கதையாசிரியர் தொகுப்பு: அங்கையன் கயிலாசநாதன்

14 கதைகள் கிடைத்துள்ளன.

வினோத வார்ப்பு

 

 கண்களிலே ஒளியிருந்தும், கதுப்புக்களிலே வெடித்த கோபத்தின் கனலில் தன்னையும், தான் சார்ந்த உலகத்தையும் தன்னை மீறிய வெறுப்போடு நோக்கியவண்ணம் வீட்டின் முன் கூடத்திற்கு வந்து; விழிகளில் முதல் விழுந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள் புவனேஸ்வரி அம்மாள். நல்ல தாய்க்கு மகளாகவும், புகழ் சிறந்த தந்தையின் செல்வமாகவும் இந்தப் பூமிக்கு ஒரு ஜன்மமாக வந்து, படித்து, பட்டம் பெற்று ஆசிரியையாக பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றி; இளைத்துவிட்ட இந்த நாற்பத்தியொரு வயதில் இந்து மகளிர் கல்லூரியின் அதிபதியாகிவிட்ட ஒரு களை


அலையைத் தாண்டி

 

 பார்வதி கலங்கிப்போனாள்! யுகத்தின் கணவேகச் சுழற்சியில் ஒன்றுமே அறியாத சிசுவைப் போல, விழி பிதுங்கி அழுதாள். அவளைத் தேற்ற அப்பொழுது ஒருவருமில்லை. மற்றையவர்கள் அழுவதைப் பார்த்துச் சிரிப்பதும், சிரிப்தைப் பார்த்து எரிவதுந்தானே இந்தப் பிறப்பு எடுத்து எல்லோரும் கண்ட அனுபவம்? அவளுடைய குழந்தைகள் மூன்றும் கதிகலங்கிவிட்டன! நான்காவது என்று மூச்சற்றுப் பேச்சற்று வயிற்றிலேயே உருவாகிக் கொண்டிருந்த அடுத்த குழந்தையை அடித்து அழவைத்தாள் பார்வதி. வயிற்று நோவுடன் தன்னையே தான் வருத்திக்கொண்ட வலி வேறு அவளைப் போட்டுச் சித்திரவதை


முகங்கள் இருண்டு கிடக்கின்றன

 

 பழுக்கக் காய்ச்சிய இரும்பை நெற்றியின் அண்டையில் வைத்துப் பிடித்தாற் போல எறித்துக் கொண்டிருந்த வெய்யில் முகத்தில் கரிக்கோடுகளை கீறிக் கொண்டிருக்க, அந்த எரிப்புணர்வைக் கைக் குட்டையால் துடைத்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தான் அவன். கொழும்பு வீதிகளை மிகவும் கஞ்சத் தனமாக முற்றுகையிட்டு , நடைபாதைகளையும் தாம் மட்டும் ஓங்கி உயர்ந்த கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்த அந்தக் கட்டிடங்கள் அவனுக்கோ , அவனைப் போன்று ஏதேதேதோ காரணங்களுக்காக அங்குமிங்குமாகவும் அவசர அவசரமாகவும் போய்க்கொண்டிருக்கிற மனித கூட்டத்திற்கோ கிஞ்சித்தும் நிழலைக் கொடுக்காமல்


ஓடை

 

 அல்லும் பகலும் உழைத்து, அலுத்து அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்தான் சுப்பிரமணியம். அவனுடைய தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல், அவனருகே அவன் உசும்பிப் புரளும் வேளை வரை விழி பதித்து அமர்ந்திருந்தாள் இராசநாயகி. அமைதி பொங்குகின்ற அந்த நடுநிசியில் அத்தனையும் அவனாகிக் கிடந்த சுப்பிரமணியத்துக்கும் சோறு கொடுக்கவேண்டும். மனைவியின் அந்தக் கடமையில் மனம் லயித்திருந்தவள், நீண்ட நேரப் பொறுமையை இழந்தாள். மறுகணம் அவனுடைய நெற்றியை மெல்ல நெருடினாள். பகல் முழுவதும் கொட்டிய மழையில் உடல் வெல வெலத்துப் போயிருந்தது. அந்த


இப்படியும் ஒரு மனிதன்

 

 அவசரமும் பசியும் மதுரநாயகத்தை உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தன! பகல் பன்னிரண்டு நாற்பத்தைந்துக்கு மதிய போசனத்துக்காக அடித்த கல்லூரி ‘பெல்’ மறுபடியும் அடிக்க ஒரு மணித்தியாலம் வழமைபோலிருந்தது. அந்தக் கல்லூரிக்கு மூன்று மைல்களுக்கு அப்பாலிருக்கும் தனது வீட்டுக்குச் சென்று அன்றைய மதியம் வயிற்றைக் கழுவி விட்டு மறுபடியும் வந்து, தனது ஆசிரியத் தொழிலை மேற்கொள்ள வேண்டுமென்ற உந்தலில் சைக்கிளை மிதித்து, வீட்டுக் குசினி ஓரமாக நிறுத்தியபடி நேரே குசினியை எட்டிப்பார்த்த மதுர நாயகத்துக்குக் கிடைத்த வரவேற்பு.. அவன் அதை நினைத்து


ஆத்ம விசாரணை

 

 தாம்பத்யம் என்பது எவ்வளவு சிக்கலானது என்று பரமானந்தத்துக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், அதை அனுபவிக்க நேர்ந்த பொழுது அதன் மேடு பள்ளங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதையும் உணர்ந்து கொண்டான். அந்தராத்துமாக்களின் இணைப்பில் ஆனந்த மயமான ஒரு வாழ்க்கை தொடராகத் தொடர்ந்து அந்தியஷ்டமாகும் என்பது அவன் கண்டிருந்த கனவு. ஆனால் அது வெறும் பிரமை மட்டுமல்ல, இலட்சியவாதிகளுக்கு ஒவ்வாத உன்று என்றும் அவன் எண்ணியிருந்த பொழுது, சற்று கடினமான ஒன்றைச் செய்துவிட்டதாகவும், அதனால் தானே தன்னைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி விசாரணை


நிலவு இருந்த வானம்

 

 யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்னால் நிரை நிரையாக உயர்ந்து வளர்ந்திருக்கும் மலை வேம்புகளின் கிளைகளில் காகங்களின் கரைவு காதைக் குடைந்து கொண்டிருந்தது. வீதிக்கு இடப்புறமாக ஆஸ்பத்திரி மதிலுடன் அண்டி அமைக்கப்பட்டிருந்த நடை மேடையில் பிரயாணிகள் போக்கு வரவு செய்து கொண்டிருந்தனர். கறுத்து உருகிப் பரந்திருந்த தார் வீதியில் காகங்கள் எச்சம் போட்டு வெண்புள்ளி அடித்திருந்தன. நடைபாதையின் புற மேடையில் வழியை மறித்துத் தன்னுடைய குழந்தையைத் தரையிலே பிறந்த மேனியோடு வளர்த்தியிருந்தாள் கமலி. காய்ந்து கறுத்திருந்த சூரியக்கதிர்கள் ஒளிபாய்ச்சிக் கொண்டிருந்தன.


அவன் வர்க்கம்

 

 யாழ்ப்பாணத்து முற்ற வெளியில் முக்கால் வாசியையும் தனதாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றது கோட்டை. அதனிடையே ஓங்கி வளர்ந்த வெள்ளரசு மரம் அதன் மீளா உறக்கத்திற்குச் சாமரை வீசுகிறது. கிழக்கே உயர அமைக்கப்பட்ட மதில்கள் காலை வெய்யிலைக் கோட்டையின் ஒரு புறத்திலும் விழாதவாறு தடுக்கின்றது. கோட்டைக்கு வடக்கே படமெடுத்து ஓய்ந்து பாம்பு போல் படுத்திருக்கின்றது பண்ணை வீதி. அதனிடையிலே இன்பமாக வந்து சேர்ந்து காணப்படுகிறது காங்கேசன் வீதி. இவற்றின் முனைப்பிலே அங்குமிங்கும் நடமாட்டம். உயிரற்றன போல் காணப்படும் இந்த


ஓ! அந்த இனிமை நினைவுகள்

 

 நினைவுகளே கனவாக. கனவுகளே வாழ்வாக எண்ணியிருந்த பொழுதும் புலர்ந்துவிட்டது. சுந்தரலிங்கத்துக்கு இந்த வாழ்வு கொடுத்த பரிசு….. நிமிண்டி நிமிண்டி உடலை வளைத்து கணுக்காலுக்கு மேலேயும் காற்புறங்களின் சுற்றாடலிலும் கருகிவிட்ட புண்கள் மறுபடியும் மறுபடியுமாக கொப்புழங்களாக உமிழ்ந்திருந்தன. அவற்றை நகங்களினால் சொறிந்து சொறிந்து கண்ட அற்ப இன்பத்தின் மறுபாதியாக அவை மறுதலித்து எரிந்து கொண்டிருந்தன. ‘ஐயோ! அம்மா எரிகிறதே ! சாந்தி கொஞ்சம் சுடுதண்ணியாச்சும் தாவேன்……’ எங்கோ எப்பொழுதோ எதற்காகவோ அன்பென்ற சொல் கலந்து அவன் அழைத்ததைக் கேட்டு


நாதங்கள் கோடி

 

 ‘ஹால்டிங் பிளேஸ்’ அல்லாத இடத்தில் வந்தும் வராததுமாகப் ‘பஸ்’ திடீரென்று நின்றது. சிறிது அமைதியாக இருந்த பிராணிகளிடையே தம்மையறியாத பரபரப்பு ஏற்பட்டது. ‘பெல்லை அமுக்கி , அமுக்கி அடித்தாலும் உரிய இடத்தில் நிற்பாட்டாத சாரதி யாருக்காகவோ பரிந்து இடையிலே நிற்பாட்டியது சிலருக்கு வியப்பை அளித்தது. முன் சீட்டில் அமர்ந்திருந்த கருணாகரன் தனது யோசனை வெள்ளத்துக்கு ஒரு கையணை இட்டவாறே மெல்லத் தலையைத் திருப்பி வாசற்புறமாக வெளியே பார்த்தான். ஒருவரும் இறங்கவில்லை . நேரமுஞ் சிறிது கழியவே இயந்திரப்