முன்னொரு காலத்தில் சக்கரவர்த்தி ஒரு வர் நமது தேசத்தை ஆண்டுவந்தார். குதி ரைகள் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். ஒரு நாள் குதிரை வியாபாரி அங்கு வந்தான். அவன் கொண்டுவந்த ஒரேகுதிரையை சக்கர வர்த்தி பார்வையிட்டார். பரி பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருந்தது. அரபிக் குதிரையாகையால் ஐந்நூறு பொன் கொடுத்து அதை வாங்கிக் கொண்டார். அதைப்போல் இன்னொரு குதிரை இருந்தால் நன்றாய் இருக்குமே என்று அவருக்குத் தோன்றிற்று. உடனே அவர் அந்த வியாபாரியைப் பார்த்து, “இதற்குச் சரி ஜோடியாக இன்னொரு குதிரை இருந்தால் அதையும் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.
அதற்கு அக்குதிரை வியாபாரி, “அரசே, அப்படிப்பட்டக் குதிரை தற்சமயம் என்னிடமில்லை. ஆனால் அதன் விலையை முன் பணமாக என் கையில் இப்பொழுதே கொடுத்துவிட்டால் நிச்சயம் குதிரையைக் கொண்டு வந்து, உம்மிடம் சேர்த்துவிடுவேன்” என்றான்.
சக்கரவர்த்தியின் உத்தரவின்படியே, கஜானா அதிகாரி ஐந்நூறு பொன் காசுகளைக் குதிரை வியாபாரியிடம் கொடுத்தான். வியாபாரி, சந்தோஷமாய் அப்பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினான்.
சில நாட்கள் சென்றன.
சாயங்கால நேரம். தென்றல் காற்று சிலுசிலு வென்று அடித்துக் கொண்டிருந்தது. பூக்களின் வாசனை மனதிற்கு ரம்மிய மாயிருந்தது. யாதொரு கவலையுமற்று அர சன் உல்லாசமாகத் திரிந்தார். குடிமக்கள் எல்லோரும் சந்தோஷமாய் இருந்தார்கள். இராஜ்யத்திற்கு விரோதிகள் கிடையாது. அந்நாட்டில், உள் நாட்டுக் கலகம் என்பது யாரும் கேள்விப்படாத விஷயம். எனவே சக்கரவர்த்தி சந்தோஷமாய் இருந்தார் என் பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
சர்க்கரவர்த்தியும், மந்திரியும், தடாகத் தின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு வாக்கிலே, “நமது இராஜ்யத்தில் மிகுதியானவர்கள் விவேகிகளாக இருக்கிறார்கள்; முட்டாள்கள் என்று சொல்லக் கூடியவர்கள் மிகவும் சிலரே என்று நான் நினைக்கிறேன். அவர்களடங்கிய ஜாபிதா ஒன்றை தயாரித்தால் எத்தனை விசித்திரமாயிருக்கும். அமைச்சரே! உமக்கு இப்பொழுது இராஜ்யபாரம் அதிகமில்லை என்று எனக்குத் தெரியும். ஆகையால் அப்படிப்பட்ட ஜாபிதா ஒன்றை நீர் தயாரிக்க மாட்டீரோ” என்று கேட்டான். அமைச்சரும் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டார்.
சக்கரவர்த்தி கொலு மண்டபத்தில் வீற்றிருந்தார். நாட்டில் அமைதி நிலை பெற்றிருந்தபடியால் அன்று அரசியல் காரியங்களை எல்லாம் வெகு சீக்கிரத்தில் முடித்து விட்டார்கள். தாம் அமைச்சரை ஒரு ஜாபிதா தயார் பண்ணச் சொன்னது அப்பொழுது தான் அவருடைய ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே அவரைப் பார்த்து, “முட்டாள்களின் ஜாபிதா தயாராகி விட்டதா?” என்று கேட்டார். மந்திரி, “ஆம் அரசே” என்றார்.
அரசனின் கட்டளைப்படி, இராணியும் மற்றப் பெண்களும் திரைக்குப் பின் வந்து உட்கார்ந்தார்கள். மந்திரி ஜாபிதாவைக் கையிலேந்தி சபை நடுவே நின்றார். யாவரும் தங்களுக்குக் கிடைக்கப் போகும் நகை விருந்தை நினைத்து மிகவும் ஆவலாய் காத் துக் கொண்டிருந்தார்கள்.
‘நமது இராஜ்யத்திலே முதலாவது முட்டாள் நமது சக்கரவர்த்தி’ என்று வாசித்தார் மந்திரி. அங்கு இருந்தவர்கள் தங்கள் காதுகளை நம்ப முடியவில்லை. “என்ன நமது சக்கரவர்த்தியா முட்டாள்!” என்று தங்கள் மனதுக்குள்ளே கேட்டுக் கொண்டார்கள். திரைக்கு அப்பால் உட்கார்ந்திருந்த பெண்களின் முகமோ நாணத்தால் சிவந்தன. இவர்களுக்கு நடுவே சர்க்கரவர்த்தி ஒருவர் தான் அமைதியோடும் நிம்மதியோடும் விளங்கினார்.
உட்கார்ந்திருந்தபடியே அது எப்படி யாகும் என்றார். “சக்கரவர்த்தியே! ஆள், ஊர், பெயர், இவை ஒன்றும் தெரியாத யாரோ ஒரு வியாபாரியை நம்பி ஐந்நூறு பொன் காசுகளைக் கொடுப்பது பெரிய மடத்தனமல்லவா?” என்றார் மந்திரி.
ஆனால் சக்கரவர்த்தியோ இதற்குச் சரியான ஒரு பதில் வைத்திருந்தார். “அப்படியா சொல்லுகிறீர். இவ்வியாபாரி குதிரையைக் கொண்டு வந்து கொடுத்து விட்டால்” என்று கேட்டார். அங்குள்ளவர்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பாரம் நீங்கிற்று என்றே சொல்லவேண்டும். முதல் தடவையாக நம்முடைய மந்திரி, ராஜாவுக்குப் பதில் சொல்ல முடியாமற் போய்விட்டாரல்லவா’ என்று சிலர் சந்தோஷப் பட்டார்கள்.
ஆனால் மந்திரியோ கண்ணியமான குரலில், “அப்படி அவன் குதிரையைக் கொண்டு வந்துவிட்டால், தங்களுடைய பெயரை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக அவனுடைய பெயரை எழுதிக் கொள்வேன்” என்றார்.
சபையோர் எல்லோரும், திரைக்கு அப்பால் இருந்த பெண்களும்கூட கொல்லென்று சிரித்தார்கள்!
கேள்விகள்
1. வியாபாரியிடம் சக்கரவர்த்தி ஏன் அதிகமாக ஐந்நூறு பொன் காசுகளைக் கொடுத்தார்?
2. எதற்காக சக்கரவர்த்தி ஒரு முட்டாள்களின் ஜாபிதாவைத் தயாரிக்கச் சொன்னார்?
3. சக்கரவர்த்தியின் பெயரை அந்த ஜாபிதாவில் முத லாவது எழுதினதற்கு அமைச்சர் சொன்ன காரணம் என்ன?
4. ஏன் எல்லோரும் “கொல்” லென்று சிரித்தார்கள்?
– சிறுவர்க்கேற்ற சிறுகதைகள், முதற்பதிப்பு – நவம்பர் 1949, தென்னிந்தியப் பதிப்புக் கழகம், சென்னை – 24