எனக்கு உடனே வளருணுங்க…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 106,649 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை.

சுந்தருக்கு வயசு ஏறிக் கிட்டே போய்க் கிட்டு இருந்தது.அவன் கல்யாண பண்ணிக் கொள்ளச் சொல அவன் பெற்றோர் கள் வற்புருத்த ஆரம்பித்தார்கள்.ஆனால் கண்ணாடி முன் தன் தலையைப் பார்த்த அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.பின் புறம் கொஞ்சமா இருந்த சொட்டைஇப்போது அதிகமாகி இப்போ முன் தலைக்கும் வந்து விட்டது.‘இந்த மாதிரி இருக்கும் தலை அழ கைப் பாத்தா எந்த வயசு பொண்ணு நம்மை கல்யாணம் கட்டி ப்பாங்க’ என்று வருத்தப்பட்டுக் கொண்டு தன் ரூமை விட்டு வெளியே வந்து சோபாவில் ‘தொப்’பென்று உட்கார்ந்துக் கொண்டான். தனக்கு இருக்கும் சொட்டை விவகாரத்தை தன் அம்மா அப்பாவிடம் சொல்லி வருத்தப் பட்டான்.

அப்பா உடனே “அதுக்கெல்லாம் வீணா கவலைப் படாதே சுந்தர்.நான் நேத்து டீ.வீ.யிலேப் பாத்தேன். தலை முடி உடனே வளர ஏதோ ஒரு மருந்தைக் காட்டினான். அதை தடவி கிட்டவருக்கு, நிறைய முடி வளர்ந்திச்சு. நீயும் ஒரு பெரிய ‘மெடிக்கல் ஷாப்புக்கு’ போய் அந்த மாதிரி ஒரு மருந்தை வாங்கி வந்து தடவி வா. உன் சொட்டை சீக்கிரமா போய் உன் தலையில் பழையபடி வளர்ந்துடும். இதுக்கா இப்படி கவலைப் படறே” என்று ஒரு ஐடியாவை சொன்னவுடன் சுந்தருக்கு தெம்பு வந்தது.

உடனே அவன் நாஷ்டா பண்ணி விட்டு ஒரு பெரிய மெடிக்கல் ஷாப்புக்குப் போனான்.நல்ல வேளை அங்கு நிறைய பேர் இல்லை. மெல்ல ஒரு பெரியவர் கிட்டே தன் தலை சொட்டை விவகாரத்தை மெல்ல சொல்லி முடி வளர ஒரு நல்ல மருந்தைக் கொடுக்கும் படி கேட்டான். அவரும் உடனே சந்தோஷப் பட்டு “தம்பி நீ கவலை ப் படாதே.நான் ஒரு தைலத்தே தறேன்.நீ அதை தடவி வா.உன் தலையிலே மறுபடியும் ‘கரு’ ‘கரு’ன்னு முடி வளர ஆரம்பிச்சிடும்” என்று சொன்னதும் சுந்தர். “சார், இந்த தைலத்தே தடவி கிட்டா உடனே என் தலையிலெ முடி வளருமா”என்று கேட்டான். ”இல்லே தம்பி ஒரு ஆறு மாசத்திலே நல்லா வளந்திடும்”என்று சொன்னார். சுந்தர் யோஜனைப் பண்ணி விட்டு “எனக்கு இன்னும் சீக்கிரமா முடி வளரணும்,அதுக்கு ஏதாச்சும் வேறே ஏதாச்சும் தைலம் இருந்தா தயவு செஞ்சு குடுங்க” என்று சொன்னவுடன், அந்த பெரியவர் “அப்படியா, சரி நான் வேறு ஒரு தைலத்தே தரேன். அதை நீ தடவி வா.மூனு மாசத்திலே நல்லா முடி வளந்திடும்”என்று சொன்னதும் மறுபடியும் யோஜனை பண்ணினான் சுந்தர். கொஞ்ச நேரரம் ஆனதும் ”இல்லீங்க எனக்கு இன்னும் சீக்கிரமா முடி வளரணும்.இன்னும் ‘பவர்புல்’ தைலம் இருந்தா குடுங்க” என்று சொன்னதும் அந்த பெரியவர் “அப்படியா. சரி நான் இன்னும் கொஞ்ச ‘பவர்புல்’ தைலம் தரேன்.அதை நீ தினமும் தடவி வா.ஒரு மாசத்திலே நல்லா முடி வளந்திடும்”என்று சொன்னார்.சுந்தருக்கு திருப்தி வரவில்லை.அவன் மறுபடியும் யோஜனைப் பண்ணி விட்டு “சார்,எனக்கு இன்னும் சீக்கிரமா முடி வளரணும்.இன்னும் அதை விட ‘ப்வர்புல்’ தைலம் இருந்தா குடுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினான். உடனேஅந்த பெரியவர் “அப்படியா. சரி நான் வேறே ஒரு ‘பவர்புல்’ தைலம் தரேன். அதை நீ தினமும் தடவி வா.உனக்கு ஒரு வாரத்திலெ நல்லா முடி வளந்திடும்” என்று சொல்லி விட்டு உள்ளே போய் ஐஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தைலத்தை கொண்டு வந்து கொடுத்தார். சுந்தருக்கு இன்னும் திருப்தி வரலே. இன்னும் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “சார், நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க. எனக்கு இன்னும் சீக்கிரமா முடி வளரணும்.இன்னும் ஒரு ‘பவர்புல்’ தைலம் இருக்குமா” என்று மறுபடியும் கெஞ்சினான்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின அந்த பெரியவர் “அப்படியா தம்பி.இரு தேடிப் பாக்கறேன்” என்று சொல்லி விட்டு மறுபடியும் உள்ளே போய் ஒரு அரை மணி நேரம் கழிச்சு, ”தம்பி,இந்த தைலம் இன்னும் ‘பவர்புல்’ தைலம்.இந்த தைலத்தே நீ தினமும் தடவி வா.இன்னும் ஒரு வாரத்திலே உனக்கு நல்லா முடி வளந்திடும்”என்று சொல்லி அந்த தைலத்தே கொடுக்க முன் வந்தார். சுந்தர் அந்த மருந்தை வாங்கிக்காமல் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “சார்,இதை விட இன்னும் ‘பவர்புல்’ தைலம் இருந்தா குடுங்க” என்று கேட்டான்.உடனே அந்த பெரியவர் “அப்படியா நீ இன்னும் கொஞ்ச நேரம் இரு“ என்று சொல்லி விட்டு ‘ப்ரீயாக’ இருந்த ஒரு ஆளைப் பாத்து, “டே ஆறுமுகம்,நம்ம கோடவுன்லே,சீக்கிரமா முடி வளர ஒரு “பாரின்” தைலம் ஒன்னு இருக்குது.அதை எடுத்து வா.நான் கடைக்கு வரவங்களை கவனிக்கனும்”என்று சொன்னதும் ஆறுமுகம் அவங்க மருந்து கடை கோடவுனுக்குப் போய் பத்து நிமிஷம் கழிச்சு ஒரு பெரிய பாட்டில் ‘பாரின்’ தைலத்தை கொண்டு வந்து கொடுத்தான்.

ஆறுமுகத்திடம் இருந்து அந்த மருந்தை வாங்கிக் கொண்டு அந்த பெரியவர் “தம்பி,இந்த தைலம் ரொம்ப ‘பவர்புல்’ தைலம்.நீ இந்த ‘பவர்புல்’ தைலத்தே தினமும் தவறாம தடவி வா.உனக்கு தடவிக் கிட்ட அடுத்த நாளே முடி ‘கரு’ ‘கரு’ன்னு வளந்திடும்”என்று சொல்லி அந்த தைலத்தை நீட்டினார்.சுந்தர் யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தான்.சுந்தருக்கு கல்யாண ஆசை தலை தூக்கியது. ‘இன்னும் ‘பவர்புல்’ மருந்து இருக்குதான்னு கேட்டுப் பாக்கலாமே’என்று யோஜனைப் பண்ணினான்.

ஒரு ஐஞ்சு நிமிஷம் கழிச்சு சுந்தர் “சார்,தப்பா எடுத்துகாதீங்க.எனக்கு இன்னும் சீக்கிரமா முடி வளற தைலம் வேணும்”என்று கேட்டான்.உடனே அந்த பெரியவர் ஆறுமுகத்தை கூப்பிட்டு ”இவருக்கு இன்னும் சீக்கிரமா முடி வளரணுமாம்.நீ கோடவுணுக்குப் போய் இன்னும் ‘பவர்புல்’ தைலத்தை உடனே கொண்டு வா” என்று தன் கண்களை சிமிட்டிக் கொண்டு விரட்டினார்.ஆறுமுகமும் உடனே கோடவுனுக்குப் போய் ஒரு அரை மணி தேடிப் பார்த்து விட்டு,ஒரு தைல பாட்டிலைக் கொண்டு வந்து அந்த பெரியவர் கிட்ட கொடுத்தான். பாட்டிலை கையில் வாங்கி அதில் எழுதி இருந்ததைப் படித்து விட்டு “தம்பி,இந்த தைலம் ரொம்ப ரொம்ப ‘பவர்புல்’ தைலம்.நீ இதை தடவிக் கிட்டா,உனக்கு ரெண்டு மணி நேரத்திலே முடி ‘கரு’‘கரு’ன்னு வளந்திடும்” என்று சொல்லி விட்டு தைல பாட்டிலை நீட்டினார்.உடனே சுந்தர் “சார்,எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில் லே சார்.எனக்கு இதை விட இன்னும் ‘பவர்புல்’ தைலம் இருந்தா குடுங்க.’ப்லீஸ்’” என்று விடாமல் கேட்டான்.

உடனே அந்த பெரியர் சலிப்புடன் “டே ஆறுமுகம்,கோடவுனுக்குப் போய், ‘டபுள் ஸ்ட்¡ங்கான’ அந்த தைல களிம்பைக் கொண்டு வா” என்று கத்தியவுடன் ஆறுமுகம் பயந்து போய் “அண்ணே,நீங்க அந்த ‘பவர்புல்’ தைல களிம்பையா எடுத்து வர சொல்றீங்க”என்று பயத்துடன் கேட்டான்.உடனே அந்த பெரியவர் “ஆமாண்டா,நான் என்ன தெலுங்கிலா சொன்னேன்.உடனே போடா.நான் சொன்ன அந்த ‘டபுள் ப்வர்புல்’ ’பாரின்’ தைல களிம்பை தான் சொன்னேன்.போய் உடனே எடுத்து வாடா” என்று கத்தவே ஆறுமுகம் பயந்து போய் “சரி அண்ணே.நான் கோடவுன்னுக்குப் போய் இதோ அந்த ‘டபுள் பவர்புல்’ தைல களிம்பை கொண்டு வாறேன்”என்று சொலி விட்டு கோடவுனுக்கு ஓடினான்.

ஒரு அரை மணி நேரம் கழிச்சு ஆறுமுகம் பெரியவர் சொன்ன ‘டபுள் பவர்புல்’ பாரின்’ தைல களிம்பைக் பயத்துடன் அவர் கிட்டே கொண்டு வந்து கொடுத்தான்.அந்த தைல களிம்பை கோவத்துடன் வாங்கிக் கொண்ட அந்த பெரியவர் “இதோ பாரு தம்பி,இந்த தைல களிம்பு ரொம்ப ரொம்ப ‘பவர்புல்’.நீ இந்த தைல களிம்பை ரொம்ப ரொம்ப ஜாக்கிறதையா உபயோகப் படுத்தணும்.இந்த தைல களிம்பை தடவி கிட்டவு டனே உனக்கு முடி முளைச்சிடும்.ரொம்ப ரொம்ப ஜாக்கிறதையா இந்த களிம்பை உபயோகப் படுத்து.இந்த தைல களிம்பு விலை ரொம்ப ரொம்ப அதிகம்.இந்த தைல களிம்பின் விலை ஆறாயிரம் ரூபா.நீ இவ்வளவு பணம் கொண்டு வந்து இருக்கியா,இல்லே வூட்டுக்குப் போய் பணம் எடுதாறணுமா”என்று கேட்டவுடன் சுந்தரு க்கு சந்தோஷ தாங்கலே.

உடனே அவன் “நான் எடுத்தாந்து இருக்கேன்.இதோ தறேன்.ஆனா நீங்க சொன்னா மாதிரி உடனே முடி வளந்திடுமா”என்று கேட்டு பாக்கெட்டில் இருந்து தன் ‘பர்ஸை’ எடுத்து மூன்று ரென்டாயிடம் ரூபாய் தாள்களை அவா¢டம் நீட்டிக் கொண்டு “நீங்க தப்பா எடுத்தக்கலீங்கன்னா,நான் இந்த தைல களிம்பை கொஞ்சம் எடுத்து என் தலையிலே தடவிகிட்டு பாக்கட்டுமா” என்று கேட்டவுடன் அந்த பெரியவர் சுந்தர் நீட்டிய ஆறாயிரம் ரூபாயை பார்த்து சந்தோஷப்பட்டு “குடு பணத்தை” என்று சொல்லி சுந்தர் கொடுத்த ஆறாயிரம் ரூபாயை கையிலே வாங்கிக் கொண்டு கல்லாவில் போட்டார்.

பிறகு கொஞ்சம் கோவத்துடன் “நான் என்ன இந்த வயசிலே,உன் கிட்ட பொய்யேச் சொல்லி இந்த ‘டபுள் பவர்பூல் பாரின்’ தைல களிம்பை விக்கப் போறேனா என்ன.காட்டு உன் கையை” என்று சொல்லி அந்த தைல களிம்பு பாட்டிலை திறந்து கடையிலே இருந்த ஒரு ‘ப்ளாஸ்டிக் ஸ்பூனால்’ கொஞ்சம் களிம்பை எடுத்து சுந்தர் கையிலே போட்டு “இதை ரெண்டு கையிலும் நல்லா தடவி அப்புறமா உன் தலையிலே தடவு. நான் பொய் சொல்றேனா,நிஜம் சொல்றேன்னா உனக்கே நல்லா புரியும்” என்று கத்தினார்.

சுந்தர் அந்த தைல களிம்பை ரெண்டு உள்ளங்களையும் வச்சு நன்றாக தடவினான்.என்ன ஆச்சரியம். ஒரு நிமஷத்துக்கு எல்லாம் அவன் ரெண்டு கைகளிலும் ரெண்டு அங்குலத்துக்கு கருப்பு முடி ‘கரு’ கரு’ என்று வளர்ந்து விட்டது.சுந்தரால் அவன் பர்ஸை மூடி தன் பாக்கேட்டிலே வைக்க கூட முடியலே.சுந்தர் பயந்து போய் தன் கையை பார்த்து கிட்டே இருந்தான்.இன்னும் ரெண்டு நிமிஷம் ஆனதும் அவன் உள்ளங்கையில் இருந்த முடி நாலு அங்குலமாக வளர்ந்து விட்டது.“என்ன தம்பி நான் சொன்னது பொய்யா நிஜமா.இப்ப நான் சொன் னது நிஜம் தானே”என்று சொல்லி விட்டு தன் பொக்கை வாயை திறந்து சிரித்தார் அந்த பெரியவர்.அந்த சமயம் பார்த்து மருந்து கடையிலே மூன்று இளம் பெண்கள் மருந்து வாங்க வந்து இருந்தார்கள்.சுந்தருக்கு வெக்கம் பிடுங்கி தின்றது.

’இனிமே நாம எப்படி சாப்பிடுவோம்,மத்த வேலைங்களை எப்படி செய்வோம்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருக்கும் போது அவன் கையில் முடி ஒரு அடியாக வளர்ந்து விட்டது.எல்லோரும் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.சுந்தருக்கு ரொம்ப அவமானமாக இருந்தது.

‘ஏண்டா நாம இந்த ‘டபுள் பவர்புல் பாரின்’ தைல களிம்பை இவ்வளவு பிடிவாதம் பிடிச்சு இந்த பெரியவர் கிட்டே நாம வாங்கினோம்.இனிமேலும் நாம சும்மா இருக்கக் கூடாது’ என்று பயந்து போன சுந்தர் திறந்த பர்ஸை எடுத்துக் கொண்டு எதிரே இருந்த சலூனுக்கு ஓடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *