ஒரு மாம்பழ வியாபாரி சைக்கிளில் மாம்பழம் விட்ருக்கொண்டு போகிறான், “கிலோ ₹30 கிலோ ₹30” என்று கூவிக்கொண்டு போகிறான்.
மாம்பழக் காரரே நில்லுங்கள்! என்று ஒருவர் கூறினார்.
கிலோ ₹30 என்று வியாபாரம் செய்து கொண்டு இருந்தான். மாம்பழம் வாங்குவதற்கு ஐந்து, ஆறு நபர்கள் வந்துவிட்டார்கள். ஒரு பெண் இரண்டு கிலோ மாம்பழம் வாங்கி இருக்கிறேன், ஒரு மாம்பழம் அதிகமாக கொடு என்று கேட்டாள். வியாபாரி எடைக்கு மேல் ஒரு பழம் கூட தர மாட்டேன் என்று பிடிவாதமாக பேசினார், எல்லோரும் சரி என்று வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள். பின்பு மாம்பழம் எல்லாம் தீர்ந்துவிட்டது.
வியாபாரி வீட்டுக்குப்போய் பணம் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கு பார்த்தான். இரண்டு கிலோவுக்கு வரவேண்டிய பணம் அவனிடம் இல்லை, ஐயோ! யாரிடமோ ஏமாந்து விட்டோமே என்று வருத்தப்பட்டான்.
மறு நாள் அதே இடத்துக்கு வியாபாரம் செய்வதற்கு மாம்பழகளை எடுத்து கொண்டு சென்றான், ஒருவர் மட்டும் வாங்கினார். ஒரு பெண் வந்து மாம்பழக்காரரே நேற்று உங்களிடம் இரண்டு கிலோ மாம்பழம் வாங்கினேன், மாம்பழத்தை வாங்கிக்கொண்டு பணம் எடுக்க போனேன். ஆனால் நீங்கள் நான் வருவதற்கு முன்னே போய் விட்டீர்கள் என்று கூறி ₹60 ரூபாயை கொடுத்தாள்.
அவனுக்கு மிக சந்தோசம், அந்த பெண்ணிடம் வியாபாரி அரை கிலோ மாம்பழம் கொடுத்தான். இதற்கு எனக்கு பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனார்.
நேற்று ஒரு கிலோவுக்கு மேல் ஒரு மாம்பழம் கூட தரமாட்டேன் என்று சொன்னவர் இன்று அரை கிலோ மாம்பழம் கொடுத்து விட்டு போகிறார். அதே போல நம்மும் நாம் வாழ்க்கையில் கடமையை செய்து நேர்மையாக இருந்தால் கிடைக்க வேண்டியது தானாக கிடைக்கும்.
பழமொழி: “கடமையை செய்! பலனை எதிர்பாராதே!”
Very interesting
நல்ல ஒரு நீதி பூர்வமான கதை ….