வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்தார். மிகப் பெரிய ராஜ தந்திரி என்று போற்றிப் புகழப்பட்டவர். இவருக்கு ஒரு மருமகன் இருந்தான். அவன் எப்போது பார்த்தாலும் வளவளவென்று பெண்களைப் போலப் பேசியவாறு இருப்பான்.
சர்ச்சிலைப் பார்ப்பதற்காக யார் வந்தாலும், அவர்களிடம் சென்று பேசிக் கொண்டே இருப்பான். அவனைக் கண்டாலே அவன் பேச்சுக்குப் பயந்து ஒளிய ஆரம்பித்தனர் பலர். அவன் சர்ச்சிலையே விட்டு வைப்பதில்லை.
http://www.dinamalar.com/siruvarmala…es/Smr-1-4.jpg
சர்ச்சில் அரசாங்க வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவர் முன் தோன்றி பற்பல தேவையற்ற கேள்விகளை கேட்டு கழுத்தை அறுப்பது வழக்கம். அன்றைய தினம் மிகவும் கவனமாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட பைல்களைப் பார்த்துக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார் சர்ச்சில். அப்போது திடீரென அவர் அறையின் கதவைத் திறந்து கொண்டு வந்தான் அவருடைய மருமகன்.
“என்ன?’ என்று கண்களாலேயே விசாரித்தார் சர்ச்சில்.
மருமகன் கேட்டான், “”ராஜ தந்திரம் பற்றி எல்லாரும் பேசிக் கொள்கின்றனர். தயவு செய்து சொல்லுங்களேன் எனக்குப் புரியவில்லை,” என்றான். சர்ச்சில் டென்ஷனானார். ஆனாலும், அதை அடக்கிக் கொண்டு அவன் கேள்விக்கு நிதானமாகப் பதில் கூறினார். எல்லாவற்றையும் கேட்டு முடித்துவிட்டு அவன் மீண்டும் கேட்டான்.
“நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். இந்த உலகிலேயே மிகப் பெரிய ராஜ தந்திரி யார்?”
சர்ச்சில் சொன்னார்.
“இத்தாலி நாட்டைச் சோர்ந்த சர்வாதிகாரி முசோலினிதான் இந்த உலகின் மிகப் பெரிய ராஜ தந்திரி.”
இதைக் கேட்ட அவன் வியந்து போனான்.
“என்ன! நீங்கள் சொல்வது உண்மையா? எல்லாருமே நீங்கள்தான் பெரிய ராஜ தந்திரி என்று சொல்கின்றனர். ஆனால், நீங்களோ, முசோலினியைப் போய் சிறந்த ராஜ தந்திரி என்கிறீர்களே!”
“உண்மைதான் மருமகனே! என்னை நீ நம்பலாம்! ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அதற்கும் காரணத்தைச் சொல்லுகிறேன் கேள். எனக்கு மருமகனாக வாய்த்திருப்பதைப் போல, அவருக்கும் ஒரு மருமகன் இருந்தான்.
“நீ எனக்கும், மற்றவர்களுக்கும் திடீர் திடீரென்று வந்து தொல்லையையும், தலைவலியையும் தருவது போல அவனும் முசோலினிக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தான். இதனைத் தாங்க முடியாத முசோலினி ஒரு நாள் அவன் வந்தவுடன், அவனைத் தன் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்.
“ஆனால், இன்னும் நான் அப்படிச் செய்யவில்லை. இதேபோல, இன்னொரு தடவை நீ வந்து என்னிடம் தொல்லை கொடுத்தாயென்றால், முசோலினியை விடச் சிறந்த ராஜ தந்திரி நான் தான் என்று காட்டி விடுவேன்!” என்றார்.
மருமகன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அங்கிருந்து எழுந்து வேகமாகச் சென்றான். அதன் பின்னும் மருமகன் அவரை தொல்லை பண்ணுவான்னா நினைக்கிறீங்க?