தந்தைக்காக சிறைக்கு சென்ற ரங்கநாத சாஸ்திரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,522 
 

சிறிய வயதில் _ பெரிய வயதினர் வேடமணிந்து… வழக்கொன்றிற்கு தீர்ப்பளித்தான் மன்னன் கரிகால் சோழன்.

அம்மன்னனைப் போன்று சிறிய வயதில்… பெரிய வயதினர் போன்று சிறைச் சாலைக்கு ஜாமீன் எடுக்கச் சென்றவர் தான் வீரவல்லி `ரங்க நாத சாஸ்திரி…’

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே களாமூரில் 1819_ம் ஆண்டில் பிறந்தவர் ரங்கநாதன்.

பன்னிரண்டு வயதாக இருக்கும்போது… நிலவரி கட்டாத காரணத்திற்காக அக்கால வழக்கப்படி அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் தாத்தாவுக்கு திதி நாள் வந்தது. திதியை ரங்கநாதனின் தந்தை இருந்துதான் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை.

ரங்கநாதனின் தாய்க்கோ, கணவரை எப்படி சிறையிலிருந்து வரவழைப்பது. எவ்விதம் திதியை கொடுப்பது? என்று புரியாமல் ஏங்கித் தவித்தார். தன் எண்ணத்தை வாய்விட்டு அழுதே சொன்னார்.

தாயின் அழுகைக்கான காரணத்தைப் புரிந்து கொண்ட ரங்கநாதன்

“அம்மா, அழாதீங்கம்மா… அப்பாவை எப்படியும் சிறையிலிருந்து மீட்டு வருகிறேன்” என்றார் நம்பிக்கையுடன்.

சிறுவனான நம் பையனால் எப்படி தந்தையை சிறையிலிருந்து மீட்டு வரமுடியும்? என்று தாய்க்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் மகனை சித்தூர் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தார்.

சித்தூரில் `காஜா மேஜர்’ என்னும் ஆங்கிலேயர் `ஜில்லா ஜட்ஜ்’ ஆக இருந்தார்.

அவரிடம் தாத்தாவுக்கு செய்ய வேண்டிய திதிக்கு தந்தை அவசியம் வரவேண்டும். அவர்தான் திதிக்கு வேண்டிய சகலமும் செய்ய வேண் டும். அதனால் தந்தையாரை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் அய்யா என்று வேண்டினார்.

“தம்பி, உன் தந்தையார் திதியை முடித்த பின் மீண்டும் சிறைக்கு வருவதற்கு உத்திரவாதமாக யாராவது ஒருத்தர் ஜாமீன் வேண்டுமே” என்று கேட்டார்.

“அய்யா, இந்த ஊரில் எங்களுக்கு வேண்டியவங்க யாரும் தெரியாது. அப்படியிருக்கையில் யாரை ஜாமீனுக்கு அழைத்து வர முடியும்?

“அப்படியென்றால் எந்த ஆதாரத்தை வைத்து உன் தந்தை யாரை வீட்டிற்கு அனுப்புவது?

“அய்யா, என் தந்தையாருக்கு ஜாமீன் கொடுக்க எனக்கு ஒரே வழிதான் தெரிகிறது.

`சொல்லு தம்பி’

“என் தந்தை திதியை முடித்து விட்டு திரும்ப சிறைக்கு வரும்வரையில் அவருக்கு பதிலாக நான் சிறையிலிருக்கிறேன். என்னை நம்புங்கள்” என்றார்.

பன்னிரண்டு வயதுப் பையனது.. எதிர்பாராத இப்பதில், `ஜட்ஜின்’ மனதை இளகச்செய்தது. ரங்கநாதன் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை வைத்தார். ஆனால் தந்தைக்கு பதிலாக மகனை சிறையில் வைக்க முடியாதே. ஏனெனில் ரங்கநாதன் மைனர் ஆயிற்றே… ஒரு கனம் யோசித்தார். எப்படியும் ரங்கநாதன் தந்தையை விடுவித்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்.

அதற்காக மறுநாள் காலையில் தம்மை வந்து பார்க்குமாறு ரங்கநாதனிடம் கூறி அனுப்பினார்.

ரங்கநாதனும் மறுநாள் ஜட்ஜைச் சந்தித்தார்.

ரங்கநாதன் தந்தையை விடுவிக்குமாறு சிறை அதிகாரிக்கு உத்தரவு எழுதி _ ரங்கநாதனிடம் கொடுத்து அனுப்பினார் ஜட்ஜ்.

சிறை அதிகாரியிடம் உத்தரவினைக் காட்டி தந்தையை விடுவித்தார்.

பின்பு நள்ளிரவில் தந்தையுடன் வீடு போய்ச் சேர்ந்தார்.

நடந்த நிகழ்ச்சிகளைத் தம் கண வர் மூலம் அறிந்த ரங்கநாதனின் தாய், தம் அருமை மகனைக் கட்டிய ணைத்து உச்சிமோந்து _ ஆனந்த கண்ணீர் சொறிந்தார்.

பிற்காலத்தில் அந்த ரங்கநாதன் தான், ரங்கநாத சாஸ்திரியாக மிகப் பெரும் பதவிகளைப் பெற்று, பேரும் புகழுடன் விளங்கியவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *