கதைத்தொகுப்பு: நகைச்சுவை

676 கதைகள் கிடைத்துள்ளன.

பாலிடிக்ஸ் ப்ளஸ் டூ!

 

 ஆந்திர குருட்சேத்திரத்தில் தெலுங்குதேச மன்னர் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா என்.டி.ராமா ராவ் அவர்கள் தெலுங்குதேச ஊழியர்களுக்காக அரசியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும்’ என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. ராமராவ்காருவின் மேற்கூறிய ஆசை அகில இந்திய ரீதியில் செயலாக்கப்படவேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது. இதைக் கல்லூரியோடு மட்டும் நிறுத்தக் கூடாது. அரசியல் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஆரம்பித்து அரசியல் ‘கிண்டர் – கார்டன்கள்’ அரசியல் ‘ப்ளஸ்-டூக்கள்’, அரசியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று தோன்ற வேண்டும். அட ராமாராவே! (அட


M.D மார்த்தாண்டி

 

 எனக்கு கொடுத்த அசைன்மென்ட்… பின்னால் அலைந்து ஓரளவுக்கு கண்டு பிடித்து விட்டேன். யார் இந்த M. D மார்த்தாண்டி. My Dear மார்த்தாண்டி தான் காலப்போக்கில் அவராகவே மாற்றிக் கொண்டு M. D மார்த்தாண்டி ஆகி விட்டார். பொதுவாகவே எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பார்வையாளராகவே சென்றாலும் மேடையில் ஒரு மூலையில் சேர் கேட்கும் அஷ்டாவதானி. மூன்று இஞ்ச்க்கு ஒப்பனை குறைந்து விட்டால் அன்று அவரின் அத்தனை களேபரங்களும் ரத்து செய்யப்படும். நான் யாரு… இவுங்கல்லாம் ஏன் இப்டி


திருட்டுப்போன நகை – ஒரு பக்க கதை

 

 “ஏண்டி மங்களம், பக்கத்து வீட்டிலே ஒரே குதூகலமா இருக்காப்போலே இருக்கே! திருட்டுப் போன நகைகள் எல்லாம் ஒரு வேளை அகப்பட்டிருக்குமோ?” என்று என் சம்சாரத்தைக் கேட்டேன். அதற்கு அவள், “அப்படித்தான் தோண்றது. எதுக்கும், போய் விசாரிச்சுட்டு வாருங்களேன்!” என்று சொல்லவே, நான் உடனேயே பக்கத்து வீட்டுக்குச் சென்று நண்பர் ஐயாசாமியை விசாரித்தேன். அவர் என்னைத் தனியே மாடி அறைக்கு அழைத்துச் சென்று தாழ்ந்த குரலில், “திருட்டுப் போன நகைகள் ஒண்ணும் அகப்படவே இல்லை, சார்! போனது போனதுதான்!”


குடியிருக்க ஓர் இடம் – ஒரு பக்க கதை

 

 நான் குடியிருந்த வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரன் வெகு கண்டிப்பாகச் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நான் வீட்டைக் காலி செய்யக்கூடவில்லை. வேறு வீடு கிடைத்தால் அல்லவா காலி செய்வதற்கு? நானும் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டேன்; எங்கேயும் வீடு காலியாவதாகத் தெரியவில்லை. எனவே, “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன், தயவுபண்ணி” என்று தினம் பத்துத் தடவை வீட்டுக்காரன் காலில் விழுந்து கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு அபூர்வமான யோசனை


பயங்கர மனிதன்! – ஒரு பக்க கதை

 

 “இந்தாருங்கோ, உங்களைத் தானே! இந்த க்ஷணமே பக்கத்து வீட்டுக்காரர் கிட்டே போய், அவர் சம்சாரம் பண்ற அக்கிரமத்தைப் பற்றிச் சொல்லிச் சண்டை போட்டுட்டு வாங்கோ! இல்லாத போனா இந்த வீட்டிலே என்னாலே அரை நிமிஷம்கூடக் குடித்தனம் பண்ண முடியாது!” என்று மங்களம் என்னிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். “என்னடி நடந்தது? விவரமாத்தான் சொல்லேன்!” என்றேன். “தினம் எச்சக்கலையைக் கொண்டு வந்து இங்கே நம்மாத்திலே எறிகிறாள், அந்த மனுஷி! கேட்டாக்க, அப்படித்தான் எறிவாளாம்!” “அப்படியா சொல்கிறாள்! உம்..! இதோ, இப்பவே


கவிஞனின் குறும்பு

 

 இரவு இரண்டு மணிக்கு மேல் இருக்கலாம், சட்டென விழிப்பு வர எழுந்து பாத்ரூம் போவதற்காக வெளியே வந்தேன். எங்கள் ஹாஸ்டலில் இதுதான் பிரச்சினை. நான்கு ரூம்களுக்கு பொதுவான கழிப்பறை, ஆனால் இரண்டிரண்டாக இருக்கும். அதனால் காலையில் அவ்வளவு சிரமம் இருக்காது. ஒரு அறையில் மூன்று மாணவர்கள் உண்டு. தனித்தனி கட்டில், புத்தக அலமாரி உண்டு. இந்த நடு இராத்திரி எழுந்து பாத்ரூம் செலவது ஒன்றுதான் சிரமம், நல்ல வேளை நாங்கள் இரண்டாம் தளத்தில் இருப்பதால், தூக்க கலக்கத்தில்


பார்த்த நியாபகம் இல்லையோ…?

 

 கற்பகம் ஒன்றைப் பிடித்தால் பிடித்ததுதான். அது புளியங்கொம்பாயிருந்தாலும் சரி, உடும்பு பிடியாய் இருந்தாலும் சரி.. ஸ்டூலைப் போட்டுக்கொண்டு எம்பி எம்பி ஒரு பழைய ஃபோட்டோவை ஆணியிலிருந்து எடுப்பதில் முனைந்திருந்தாள். எனக்கு பயமாக இருந்தது.. ஏற்கனவே தலைசுற்றல், முழங்கால் வலி , முதுகு வலி போன்ற ஏகப்பட்ட சமாச்சாரம் கைவசம் வைத்திருந்தாள்.. தலைசுற்றி விழுந்து விட்டால்? “கற்பகம்.. என்னம்மா பண்ற? அந்த ஃபோட்டோ இப்போ எதுக்கு..? கேட்டால் நான் எடுத்து தர மாட்டேனா..? இறங்கு முதல்ல..!” “உங்களுக்கு இத்தன


என் முதல் சினிமா அனுபவம்

 

 என் முதல் சினிமா அனுபவம் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாவது வகுப்பு அதாவது ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஏற்பட்டது. தேர் முட்டியின் அருகில் அச்சு கடை இருக்குமே அங்கே போய் எதுவும் நோக்கமில்லாமல் நின்று ஜிம்மி என்னும் தெரு நாய்க்கு காய்ந்த பிஸ்கட் போட்டுக்கொண்டிருக்கும்போது அச்சு என்னை விளித்து “ஏய் சினிமான்னா உனக்கு இஷ்டம்தானே” என்றான். இந்த அச்சு என்பவனைப் பற்றி நிறையக் கதைகளில் சொல்லி யிருக்கிறேன். ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது மலையாளி. முதல் மலையாளி ஸ்ரீரங்கம் ஐஸ்கூல் வீவிங் மாஸ்டர்.


சைக்கிள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதன் முதல் நீங்கள் சைக்கில் கற்றுக் கொண்டதை நினைத்துப்பாருங்களேன், சிரிப்பு வரும். எனக்கு அப்போது 13 வயது. ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேர் முட்டியில், கோபுர வாசலுக்கு வெளியே சின்னராஜு கடையில் வாடகை சைக்கிள்கள் இருக்கும். எல்லாமே சின்னராஜு சொந்தத் திறமையில் தயாரித்தது. ‘அவர்’ சைக்கிள் ஒரு மணி நேரத்துக்கு இரண்டணா ரேட். ஆளுக்கு காலணா செலுத்தி – எஸ்.எஸ்.எஸ்.- சீரங்கம் சைக்கிள் சங்கம்


இப்படியும் நடக்குமா? – ஒரு பக்க கதை

 

 “யார் அது?” என்று அதட்டிய ஒரு குரலைக் கேட்டு நடராஜன் அப்படியே திடுக்கிட்டு நின்றான். சில விநாடிகளில், புதர்களுக்குப் பின் ஒளிந்திருந்த பத்து முரடர்கள் திடீர் என்று வெளியே வந்து, நடராஜனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பெரிய குண்டாந்தடி இருந்தது. காட்டுப் பாதையில் இருட்டு வேளையில் செல்வது அபாயகரமானது என்று நடராஜனின் நண்பன் கோவிந்தராவ் எவ்வளவோ முறை எச்சரித்திருந்தான். அதை அலட்சியம் செய்துவிட்டு அந்தப் பாதையில் வந்தது, அதுவும் தனியாக வந்தது எவ்வளவு முட்டாள்தனம்