கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 1,591 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மென்மையான புன்னகையைச் சிந்தியவாறு வீட்டினுள் நுழைந்தான் கண்ணன். ஆரவாரம் ஏதுமின்றி அங்கே அமைதி நிலவியிருந்தது.

“தாமு!… தாமு!… நண்பனை உரக்க அழைத்தான். ஒன்றுமில்லை. வீடு வெறிச்சென்றிருந்தது. எல்லோரும் எங்கோ போயிருக்கிறார்கள் என்று ஊகித்துக் கொண்டான். என்றாலும் தாமேதரன் மட்டும் வீட்டிலிருப்பதாக அவனிடம் சொல்லியிருந்தான். மணி மூன்று ஆகியிருந்தது.

தாமோதரனின் அறைக்கதவு திறந்திருந்தது அவன் கவனத்திற்கு வந்தது. அறைப் பக்கம் விரைந்தான்.

அங்கே… தாமோதரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். முகத்தில் கோபக்கனல் வீசியது. வாரி விடாத கிராப்பு. தீயுமிழும் கண்கள் அச்சத்தை அறிவுறுத்தி நின்றன்.

“என்ன தாமு, நான் கூப்பிட்டது காதில் விழவில்லையா? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்…?” ‘மாட்னி’ நேரமாகிவிட்டதே! மூன்று பதினைந்துக்கு ஆரம்பம்” என்று அவசரப்படுத்தும் முறையில் கண்ணன் கேட்டான். தாமோதரன் உதட்டைக் கடித்த வண்ணம் ஒரு முறைப்பு முறைத்தான்.

“உடம்புக்கு என்ன தாமோதரா…?” விழித்தவாறு கண்ணன் முணுமுணுத்தான்.

“உன் போன்ற உத்தம நண்பர்கள் இருக்கும்போது எனக்கு என்ன குறைவு? எல்லாம் பகட்டுதானே?”

“புரியாத புதிராகவல்லவா இருக்கிறது! மன மாற்றமா…?”

கண்ணனின் வார்த்தைகள் தாமோதரனுக்கு ‘ஜிவு ஜிவு’ என்று சினத்தை அதிகரிக்கச் செய்தன. திக்பிரமை போல் அவன் மாறினான். மறுகணம்….

நிசப்தம் கலைந்தது; ‘பளார்… பளார்’ என்ற ஒலி கண்ணனின் கன்னங்களைத் தாமோதரனின் கரங்கள் பதம் பார்த்தன! நிலை புரியாமல் நின்றான் கண்ணன்; கலக்கம் அவனைக் கவ்வியது.

பேசப் பிரயத்தனம் செய்து கொண்டு, “தாமு! உன் மனம் ஏன் இப்படி மாறிவிட்டது?” என்று தொண்டை கரகரக்கக் கேட்டான்.

“சீ! போட வெளியே….கழுதை! கூட இருந்துகொண்டே குழியைத் தோண்டுகிறாயா? நல்ல நண்பர்களை உதாசீனம் செய்யும் என் போன்றவர்களுக்கு இப்படி ஏற்படுவது இயற்கை” என்று எதை எதையோ பேசினான் தாமோதரன்.

பீதியோடு அறையிலிருந்து வெளியேறினான் கண்ணன். ’நல்ல நண்பர்கள்’ என்று தாமோதரன் சொன்னது அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டே யிருந்தது. நொடிப் பொழுதில் அவன் மனக் கண்ணில் மாதவன் தோன்றினான்!

“கடைசி முறையாகக் கேட்கிறேன், கண்ணா! நான் கேட்கும் ஒரு ரூபாயைத் தரமாட்டாயா? பலமுறை பார்த்து விட்டேன். இல்லை என்பதையே இன்னும் வைத்திருக்கிறாய்; இருக்கட்டும்…எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்” என்று அசட்டுத் தனமாக, ஆனால் கோரமாக மாதவன் சிரித்தது அவனை அணு அணுவாக வாட்டியது.

பாலும் வெள்ளையும் போல் ஒன்றியிருந்த அந்த நண்பர்களிடையே ஏன் இப்படிப் பூசல் எழுந்ததோ தெரியவில்லை!

ஒருவன் துயரம் மற்றவனுக்குப் பொறுக்காதே! சாந்தமே உருவான கண்ணன் கள்ளமும் கபடும் அறியாதவன். எனவே எந்தப் பிளவும் ஏற்படாமல் அன்பை வளர்த்து வந்தான். தாமோதரனும் அவனைப் பெருமையோடு பின்பற்றினான். நட்பு வளர்ந்தது. இருவர் உயிராகப் பழகுவது சிலருக்குப் பொறாமையை அளிக்காமலா இருக்கும்?

2

காலை ஒன்பது மணி. அந்த அழகிய காலையில் தான் எவ்வளவு கவர்ச்சி! இருபுறமும் நெடிதுயர்ந்து இளங்காற்றை அள்ளி வீசும் மரங்கள்; கண்ணுக்கெட்டிய வரை அசைந்தாடி வனப்பளிக்கும் நெற்பயிர்கள்; குளிர்ந்த புனலோடும் வாய்க்கால். அனைத்தும் நிறைந்து இதமளிக் கும் அந்தச் சாலையிலே ஒரு சைக்கிள் சாவதானமாகச் சென்று கொண்டிருந்தது. ஆமாம், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது தாமோதரன்.

சைக்கிள் சக்கரங்கள் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன. இல்லை, அவந்தான் அவ்வளவு மிதித்துக் கொண்டு சென்றான். மனச்சாந்தி அளிக்கும் அச்சூழ்நிலையில் தாமோதரனின் உள்ளத்தில் மட்டும் ஏனோ சுமை நிரம்பி, சிந்தனை நீண்டு கொண்டிருந்தது. ஏதோ குறையிருப்பதாக அவன் உண்ர்ந்தான். ‘காரியர்’ காலியாக இருந்த காரணமோ, என்னவோ! தினம் தினம் ஒரே சைக்கிளில் அவனும் கண்ணும் அரட்டையடித்துக் கொண்டே போவார்கள்!

சுழன்ற சிந்தனை திடிரெனத் த்டைப்பட்டது. தன்னை மறந்து வந்த தாமு மைல் கல்லில் சைக்கிள் மோதிக் கீழே சாய, அவனும் விழுந்தான். ‘ஆ’ வென்று அலறினான்! விழுந்த வேகத்தில் கைகளிலும் முழுங்காலிலும் நல்ல சிராய்ப்பு;

உடம்பில் அடி! முழங்கால் முட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். சிராய்ப்பிலிருந்து ரத்தம் கசிந்து தரையிலும் துணியிலுமாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. எட்டிய் மட்டும் யாரும் நடமாடவில்லை. எதிரும் புதிருமாக ஒரு பெரிய மரம் நின்றது அவனுக்கு எரிச்சலை மூட்டியது. கொட்டிக் கிடந்த டிபனை ஒரிரு காகங்கள் சலுகையோடு கொத்தித் தின்று கொண்டிருந்தன. உதிர்ந்து கிடந்தவற்றை ஒன்று சேர்த்து, வேதனையோடு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு தாமோதரன் நகர்ந்தான். அன்போடு அவனைத்தேற்ற யாராவது இருந்தால் தானே!

பள்ளிக்கூட்த்தில், தாமோதரனும் மாதவனும் குழையக் குழையப் பேசினார்கள். அவன் பேச்சு தாமோதரனுக்குச் சற்று ஆறுதலளிப்பது போலிருந்தது. இடையிடையே கண்ணனைப் பற்றியெல்லாம் மாதவன் அவதூறாக இழுத்து விட்டான். வெட்டிப்பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்தது.

“மறந்துவிட்டேன், தாமோதரா! இன்னிக்குச் சம்பளம் கட்டும் கடைசி நாளல்லவா? ஒரு ரூபாய் குறைகிறது; நீதான் எப்படியாவது கொடுக்க வேண்டும்..”

”என்னவோ பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சட்டைப் பையில் கையை விட்ட தாமோதரன் திகைத்தான். ”மணி பர்ஸ் தொலைந்துப்போச்சு. மாதவா! எங்கே விழுந்ததோ, என்ன ஆச்சோ…? சம்பளம் கட்டனுமே…!” பதறினான் தாமு.

“ஏண்டா தாமு, துடிக்கறே! நான் பணம் கேட்டுட் டேன்னு தானே! ‘எக்சலண்ட்’ நடிப்புடா உங்கள் நடிப்பு… கண்ணனும் நீயும் நல்லாக் கற்று வெச்சிருக்கீங்க! இல்லேன்று சொல்ல இவருக்கு மனம் வரவில்லை யாக்கும்…” ஒரேயடியாகப் பேசிவிட்டு மாதவன் நகர்ந்தான்.

பர்ஸ் தொலைந்துபோன பதற்றத்தில் இருக்கும்போது மாதவன் வேறு சீறிவிட்டுப் போனது அவனுக்குத் அளித்தது. அன்று காலையில்தான் புத்தம் புதிய பத்து ரூபாய் நோட்டொன்றைத் தாமோதரனின் அப்பா சம்பளம் கட்டுவதற்காகக் கொடுத்திருந்தார். பணம் தொலைந்து போன விஷயம் அவருக்குத் தெரிந்தால்… அப்பாவை நினைத்த அவன் உடல் அறியாமலே நடுங்கியது.

‘டாண்…. டாண்’ என்று பள்ளித் துவக்க மணியடித்தது. அசடு வழிய வகுப்பறைக்குள் சென்றான்.

பதினைந்து நிமிஷம் ‘லேட்’டாக வகுப்பிற்கு வந்தான் கண்ணன். இரண்டு மைல் ஒட்டமும் நடையுமாக வந்த அவனுக்குச் சோர்வு தட்டியது. இடததிற்கு அருகே தாமுவைக் காணாமல் சுற்று முற்றும் பார்வையை விட்டான். கடைசிப் பெஞ்சு ஒன்றில் கவலையே உருவாக, தலையைச் சாய்த்தபடி தாமு இருந்தான்.

பகல் ஒரு மணிக்குப் பள்ளி மணி ஒலித்தது. மாண்வர் கூட்டம் திமுதிமுவென்று வெளியேறிக் கொண்டிருந்தது. எங்கும் இரைச்சல் எழுந்தது. தாமோதரனைக் கூப்பிடலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே நின்ற கண்ணன், அறியாமலே கூவிவீட்டான். திரும்பிப் பார்த்த தாமோதரன் தலை குனிந்தான்.

“தாமோதரா.. ஏதோ நடந்துவிட்டது; அது போகட்டும். சம்பள்ம் கட்டிவிட்டாயா? காயம் ஏதாவது உண்டா? ரத்தம் ரொம்பக் கொட்டிவிட்டாயா? என்ன இருந்தாலும் சைக்கிளில் வரும்போது, ஒரு நிதானம் வேண்டாமா…?” துப்பறியும் மேதையைப் போல் அவன் கேட்டுக்கொண்டே போனான். தாமோதரனுக்கு வெட்கமாகவும் வியப்பாகவும் இருந்த்து.

“இப்படி ஆஜாக்கிரதையாக இருக்கக்கூடாது, தாமு! என்னவோ நல்ல காலம், உன் பணம் என் கையில் கிடைத்துவிட்டது. அந்த வழியாக நான் மட்டும் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பர்ஸில் இருந்தது பத்து ரூபாய் மட்டுந்தானே…,!” பையிலிருந்து பர்ஸை எடுத்தான். தாமோதரனுக்கு மலர்ச்சி ஏற்பட்டது. கண்ணன் மீது நன்றி நிறைந்த பார்வை ஒன்றைச் செலுத்தினான். ஆனந்தத்தால் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.

“என்னை மன்னிப்பாயா, கண்ணா? என் அறிவீனம் எனக்கு அல்ல்லை அளித்துவிட்டது. உன் அன்புள்ளத்தை என்ன சொல்லட்டும்! மாதவன் தூண்டுதலால் என்னை மாசுபடுத்திக் கொண்டுவிட்டேன்; மன்னித்து விடு.”

”சின்ன விஷயந்தானே, தாமு? ஏன் வருந்த வேண்டும்? மாதவன் விளையாட்டுதானே இது?”

“அவன் பேச்சை நம்பி, மயங்கிவிட்டேன். நீ என்னவோ செய்து என்னை எதிலோ சிக்கவைக்க நினைத்திருப்பதாக எல்லாம் சொன்னான். எதை நம்ப முடிகிறது! களங்கம் கற்பித்துவிட்டேன்! மாதவனையும் புரிந்து கொண்டுவிட்டேன்!’”

”பச்சோந்தியைப் பற்றித் தெரியுமா, தாமு…? நேரத்திற்கு நேரம், இடத்திற்கு இடம் தன் நிறத்தை மற்றிக் கொள்ளுமாம்! நட்பையும் அன்பையும் பிரிக்க் முற்படும் சில பொறாமைக்காரர்கள் பச்சோந்தி எச்சரிக்கையாக் அளித்துவிட்டது. உன் மன்னிப்பாயா, கண்ணா? வேண்டும்!”

எதிரே மாதவன் வந்து கொண்டிருந்தான். இருவரும் இனணந்து நின்றதைப் பார்த்த அவன் துணுக்குற்றான், “பச்சோந்தி வருகிறது, கண்ணா…” என்று மாதவனைச் சுட்டிக் காட்டினான் தாமோதரன். பிஞ்சு நெஞ்சங்கள் இரண்டும் ஒன்றியதற்கு அறிகுறியாகப் புன்னகை புரிந்தன்.

– 1957 – கண்ணன் இதழில் இடம்பெற்ற சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *