கதையாசிரியர் தொகுப்பு: அகமது ஃபைசல்

4 கதைகள் கிடைத்துள்ளன.

தலை கீழ்

 

 யாராச்சும் பேப்பரை தலை கீழா வைத்து படிப்பாங்களா? பேப்பர் என்றால் சும்மா வெறும் பேப்பர் இல்லை. தினப் பத்திரிகை, வாரப் பத்திரிகை, மாத சஞ்சிகை, சினிமா புத்தகம் எல்லாம்தான். முதன் முதலில் எல்லோரும் தலை கீழாகத்தான் எழுதுவோம். பிறகு போகப் போக நேராக எழுத ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவன் இன்னமும் தலைகீழாகத்தான் எழுதுகிறான். மாறவேயில்லை. வயசு என்ன? இப்போதும் கூட தலை கீழாகத்தான் எழுதுகிறான். இவன் தலை கீழாக எழுதுவதை அவனே வாசிக்க வேண்டும். அப்படி அவன்


கால்கள்

 

 ச…ரி….க…ம…ப…த…நி… சரிகமபதநி..நிதபமகரிச….ஆ….அ…ஆ…அஅ “ஏன்டி தனக்கு வராத சங்கீதத்த இத்தன கஸ்ட்டப்பட்டு வரவெக்கொனுமா?” வாப்பாவின் குரல். “அவர்தான் உயிரோடு இல்லையே..பின்ன..எப்படி?” என்ற மன பயத்தை வெளியே காட்டாமல் இன்னும் அந்த அறையையிலேயே இருக்கிறாள். அறையென்றாலும் அறை அப்படியொரு அறை. வெள்ளை மை பூசப்பட்ட சுவர்கள். பெரிய அளவான மாதக் கலெண்டர் ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கா? இல்லை. சரி வாப்பாவின் புகைப்படம் பிரேம் பண்ணி மாட்டியிருக்கா அதுவுமில்லை. சுவர் மணிக்கூடு… இல்லை. விதவையோ என்று நினைக்கத் தோன்றும் வெறும் வெள்ளைச் சுவரோடு


உறவு

 

 ஊருக்கொரு பஸ் நிலையம் இருப்பது வாஸ்தவம்தான். அப்புவின் ஊரில் இருக்கும் பஸ் நிலையத்தைப் பற்றிச் சொல்வதென்றால், அதைக் கேட்பதற்கும் திடமான, உறுதியான மனது வேண்டும். காதலில் சிக்குண்டவன் மனதுபோல இருந்தால் ஆபத்து. வலது புறத்தில் தொடங்குகிறது ஒரு நூறு அடிகளுக்கும் மேல் பழுத்த ஓலைகள், கொஞ்சம் நல்ல; அதன் கிடுகுகள் கொண்டு அமைக்கப்பட்ட, கடைக் காம்பராக்கள்.ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஞாபகப்படுத்தும் வரிசைக்கு நிகரானவை. இடது புறத்தில் ஒரு கழிப்பறை. அங்கு கழிப்பது மட்டும்தான். அழுக்கை நீக்க தண்ணீரில்லை.


தூக்குப் புடவை

 

 திடு திடுவென ஓடி வருவது, பூமி தன்னை விரட்டி வருகிறதோ! என்று எண்ணத்தோன்றும். பூமியின் மேற்பரப்பில் உள்ள புற்கள் மற்றும் அதிலே நடை பயிலும் பூச்சிகளின் வாழ்க்கை; இதைப் பற்றியெல்லாம் அவளுக்கு ஏது அக்கறை. அவளும் ஆபத்தைக் கண்டால் கால்களுக்கு இன்னொரு காலாக மாறி ஓடி வருவாள். குட்டி நாய்க்குப் பயந்து இந்த ஓட்டம் ஓடி வந்து போடியாரின் கால்களைச் சுற்றுகிறாள் பேத்தி கரிமா. “கடி நாயே கடி…. இவள் செல்லுக் கேக்கிறல்ல நல்லாக் கடி நாயே”