கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 5,405 
 
 

டாக்டர்! இவரைக் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க இவரு என் வீட்டுக்காரர்!

அப்படியா ரொம்ப நல்லது சாருக்கு என்ன ப்ராப்ளம்?

இவரு எப்ப பார்த்தாலும் முகத்தை உம்..னு சீரீயஸா வச்சிருக்கார்.எது சொன்னாலும் சிரிக்க மாட்டேங்கறார்!

அப்படி இருக்கப்புடாது..அது ரொம்ப தப்பு!

இது அவருக்கு புரியலையே!

இப்படி இருக்கறவங்களுக்கு மன அழுத்தம் காரணமா ஹார்ட் அட்டாக் வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்-ன்னு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க!

அப்படியா டாக்டர்?

ஆமாம்.அங்கே இதய நோய் உள்ளவங்ககிட்டேயும் இதயநோய் இல்லாதவங்ககிட்டேயும் ஒரு கேள்வி கேட்டாங்களாம்!

என்ன கேள்வி?

ஒரு விருந்தில் உங்களைப் போலவே இன்னொருவரும் உடை அணிந்திருப்பதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படின்னு கேட்டாங்களாம்

சரி,

எங்ககிட்டே எந்த மாறுதலும் இருக்காதுன்னு சொன்னவங்க பூரா இதய நோயாளிகளாம்! நாங்க பரவசப்பட்டு எங்களுடைய மகிழ்ச்சியை தெரிவிப்போம்னு சொன்னவங்க பூரா நோயாளி அல்லாதவர்களாம்.

என்னங்க டாக்டர் சொல்றது காதுலே விழுதா?

பாருங்க டாக்டர் இதுக்கும் எந்த பதிலும் வரமாட்டங்குது. முகத்துலே கூட எந்த மாறுதலும் இல்லே பாருங்க!

உண்மைதான்!

நேத்திக்கு என்ன ஆச்சு .தெரியுமா?

என்ன ஆச்சு?

இவர் பாட்டுக்கு தூக்கத்துலே எழுந்து நடந்து போய் பால் கறக்க ஆரம்பிச்சுட்டார்.

எப்படியோ பால் கறந்தா சரிதானே!

அது எப்படி டாக்டர்?

ஏன்?

மாட்டை வித்துதான் ஒரு மாசம் ஆச்சே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *