச்சனை சுத்தம் பண்ணிடுங்க, நான் போய் குப்பையை வெளியே வைச்சுட்டு வந்து தியாவையும் தூங்க வைக்கிறேன். ‘ஆஹ்!…….வேணாம்…வேணாம்….’ நானே குப்பையை வெளியே வைச்சுட்டு