கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 3,021 
 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

11-15 | 16 – 20 | 21 – 25

16. யாழ் வேந்தன் 

அவன் சிறையிருந்த அறையில் அவனுக்காகவே அமைச்சர் அழும்பில்வேள் கொண்டு வந்து போடச் செய் திருந்த ஒற்றைக் கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த பஞ்சணை யில், சப்பளம் போட்டுக் கொண்டு மடியில் வண்டிச்சக்கரம் போல் காட்சியளித்த சகோட யாழைக் குத்திட்டு நிற்சு வைத்து, ஒரு கையால் மேற்பகுதியைப் பிடித்து இன்னொரு கையால் யாழின் தந்திகளைச் சுண்டி, சுருதி சேர்த்தான் கடல்வேந்தன். அப்படி ஒவ்வொரு தந்தியையும் சுண்டிச் சுண்டி நாதத்தை எழுப்பி அதன் ஸ்வரங்களை மாறுபாடு ஏதுமின்றி ஒரே சுருதியில் சப்திக்க வைத்த கடல்வேந்தன், அதை வாசிக்க ஆரம்பிக்குமுன்பு அமைச்சருக்கு அதன் அமைப்பையும், தத்துவத்தையும், நாத விசேஷத்தையும் விளக்க முற்பட்டு, “அமைச்சர் பெருமானே! இந்த யாழின் சிறப்பு தங்களுக்குத் தெரியாததல்ல….’ என்று தொடங்கினான்.  

யாழைக் கேட்கும் மனநிலையில் இல்லாத அழும்பில் வேள், “எனக்கு யாழைப் பற்றி எதுவும் தெரியாது’ என்று எரிச்சலுடன் பதில் சொன்னார். 

“அப்படியா!” என்று வியப்புடன் கேட்டான் கடல்வேந்தன். 

“ஆம். வேறு முக்கிய அரசாங்க அலுவல்கள் இருக் கின்றன. வீண் பொழுது போக்க அவகாசம் இல்லை” என்றார் அமைச்சர்.

“யாழை வாசிப்பதும், கேட்பதும் அத்தனை முக்கிய வேலை இல்லையென்கிறீர்?” என்று கடல்வேந்தன் மீண்டும் வினவினான். 

“ஆம்! இது சுத்த சோம்பேறிகளுக்காக ஏற்பட்டது” என்று அமைச்சர் சினந்து பதில் சொன்னார். 

கடல்வேந்தன் புன்முறுவல் செய்து சரேலென்று இரண்டு தந்திகளை விண்ணென்று இழுத்துவிட அதிர்ச்சி ஸ்வரங்கள் யாழிலிருந்து கிளம்பவே யைத் தரும் இரண்டு ஆசனத்திலிருந்து துள்ளியெழுந்தார் அமைச்சர். “பார்த் தீரா அமைச்சரே! உம்மையும் துள்ளச் செய்கிறது சகோட யாழின் இரண்டே தந்திகள், ஆகையால் இது சோம்பேறி யல்ல. இதை வாசிப்பவனும் சோம்பேறியல்ல. உம்மைத் துள்ளச் செய்யும். உறங்கவும் செய்யும். தனது இஷ்டப்படி உம்மை வளைக்க இந்த யாழினால் முடியும்! என்றும் சொன்னான் கடல்வேந்தன் புன்முறுவலின் ஊடே. 

அவன் புன்முறுவலைக் கண்ட நிலக்கள்ளியம் புன்முறுவல் செய்தாள். அவனெதிரே தரையில் உட்கார்ந்த 
வண்ணம், “வேந்தரே! இந்த யாழின் தத்துவத்தைச் சிறிது விளக்கிச் சொன்னால் தந்தை புரிந்து கொள்வார்” என்றும் விண்ணப்பித்துக் கொண்டாள் மிகுந்த பணிவுடன். 

அமைச்சர் பொறுமை இழந்தார். “எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நான் எதையும் புரிந்துகொள்ள இஷ்டப்படவுமில்லை” என்று சற்றுக் கடுப்புடன் சொல்லவும் செய்தார். 

“அப்பா!” என்று மெதுவாக அழைத்தாள் நிலக் கள்ளி. 

”என்ன?” அப்பொழுதும் எரிச்சல் குறையாத குரலில் கேட்டார் அமைச்சர். 

“நீங்கள் எதையும் புரிந்துகொள்ள இஷ்டப்படா தால்தான் பல வினைகள் விளைந்திருக்கின்றன” என்ற நிலக்கள்ளி கடல்வேந்தனை கடல்வேந்தனை நோக்கி, “அப்பா சுற்றுப் பிடிவாதக்காரர். ஆகவே நீங்கள் விளக்குங்கள்” என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டாள். 

கடல்வேந்தன் சகோட யாழின் மேற்புறத்திலிருந்து ஒரு இந்தியைச் சுண்டி சுரநாதத்தை எழுப்பினான். அது வெளியிட்ட நாதம் அழும்பில்வேளின் செவிக்குக்கூட பிருமானந்தமாயிருந்தது. அதற்குப் பிறகு இன்னும் இரண்டு தந்திகளைச் சுண்டி முதல் தந்தியின் நாதத்துடன் அவற்றின் ஒலிகளும் இழையச் செய்தான். அப்படி மீட்டியவண்ணமே பேசினான்: அமைச்சரே! இந்த வீணை தமிழ் நாட்டு மரபுடையது. ஆகையால் மேலைநாட்டு வீணையைப்போல் நீளமாக சமைக்கப் படவில்லை. இந்தச் சகோ யாழில் நான் சுண்டி வெளிப்படுத்திய மூன்று ஸ்வரங்களை முறையே ஆதார ஷட்ஜமம், பஞ்சமம், மேல் ஷட்ஜமம் என்று வடநாட்டார் சொல்கிறார்கள். இந்த நமது யாழுக்கும் அவர்கள் யாழுக்கும் ஒரு வித்தியாச முண்டு. இதனுடைய அமைப்பில் ஒவ்வொரு தந்தியும் ஒவ்வொரு ஸ்வரத்தோடு நூற்றுக்கணக்கான அனுஸ்வரங் களையும் இசைக்கும். உதாரணமாக இதைப்பாருங்கள் என்று ஒரு தந்தியை மீட்ட அது “உம்உம்உம் உம்’ என்று ஸ்வரத்தை நீட்டிக்கொண்டே சென்றது சில விநாடிகள், அதன் ஸ்வர தீர்க்கத்தில் மெய்மறந்து செயல்படாதிருந்த கடல்வேந்தன் மேலும் சொன்னான், “”இந்த அனுஸ்வ ரங்கள் வேறெந்த யாழிலும் கிடையாது. மகர யாழில் கொஞ்சம் உண்டு. ஆனால் இவ்வளவு தீர்க்கமான நீண்ட அலைகள் கிடையாது, தவிர இந்த யாழுக்குத் தனிப்பட்ட தத்துவமும் உண்டு’ என்ற சுடல்வேந்தன் மீண்டும். அதை மீட்டிக்கொண்டே சொன்னான்– அமைச்சரே! இந்தச் சகோட யாழ் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறது. இதன் நடு அச்சுக்கு 

நேர் குறுக்கில் சக்கர மரப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பித்தளைகள் இந்த யாழின் மேல் இரண்டு பட்டையான பகுதியையும், கீழ்ப்பகுதியையும் பிரித்துக் காட்டுகின்றன. மேல் பகுதியில் இருக்கும் ஒலிகளெல்லாம் அநேகமாக நடுத்தந்தியான ஆதார ஷட்ஜமம் மேல் ஸ்தாயிகள் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாமே மேல் காலத்தில் ஒலிப்பவை. கீழ்ப்பகுதியிலுள்ள எல்லாத் தந்திகளும் கீழே அடித்தள ஒலியில் ரீங்காரமிடும். இந்தச் சகோட யாழின் மேல்புறமும் கீழ்ப்புறமும், மனித வாழ்க்கை சில சமயங்களில் மேல்நோக்கிப் போவதையும், சில சமயங்களில் கீழ்த்தளத்துக்கு வருவதையும் குறிக்கின்றன. இதன் அச்சு மனத்தைக் குறிக்கும். அது திடமாயிருக்கும் வரையில் இந்த யாழின் குணம் கெடாது. அந்த மாதிரி தான் மனித வாழ்க்கை உயர்வதாலும், கீழே வீழ்வதாலும் அவன் பாதிக்கப்படுவதில்லை. 

கடல்வேந்தன் இங்கே சிறிது பேச்சை நிறுத்திய சக்கரத்தின் கீழ்ப்பாதியின் தந்திகளைச் சீண்டினான். அவற்றின் கீழ் நாதத்திலும், அத்துடன் கரகரப்பாக ஒன்றிய ஒலியிலும் அதிக இன்பமிருந்தது.

“பார்த்தீரா அமைச்சரே! வாழ்க்கையில் கீழ்ப்பகுதிகளால் சுகம் கெடுவதில்லை” என்று சுட்டிக்காட்டினான். 

பிறகு, “நிலக்கள்ளி! சுருதியில் சேர்ந்துகொள்” என்று கூறிவிட்டு, மேலும் கீழுமாகத் தந்திகளை மீட்டி தனது சாரீரத்தை மெதுவாக வெளி னான். நிலக்கள்ளி தனது சாரீரத்தை யாழின் ஒலிகள் பலவும் யிட்டுச் சுருதியில் கலந்தாள். அவள் சாரீரத்துடன் அநாயாசமாகக் கலந்தன. தேன் போன்ற அவள் சாரீரத்தின் குளுமை சகோட யாழின் தந்தி ஒலிகளோடு இணைந்ததால்,அவள் சாரீரத் தேன்யாழ் களில் பாய்ந்ததால் அவர்கூட சிறிது மெய்மறந்தார். 

அந்தச் சமயத்தில் அந்த அறையில் பேச்சு நின்றது. யாழ் ஒலியும், நிலக்கள்ளியின் குரலொலியும் சேர்ந்து  நாதசொர்க்கத்தைச் சிருஷ்டிக்கத் தொடங்கின. கட்டிலிலிருந்த வேந்தனுக்கு நேர் எதிரில் தரையில் உட்கார்ந் இருந்த நிலக்கள்ளி, சகோட யாழின் தந்திகளிலும் அதை மீட்டிய கடல்வேந்தன் விரல்களிலும் கண்களைப் புதைத்து, தந்திகளின் நாதத்துக்கு ஏற்ப’உம்’ காரத்தால் நாதத்தின் இனிமையைப் பரப்பினாள். பிறகு கண்களை மூடிக் கொண்டு இதழ்களைச் சிறிது அகற்றிக் குரலை எழுப்பியும் அசைத்தும் கமகங்களைச் சிருஷ்டித்தாள். 

கடல்வேந்தன் அந்தச் சாரீர இனிமையில் கட்டுண்டு கண்களை மூடிக்கொண்டான். அவன் விரல்கள் நரம்புத் தந்திகளில் பரவிப்பரவி வேகமாக ஓடின. நிலக்கள்ளி கமக சாகரம். புதுப்புது ஸ்வரங்களை இணைத்து இணைத்துச் திருஷ்டிக்கலாயிற்று. அவற்றுக்கு ஆதரவு தர ஈடுகொடுக்க கடல் வேந்தன் விரல்கள் மிக வேகமாக சஞ்சரிக்கலாயின. இப்படி எது யாழ்ஒலி, எது நிலக்கள்ளியின் குரல் என்று பிரித்துப்பார்க்க முடியாத நிலையில் அவன் மெதுவாகச் சுருதியிலிருந்து விலகாமலே கடல் பாட்டைப் பாடச் சொன்னான். 

மெல்ல மெல்ல கடல் பாட்டை இசைத்தாள் அந்தக் காமவல்லி. “கடலே கடலே நீ சொல்! என்ன பெருமூச்சு உனக்கு? காற்றா! உம்… உம் தவழட்டும் காற்று தவழட்டும். தாளமும் போடுகிறாயா, அலைக்கரங்கள் தாளம்! என்ன ஈப்தம் சப்தம்!” இப்படிப் பாடிய அவள், கடல்வேந்தன் யாழின் நரம்புகளில் இசையுடன் தாளத்தையும் கிளப்பு வதைப் பார்த்து அந்தத் தாளத்துக்கு சரியாக வர்ண மெட்டை மாற்றிப் பாடினாள். அவள் பாட்டும் அவன் யாழும் சேர்ந்து கடவையே சிருஷ்டித்தன. இழைந்தும் ஊசலாடியும் ஒலித்த அனுஸ்வரங்கள். இடையிடையே ‘டம்டங்’ என்று ஒலித்த தாளவர்க்கம் எல்லாமாகச் சேர்ந்து அங்கு கடவின் சப்தங்களையும் சிருஷ்டித்தன யாழின் தந்தி வேகம் அலைகளாக சப்திக்க, அதில் ஒளி விடும் நீர்த்திவலைகளைப் போல அவள் சாரீரமும் ஒலி மிகுந்து சேர அறை முழுவதிலும் நாதம் நிரம்பி நின்றது. 

அந்த நாதத்தில் சடலின் பல ஒலிகளும் இன்பமாகக் காதில் விழ, இடையே மகளின் இழை குரல் தனது இத யத்தை ஈர்க்க அமைச்சரும் கண்களை மூடினார். உணர்ச்சி களைப் பரவசத்துக்குப் பறிகொடுத்தார். கடல்வேந்தன் வாசிப்பின் வேகம் அதிகரித்து, அதைவிட அதிகமாகப் புரண்ட நிலக்கள்ளியின் சாரீர பிருகாக்கள் அவர் இதயத் தைத் தட்டின. கடல்வேந்தன் வாசிப்பின் வேகம் உச்ச கட்டத்தை அடைந்தபோது அவர் உணர்வை முற்றிலும் இழந்தார். 

கடல்வேந்தன் மெல்ல மெல்ல வேகத்தைக் குறை தான. நிலக்கள்ளியும் இறங்கி வந்தாள். மந்தரஸ்தாயியில் யாமும், குரலும் கலந்து புது மந்திரத்தைச் சிருஷ்டித்தன. அவன் வாசிப்பு மெல்ல மெல்லக் குறைந்தது. அவன் தலை யாழின் மீது படுத்தது கட்டிலின் கீழே உட்கார்ந்த நிலக் கள்ளியின் தலை கட்டிலின் மீதிருந்த அவன் காலடியில் தவழ்ந்தது; படுத்தது. மெல்ல மெல்ல இறங்கிய இசையின் அமைதிக் காலம் உணர்வுகளை மெல்ல இறக்கியதால் ஏற்பட்ட மௌனநிலை! அது தனி ஒரு சொர்க்கம்1 மௌனத்தின் கீதம் அது. அப்பொழுது சில நரம்புத் தந்தி களின் அனுஸ்வரங்கள் “உம் உம் உம்” என்று நீண்டு சப்தித்து அடங்கிக் கொண்டிருந்தன. அமைச்சர் தம்மையும் அறியாமல் ஆசனத்தில் அப்படியே சாய்ந்து உறங்கி வீட்டார். எத்தனை நேரம் அவர் உறங்கியிருப்பார்? அவருக்குத் தெரியாது. விழித்தபோது எதிரேயிருந்த கட்டிலில் கடல்வேந்தன் யாழின் மீது வைத்த தலை வைத்தபடி கண்களை மூடிக்கொண்டிருந்தான், நிலக்கள்ளி அவன் காலடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் கமல முகத்தில் ஆனந்தம் கலந்த ஓர் அமைதி தெரிந்தது. அவன் முகம்! அதிலும் சாந்தி இருந்தது. அமைச்சர் அவர்கள் இருவரையும் கண்டார். அவர் மனத் திலும் சாந்தி நிரம்பி நின்றது. 

மெல்ல எழுந்து வெளியே செல்ல முயன்றார். அப்பொழுது விழித்தன கடல்வேந்தன் கண்கள். “சற்றுப் பொறும்” என்று உதிர்ந்தன, மிகமெதுவான அவன் இதழ்ச் சொற்கள். 

திரும்பினார் அழும்பில்வேள் “என்னைக் கட்டி வஞ்சி நகர் அனுப்ப இதுதான் சமயம்” என்று மெதுவாகச் சொன்னான் கடல்வேந்தன். 

அழும்பில்வேள் ஒரு விநாடி சிந்தித்தார். இந்த யாழ்வேந்தனை எப்படிப் பிடிப்பேன்?” என்று உள்ளூர சொல்லிக் கொண்டார் பிறகு தலையை ஆட்டிவிட்டுப் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார், 

17. மூடுவண்டி பயணம் 

கடல்வேந்தனின் அறையை விட்டு வெளியே வந்த அமைச்சர் அழும்பில்வேள், அந்த அறையின் வாயிற்படி அருகில் நின்றிருந்த சஞ்சயன் மெதுவாகப் பின் தொடர்ந் தான். ஏதும் பேசாமலே அவரது அறைக்கு வந்துவிட்ட அமைச்சர் அவரது மஞ்சத்தில் அமர்ந்ததும் ”அமைச்சரே! ங்கள் திட்டம் தவிடு பொடியாகிவிட்டது போலிருக் கிறதே?” என்று துக்கம் விசாரித்தான் சஞ்சயன். 

அமைச்சர் பெருமான் அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தார் “எனது “திட்டமென்ன, நமது திட்டம் என்று சொல்” என்று என்று சீறவும் செய்தார். 

சஞ்சயன் தனது இதழ்களில் புன்முறுவல் காட்டி னான். “திட்டத்தை வகுத்தது நானல்ல” என்று அவன் பணிவுடன் தெரிவித்துக்கொண்டாலும், அந்தப் பணிவில் ஓர் இகழ்ச்சி சுலந்திருந்ததை அழும்பில்வேள் கண்டார். 

அதனால் சினம் அவரையும் மீற, “திட்டத்தை வகுக்கா விட்டாலும் ஒப்புக் கொண்டாயல்லவா?” என்று வினவி னார் சஞ்சயனை நோக்கி. 

விஷமப் புன்முறுவல் சற்று அதிகமாகவே படர்ந்தது சஞ்சயன் இதழ்களில் பெரிய அதிகாரிகள் திட்டம் வகுத் தால், கீழ் அதிகாரி ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. திட்டம் வெற்றி பெற்றால் அது பெரிய அதிகாரியின் சாமர்த்தியம். தோற்றால் கீழ் அதிகாரியின் தவறு. இது அரச உலக வழக்கு” என்று சுட்டிக்காட்டினான் சேரதூதன். 

அமைச்சர் தனது ஆசனத்தில் சங்கடத்துடன் அசைந் தார். தூதரே!” என்று என்று மரியாதையுடன் விளித்தார் சஞ்சயனை. 

”அமைச்சர் பிரபு!” என்று வணங்கிக் கேட்டான் சஞ்சயன், 

“திட்டம் யார் வகுத்தது, எப்படித் தவறியது என்பதை விவாதிப்பதால் கடல்வேந்தனைச் சிறை பிடிக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார் அமைச்சர். 

“முடியாது” சஞ்சயனும் ஒப்புக்கொண்டான்.

“அடுத்துச் செய்யவேண்டியது என்ன என்பதைச் சிந்திப்பதுதான் விவேகம்.” அமைச்சர் குரல் திடமாக இருந்தது. 

“ஆம். ஆம். சந்தேகமில்லை” சஞ்சயன் ஆமோதித்தான்.  

“தூதரே!” 

”ஸ்வாமி!” 

“நமது திட்டப்படி கடல்வேந்தன் மதுவை அருந்தவில்லை”. 

“இல்லை” 

“ஏன்?” 

“எனக்குத் தெரியவில்லை”. 

”உணவே அருந்தவில்லை அவன்.”

“ஆம்”

*’உணவு அருந்தினால்தான் மதுவை அருந்துவான்”. 

“ஆம். ஆம். உணவருந்தாமல் மதுவை எப்படி அருந்துவான்?” 

“எப்படி அருந்தச் சொல்வது என்று கேள்”. 

“எப்படி அருந்தச் சொல்வது?” 

“முடியாதல்லவா?” 

“முடியாது”. 

“மது அருந்தாவிட்டால் அவனை மயக்கமுறச் செய்ய முடியாது”. 

“எப்படி முடியும்? மதுவில்தானே மயக்க மருந்தைக் கலந்து வைத்திருக்கிறோம்?” 

“இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?” 

“சிந்திக்க வேண்டும்”. 

“சும்மா சிந்தித்துக் கொண்டே இருந்தால் திட்டம் எப்படி கைகூடும்” 

“கூடாது” 

இதுவரை பொறுத்திருந்த அமைச்சர் அதிக சிற்றத்தை அடைந்து, “தூதரே!” என்று கோபத்துடன் அழைத்தார். 

“அமைச்சர். பெருமானே!” பணிவுடன் கேட்டான் சஞ்சயன். 

“நான் சொன்னதையெல்லாம் அப்படியே ஆமோதிக்கிறீர்?” என்று சுட்டிக்காட்டினார் அமைச்சர். 

“ஆம்” என்றான் சஞ்சயன். 

“எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவில்லை” என்றார் அமைச்சர். 

“இல்லை.” 

“எத்தனை நாளாகத் தலையாட்டி பொம்மையானீர்?” 

“இந்த உத்தியோகத்துக்கு வந்த நாளிலிருந்து” 

“ஏன்?” 

“சேவகன் உத்தியோகம் தலையாட்டுவதுதான். அப்பொழுதுதான் உத்தியோகம் நிலைக்கும்”. 

“சிந்தனை” 

‘’சேவகனுக்கு இருக்கக்கூடாது”

“இது….” 

“அரசாங்க மரபு” 

இதைக் கேட்டதும் ஆசனத்தைவிட்டு எழுந்த அழும் பில்வேள் “தூதரே! எதிலும்படாமல் பேசுகிறீர்! தப்புவதே உமது நோக்கமாயிருக்கிறது” என்றார். 

“நமது இருவர் நோக்கமும் அப்படித்தானிருக்கிறது என்ற சஞ்சயன் அமைச்சரைக் கூர்ந்து நோக்கி “அமைச்சரே! நமது கையில் தன்னந்தனியாகக் கடல்வேந்தன் அகப்பட்டிருக்கும்போது அவனைச் சிறை செய்யாமல் அவனிடம் இசைவைக் கேட்பதும், இங்கு வந்து தனிமை யில் அவனைப் பற்றி விவாதிப்பதிலுமே, அவனை நினைத்து நாம் நடுங்குகிறோம் என்பது புலனாகிறது. அவனைப் பிடிப்பதானால் இதுதான் சமயம். உத்தரவிட்டால் வீரர்களை அழைக்கிறேன்” என்று சொன்னான் திட்ட வட்டமாக. 

அமைச்சர் சிறிது. சிந்தித்தார். “அவன் திரும்பச் அருகில் சண்டையிட்டால்? விளைவு, புலவர் விடுதிக்கு இருந்ததுபோல் ஏற்பட்டால்?” என்று வினவினார். 

“புலவர் விடுதிக்கு எதிரே நடந்தது திறந்த வெளிப் போர். அப்பொழுது அவன் இரும்புச்சட்டை வேறு அணிந்திருந்தான். இப்பொழுது அப்படி ஏதுமில்லை. உத்தரவு கொடுங்கள். பிடித்து விடுகிறேன்” என்றான். 

கடல்வேந்தனை அவனிஷ்டப்படாமல் பிடிக்க முடியுமென்ற துணிவு அப்பொழுதுமில்லை அமைச்சருக்கு. 

எப்படியும் பொறுப்பை சஞ்சயன் மீது தள்ளிவிட்டால் தமது உபத்திரவம் ஒழியுமென்று எண்ணி, “சஞ்சயா!” உன்னைப் போன்ற துணிவுள்ளவர் பத்துப் பேர் இங்கிருந் தால் இந்த முசிறியில் எனது நிர்வாகமே வேறுவிதமா யிருக்கும். சரி கடல்வேந்தனைச் சிறை செய். அவனைக் கட்டி வஞ்சி மாநகர் கொண்டு போ” என்று உத்தர விட்டார். 

சஞ்சயன் தலைவணங்கி அந்த அறையை விட்டு வெளியே சென்றதும், அந்த அறையில் அங்குமிங்கும் உலாவியபடி தமக்குத்தாமே பேசிக்கொண்டார் அமைச்சர். “அவன் உணவருந்தினால் மது கொடுக்கலாமென்று என்று நினைத்தேன். அவன் உணவருந்தாமல் யாழை வாசித்தான். யாழை வாசித்த பின்பாவது சாப்பிட வந்தானா? அந்தச் சனியன் பிடித்த சக்கரத்தின் மீதும், தந்திகள் மீதும், படுத்துத் தூங்கி விட்டான். சரி தூங்கித்தான் மீதும் தொலைந்தானா? நான் வரும்போது விழித்துத் தன்னைக் வஞ்சிநகர் அனுப்ப அதுதான் சரியான சமயம் என்று சொல்கிறான். அவன் உண்மையில் உறங்கினானா? தூக்கத்தில் உளறினானா? மறுபடியும் கண்களை மூடிவிட்டானே! அது கிடக்கட்டும். நான் இவனைப் பிடித்து வஞ்சிநகர் அனுப்ப முயன்றது இவனுக்கு எப்படித் தெரியும்? இவன் சோதிடனா அல்லது யக்ஷிணி உபாசகனா?’ என்று தம்மைத் தாமே அமைச்சர், பலவிதமாகக் கேட்டுக்கொண்ட “எப்படியும் சஞ்சயன் எதைச் சாதிக்கிறான் பார்ப்போம்” என்று கருவிக் கொண்டார். 

அவரை விட்டு நீங்கிய பிறகு சஞ்சயன் நேராக கடல் வேந்தன் அறைக்குச் சென்றான். அங்கு முன்பு போலவே கடல்வேந்தன் சகோட யாழ் மீது படுத்திருந்தான். நிலக்கள்ளியும் அவன் காலடியில் கிடந்தாள், கண்களை மூடிய வண்ணம், அந்த நிலையை பல, விநாடிகள் பார்த்துக் கொண்டே நின்ற சஞ்சயன் மனத்தில் புதுத்திட்டமொன்று உருவாயிற்று. அதனால் சந்துஷ்டியின் எல்லையை எய்தினான் சஞ்சயன். கடல்வேந்தன் சொன்ன சொல்லை மீறாதவன் என்பதை நினைத்துப் பார்த்த சஞ்சயன் “என்னைக் கட்டி வஞ்சிநகர் அனுப்ப இதுதான் சமயம்’ என்று கடல்வேந்தன் சொன்னதை எண்ணினான். “ஆம்! ஆம்! அதுதான் வழி” என்ற முடிவுக்கு வந்த சஞ்சயன் மெதுவாகக் “கடல்வேந்தரே!” என்று அழைத்தான். 

கடல்வேந்தன் கண்ணை லேசாகத் திறந்து சஞ்சயனை நோக்கினான், யாழின்மீது படுத்த நிலையிலிருந்து எழுந் திருக்காபலே. சஞ்சயனே இரண்டாம் முறையும் பேசி னான், ‘கடல்வேந்தரே! என்னை அமைச்சர்அனுப்பினார்’ என்று. 

புரிந்ததற்கு அறிகுறியபக யாழின் மீது தலையைப் புரட்டிய கடல்வேந்தன் “நன்று நன்று” என்றான். 

அவன் தன்னைப் பரிகசிக்கிறானா? இல்லை. தான் சொன்னதைக் கேட்டதற்கு பதிலளிக்கிறானா? என்பதை அறியாத சஞ்சயன், “தங்கள் உத்தரவை நிறைவேற்றச் சொன்னார் அமைச்சர் என்று மெதுவாகக் கூறினான். 

கடல்வேந்தன் தலையைச் சிறிது நிமிர்த்தி, “நானா? உத்தரவிட்டேனா?” என்று வியப்புடன் கேட்டான். 

“அப்படித்தான் அமைச்சர் சொன்னார்….” இழுத்தான் சஞ்சயன், 

“என்ன சொன்னார்?” கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டான் கடல்வேந்தன். 

“தங்களைக் கட்டி வஞ்சிக்கு அனுப்ப இதுதான் சமயம் என்று சொன்னதாகச் சொன்னார்….” என்று மீண்டும் சங்கடத்துடன் சொன்னான் சேரதூதன். 

“சொன்னது உண்மைதான்” கடல்வேந்தன் பதிலில் திட்டமிருந்தது. 

“அப்படியானால் ?” என்று கேள்வி எழுப்பினான் சஞ்சயன். 

“நீங்கள் என்னைக் கட்டமுடியாது. கட்டும்படி உங்க ளிடம் நான் சொல்லவில்லை. சொன்னது அமைச்சருக்கு. என்னை வஞ்சி நகருக்குக் அவரே வந்து கட்டட்டும்; கடல்வேந்தன் மெல்ல கொண்டு போகட்டும் என்று சகோட யாழை ஒருபுறமாக வைத்தான். பிறகு தனது காலடியில் படுத்திருந்த நிலக்கள்ளியின் தலையை மிக மெதுவாக அலுங்காமல் எடுத்துப் பஞ்சணையில் வைத்து விட்டுக் கீழே இறங்கி அவள் அழகிய உடலைத் தனது இரு கைகளாலும் அலுங்காமல் எடுத்துப் பஞ்சணை மீது கிடத்தினான். 

சஞ்சயன் எதோ பேச முயன்றான். பேச வேண்டா மென்று தனது வகயை வாயில் வைத்துச் சைகை காட்டிய கடல்வேந்தன் மிக மெதுவாகச் சொன்னான். “நீர் போய் அமைச்சரை அழைத்து வாரும். பயணத்துக்கு நான் சித்தமாயிருக்கிறேன்” என்று. 

சஞ்சயன் தலையசைத்து வெளியே நடந்ததும், கடல் வேந்தன் பஞ்சணையில் நிலக்கள்ளிக்கு அருகில் அமர்ந்த வண்ணம் அவள் மீது சாய்ந்து அவள் கன்னத்தில் தனது இதழ்களைப் புதைத்தான். “பாவம், மிகவும் அலுத்திருக் கிறாள். இசை அளித்த இன்ப நித்திரையில் இருக்கிறாள்” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட கடல்வேந்தன் தனது விரலிலிருந்து ஒரு பெரிய மோதிரத்தை எடுத்து அவன் விரவில் மெதுவாகப் போட்டான். 

பிறகு பயணத்துக்குச் சித்தமாகக் கட்டிலிலிருந்து எழுந்து நின்றான். அமைச்சருடன் சஞ்சயன் வந்ததும் அவர்களை உள்ளே வரவேண்டாமென்று சைகை செய்து வெளியே வந்து அறைக்கதவை அறைக்கதவை மிக மெதுவாகச் சாத் தினான். அடுத்து ‘வழி காட்டுங்கள்” என்று சொல்லி அவர்களைப் பின் தொடர்ந்தான். 

அமைச்சருக்கு ஏதும் புரியாததால் கனவில் நடப்பது போல நடந்தார். சஞ்சயன் முகத்தில் வெற்றிக் குறியுடன் நடந்தான். கீழிருந்த காவல் அறைக்கு வந்ததும், ‘இது சம்பிரதாயம் என்று சொல்லி கடல்வேந்து, கடல்வேந்தன் கைகளை ஓர் இரும்புச் சங்கிலியால் பிணைத்தான் சஞ்சயன். அரண்மனை வாயிலிலிருந்த மூடுவண்டியில் கடல்வேந்தனை ஏற்றவும் செய்தான். 

கடல்வேந்தன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. கட்டிய கைகளுடன் தானாகவே தாவி வண்டியில் ஏறிக் கொண்டான். சஞ்சயன் சைகை செய்ய வண்டியின் புரவிகள் நகர்ந்தன. நான்கு புரவி வீரர்கள் உருவிய வாள்களுடன் வண்டியைச் சூழ்ந்து சென்றனர். கடைசியில் ஒரு புரவியில் சஞ்சயன் சென்றான். 

இந்த பவனியைப் பார்த்துக் கொண்டு வாயிற்படியில் நின்ற அமைச்சர் பெருமூச்சு விட்டார். காரணம் ஏதுமின்றி தலையையும் அசைத்தார். மூடுவண்டியில் கடல்வேந்தன் சென்றதைக் கவனித்தது அவர் மட்டுமல்ல, சுள்ளியாற்றங் கரையிலிருந்து வந்து கொண்டிருந்த நற்கிள்ளியும் கவனித்தான். 

18. வஞ்சியில் வேந்தன் 

நான்காவது ஜாமத்தில் நகர்ந்துவிட்ட மூடுவண்டி யில் நன்றாகக் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்ட கடல் வேந்தன், கைசுளைப் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலியை ஒருமுறை உற்றுப் பார்த்து உதடுகளில் புன்முறுவல் ஒன்றையும் படரவிட்டுக் கொண்டான். “கையைப் பிணைத்த சஞ்சயன் கால்களை ஏன் பிணைக்கவில்லை?” என்ற வினா ஒன்றையும் மனதுக்குள் எழுப்பிக் கொண்டா. னானாலும் அதைப்பற்றி மேற்கொண்டு யோசிக்காமல் அரண்மனையில் விட்டுப்போன தூக்கத்தைத் அமைச்சர் தொடரத் தனது கண்களை மூடிக்கொண்டான். பாதயின் மேடுபள்ளங்களால் வண்டி சிறிது ஆட்டங்கண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் உறங்கவும் முற் பட்டான். 

வண்டிக்குப் பின்னால் புரவியில் சென்ற சஞ்சயன். மனத்தில் பூர்ண திருப்தியும் பெருமையும் நிலவியிருந் தது. அமைச்சரால் சாதிக்க முடியாததைத் தான் சாதித்து விட்டதை நினைத்து மிகுந்த உற்சாகத்துடன், “இந்த யுக்தி ஏன் அமைச்சருக்குப் புலப்படவில்லை?” என்றும் தன்னைத்தானே விசாரித்துக்கொண்டான். “என்ன இருந்தாலும், அழும்பில்வேள் வருமானவரி அமைச்சர் தானே? படை இயக்குபவர் அல்லவே” என்று அவர் தோல்விக்குச் சமாதானமும் சொல்லிக்கொண்டான். “கடல்வேந்தனைக் கொண்டுபோய் வஞ்சியில் சேர்த்தால் தனக்கு எத்தனை புகழ் கிடைக்கும்? மன்னர் எவ்வளவு பாராட்டுவார்? மக்கள் எத்துணைக் குதூசுலிப்பார்கள்?” என்று வரப்போகும் விருதுகளை எண்ணிப் பெருமகிழ்ச்சியும் இப்படி நினைத்துக் கொண்டே சிறிது கொண்டான். 

தூரம் சென்றவன் மூடுவண்டியின் பின்திரையை நீக்கிக் கடல்வேந்தன் நிம்மதியாக உறங்குவதைக் கண்டு குதூகலத்தின் எல்லையையும் அடைந்தான். 

வஞ்சிமாநகர்ப் பயணம் அடுத்த பகல் முழுவதும் நடக்க அவசியமிருந்ததால் மதிய நேர உணவை உணவை இடையிலுள்ள சொக்கன் சத்திரத்தில் வைத்துக் கொள்வதென்று தீர்மானித்த சஞ்சயன், கடல்வேந்தனைப் பாதுகாப்பதற்கு அதைவிடச் சிறந்த இடம் கிடையாதென்ற முடிவுக்கு வந்தான். சொக்கன் சத்திரம் ஆன்பொருநை நதியின் ஆரம்பத்திலிருப்பதாலும் அங்கு அரசுக்காவலர் அதிகமாத லாலும் அங்கு மட்டும் போய்ச் சேர்ந்துவிட்டால் கடல் வேந்தன் தப்பிச் செல்ல முடியாதென்று திட்டமிட்டான் சஞ்சயன். 

அவன் எண்ணங்கள் முடிவதற்கும் மெல்லப் பொழுது புலருவதற்கும் நேரம் சரியாயிருக்கவே சஞ்சயன் மறுபடியும் மூடுவண்டியின் பின்திரையைத் திறந்து பார்த்தான். கடல்வேந்தன் அப்பொழுதும் கண் விழிக்கவில்லையாதலால் என்று குரல் கொடுத “கடல்வேந்தரே! கடல்வேந்தரே தான் சஞ்சயன், 

கடல்வேந்தன் தனது உடலை நன்றாக முறுக்கி, ஒரு முறை சோம்பல் முறித்துக் கண்களைத் திறக்காமலே கேட்டான் கரகரத்த குரலில், “என்ன?” என்று. 

“பொழுது நன்றாக விடிந்துவிட்டது” என்று சஞ்சயன் சொன்னான் மரியாதை நிரம்பிய குரலில், ‘அதனாலென்ன? கடல்வேந்தன் கண்களை நன்றாக விழித்து, சஞ்சயனை நோக்கிய வண்ணம் வினவினான். 

மறுநாள் மன்னரிடம் தண்டனை பெறப்போகும் இந்தக் கொள்ளைக்காரனுக்கு என்ன துணிவு இருந்தால் இப்படிப் பேசுவான்?” என்று உள்ளூர எண்ணிய சஞ்சயன் நீங்கள் சிற்றுண்டி அருந்தினால் தானுண்டு. இங்கிருந்து நாம் கள்ளியாற்றிலிருந்து பிரிந்து செல்கிறோம்” என்று கூறினான். 

“அதில் என்ன கஷ்டம்?” படுத்தபடியே கேட்டான் கடல்வேந்தன். 

“எதில்?” என்று வினவினான் சஞ்சயன் குழப்பத்துடன். 

“சுள்ளியாறு நம்மிடமிருந்து பிரிவதில்” 

“சள்ளியாறு பிரியவில்லை. நாம்தான் பிரிந்து செல் கிறோம்” 

“இரண்டும் ஒன்றுதான். அதற்கும் நாம் இங்கேயே இப்பொழுதே சிற்றுண்டி அருந்தவேண்டிய அவசியத்திற்கும் என்ன சம்பந்தம்?” 

“இங்கு நீங்கள் நன்றாகப் பல்தேய்த்து முகம் கழுவி, நீராடவும் வசதி இருக்கிறது. வேண்டுமானால் தவிர அதோ இரண்டு புத்தமடங்களும் இருக்கின்றன. அவர்கள் உணவும் தருவார்கள்” என்று என்று விளக்கினான் சஞ்சயன். 

உண்மைக் காரணத்தைப் புரிந்து கொண்ட கடல் வேந்தன் எழுந்து உட்கார்ந்து நகைத்தான். ‘-ஏன் நகைக் கிறீர்கள் வேந்தரே?” என்று சஞ்சயன் வினவினான். 

கடல்வேந்தன் சஞ்சயனை உற்றுநோக்கினான் தனது ஈழுகுக் கண்களால். “சேர தூதரே! உமது சாமர்த்தி மத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் அது திறமையுடன் சம்பந்தப்பட்டதில்லை” என்றான் கடல்வேந்தன் மீண்டும் நகைத்து. 

“என்ன சொல்கிறீர் வேந்தரே?” என்று வினவினான் சஞ்சயன். 

கடல்வேந்தன் சஞ்சயனை நோக்கி, தனது குரூரமான கண்களைச் சிமிட்டினான். தூதரே! இங்கு தர் சிற்றுண்டியை முடிக்க நினைத்தது சுள்ளியாற்றிடமோ, என்னிடமோ உள்ள பாசத்தாலல்ல. நீர் சொன்ன புத்த மடங்களில் சேரநாட்டு வீரர்கள் நிரம்ப இருக்கிறார்கள். சேரமன்னர், புத்த, சமண மடங்களைப் பாதுகாக்க வீரர்களை நியமித்திருக்கிறார். நான் இறங்கி காலைக்கடன் களை முடிக்கத் தொடங்கியதும் அங்குள்ள வீரர்கள் இங்கு வருவார்கள். உமது வீரர்களுக்குத் துணையும் கிடைக்கும். உம்மிடமிருந்து நான் தப்பாதிருக்க உமக்குப் பக்கபலமும் இருக்கும். இந்த இடத்தை விட்டால் உமக்கு பாது காப்பான இடம் வேறில்லை, அடுத்த இரண்டு ஜாமங் களுக்கு என்று விளக்கிக் காட்டிய கடல்வேந்தன் “சரி! கைச் சங்கிலியை அவிழ்த்து விடு. நான் காலைக கடன்களை முடித்துக் கொள்கிறேன்” என்று கூறவே சஞ்சயன் சந்தேகம் நிரம்பிய கண்களை அவன் மீது நிலைக்க விட்டான். 

அதைக் கடல்வேந்தனும் கவனிக்கவே செய்ததால் சிறிது சினத்தை முகத்தில் காட்டி, “சேரதூதரே! ஒன்று நீர் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. நீர் என்னைச் சிறைப்படுத்தியது. எனது சம்மதத்தின் பேரில், நான் உம்முடன் வர ஒப்புக்கொண்ட வார்த்தையை நிலை நிறுத்துகிறேன். இல்லையேல் இப்பொழுதும் உம்மிட மிருந்து என்னால் தப்பிச் செல்ல இயலும். மரியாதையாகக் மீண்டும் கைச்சங்கிலியை எடும். பூட்டலாம்” என்று கூறினான். 

வேந்தன் சொற்களில் தொனித்த உறுதியில் நிலை குலைந்து போன சஞ்சயன் என்ன செய்வதென்று தெரியா பல் விழித்தான். சங்கிலியை அகற்ற அவன் அஞ்சினான். சங்கிலி அகன்றால் வேந்தனை வஞ்சிமாநகர் கொண்டு செல்வது முடியாத காரியம் என்ற எண்ணத்தால் அவன் முகத்தில் கிலி படர்ந்தது. 

அந்தச் சமயத்தில் கடல்வேந்தனின் கடுமை முகத்தில் சங்கிலிப் பிணைப்பு நெகிழ்ந்து விலகியது. அதிகக் கடுமை ஏறியது.  “என்னை நம்பவில்லையா சஞ்சயா? இதோ உன் சங்கிலி. பெற்றுக்கொள்” என்று கடல்வேந்தன் தனது கைகளை இருமுறை திருகவே சங்கிலி பிணைப்பு நெகிழ்ந்து விலகியது. சங்கிலியைத் தூக்கி சஞ்சயன் முகத்தை நோக்கி வீசிய கடல்வேந்தன் அவனைத் திரும்பியும் பாராமல் சுள்ளியாற்றுப் பிரவாகத்தை நோக்கி நடந்தான். அதில் இறங்கி அதன் கரையோரமாக இருந்த நுண்மணலால் பல் துலக்கி “சஞ்சயா!’ உன்னிடம் சிறிய துணி ஏதாவது இருக்கிறதா? இந்த ஆடையுடன் நான் குளிக்க முடியாது” என்றான். 

சஞ்சயன் தனது முகத்தை இருகைகளாலும் புதைத்துக் கொண்டிருந்தான். கடல்வேந்தன் வீசிய சங்கிலி அவன் நெற்றியிலும் ஒரு கண்ணிலும் பட்டு அதைக் கருக அடித்திருந்தது. மெல்லக் கைகளை நீக்கிக் கடல்வேந்தனைப் பார்த்த சஞ்சயன் “என்ன செய்துவிட்டாய் பார்?” என்று சொன்னான். 

“சங்கிலியை மெதுவாகத்தான் வீசினேன். காரண மாகவே உன் கழுத்துக்குக் குறி வைக்கவில்லை. வைத்திருந்தால் நீ இத்தனை நேரம் பிணமாகத் தரையில் கிடப்பாய்” என்ற கடல்வேந்தன், “சஞ்சயா! என்னை வஞ்சி அழைத்துச்செல்ல நீ உன் திறமையின் மேலும் திருட்டுத் தனத்தின் மேலும் நம்பிக்கை வைப்பதைவிட என் வாக்கின் மேல் நம்பிக்கை வைப்பது நல்லது. என் உத்தரவுப்படி சங்கிலியை அவிழ்த்திருந்தால் இந்தக் காயம் உனக்கு ஏற்பட்டிருக்காது. சரி,சரி. புத்தமடாலயம் சென்று ஒரு துண்டு வாங்கிக் கொண்டுவா” என்று கம்பீரமான குரலில் உத்தரவும் இட்டான். 

ஆனால் அதற்குப் பணியவில்லை சஞ்சயன். பதில் பேசாமல் நின்ற நிலையில் அசைவற்று நின்றான். அப்பொழுது பௌத்த கீதமொன்று சுள்ளியாற்றின் மேல் திசையில் கேட்டது. அங்கு கண்களை ஓட்டிய சஞ்ச யன் படகு ஒன்று நீரை எதிர்த்து துழாவப்பட்டு வருவதை யும், அதில் நான்கு புத்த துறவிகள் கிழக்குமுகமாக எழுந்து “புத்தம் சரணம் கச்சாமி’ “சங்கம் சரணம் கச்சாமி” துதிபாடுவதையும் கவனித்தான். அந்தப் படகு கடல்வேந்தன் அருகில் வந்ததும் கடல்வேந்தன் கைகளை நீட்டி, “”பிட்சுக்களே, ஒரு துணி தாருங்கள் என்று கூவ ஒரு பிட்சு படகைத் துழாவியவனிடம் ஏதோ சைகை காட்டினார். அவன் படகிலிருந்து ஒரு காஷாயத்தை வீC னான் கரையை நோக்கி. அதைக் கையில் பிடித்து பிட்சு களுக்குத் தலைவணங்கிய கடல்வேந்தன் நீரில் அழுந்தி கழுத்துவரை நராடிவிட்டு காலைக் கதிரவனை நோக்கித் துதிகளிரண்டைப் பாடினான். பிறகு தரைக்கு வந்து ஈரக் காவி ஆடைகளைக் களைந்து பிழிந்து, மீண்டும் தனது உடைகளை அணிந்து வண்டியில் ஏறிக் கொண்டான். ஈரக் காவி ஆடையை வண்டி முகப்பில் திரைக்குப் பதில் தொங்க விட்டு, ”சஞ்சயா போகலாம்” என்றான். 

 “சிற்றுண்டி?” சஞ்சயன் பக்தியுடன் வினவினான். 

தேவையில்லை. எப்படியும் மாலையில் வஞ்சி போய் விடுவோம். அங்கு சாப்பிடுகிறேன்” என்று கூற மூடுவண்டி மீண்டும் விரைந்தது. அதற்குப் பிறகு எங்கும் நிற்கவில்லை வண்டி. சொக்கன் சத்திரத்தில் உணவருந்த வேந்தன் மறுத்ததால் வண்டி எங்கும் தங்காமல் விரைந்தது வஞ்சி நோக்கி. 

 மாலை நெருங்கும் சமயத்தில் வண்டி வஞ்சி நகரை எட்டவே காவல் செய்த வீரர்களில் ஒருவனை அழைத்து, * கடல்வேந்தர் பிடிபட்டதைப் படைத்தலைவர் வில்வவன் கோதையிடம் தெரியப்படுத்து, அவர் மாளிகை முன்பாக இந்த வண்டி நிறுத்தப்படும். பிறகு கடல் வேந்தரைப் பாதுகாத்துச் சிறைக்கு அழைத்துச் செல்லு வது அவர் பொறுப்பு என்று சொல்’ என்று தூதும் அனுப்பினான். 

விளக்கு வைக்கும் சமயத்தில் மூடுவண்டி சேரமன்னர் படைத்தலைவர் இல்லத்தின் முன்பு நின்றது. கடல்வேந்தன் பிடிபட்டதைக் கேள்விப்பட்ட வஞ்சிமாநகர் மக்கள் அவனைப் பார்க்கத் திரளாகக் கூடியிருந்தனர். வண்டி நின்றதும் அதைச் சேரவீரர் பலர் சூழ்ந்து கொண்டனர் தமது மாளிகையிலிருந்து வெளிவந்து வில்லவன்கோதை மூடுவண்டியை அணுகி, “கடல்வேந்தரே! உமது பயணம் முடிந்துவிட்டது. இறங்கி வாருங்கள்” என்று மிகுந்த பணிவுடன் அழைத்தாள். 

வண்டிக்குள்ளிருந்து பதில் ஏதுமில்லை. மீண்டும் ஒரு முறை அழைத்தும் பதிலில்லாது போகவே, ‘சரி! திரையை விலக்கி இவனை இழுத்து வாருங்கள்” என்று வில்லவன் கோதை உத்தரவிட்டார். இரு வீரர் திரையை விலக்கினர். உடனே கூவினர் அதிர்ச்சியுடன் “படைத் தலைவரே!” என்று. 

திரும்பி வண்டியை நோக்கி வந்த படைத்தலைவன் பிரமித்தான். சற்று எட்ட நின்ற சஞ்சயனை நோக்கி, ”தூதரே! என்ன விளையாடுகிறீரா? இவர்தான் கடல் வேந்தனா?” என்று வினவினார், சினம் குரலில் பொறி பறக்க 

சஞ்சயனும் வண்டியின் உட்புறத்தை நோக்கினான். அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. அதனால் பேசவும் முடியவில்லை. வாயடைத்து நின்றான். வண்டிக் குள்ளிருந்தவன் கடல்வேந்தனல்லன்! 

19. கனவில் ஒருவன் 

சேரன் தலைநகரான வஞ்சி அன்று கடல்வேந்தனை வரவேற்க விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரெங்கும் பெருவிளக்குகளும், பந்தங்களும் எரிந்து கொண்டிருந்தன. கடல் வேந்தனின் அ சாகசச் செயல்கள் நகரெங்கும் பரவி இருந்தாலும், வீரத்திற்கு மதிப்புக் கொடுப்பது தமிழர்களின் நற்பண்பா தலாலும் பல இடங்களில் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. அவன் வரும் அரசாங்க வண்டி எந்தப்புறம் வருமோவென்று தெரியாத தால் முசிறியிலிருந்து வஞ்சி மாநகரை அணுகும் மூன்று பாதைகளிலும் மக்கள் திரளாக நின்றிருந்தாலும், அவன் வந்த வண்டிச் சக்கரங்கள் உருளும் பாக்கியத்தைப் பிரதான அரண்மனை வீதியே பெற்றிருந்ததால் அங்கு மக்கள் கூட்டம் சிறிது அதிகமாக இருந்ததன்றி, வண்டி வரும் விஷயம் நகருக்குள் முன்னதாகவே பரவிவிட்டதால் மற்ற பெரு விதிகளிலிருந்த கூட்டமும். பிர நான அரண்மனை வீதியை நோக்கி நகர்ந்தது. இதை முன்ன காக “எதிர்பார்த்த வில்லவன்கோதை அரசு வீதியில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்ததன் விளைவாக கூட்டம் வண்டியை நெருக்கியடித்துச் சூழ முடியா திருந்தது. 

அந்தப் பெரும் கூட்டத்தை நோக்கிப் புன்முறுவல் கொண்ட வில்லவன்கோ மிகுந்த உற்சாகத்துடன் மூடுவண்டியின் பின்புறமிருந்த காவித் திரையை நீக்கி உள் நோக்கியதும் பெரும் சினத்துக்குள்ளானார். தூதரே! என்ன விளையாடுகிறீரா?, இவன்தான் கடல்வேந்தனா?” என்று சீறி அதுவரை இருந்த புன்னகையைக் கோபதகை யாக மாற்றிக் கொண்டார். 

அவர் சொற்களையும் முக மாறுதலையும் கண்ட சஞ்சயனும் வண்டியின் உள்புறத்தை நோக்கிப் பேரதிர்ச்சி யுற்று நின்றான். உள்ளே இருந்தது கடல்வேந்தனில்லை என்பதை அறிந்தவுடன் சஞ்சயனுக்குப் பிராணனே போய் விடும் போலிருந்தது. வில்லவன்கோதையை நோக்கி, “இந்தவண்டியில் கடல்வேந்தனைத்தான் ஏற்றியிருந்தேன்’ என்று கெஞ்சினான். 

வில்லவன்கோதை வண்டிக்குள் மீண்டுமொருமுறை தனது கண்களை ஓட்டி “இவன்தான் கடல்வேந்தன் என்று சொல்கிறீரா?’ என்று இகழ்ச்சியும், கடுமையும் இணைந்த குரலில் வினவினார். “தம்பீ; பயப்படாதே! இறங்கி வா என்று பரிதாபம் நிறைந்த குரலில் வண்டிக்குள்ளிருந்தவனை அழைத்தார்.

வண்டியிலிருந்தவன் இறங்க மறுத்து வண்டியின் மூலையில் ஒடுங்கிக்கொண்டு ஐயோ! என்னை ஒன்றும் செய்யாதீர்கள். நான் ஓடி விடுகிறேன்’ என்றான் நடுங்கிய குரலில், 

“தம்பீ! உனக்கு எந்தத் தீங்கும் நேரிடாது. இறங்கி வா” என்று கையை நீட்டினார் வில்லவன்கோதை.

“ஐயோ! உங்களுக்குத் தெரியாது. தூதர் என்னைக் கொன்று விடுவார்” என்று நடுங்கிய குரலில் சொன்னான் வண்டிக்குள்ளிருந்தவன். 

சஞ்சயனுக்கு கோபம் தலைக்கேறினாலும் அவன்ஏதும் செய்யவோ, பேசவோ இயலாமல் தவித்தான். அவனைச் சற்றே மிரண்ட விழிகளால் நோக்கிய போலி வேந்தன் வில்லவன்கோதை நீட்டிய கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கினான். அவனைக் கண்ட மக்கள் ஆரவாரித்தனர். 

வண்டியிலிருந்து இறங்கியவன் வாலிப வயதுடையவன். மிக அழகாயிருந்தான். ஆனால் பயங்கொள்ளித் தனம் அவன் முகபாவத்தில் தெளிவாய்த் தெரிந்தது. சாயல் சேரப் பேரரசரான செங்குட்டுவனை அப்படியே உரித்து 

வைத்தது போலிருந்தது. அத்தனை பயத்திலும் அவன் சுற்றுமுற்றும் விழிகளை உலாவவிட்டு எட்ட நின்ற கும்பலைப் பார்த்துப் பிரமித்தான். அவன் வஞ்சி மண்ணில் கால்களை ஊன்றி நின்றதும் சேரமான் படைத்தலைவரான வில்லவன்கோதை அவனை நோக்கி மெதுவாகத் தலை வணங்கினார், 

அவர் வணக்கத்திற்குக் காரணம் புரியாத வஞ்சி நகர்வாசிகள், “இவன் யாராயிருக்கும்?” என்று பேசிக் காதில் கொண்டதைக் வாங்கிய வில்லவன்கோதை ‘வஞ்சிப் பெருமக்களே! நீங்கள் இல்லம் செல்லலாம். இந்த வாலிபன் நமது மகாகவி பரணரின் புதல்வன். இவனும் கவி பாடுவான். எனது குருநாதரின் புதல்வன் என்பதற்காகத் தலைவணங்கினேன். நீங்களும் வணங்குங்கள்” என்று அவர்களுக்கு இரைந்தே பதில் சொன்னான். அவன் கட்டளைக்குச் செவிசாய்த்து மக்களும், காவல்வீரருங்கூடத் தலைவணங்கினர். 

“இனி நீங்கள் இல்லம் செல்லலாம்” என்று அடுத்த கட்டளையைப் பிறப்பித்தான் வில்லவன்கோதை. 

மக்கள் மெதுவாக நகர்ந்தனர். போகும்போது சிலர் சஞ்சயனைப் பார்த்து நகைத்தார்கள். சஞ்சயன் தலை குனிந்து நின்றான் மக்களைப் பார்க்காமலே. ‘வண்டிக் குள்ளிருந்த கடல்வேந்தன் எப்படி மாயமாய் மறைந்தான்?’ என்ற கேள்வி அவன் மனத்தில் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டிருந்தது. அந்தக் குழப்பத்தில் திளைத்திருந்த வில்லவன்கோதை அவனை காரணத்தால் கடைசியாக, அழைத்தது கூடக் காதில் விழவில்லை சஞ்சயனுக்கு. “தூதரே!” என்று இரண்டாம்முறை சற்றுக் குரலை அழுத்திக் கொண்டு அழைத்த பிறகு விழித்துக்கொண்ட சஞ்சயன், கண்களை அவரை நோக்கி உயர்த்தி, ‘படைத் தலைவரே!” என்றான். 

“நீர் இன்று விளைவித்தது எத்தனை அவக்கேடு தெரியுமா?” என்று வினவினார் வில்லவன்கோதை. 

“நான் வேண்டுமென்று எதுவும் செய்யவில்லை…” என்று இழுத்தான் சஞ்சயன். 

“வேண்டுமென்றோ, தெரியாமலோ வீரனான, கடல் வேந்தனுக்குப் பதில், கவிபாடும் இந்தப் பிள்ளையை அழைத்து வந்தீர். இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாள்களுக் ள் சோழ, பாண்டிய நாடுகளில் பரவும். சேர நாட்டைக் கண்டு தமிழகம் சிரிக்கும்” என்று குரலில் சிறிது உஷ்ணத் தைக் காட்டினார். 

சஞ்சயன் முகத்தில் அச்சம் தெரிந்தது. “வருந்துகிறேன் படைத்தலைவரே!” என்று கூறினான் சேரதூதன் வருத்தம் துள்ளிய குரலில். 

‘”உமது வருத்தம் இன்றைய அவப்பெயரை அழிக்காது” என்று சுட்டிக்காட்டினார் படைத் தலைவர். 

சஞ்சயன் ஏதோ சமாதானம் சொல்லமுயன்று “கடல்வேந்தனைப் பிடிப்பது அத்தனை சுலபமல்ல” என்று தொடங்கினான், 

அவன் பேச்சை இடைமறித்த வில்லவன்கோதை,”அது” தெரிகிறது உமது சாதனையிலிருந்து என்று இகழ்ச்சியுடன் கூறிவிட்டு, “வா தம்பி” என்று புலவர் மகனை அழைத்துக் கொண்டு தனது மாளிகைக்குள் நுழைந்து விட்டார். 

அவன். சென்றதைப் பார்த்துக்கொண்டே நின்ற சஞ்சயன் தனது கோபத்தைக் காவல் வீரர் மீதும், வண்டி யோட்டியவன் மீதும் திருப்பி, “ஏன் நிற்கிறீர்கள்? எங்காவது செல்லுங்கள் எனது கண்களில் படாமல். டேய் வண்டி! வண்டியை எங்காவது மறைவில் கொண்டு போய் அவிழ்த்துவிடு” என்று கூவினான். வீரர்களின் புரவிகள் பறந்தன படை வீட்டை. நோக்கி, வண்டியின் புரவிகளும் விரைந்தன. வண்டிக்காரன் சாட்டையடியால் சஞ்சயனும் தனது புரவியைப் படைவீட் நோக்கிச் செலுத்தினான். புரவிக் கொட்டடியில் அதைக் கட்டிய பிறகு தீர்க்காலோசனையுடன் வீரர்கள் தங்கும் படை வீட் டுக்குள் நுழைந்தான். வழக்கமாகத் தங்கும் அறைக்குள் சென்று கதவை மூடிப் படுத்தான். யாரும் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று படை வீட்டு நிர் வாகிக்கும் உத்தரவிட்டான். 

இரவு முற்றவில்லையாதலால், அப்பொழுதும் வஞ்சி யின் வீதிகளில் மக்கள் நடமாட்டமிருந்தாலும், மனம் ஒரு நிலையில் இல்லாததாலும் உறக்கம் அவனை அணுக மறுத்தது. அன்றைய விபரீத நிகழ்ச்சிகள், ஏமாற்றம், படைத்தலைவர் பரிகாசம் எல்லாமே அவன் இத்யத்தை சம்மட்டி கொண்டு அடித்துக் கொண்டிருந்தன. வெப்பம் சற்று அதிகமாயிருந்ததோ அல்லது மனத்தில் அல்லல்தான் வெப்பத்தை ஏற்படுத்தியதோ சொல்ல முடியாது. சஞ்சயன் திணறியும் பஞ்சணையில் புரண்டும் படுத்தான். பிறகு எழுந்து சிறிது நேரம் அங்குமிங்கும் நடமாடினான். கடைசியில் அறையின் சாளரக் கதவுகளைத் திறந்து வெளியே நோக்கினான். 

 படைவீடு வஞ்சியைச் சூழ்ந்து சென்ற ஆற்றங்கரையில் சற்று மேடான இடத்தில் நிறுவப்பட்டிருந்ததால், ஊரின் பெருமாளிகைகள் நன்றாகவே தெரிந்தன தூதன் கண்களுக்கு. அந்த மாநகரை தூதன் நேசித்தான். அவன் பிறந்த இடமே அதுதான். அதன் கவர்ச்சி உலகத்தில் எந்த நாட்டின் தலைநகருக்கோ, புறநகரங்களுக்கோ இருக்க முடியாதென்ற திட்டமான எண்ணத்துடன் இருந்தான். ஆனால் அன்று அந்த நகரம் அவனைப் பார்த்து நகைப்பது போலிருந்தது. தூர இருந்த மாளிகை தீபங்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டின. அந்த மாநகரே தன்னை நோக்கி எள்ளி நகை யாடுவதாக சஞ்சயன் நினைத்தான். அந்தச் சமயத்தில் அவன் கோபமெல்லாம் அமைச்சர் அழும்பிள்வேன் மீது திரும்பியது. அவர் பைத்தியக்கார யோசனையால்தான் இத்தனை மானக்கேடு தனக்கு ஏற்பட்டது என்று மன எரிச்சல் கொண்டான். தவிர, பரணர் பிள்ளை எப்படி வண்டியில் வந்தான் என்பதும் சஞ்சயனுக்குப் புரியாக தால் “இதில் புலவன் விஷமம் ஏதாவதிருக்குமோ?” என்று எண்ணினான். ஏதும் புரியாததால் மீண்டும் பஞ்சணையில் படுத்தான். படுத்தும் சிந்தனை அவனை விட்டு நீங்கவில்லை. 

மறுநாள்  மன்னரைச் சந்திக்க நேருமோ? அவருக்கு என்ன பதில் சொல்வது? என்று சிந்தித்தான். அதனால் ஏற்பட்ட கிளியை அகற்றக் கண்களை மூடினான். நாளை பகிரங்கமாக மன்னர் தமது அவையில் தன்னை விசாரிப்பா ரென்றும், அதற்குப் பிறகு தனது யோக்கியதை அம்பலத் திற்கு வந்துவிடுமென்றும் எண்ண எண்ண மார்பு ‘திக், திக்’ என்று அடித்துக் அதனால் உடலும் கொண்டது. குலுங்கியது. நேரம் ஓட ஓட சற்றுத் துணிவும் ஏற்பட்டது சேரதூதனுக்கு. எதிலும் வெற்றி தோல்வி சகஜம். இதற் தன்னைத் தைரியப் காக நான் அஞ்சுவானேன் என்று படுத்திக் கொள்ளவும் செய்தான். 

பெல்ல…மெல்ல உறக்கமும் அவனை ஓரளவு ஆட் கொண்டது. வஞ்சிநகர் முழுவதையுமே ஓரளவு அமைதி மூடிக்கொண்டது. சஞ்சயன் மிதமிஞ்சிய அதிர்ச்சி யாலும், அதிர்ச்சி விளைவித்த களைப்பாலும் நன்றாக அயர்ந்து உறங்கினான். இடையிடையே உடல் தூக்கி வாரிப்போட்டுக் கண்களைத் திறந்த சமயத்தில் சாள ரத்தை நோக்கினான். சாளரத்துக்கு வெளியே நீலவானத்தில் விண்மீன்கள் மின்னின அவனைப் பரிகசிப்பது போல. சாளரத்தைப் பார்த்தால்தானே இந்தத் தொந்தரவு என்று மறுபுறம் திரும்பிப் படுத்தான் சஞ்சயன், அறைக் கதவை நோக்கி. மூன்றாம் ஜாமம் அடியெடுத்து வைத் ததும் உண்மையாகவே உறக்கம் அவனை ஆட்கொண்டது. கண்கள் தாமாகவே மூடின. கால்களை நன்றாக நீட்டி நித்திரை வயப்பட்டான். 

நீண்ட புரவிப் பயணத்தின் விளைவாக அவன் கால்கள் மிகவும் வலித்தன. அவற்றை யாராவது பிடித்தால் என்ன என்று கனவில் வினவிக் கொண்டான். அந்தக் கனவுக்கு விடை கிடைத்தது. அவன் காலை மிக மெதுவாக யாரோ தொட்டார்கள். உறக்கத்தில், உறக்கம் அளித்த கனவில் மெதுவாக நகைத்தான் சஞ்சயன். ”எனக்கு யார் காலைப் பிடிப்பார்கள்? மென்னியைத்தான் பிடிப்பார்கள்” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன. 

மறுபடியும் ஒருமுறை அவன் கால் சற்றுப் பலமாகவே அழுத்தப்பட்டது. சற்றே விழித்துக் கொண்ட சஞ்சயன் குறுவாளை எடுக்கக் கையைக் கொண்டு போனான். இடைக்கச்சைக்கு. கச்சையில் குறுவாளில்லை. சட்டென்று எழுந்திருக்க முயன்றான். மார்பை வலுவான கரம் ஒன்று அழுத்தியது. கண்களை நன்றாக விழித்தான் தூதன். அவன் காலடியில் கடல்வேந்தன் உட்கார்ந்திருந்தான். அதையும் கனவென்றே நினைத்தான் சஞ்சயன். •‘சே! கனவிலும் இவன்தானா வரவேண்டும்?” என்று எரிச்சலுடன் சொன்னான். 

அதைக் கேட்ட அந்தக் கனவு உருவம் நகைத்தது. 

20. புதிய பயணி 

வஞ்சி மாநகர் படைவீட்டிவ் தனிப்பட்ட தனது அறையில் உறங்கிக் கொண்டு, இல்லாத கனவுகளையெல் லாம் கண்டு கொண்டிருந்த சேரதூதனான சஞ்சயன் தனது மார்பை யாரோ பலமாக அழுத்துவதைக் லேசாகக் கண் விழித்தபோது, பக்கத்தில் கடல்வேந்தன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு முதலில் பிரமையும், திகிலும் அடைந்தானானாலும் பிறகு அதைக் கனவென்றே நினைத்துக் கண்களை மூடினான். “சே! போயும் போயும் கனவிலும் இவன் தானா வரவேண்டும்?” என்று அலுத்தும் கொண்டான். இன்னொரு முறை அவன் உடலே வலு வான கரத்தால் அசைச்கப்பட்டதும் சஞ்சயன் சுண்களை அகல விழித்து, தான் காண்பது கனவல்லவென்பதைப் புரிந்து கொண்டதால் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்றான். 

கடல்வேந்தன் சேரதூதனை இகழ்ச்சி ததும்பிய கண் களால் நோக்கி, “எழுந்திருக்க நேரமிருக்கிறது. படுத்தபடி இருங்கள். முதலில் நாம் பேசுவோம்’ என்று சொன்னான். 

அதனால் பஞ்சணையில் திரும்பி மல்லாந்துவிட்ட சஞ்சயன் “கடல்வேந்தரே!” என்று மெதுவாக அழைத்தான். 

“எனன தூதரே?” என்று விசாரித்தான் கடல் வேந்தன், 

“நான் உம்மைச் சிறை செய்தது நிஜந்தானே?” என்று சேரதூதன் வினாவினான் 

“ஆம். நிஜந்தான்” என்று கடல்வேந்தன் ஒப்புக் கொண்டான். 

“வஞ்சிநகளுக்கு உம்மைக் கொண்டு வந்தது?” சஞ்சயன் கேட்டான் ஆவலுடன். 

‘”அதுவும் உண்மைதான்” என்ற கடல்வேந்தன் இதழ்களில் இளநகை விரிந்தது. 

“அப்படியானால் நீர் ஏன் வண்டியில் இல்லை?” அவன் கேள்வியில் கடல்வேந்தன் வண்டியில் இல்லாதது. தவறு என்ற குற்றச்சாட்டு இருந்தது. 

“எத்தனை நேரம் அந்த மூடு வண்டியில் உட்கார்ந் திருப்பது?” என்று கேட்டான் கடல்வேந்தன். 

“எப்படித் தப்பினீர்!” 

“தப்பவில்லையே? இதோ வந்துவிட்டேனே”. 

“இப்பொழுது வந்து என்ன பயன்? என் மானம் போய் விட்டதே?” 

“உமக்கு என்று மானம் இருந்தது? எப்பொழுது கடல் வேந்தனைப் போன்ற ஒரு கொள்ளைக்காரனை இரண்டு ஆண்டுகளாகப் பிடிக்கவில்லையோ அப்பொழுதே உமது மானமும், அந்தக் கையாலாகாத மந்திரியின் மானமும்  போன மாதிரிதானே?” 

சஞ்சயன் என்ன பதில் சொல்வதென்று விளங்காத தால் விழித்தான். பிறகு பழைய கதையைக் கிளறுவது அநாவசியமென்று நினைத்து “இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான் சஞ்சயன். 

கடல்வேந்தன், சஞ்சயன் படுக்கையிலிருந்து எழுந்து நின்றான். ”எழுந்திரும் தூதரே!’ என்று எழுந்திருக்கத் இரதனுக்குக் கட்டளையிட்டான். 

சஞ்சயனுக்கு ஏதும் புரியாததால் மிரள மிரள விழித்து “எதற்கு?” என்று வினவினான். 

“முசிறி செல்ல” கடல்வேந்தனின் பதில் சுருக்கமாக வந்தது. 

சஞ்சயனுக்கு அவனது காதுகளையே நம்ப முடியாத தால் “என்ன? என்ன சொல்கிறீர்” என்று வினவினான். 

கடல்வேந்தன் சஞ்சயனைச் சற்றுக் கடுமையாகப் பார்த்து ‘முசிறிக்குச் செல்ல வேண்டும். நேரமாகிறது. நாளைக்குள் நான் முசிறி செல்லாவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும். உடைகளை அணிந்து கொள்ளும்” என்று உத்தரவிட்டான். 

சஞ்சயன் வியப்புடன் நோக்கினான் வேந்தனை ”இந்த வஞ்சியிலிருந்து எப்படி வெளியேறுவதாக உத்தேசம்?” என்று வினவவும் செய்தான். 

“நாம் வந்த மூடுவண்டியில், வாசலில் வண்டி சித்தமாயிருக்கிறது” என்ற  கடல்வேந்தன் “நேரம் அதிகமாகிறது. கிளம்பும்” என்று துரிதப்படுத்தினான்.  

“வண்டி- மேற்கு வாயிலில் மடக்கப்பட்டால்?” சஞ்சயன் கேள்வியில் சற்றுச் சபலம் இருந்தது, எப்படியும் கடல்வேந்தனை அச்சுறுத்தி நிறுத்திவிடலாமென்ற நினைப்பில். 

“யாரும் மடக்க மாட்டார்கள்” கடல்வேந்தன் திட்ட மாகப் பதில் சொன்னான். 

“ஏன்?”

“வண்டியை ஓட்டப்போவது நீர்”.

*நானா?” 

”ஆம்”. 

“நான் வண்டிக்கார னல்லவே”

“பாதகமில்லை. அந்தப் புது உத்தியோகத்தை வகிக்கலாம்.” 

“எதற்காக வதிக்க வேண்டும்?”

“உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள” என்ற கடல் வேந்தன் “தூதரே! உமக்கு மூளை சிறிதேனும் கிடையா தென்பது எனக்குத் தெரியும் ஆகையால் விளக்கமாகச் சொல்கிறேன் கேளும். சேர தூதர் ஓட்டும் வண்டியைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. சோதனை செய் வதற்கும் மன்னர் உத்தரவு தேவை. இந்த விவரங்கள் நீர் அறியாதவையல்ல. ஆகையால் நீர் கால தாமதம் செய் யாமல் கிளம்பும். இல்லையேல் உம்மைக் கட்டித் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு கிளம்புவேன். ஏதாவது திணறினாலோ, சத்தம் போட்டாலோ உம்மைக் கொன்று விடுவேன்” என்று தனது கைகளையும் நீட்டிக் காட்டினான். 

அந்த சமயத்தில் ஏற்கெனவே காயத்தழும்பிலிருந்த அவன் முகம் மிகவும் பயங்கரமாக மாறியது. சிவந்த அவன் முரட்டுத் தலைக்குழல் அதிக முரடாகத் தெரிந்தது. அவன் உதடுகள் உள்ளூரச் சிறிது மடிந்து உக்கிரத்தைத் தெளிவு படுத்தின. இவற்றையெல்லாம் கண்ட சஞ்சயன் கடல் வேந்தனிடம் மேலும் சர்ச்சை செய்வதில் அர்த்தமில்லை யென்பதைப் புரிந்து கொண்டு ஆடைகளை அணிந்து அந்தக் கொண்டான். கச்சையையும் இறுக்கிக் கட்டிக் கொண்டான் கச்சையில் தனது மடியிலிருந்து குறுவாளை எடுத்துச் செருகிய கடல்வேந்தன், “இதோ உமது ஆயுதம், திறந்து வைத்துக் கொள்ளும்” என்று கூறிவிட்டு அறையின் கதவைத் கொண்டு வெளியே நடந்தான். அவனைத் தொடர்ந்த சஞ்சயன் அறை வீட்டின் அந்தப் பகுதியில் காவலர் யாருமில்லாததைக் கண்டு வியந்தான். “எல் வாரும் எங்குதான் போயிருப்பார்கள்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். 

அவன் மனத்திலோடிய எண்ணங்களைக் கடல்வேந்தன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். காவலர், அரசர் உத்தரவுப்படி வில்லவன்கோதை வீட்டிற்குச் சென்றிருக் கிறார்கள்” என்று கூறினான். 

“இந்த வேளையில் அங்கு என்ன வேலை?” என்று சஞ்சமன் வினவினான். 

“கடல் வேந்தனைப் பாதுகாக்க காவலரை வரும்படி உத்தரவு வந்தது. போயிருக்கிறார்கள்” என்று கடல் வேந்தன் சர்வ சாதாரணமாகச் சொன்னான் 

“அந்த உத்தரவைக் கொண்டு வந்தது யார்?” 

“நான்தான்” 

“என்ன விளையாடுகிறீர்?” 

“அதற்கு அவகாசமில்லை.” 

“சொன்னாலன்றி இந்த இடத்தைவிட்டு நகரமாட் டேன். யாரும் செய்ய முடியாதையெல்லாம் செய்கிறீர், நீர் என்ன மந்திரவாதியா?” என்று சீறிவிட்டு நின்ற இடத் திலேயே கல்லுப்பிள்ளையார் மாதிரி நின்றுவிட்டான் சஞ்சயன். 

சஞ்சயன் கேள்விக்குப் பதிலேதும் சொல்லவில்லை கடல் வேந்தன். தூதனை அப்படியே ஆட்டுக்குட்டியைத் தூக்குவதுபோல் அநாயாசமாக்த் தூக்கிக் கொண்டு வாசலை நோக்கி விரைந்து அங்கிருந்த மூடுவண்டியின் முகப்பில் அவனை உட்கார வைத்தான். “இந்தாரும், இதோ சாட்டை. புரவிகளைத் தூண்டி ஓட்டும் வண்டியை” என்று உத்தர விட்டுப் பின்னால் சென்று காவித் திரையை நீக்கி உள்ளே ஏறிக் கொண்டான். 

கையிலேந்திய சாட்டையுடனும் புரவிக் கடிவாளங்களுடனும் உட்கார்ந்திருந்த சஞ்சயன் புரவிகளை நகர்த் உபயோகிக்கவுமில்லை. அப் தவுமில்லை; சாட்டையை பொழுது வண்டிக்குள் இருந்த ஒருவன் அவன் காதில் சொன்னான். ”தூதரே! வண்டியை ஓட்டும், அதுவும் துரிதமாக” என்றான். 

அப்பொழுதும் சஞ்சயன் சண்டித்தனம் செய்யவே அவன் முதுகில் குறுவாளொன்று லேசாசு அழுத்தியது. “சிறிது தாமதித்தாலும் இக் குறுவாள் உமது ரத்தத்தைக் குடிக்கும்” என்றான் உள்ளிருந்தவன். 

அந்தக் குரல் தூகனுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் பிரமித்தான் சஞ்சயன். “இவனெப்படி இங்கு வந்தான்?” என்று தன்னுள் வினவிக் கொண்டான். ஆனால். தமது சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ள ”நற்கிள்ளி! நீ எப்படி வந்தாய் இங்கே?” என்று வினவினான். 

“இந்த வண்டியை ஓட்டி வந்தேன்.” நற்கிள்ளி மெல்ல நகைத்தான் 

“வண்டியை ஓட்ட ஓட்ட வேறொருவனை நியமித்திருந் தேனே, அவன் என்ன ஆனான்?” 

“முசிறியில் இருக்கிறான்.” 

“எப்பொழுது வண்டியை நீ ஓட்ட முற்பட்டாய்?” 

“சுள்ளியாற்றில் வேந்தர் நீராடிய போது உங்கள் வண்டிக்காரன் வேடிக்கை பார்க்க ஆற்றுத்துறைக்கு வந்தான். பிறகு அலுப்பாய் அவன் ஆற்றில் நீந்த ஆரம் பித்தான். அவனுக்குப் பதில் நான் வண்டியில் ஏறிக் கொண்டேன். 

இதைக் கேட்ட சஞ்சயன் பிரமித்தான். நற்கிள்ளி தங்களைத் தொடர்ந்து வந்திருக்கிறானென்பதைப் புரிந்து கொண்டான். ஆற்றங்கரைக்கு வந்த வண்டிக்காரனை தான்ஆற்றில் அவன்தான் ஆற்றில் தள்ளியிருக்க வேண்டுமென்பதும் அவனுக்கு சந்தேகமற விளங்கியது. ஆகவே கேட்டான் “வண்டிக்காரன் இறந்துவிட்டானா?” என்று. 

“இல்லை. படகில் வந்த புத்தத் துறவிகள் அவன் ஆற்றில் இறங்குவதைப் பார்த்துவிட்டார்கள். ஆகையால் காப்பாற்றி இருப்பார்கள்” என்ற நற்கிள்ளி அதற்கு மேல் உரையாடலைத் தொடர இஷ்டப்படாமல் “தூதரே! வண்டியை ஓட்டு” என்று சொல்லி குறுவாளையும் முதுகி லிருந்து எடுத்துக் கழுத்தில் அழுத்தினான். 

மேற்கொண்டு எந்தத் தர்க்கத்திலும் இறங்காமல் சடிவாளத்தைத் தளர்த்தி இழுத்துவிட்டுச் சாட்டையால் புரவிகளை இரண்டு தட்டுத்தட்டி வண்டியை ஓடவிட்டான் சஞ்சயன். வண்டியும் மேல் திசையை நோக்கிச் சென்றது. அந்தப் பயணத்தில் பல விசித்திரங்கள் காத்திருந்தன சேர தூதனுக்கு வண்டியை மேலை வாயில் காவலர் தடுக்கவுமில்லை; சோதிக்கவுமில்லை. வண்டியை ஏதும் கேட்காமல், சஞ்சய னுக்குத தலை தாழ்த்தி வெளியே செல்ல அனுமதித் தார்கள். இரவில் ஒரு ஜாமம் வண்டி பயணம் செய்ததும் சொக்கன் சத்திரத்துக்கு வந்து நின்றது. அந்தச் சத்திரத்து வாயிலில் சித்தமாக நின்றிருந்த ஒரு பயணி தலைமுதல் கால்வரை தனது உடலை மூடியிருந்தார். வண்டி வந்து நின்றதும் பின்புறம் சென்று ஏறிக் கொண்டார். 

“உம். விடுங்கள் வண்டியை” என்று ஊக்கினான் நற்கிள்ளி. 

வண்டி ஓடியது. அதன் முன்புறமும் ஒரு துணிச்சீலை யைக் கட்டிய நற்கிள்ளி அதற்கு வெளியே வந்து சஞ்சய னுடன் வண்டியின் முகப்பில் உட்கார்ந்து கொண்டான். சஞ்சயனுக்குத் தலைவெடித்துவிடும் போலிருந்ததால் “யார் இப்பொழுது வண்டியில் ஏறியது?” என்று வினவினான். 

“அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். சும்மா வண்டியை ஓட்டும்” என்றான் நற்கிள்ளி. 

ஆனால் சஞ்சயன் விடவில்வை. முன் திரையை அகற்றி உள்ளே பார்க்க முயன்றான். அவன் கை இரும்புக் கையால் பிடித்து முறுக்கப்பட்டது. “ஐயோ” என்று அலறினான் சஞ்சயன். 

“போனால் போகிறான், விட்டு விடுங்கள். இந்த சஞ்சயன் பொல்லாதவனல்லன், அசடு” என்று புதுப்பயணி பரிந்து பேசினார். 

அந்தக் குரல் சஞ்சயனுக்கு மிகவும் பழக்கமான தால் அவன் பிரமை சொல்லத் தரமில்லாததாயிற்று. “இதென்ன மாயம்?” என்று தன்னைக் கேட்டுக்கொண்டான். “பயணி சொன்னதில் தவறில்லை. நான் அசடுதான். முட்டாள் தான்” என்று தன்னை வெறுத்தும் கொண்டான்.

– தொடரும்…

– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *