காதலெனும் கேஸ் எழுதி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,829 
 
 

கி.பி.20008!

எலக்ட்ரானிக் துகள்களால் யுகம் கட்டுப்பட்டுக் கிடக்க ரோபோக்களின் ராஜ்யம், நாடுகள் என்ற நிலை மாறி கிரஹங்களின் ஒரே ஆட்சி.

தலைமைக் கோர்ட்டில் கைதி ரோபோ நம்பர் அஆ8 கதறிக் கொண்டிருந்தது. அதன் செல்பதித்த, கண்கள் சிவப்பாகி அதிலிருந்து நீல நிறத்தில் திரவம் வழிய காந்த செல்களில் மோதி, மோதி ஏற்பட்ட சத்தம் வினோதமாயிருந்தது.

காதலெனும் கேஸ் எழுதிஜட்ஜ் லல3 மாறாத கோபத்தில் இருந்தார்.

“”திடீரென கோர்ட் கூட அவசரமான காரியம் அல்லது குற்றம் நடந்திருக்கணும். மிஸ்டர் போலீஸ் என்ன விஷயம்?”

கைதி அஆ8-ன் கதறல் ஜாஸ்தியாயிருந்தது.

“”ஸ்டாப்! இது கோர்ட்! ட்ராமா தேவையில்லை. மிஸ்டர் போலீஸ் என்ன குற்றம்”

“”விசேஷ குற்றம்! ரோபோ அஆ8-ன் தற்கொலை முயற்சி”

லேசர் டி.வி.களின் செய்திக் கசிவில் பார்த்த ஞாபகம் ஜட்ஜுக்கு.

“”எப்படி முயற்சி?”

“”சென்சார்களை உடைத்துக்கொண்டு, “சிப்’களை மிளகாய்ப்பொடி, ஆசிட், மின்சாரம், உப்புத்தண்ணி, ஊற்றி, மாற்று எலக்ட்ரானிக் கதிர்களால் ஓட்டை போட்டு, நாசமாக்கிய குற்றம்! பசி டேப்லெட்டை பத்து நாட்களாய் யூஸ் பண்ணவில்லை என்பது தலைமை சுகாதார நிலைய ரெக்கார்ட் சொல்லுது!” போலீஸ் புகார் படிக்க,

“”ஸ்டாப்! போலீஸ் மிக நீண்ட வாக்கியங்களை என் வயதான சென்சார்கள் முழுமையாக உணராது. சின்ன வாக்கியங்கள், ஏன் வார்த்தைகள் போதுமே!”

“”ஸôரி”

“”தட்ஸ் ஓ.கே. குற்றம்! அதன் வினையின் தீவிரம் புரியது! கர்ண கொடூரம்! வாலிப ரோபாவே ஏன் சாக ஆசை? அல்லது சாகும் எண்ணம் ஏன் வந்தது? என்ன ப்ராப்ளம்?” ஒரு தோழனின் பரிவு.

மறுபடி கைதி அஆ8-ன் கதறல்.

“”தற்கொலை நம்ம கிரகத்தில் பெரிய குற்றம்! தடுக்கப்பட்டது. பிறக்கும்போதே அரசாங்கம் உனக்கு விஸ்டம் சென்சார் வச்சாங்களா இல்லையா? ஒரு ரோபோ உன் மாதிரி ஹையர் கிரேடில் உருவாக்க, எத்தனை விஞ்ஞானிகள், அறிவாளிகள், மெக்கானிக்குகள் பாடுபட்டு, உன் செயல்களையும் சென்சாரில் உள்ள “சிப்’களையும் சீரமைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். அவங்களை நினைச்சுப் பார்க்காமல், மதிக்காமல், அவமானப்படுத்த என்ன ஒரு மட்டமான முயற்சி?” (அப்பா, எத்தனை பெரிய பாரா?)

“”புரியலை”

“”எனர்ஜி வேஸ்ட். உனக்கென்ன குறை?”

“”குறை நிறைய”

“”விளக்கமாகச் சொல்! புரியலை”

“”துணை வேணும்! அப்படியே மனசுக்கேத்த துணை!!”

“”துணை? அப்படியொரு வார்த்தை நம் மொழியில் கிரகத்தில் வழக்கத்தில் புழக்கத்தில் இருக்கா?”

“”கவிதை மாதிரி பேசுறீங்க. பையனோட வாழ்க்கை இங்கே கந்தலாகுது”

“”இதுகூட கவிதைதான்! ஓ.கே. பழக்கமில்லாத வார்த்தை பசப்புகள் வேண்டாம். இதென்ன மந்திரமா? ஃபார்முலாவா? நீ என்ன வன்முறைவாதியா? ஏதாவது டெரரிஸ்ட்?” முறைத்தார் ஜட்ஜ்.

“”ஆமாம். காதல் தீவிரவாதி. இன்னும் பேசுவேன். அன்பு, பாசம், நேசம், உயிர் சுவாசம்” என்றது ரோபோ.

“”ஏய்! என்ன பேசறே? எங்கே பிடிச்ச இந்த வார்த்தைகளை?”

“”லைப்ரரியில் பழைய நூலகத்தில், பழைய துருப்பிடித்த பிளாஸ்டிக் சிடிக்களில்”

“”அப்படியானால் இந்த வார்த்தைகளைப் பற்றி தெரியாமல் கேஸ் நடத்த முடியாது” ஜட்ஜ் புலம்ப,

“”கற்றல் தேவை! பழைய சுவடி சி.டி.க்கள்” ரோபோ பேச,

“”கற்றல், சுவடி, மறுபடி புது வார்த்தைகள். கேûஸப் புத்திசாலித்தனமா கொழப்புறியா?” கோபமாய் ஜட்ஜ் கேட்க,

“”இல்லை, உண்மை பேசறேன். அயல் கிரகத்தின் தொடர்பு”

“”வேறு கிரகமா? லேசர் வெஹிக்கிள் பாஸ் இருக்கா?”

“”இல்லை”

“”மறுபடி குற்றம்! திஸ் இஸ் தி லிமிட்”

“”கேஸ் அதில்ல மிஸ்டர் ஜட்ஜ். உயிர், பாசம், தொடர்பு, நேசம், காதல், துணை, காதலி, தற்கொலை இதுதான்” போலீஸ் சொல்ல,

“”கரெக்ட்? எல்லாத்துக்கும் அர்த்தம் நம்ம மொழி இலாக்காவில் தராங்க. ஏன் தற்கொலை?” ஜட்ஜ் கேட்க,

“”காதல் தோல்வி எனக்கு, அந்த மாடல் பெண்களுடன் வாழணும். பீகோ மாடல்! நம்ம கிரக சட்டம் அனுமதிக்கவில்லை. அதான் தற்கொலை”

“”இளைஞனே! சின்ன வயது ரோபோ நீ. உன் குற்றத்தை மன்னிக்க சான்ஸ் இருக்கு”

“”குற்றம் இன்னும் நடக்கலை வயதான சீனியர் ரோபோ, நான் சொல்றதைக் கேள். உனக்கு இன்னும் 4500 மெகா வாட் மின்சாரம் மாதம் ஒன்றுக்கு இலசமாக மான்யம் தருகிறேன். உன் ஆசையை விடு!”

“”ஆசை – புதுவார்த்தை நீங்களே கத்துக்கிட்டீங்க. எனக்கு இந்த பிகோ மாடல் பெண் ரோபோ வேணும். இல்லைனா தற்கொலைதான்”

“”மடத்தனமா பேசாதே நாம மெஷின், ஜாதி இல்லை. சமாதி ஸ்டேஜ் உள்ள மனிதர்கள்! ப்ரோகிராம் பண்ணினால் உயிர்… இல்லைனா குப்பை”

“”குப்பையா வாழக்கூடாது. இசை கேட்டிருக்கியா? உணர்வு. அம்பிகாபதி-அமராவதி ஸ்டோரி! லைலா-மஜ்னு, ஆண்டனி-கிளியோபட்ரா படிச்சிருக்கியா? லவ் காதல் சகாப்தம்! காதலின் மகிமை தெரியுமா? ஒரு துளி விஷத்தை விழுங்காமல் வாயிலேயே அமிர்தமாய் நினைத்து, சூயிங்கம் போல் சுவைக்கும் உணர்வு! துன்பம் -இன்பம்! பெண் ரோபோ எதிர்த்து பேசி, குட்டி, உன்னை குறை சொல்லி சமையல் சாப்பாடுன்னு உணவுபோட்டு உணர்வோட கண்ணுக்கும் தெரியாத பாச கெமிக்கல் ஆக்ஷன்!”

“”நீ ஆக்ஷன் ஒரு சேர அமைந்த பெண் ரோபோவை ரசிக்கிற சமாளிக்கிற இன்ப அவஸ்தைதான் காதல்”

“”அழகு மேலும் ஒரு வார்த்தை எங்கேயிருந்து இவ்வளவு பெரிய பாராவை பேசற கற்றல் வந்தது உனக்கு?”

“”எல்லாம் 20-ஆம் நூற்றாண்டில்! மெஷின் வாழ்க்கை அலுத்துப் போச்சு! சுதந்திரம் வேணும்! சிந்திக்க படிக்க, வாழ, பழக, உணர, அழ, சிரிக்க…”

“”இங்கே பாரு உன்னை நானே காப்பாத்த முடியாத ரேஞ்சில் பேசிக்கிட்டு இருக்கே! எல்லா மீடியாவிலும் எல்லா ரோபோக்களும் புரிய முடிந்த வார்த்தைகள் விஷயங்கள்! ஜாக்கிரதை!”

“”இதுதான் எனக்கு வேணும். சரி குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?”

“”குற்றமேயில்லை. ஜீவாதாரம்! உரிமை! வாழ்க சுதந்திரம்!”

“”குரலை உயர்த்தாதே. நீ என் மகன் மாதிரி இருக்கிறே. கோர்ட்டின் நேரம் பாழாகுது! மூன்றே நிமிஷத்தில் முடிய வேண்டிய கேஸ், மூன்று மணி நேரமாகுது. டூ மச்!” எரிச்சலாய் கத்தினார்.

“”காதல் செய்த குற்றம் நடந்த இடம்?”

“”கண்டுபிடியுங்க!” ரோபோ ஸ்டைலாய் சொல்ல,

“”அலட்சியம். கோர்ட்டை அவமதித்தால் கடும் தண்டனை”

“”யோவ்! நானே தற்கொலைக்குத் தயார்! நீ என்ன தண்டனை தர்றது?”

“”என்ன கிண்டல் பண்றியா?” போலீஸ் எகிற,

“”கூல் டவுண் போலீஸ்! இவன் சொல்றதில் விஷயம் இருக்கு. பெண் ரோபோ பீகோ மாடலை நான் பார்க்கணும்”

“”உங்களையே குழப்பிட்டான்”

“”நோ. பீகோ மாடல் பார்க்காமல் இந்த கேஸ் முடியாது”

“”என்னோட லேசர் ப்ளேனை ரெடி செய். இந்த ரோபோ அஆ8-ம் வரட்டும்”

“”வழக்கு இழுக்குது” போலீஸ் ரோபோ தலையில் டார்ச்சால் தட்ட, “”மிஸ்டர் போலீஸ் நீங்க செய்யுறது தப்பு. கைதியை கோர்ட்டில் அடிச்சீங்க, ஒரு வருஷம் சஸ்பெண்ட்”

“”நோ சார்! ஒரு ஸ்குரு லூசாகி வெளியே வந்தது. அதை உள்ளே அடிச்சேன்”

“”பொய். அடித்தார்” அஆ8 ரோபோ சொல்ல,

“”ஓ.கே. இந்த முறை மன்னிப்பு. இன்னொரு முறை அடித்தால் சஸ்பென்ஷன் தாண்டி டிஸ்மிஸ்தான்! ப்ளேனை ரெடி பண்ணுங்க, டபுள் ப்ளு-ரே”

எழுந்து நடந்தார் ஜட்ஜ்.

ஏ ஏ ஏ

அயல் கிரக விமானநிலையம். என்கொயரி முடிந்து திரும்புகிற நேரம். ஜட்ஜ் லேசர் பிளேனில் ஏற, கைதி அஆ8 ரோபோ “ஓ’வென விநோத சத்தம் கொடுத்து அழ,

சில பீகோ மாடல் சிப்பாய்கள் பலவந்தமாய் கைதி ரோபோ அஆ8-ஐ ப்ளேனில் ஏற்ற, கைதி ரோபோ வேகமாய் தன் நடு காது “சிப்’பை வீசி எறிய, அதை பீகோ மாடல் அழகி, காதலி கையில் எடுத்து புலம்பி அழ,

லேசர் ப்ளேன் புறப்பட்டது.

“”யோவ் ஜட்ஜ் நீ மனுஷனே இல்லை! கல்நெஞ்ச எந்திரம்! உனக்கு பிறந்த நாள் முதல் ஓவராயில் செய்யலாமா? கொஞ்சம் ஈரம்? காதலியைக் காட்டிக் கொடுத்திட்டே. அந்த நாட்டுச் சட்டப்படி அவளைத் தனித்தனியாகக் கழட்டி, தண்ணியில், உப்புத் தண்ணியில் ஊற வைக்கற தண்டனை! சந்தோஷமா? காதல் குற்றமா?” கைதி கத்த,

ஜட்ஜ் பேசவில்லை! பூமி கிரகத்துக்கு வந்ததும், ராத்திரி முழுவதும் கைதி ரோபோ அஆ8 அழ,

காலையில் ஜட்ஜ் ப்ரெஷ்ஷாய், “”மகனே இப்ப ஓ.கே.யா” என்று கேட்க, “”யோவ் ஜட்ஜ்! நீ நாசமாப் போக” என்று திட்டி முடிக்கும் முன், கைதி ரோபோவின் காதலி பீகோ மாடல் அழகி என்ட்ரி கொடுக்க,

கைதி சந்தோஷத்தில் விநோத சப்தம்! மகிழ்ச்சிக் “க்ரீச்’ தெருவே அதிர்ந்தது. “”ரொம்ப தேங்க்ஸ்! சாமர்த்தியமா கூட்டி வந்துட்டீங்க. எங்கப்பா சார் நீங்க”

“”ஏய் தாங்க்ஸ்னு ஒரு வார்த்தை தானா? எனக்கு ஏகப்பட்ட சிரமம். ரகசிய “சிப்’ ப்ளேனில் இவளையும் இவள் தங்கை பீகோ ஏஞ்சலையும் கடத்த நான்பட்ட பாடு”

“”என்ன? இவ தங்கையையும் கடத்தீட்டீங்களா? ஏன்?”

“”ஏன்னா. அவ என் லவ்வர்! உள்ளங்கவர் கள்ளி!!!”

“”என்ன ஜட்ஜுக்கும் காதலா? பீகோ மாடல் ஏஞ்சலுடன்” கைதி ரோபோ நம்பாமல் கேட்க,

“”நம்ப கிரக சட்டத்தை மாத்த சிபாரிசு செய்யப் போறேன். ஒவ்வொரு ரோபோ மாடலும் ஒரு அயல் இரவு கிரக மாடலை காதலிக்கலாம்! ஒரு ரோபோவுக்கு ஒரு ரோபோ! கற்பு தவறா வாழ்க்கை!”

“”அப்படின்னா?”

எல்லா டி.வி. சானலிலும் காதல் சட்ட திருத்தம் வாசிக்கப்பட்டது.

ஜட்ஜுக்கும் கைதி ரோபோவுக்கும் ஒரே நாளில் கல்யாணம்.

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *