“சார்.. எங்கிட்ட ஒரிஜினில லைசென்ஸ் இருக்கு.. வண்டி ரெஜிஸ்ட்ரேசன் இருக்கு.. இன்சூரன்ஸும் இருக்கு.. அப்பறம் எதுக்காக என்ன விடமாட்டேங்கறீங்க..?”
“எல்லாமே எப்படி ஒருத்தர் கிட்ட சரியா இருக்க முடியும்? அதான் சந்தேகமா இருக்கு”
“இப்படி சொன்னா எப்படி சார்?”
“நான் அப்படித்தான் சொல்லுவேன்..”
“சார்.. ஒரு அவசர வேலையா போய்கிட்டு இருக்கேன்.. கொஞ்சம் விடுங்களேன்”
“சரி ஏதோ.. அவசர வேலைங்கற.. அப்ப நான் சொல்ற ஒன்ன மட்டும் செஞ்சுட்டு போய்க்கிட்டே இரு..”
“ஓகே சார்..”
“எங்க எட்டு போடு பார்க்கலாம்..”
“சார்..”
“என்னையா சார் பூர்னுட்டு.. எட்டு போட்டுட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தானே?”
“அது எப்படி சார் முடியும்? லாரில எட்டு போடச் சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் சார்..”
– அனிச்சம் மின்னிதழ் – ஜீன் 2023