கதைத்தொகுப்பு: விகடன்

464 கதைகள் கிடைத்துள்ளன.

கலியன் மதவு

 

 அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6 அத்தியாயம் – 5 “மாதய்யாவை விட குந்தலாம்பாள் அரை அடி உயரக் குறைவு… உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு. மாநிறம். மஞ்சள் பூசிப் பூசிக் கலை பொருந்திய முகம். நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் அளவாக இட்டுக் கொண்டிருக்கும் அரக்குக் கலர் குங்குமம். காதுகளில் கச்சிதமாக ஜொலிக்கும் கல் தோடு. மூக்கில் மின்னும் எட்டுக் கல் பேசரி. உழைத்து உழைத்து உரமேறிய புஜங்கள். பேச்சில் பிசிர்


கலியன் மதவு

 

 அத்தியாயம் 1 – 2 | அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6 அத்தியாயம் 3 “அய்யா, அனாவசியமா அரை ஏக்கர் தெடல் சும்மாத்தானே கெடக்கு, ஒரு காளவா போட்டுத் தெடலைக் கரைச்சிட்டமுன்னா, எடமும் வெளைச்சலுக்கு வந்துரும்… காளவாயில போடற காசு ரெண்டு பங்கா திரும்பிரும்…! வேண்டாம்’னு மட்டும் சொல்லிராதீங்கய்யா…?” என்று ஆத்மார்த்தமாகக் கேட்டான் தொப்ளான். “காளவா போட, ராசி வேணும்னு சொல்லுவாங்களே… ஜோசியரய்யாவைக் கலந்துக்கிட்டு அப்பறம் யோசிக்கலாமேன்னேன்…” “அய்யா… அதல்லாம்


கலியன் மதவு

 

 அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் 1 ‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு… கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு அவர் பாடு… சாதம் வடிச்சாச்சு சாப்பிடுவதினி அவர் பாடு… ஏதும் எனக்கில்லை எனச்சொல்லிப் போனீரோ……… வைகரையின் ரம்யமான அமைதியை கீறிக் கிழித்துக்கொண்டு பிசிர் இல்லாமல் ஒலித்துப் பரவியது அகிலாண்டக் கிழவியின் ஒப்பாரி. ‘கிளவி ஒப்பாரி பாடுதே…!’ ‘நோவு நொடீல படுத்தக் கிளங்கட்டைங்கக் கூட தெருவுல யாருமேயில்லையே…!’ ‘பாம்பு கீம்பு கடிச்சி யாரும்… …!’ ‘திடீர்னு யாரு


ஷெல் ஷாக்!

 

 அருணும் தன் தாய்மேல் பாசத்தைக் கொட்டினான்..! கொட்டுகிறான்..! கொட்டுவான்..! இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு வந்த பூமிகா தன்னை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்கிறாள் என்பதை ஒரு சதவீதம் கூட அறியாதவன் அருண். அன்னபூரணியம்மா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். துளசி மாடத்துக்குக் கோலம் போட்டுவிட்டுத் திரும்பும்போது, “துளசியம்மா; உனக்கு இதுதான் என்னோட கடைசி பூஜையா இருக்கும். இருக்கணும்..!” விண்ணப்பம் போலவும், வேண்டுதல் போலும் அவளது உள்ளக்கிடக்கை வெளிப்பட்டது. அதே சமயம் ஆழ்மனம் விழித்துதெழுந்து


மைதானத்தில் ஒரு நரிக்குட்டி!

 

 பள்ளி நேரம் முடிந்ததும் அம்முவும் அவள் தோழிகளும் மைதானத்தில் கால்பந்து ஆடுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தார்கள். பந்து மைதானத்துக்கு வெளியே சென்றுவிட்டது. அங்கே ஒரு புதர் இருந்தது. அதற்குள் பந்து விழுந்து கிடந்தது. அதை எடுக்க அம்மு உள்ளே சென்றாள். அங்கே ஒரு நரிக்குட்டி ‘கீச்… கீச்…’ என்று கத்தியபடி தனியாக இருந்தது. பந்தைத் தூக்கி மைதானத்துக்குள் வீசிவிட்டு அதன் அருகில் சென்றாள் அம்மு. ‘‘ஏய் யார் நீ? இங்கே என்ன பண்றே?” என்று அந்த நரிக்குட்டியிடம்


சஸ்பென்ஸ்

 

 “என்னங்க..!” முதல் நிலைக் காவலர் (Police Constable – Grade 1) முருகன் தன் சீருடையின் மேற்கையில் தைக்கப்பட்டிருந்த இரண்டு பட்டைகளைப் பார்த்தார். ‘விரைவில் மூன்று பட்டைகளை தைக்கப் போகும் (Head Constable) தலைமைக் காவலராக உயரப் போகிறோம்!’ என்கிற மகிழ்ச்சியான நினைவோட்டத்துடன், சீருடையை மரியாதையோடு ஹாங்கரிலிருந்து எடுத்தபடியே, “ம்..” என்றார். “இன்னிக்கு ‘லீவு’ போட்டுட்டு என் கூட இருங்களேன்…?” சீருடையை அணிந்தபின் ‘பெல்ட்’ அணிந்து கொண்டே “எதுக்கு…வள்ளி ?”- அவளின் பூசினாற்போன்ற முகத்தைக் கரிசனத்தோடு பார்த்தபடியே


தோப்புக்கரணம் போட்ட தலைவன்!

 

 ஒரு காடு… அந்தக் காட்டுக்குத் தலைவனாக யானை இருந்தது. அது செல்லும் வழியில் எதிர்ப்படும் விலங்குகள் மரியாதையுடன் வணங்கும். புன்னைகையுடன் பேசும். இதையெல்லாம் பார்த்த நரி, ‘நான் காட்டுத் தலைவராக இருந்தால் எனக்கும் இப்படி வணக்கம் செய்வார்கள். தலைவராவது எப்படி?’ எனச் சிந்திக்கத் தொடங்கியது. சீக்கிரமே ஒரு திட்டம் உதித்தது. காட்டு விலங்குகளைத் தனித்தனியே சந்தித்து, தன்னைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தால், இதைச் செய்வேன். அதைச் செய்வேன் எனச் சொன்னது. நம்பிய விலங்குகளும் நரியின் பின்னால் அணிவகுத்தன. நரியின்


‘மணி’ விழா

 

 அரவிந்தனும், ஆறுமுகமும் இரட்டையர்கள். சில மணித்துளிகள் முன்னால் பிறந்த அரவிந்தன் மூத்தவர். ஆறுமுகம் இளையவர். பொழுது விடிந்தால் அவர்களுக்கு அறுபது அகவை பூர்த்தியாகிறது. வறுமையில வாடிய மூத்தவர் அரவித்தன் கையைப் பிசைந்து கொண்டு நின்றார். தம்பி ஆறுமுகத்தின் தடபுடலான மணிவிழா ஏற்பாடுகளைப் பற்றி நெருங்கிய உறவினர்கள் மூலம் அவ்வப்போது அவருக்கு செய்திகள் வந்துகொண்டே இருந்தன. தன்னிடம் ஒட்டாத உறவினர்களின் பகட்டு வார்த்தைகளைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டார். அரவிந்தனுக்கும், ஓரளவு விமரிசையாக தன் மணிவிழாவைக் கொண்டாட ஆசைதான். விரலுக்குத் தக்க வீங்கம்தானே தகும். “என்னங்க, பொழுது விடிஞ்சா அறுபது


செய்தி சொன்ன கானமயில்

 

 பரந்த பாலை நிலப் பகுதியில் உதித்த சூரியனின் இளஞ்சூட்டை உள்வாங்கிக்கொண்டே, கேர் பழங்களைப் பறிக்க, தன் தோழியோடு கிளம்பினாள் சல்மா. அவள் பாட்டி, அந்தப் பழங்களைக் காயவைத்து ஊறுகாய் செய்துகொடுப்பார். ஒட்டகக்குட்டியுடன் எதிரே ஜோகா வருவதைப் பார்த்து, “ஜோகா, குட்டிதான் வருது. அம்மா எங்கே?” என்று கேட்டாள். “பின்னாடி அப்பாவோடு வருது. எங்கே போறே?” “கேர் பழங்களைப் பறிக்க. நீயும் வர்றியா? ஜட்டா லாலையும் காட்டுக்குள் கொஞ்ச தூரம் கூட்டிட்டுப் போலாம். உன் அப்பாகிட்ட நான் கேட்கறேன்.


எது புத்திசாலித்தனம்?

 

 கண்ணாடிக் கற்கள் பதிக்கப்பட்டு, அந்நாட்டுக் குட்டி இளவரசியின் கால்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட செருப்பு அது. அதில் ஒரு செருப்பு மட்டும் தொலைந்ததில் இளவரசிக்கு மிகுந்த வருத்தம். இளவரசியின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தொலையாத இன்னொரு செருப்பை ராஜா காவலர்களிடம் காட்டி, உடனே தொலைந்த அந்தச் செருப்பைக் கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கு 1000 பொற்காசுகள் பரிசுத்தொகை அறிக்கப்படும் என்றும் அறிவித்தார். காவலர்களும் அரண்மனை முழுவதும் தேடத்தொடங்கினர். ஆனால் 10 நாள்களாகியும் அந்த ஒற்றைச் செருப்பு கிடைத்தபாடில்லை.