நடுநிசி நாய்கள்..!

 

இரவு பனிரெண்டு தாண்டி இரண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும்…!

வழக்கம் போல மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான் சுரேஷ்..! வாட்ஸப்.. ஃபேஸ்புக் குனு நண்பர்களுடன் ஒரே பிசி..!

எப்பவுமே தூங்கரதுக்கு பதினொன்னு பதினொன்னரை ஆகும்.. ஆனா இப்பல்லாம் லீவு ஆனதால தூக்கமே வரதில்ல..! ரெண்டரை மூனு மணி ஆகுது ஃபோனை மூடி வைக்க..! என்ன பண்ரது..?! இன்டர்நெட்டும் ஃபோனும் இல்லன்னா.. நாட்களைத் தள்ரது கொடுமையான விஷயமாத்தான் ஆயிருக்கும் இப்பல்லாம்..!

” லொள்..லொள்..லொள்.. கர். வவ்வூவூவூ…!! ”

திடீரென நாய் குலைப்பு சத்தம் கேக்க ஆரம்பிச்சிது… ! தெருவில நாய்கள் தொல்லை அதிகமாப் போச்சு இப்பல்லாம்..! அதுவும் கரெக்டா நைட்டு பனிரெண்டு பனிரெண்டே காலுக்கெல்லாம் கர்ண கடூரமா குலைக்க ஆரம்பிச்சிடராங்க எல்லாரும்..?! எப்படி இது கரெக்டா டைம் மெய்ன்டெய்ண் பண்ணி கூட்டமா குலைக்கரா்கன்னுதான் புரியல.?

இது இங்க மட்டும் இல்ல..! எல்லா ஊர்லயும் நடக்கிற விஷயம்தான்.! சில நண்பர்கள் கிட்ட கேட்டா பூமி.. எலக்ட்ரோமேக்னடிஸம் னு ஏதேதோ விளக்கம் சொல்லுவாங்க..! சுரேஷ்க்கு அதெல்லாம் புரியர்தில்ல.. காமர்ஸ் க்ரூப்புதானே..?!

சுரேஷ்க்கு ரொம்ப ஆசை..! ஒரு நாளாவது கடவுள்கிட்ட பேசி .. இந்த நாய்ங்க பேசரது புரிஞ்சிக்கிற மாதிரி வரம் வாங்கிடணும்னு ! இதுங்க என்ன பேசிக்கும்னு தெரிஞ்சிக்கணும்னு சுரேஷூக்கு ரொம்ப நாளா ஆசை…!

நினைக்க நினைக்கும்போதே…!

“டேய்..!கம்மனாட்டி!” னு ஒரு குரல்.. !

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான் சுரேஷ்…!

“டேய்.! கம்மனாட்டி உன்னத்தான்டா.! மணி என்ன தெரியுமா.. ? ஒரு மணி ஆகப் போகுது..! இன்னும் தூங்காம லைட்டப் போட்டுகிட்டு என்னடா பண்ர.!?”

அந்த ப்ரௌன் கலர் குட்டி நாய்தான்…! இவன் இருக்கும் ஜன்னலைப் பார்த்துத்தான் கத்திக் கொண்டிருக்கிறது..!

அட தனக்கு நாய் பாஷை புரிய ஆரம்பிச்சிருச்சே ன்னு ஆச்சர்யப் பட வேண்டிய அதே நேரத்துல.. அந்த குட்டி நாய் தன்னப் பாத்து கம்மனாட்டி என்று கூப்பிட்டதை நினைத்து ரொம்ப அவமானமா போச்சு சுரேஷூக்கு..!

இருந்தாலும் முகத்தைத் துடைத்துக் கொண்டு , அந்த குட்டி நாய் என்ன பேசுதுனு கவனிக்க ஆரம்பிச்சான்..!

“டேய் கண்ணு..! சும்மா கத்தாம வந்து படு.. நேரமாவுதில்ல..!” கூப்பிட்டது கருப்பு கலர் அம்மா நாய்..!

“இல்லம்மா .!” உனக்கு ஒன்னும் தெரியாது..! அந்தக் கம்மனாட்டி் பயகிட்ட டெய்லி சொன்னாலும் தெனம் ..தெனம்..நைட்டு ஒரு மணி..ரெண்டு மணி வரைக்கும் லைட் ஆஃப் பண்ண மாட்ரானுக..கண்ணு கூசுது ..! தூக்கம் வர மாட்டேங்குது..!ரொம்ப தொல்லையா இருக்கில்ல..?! ”

“அவங்க அப்படித்தான்டா கண்ணு.. யார் பேச்சையும் கேக்க மாட்டாங்க.! நீ வா..! வாலால மூஞ்ச மூடிகிட்டு தூங்கு..!”

ரொம்ப அவமானமாப் போச்சு சுரேஷக்கு..!

” டேய் ..லைட்ட ஆஃப் பண்ரியா இல்லியா நீ.! காலைல இந்தப் பக்கம் வந்தப்பவே உன் கால கடிச்சு உட்ருப்பேன். போனா போவுது நம்ம தெரு ஆளாச்சேன்னு விட்டு வெச்சிருக்கோம்..! ”

“உனக்கென்னப்பா..! மூனு வேளையும் காலாட்டிகிட்டே திம்ப..! ஆனா நாங்கல்லாம் வால ஆட்டிகிட்டே நாலு தெருவில்ல..!! நாப்பது தெரு சுத்தினாத்தான் ஒரு வேளை சோறாவது கெடைக்கும்..! ஆஞ்சு.. ஓஞ்சு தூங்கலாம்னு வந்தா.. லைட்ட ஆஃப் பண்ரானா பாரு..?! நாங்கல்லாம் நல்லா தூங்கி , காலைல சீக்கிரமா எழுந்துக்கத் தேவையில்லையா.? லைட்ட ஆஃப் பண்ரா டேய்..?!” அன்பாகச் சொன்னது குட்டி நாய்…!

” த்த.. ! தூங்கரத பாரு வாயப் பொளந்துகிட்டு..! டேய்..சுரேஷூ.! என்னடா லைட்ட கூட அணைக்காம இப்படி தூங்கற.! ஃபோன் வேற நெஞ்சு மேலயே கெடக்கு.! ” தட்டி எழுப்பினாள் அம்மா..!

பேந்த பேந்த விழித்தான் சுரேஷ்.! அப்படியே தூங்கிவிட்டோம் எனப் புரிஞ்சிது.!

” லொள்..லொள்.. கர்….! ” ஜன்னல் வழியே சத்தம்..!

“அம்மா.. அம்மா.! அந்த நாய்ங்கல்லாம்…!! ”

“அத விடுடா.! லைட்ட ஆஃப் பண்ணிட்டு படு.. தெருநாய்லாம் நடுராத்திரி ல இப்படித்தான் தூங்க விடாதுங்க..” ன்னு சொல்லிட்டு தன் ரூமிற்கு போனாங்க அம்மா.!

” நைட்ல யாரு , யாரத் தூங்க விடாம தொந்திரவு செய்யராங்க.?!” ன்னு.. குழப்பத்தில் யோசிச்சுகிட்டே லைட்ட ஆஃப் பண்ணினான் ரவி..!

இனிமே பத்தரைக்கெல்லாம் லைட் ட ஆஃப் பண்ணிரனும், நாய்கிட்டலாம் அவமானப் பட முடியாதுன்னு மனசுக்குள்ள நெனச்சிகிட்டு படுத்தான்..!

கெண்டக்கால் சதை முக்கியம் சுரேரேரேஷூஷூ….!! 

தொடர்புடைய சிறுகதைகள்
கொஞ்சம் வழக்கத்தை விட சீக்கிரமாகவே அலுவலகம் வந்து விட்டிருந்தான் ரவி.. ! நம்ம ரவீந்திரன்தான்.! அரக்கோணம் பக்கத்தில் ஷோலிங்கரில் வேலை.. ! பெரிய க்ரூப் கம்பெனியின் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜர் உத்தியோகம்.. ! வீடு பக்கத்திலேயே டவுனில்.. பைக்கை எடுத்து மூனாவது கியர் ...
மேலும் கதையை படிக்க...
நான் சிவக்குமார்..மனைவி சித்ரா.. ஒரே மகன் கணேஷ்.. ஏழு வயது! எங்க வீடு இருந்தது அந்த அப்பார்மெண்டுல.. ! சொந்த ஊர் ராஜ பாளையம் பக்கத்துல .. செட்டில் ஆனது கோயமுத்தூர்..! அப்பா அம்மா தம்பிலாம் ஊர்ல இருக்காங்க. தோட்டம் இருக்கு.. எங்க அப்பார்ட்மெண்ட்ல ...
மேலும் கதையை படிக்க...
இந்தக் கொரோனா எத்தனையோ பேருக்கு உலகம் முழுக்க எத்தனையோ விஷயங்களைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது...! அதற்கு எப்படி பயப்படுவது..? எப்படி கட்டுப்பட்டு நிற்பது..? எப்படி மீறுவது ..? ஏன்..!? எப்படி அதை அலட்சியப் படுத்துவது வரை.. !! எனக்கும் சொல்லித் தந்து கொண்டிருக்கிறது.. ...
மேலும் கதையை படிக்க...
நான் சாரங்கபாணி.! சின்ன வயசில இருந்தே அம்மா.. அப்பாலாம் "சாரி...சாரி". ணே கூப்டுவா..! சின்ன வயசுல என்ன எல்லாரும் "சாரி.சாரி."ன்னு கூப்டரச்சே.. "ஏன்..! நீங்க என்ன தப்பு பண்ணினேள்.?.எங்கிட்ட சாரி கேட்கரேள்?" னு ஜோக் அடிப்பேன் நான்.. குறைஞ்சது ஒரு ஆயிரம் ...
மேலும் கதையை படிக்க...
(அக்கால சிந்தனைகள் தற்கால வாசகர்களின் வசதிக்காக இக்கால எழுத்துக்களில் விளக்கப் பட்டிருக்கின்றன..!) அந்த பெரிய மரத்தின் தடித்த கிளையின் மேல் படுத்திருந்தேன்..! சிலு சிலு வென காற்றில் இலைகளின் அசைவுகள்... வயிறு நிரம்பி இருந்ததால் சுகமான உணர்வு..! இப்போதுதான் ஒரு பெரிய மானை ...
மேலும் கதையை படிக்க...
சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்ப எத்தனித்தான் ரவி..! "என்னங்க .! வெளிய கௌம்பிட்டீங்களா? வெறும் வயத்தில போகாதீங்க.! கொஞ்சம் பழைய சாதம் கரைச்சு வெச்சிருக்கேன்.! சாப்டுட்டு போங்க என்றாள் மனைவி மல்லிகா.! மனைவியை ஏறிட்டு பார்த்தான் ரவி.. ! அப்போதுதான் படுக்கையில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
நான் நாராயணன்..! நாணா.! வசிப்பது நாக்பூரில் .! அப்பாவுக்கு நாக்பூரில் உத்யோகம்.! பேரு தர்மராஜ்..! இந்திப் பள்ளிக்கூட வாத்தியார் .! அம்மா ஞானம் .! அப்பா அம்மாவின் ஒரே புள்ளையாண்டான் நான்.! அப்ப உத்யோகமா இருந்த பள்ளிக்கூடத்தில்தான் நானும் படிச்சேன்.! ஆனா ...
மேலும் கதையை படிக்க...
படு வேகமாக வந்து தெரு ஓரத்தில் சர்ரென திரும்பியது அந்த வண்டி..! தூக்கி வாரிப் போட்டு .. எழுந்து ஓரமா ஓடினேன் நான்..! அம்மா டக்குனு பயந்து போய்ட்டாங்க.! "உன்ன தெரு ஓரமா படுக்காதேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்.! ஒழுங்கா இங்க வந்து ஓரமா ...
மேலும் கதையை படிக்க...
"கோல்டன் குரோவ்..!" பெரிய நாயக்கன் பாளையத்தில் இருந்து கொஞ்ச தூரத்துல தள்ள்ள்ள்.....ளி உள்ள்ள்ள்...ள இருக்கிறது இந்த கேட்டட் கம்யூனிட்டி..! இருங்க ட்ரோன் கேமிராவ எடுத்து பறக்க விடறேன்..கழுகுப் பார்வையில பார்க்கலாம்.! இப்பல்லாம் இதான ஃபேமஸ்.? பெரிய நாயக்கன் பாளையத்தில இருந்து எல்எம்டபிள்யூக்கு நேர் எதிர் ...
மேலும் கதையை படிக்க...
"கொமாரூ...! " "அம்மா.! " "எந்திரி ராசா...போ. பல்லு விளக்கிட்டு வாப்பா..!" தினமும் காலை மூனரை மணிக்கு அம்மாவின் பாசக் குரல் கேட்டு எழுந்திருப்பேன்...! காலு சுருக்கி வெச்சு படுத்ததால லைட்டா முட்டியில நோவும்...! என்னை எழுப்பிட்டு அம்மா கீழ விரிச்சிருந்த சேலய சுருட்டி வெச்சிட்டு இந்த ...
மேலும் கதையை படிக்க...
சரணாலயம்..!
செக்ரட்டரி மாமா..!
கொரோனா கிச்சன்..!
நான் சாரங்கபாணி..!
ஆதி சிந்தனை..!
பிறக்காத தந்தை..!
கஜேந்திர கன பாடிகள்.!
தோ.. தோ..!
ஜக்கம்மா..!
ஒரு நாள் டைரி..!

நடுநிசி நாய்கள்..! மீது 2 கருத்துக்கள்

  1. Rajsundar says:

    Excellent story

  2. Harshini says:

    Arumaiyana kadhai sir. Migavum arpudhamaga sindhithu ulleergal. Melum pala kadhaigal pugazhpera enadhu vaazhyhukkal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)