ஒரு குட்டிப் பையன் சம்மர் கோர்ஸில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக அப்பாவுடன் நீச்சல் குளத்துக்குப் போனான். அப்பா அந்த கோர்ஸ் பற்றிய விவரங்களையும், பயிற்சி நேரம், கட்டணம் பற்றியும் அதன் நிர்வாகியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, பையன் ஆர்வ மிகுதியில் அந்த நீச்சல் குளத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டான். ஒவ்வொரு அறையாகப் புகுந்து வெளியேறினான்.
அங்கே பெண்கள் உடை மாற்றும் பிரத்யேக அறை ஒன்றும் இருந்தது. சிறுவன் நேரே உள்ளே நுழைந்துவிட்டான்.
எதிர்பாராதவிதமாக ஓர் ஆண் பிள்ளையைக் கண்டதும், அங்கே உடை மாற்றிக்கொண்டு இருந்த பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் உடம்பில் துணியைச் சுற்றிக் கொண்டு, கிடைத்த இடத்தில் ஓடிச் சென்று பதுங்கினர். ஒருத்தி தலையை வெளியே எட்டிப் பார்த்து, ”போடா! போ… போ..!” என்று விரட்டினாள்.
பையன் மெதுவாக வெளியேறி, அப்பாவிடம் வந்தான். நீச்சல் குளத்தைச் சுற்றிப் பார்த்ததைச் சொல்லிவிட்டு, ”அப்பா! இங்கே ஒரு ரூம் இருக்கு. அதுக்குள்ளே நிறையப் பெண்கள் இருக்காங்க. ஆனா, அவங்க இதுக்கு முன்னே என்னை மாதிரி ஒரு சின்னப் பையனைப் பார்த்ததே இல்லை போலிருக்கு. என்னைப் பார்த்ததும் ஏலியன்னு நினைச்சு பயந்து, ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க!” என்றான் ஆச்சர்யமாக.
– 21st மே 2008