கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 3,111 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்த தால், கீதா தன் தோழிகளுடன் சினிமாவுக்குப் போவதற்குத் திட்டமிட்டான். அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண் டாள். தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அடுத்த பிளாட்டில் இருக்கும் ஸரினாவைச் சந்திக்கச் சென்றாள்.

அவள் போன சமயத்தில் வீட்டில் அம்மாவுக்கு உதவி யாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்த ஸரினா கீதாவை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தாள். தோழிகள் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே வேலைகளைக் கவனித்தார்கள்.

எனக்கு விடுமுறை நாள் எப்பவரும்னு நான் காத்தி கிட்டு இருப்பேன் கீதா. ஏன்னா அன்றைக்குத்தான் நாம எல்லாரும் வீட்டில் இருக்கோம். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமான்னு பெரியவுங்கள்ளலாம் இருப்பாங்க. அவுங்களோட பொழுதை கழிக்கிறதுன்னா, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். நெறைய விஷயங்கள அவுங்ககிட்டே யிருந்து நாம தெரிஞ்சுக்கலாமில்லியா”

உற்சாகமாய் சொல்லிக் கொண்டே புத்தம் புதிதாய் தானே தயார் செய்த ஆரஞ்சு பழச்சாற்றைத் தோழியிடம் கொடுத்தாள் ஸரீனா. கீதாவுக்கு அவளது பேச்சும் செயலும் அதிசயமாய் இருந்தன கையிலிருந்ததை சுவைத்துக் குடித் துக் கொண்டே தோழியைப் பார்த்துக் கேட்டாள்.

“ஸரீன்… இது நீயாகவே தயார் பண்ணினதா :?” அவளது கேள்வியில் ஆர்வமும் வியப்பும் மேலிட்டிருந்தன.

“ஆமாம் கீதா.. நானேதான் தயார் பண்ணினேன். உனக்குப் பிடிச்சிருக்கா?“

“ரொம்ப நல்லா இருக்கு எனக்குச் சொல்லாம சமையல் வகுப்பெல்லாம் போறே போல இருக்கே! எவ்வளவு நாளா. ..?

தோழியின் கேள்வி ஸரினாவை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

“இதுக்கெல்லாமா தனியா கிளாஸ் எடுப்பாங்க இதை நான் என்னோட அம்மாகிட்டேதான் கத்துக்கிட்டேன். இது மட்டுமில்லே நான் தையல், பாட்டு, வீட்டு அலங்காரம்னு என்னோட ஓய்வு நேரத்தில் நெறைய விஷயங்களை அம்மா கிட்டேயிருந்து தெரிஞ்சு வெச்சிருக்கேன்.

பெருமையாகச் சொன்னான் ஸரீனா. “ரியலீ கேட்கவே மகிழ்ச்சியாவும் வியப்பாவும் இருக்கு, அதுமட்டுமில்லாம உனக்காக உங்க அம்மா இவ்வளவு நேரத்தை மிச்சப்படுத்தி இதைஎல்லாம் கத்துக் குடுக்கறாங்கன்னா. உண்மையிலேயே நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி ஸரீன்“

கீதாவின் வாய்மொழியில் புகழ்ச்சியுடன் கொஞ்சம் கவலையும் தோய்ந்து கிடந்தது.

“நீ சொல்றதில சிறு திருத்தம் இருக்கு கீதா…என்னோட ஓய்வு நேரத்தில் நான் தான் அம்மாகிட்டே போய் இதை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். அவுங்கள நான் எப்பவும் சிரமப்படுத்த மாட்டேன். “

இருவரும் வரவேற்பறைக்கு வந்தார்கள். வீட்டுச் சன்ன லில் தொங்கிக் கிடந்த திரைச் சீலைகள், புதுவகை பூஞ்சாடி கள், செயற்கை மலர்க்கொத்துக்களை எல்லாம் தோழிக்குக் காட்டிப் பெருமைபட்டுக் கொண்டாள் ஸரீன்.

“இதெல்லாம் என்னோட ஓய்வு நேரத்தில நான் செய் தது கீதா அழகா இருக்கா?”

“அழகா மட்டுமில்லே ஸரீன்…உன்னைப் பார்த்தா எனக்குப் பொறாமையாவும் இருக்கு…நீ இந்த அளவுக்குக் கெட்டிக்காரியா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை போ… உங்கிட்டேயிருந்து நான் தெரிஞ்சுக்க வேண்டியது நெறையவே இருக்கு“

மனம் திறந்து தோழியைப் பாராட்டியவளாய் இருக்கை யில் அமர்ந்தாள் கீதா. அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டவளாய் ஸரீனா கேட்டாள்.

“ஆமாம், நீ வந்த விஷயத்தைச் சொல்ல மறந்துட்டியா என்ன? எதையும் சொல்லாம என்கிட்டே கதை சேபிக்கிட்டி ருக்கியே… ஏதாச்சும் விஷேஷமா வந்தியா…”

கீதாவுக்குச் சிரிப்பு வந்தது “பார்த்தியா..வந்ததையே மறந்துட்டேன். நான் இன்னிக்கு மேட்னி ஷோவுக்குப் போக லாம்னு வந்தேன். கிரேஸி, மீனா ரெண்டு பேரும் உன்னை யும் கூட்டிட்டுப் போகலாம்னு சொன்னாங்க போகலாமா ஸரீன்!“

ஸரீனாவின் முகம் சற்றே வாடிப்போனது “என்னை மன்னிச்சுடு கீதா…இன்றைக்கு மூன்று மணிக்கு மேலே தமிழ் மொழி கழகத்தில ஒரு சொற்பொழிவு இருக்குன்னு பக்கத்து வீட்டு ஆன்டி சொன்னாங்க… நாங்கல்லாம் போறதா முடிவு பண்ணிட்டோம். உன் கூட என்னால வர முடியாது கீதா..”.

ஸரீனாவின் பதிலில் ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளா மலேயே கீதா பேசினாள்.

“என்ன சொல்றே நீ… சொற்பொழிவு கேட்கப் போறியா… வயசானவங்க செய்ற வேலை எல்லாம், நீ நெறையசவே செய்வே போலிருக்கே. நாமெல்லாம் ஜாலியா சினிமாவுக்குப் போகலாம்னு சொன்னா. நீ சொற்பொழிவு கேட்கப் போறேன்கிறியே…”

“ஏன் உனக்குச் சொற்பொழிவே கேட்கப் பிடிக்காதா? எதனால் இப்படிப் பேசறே.“

“அதெல்லாம் பெரியவங்க விஷயம் ஸரீன்… அதெல் லாம் கூட்டத்தில சொற்பொழிவு கேட்கப் போறேன்னு போய் எத்தனையோ பேர் அறுவை தாங்காம தூங்கிட்டு வந்திருக்காங்க… எனக்கு இதெல்லாம் கொஞ்சங்கூட பிடிக் காது ஸரீன். “

“பெரியவங்களோட பேச்சு கேட்கறது ஒரு நடமாடும் பல்கலைக் கழகத்துக்கே போய்ட்டு வந்த மாதிரி கீதா…நமக்குத் தெரியாத எத்தனையே விஷயங்கள்… நாமெல் லாம் படிச்சு புரிஞ்சுக்க முடியாத பல விஷயங்கன அவுங்க நமக்கு சொல்வாங்க…அதைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிறதால எதிர்காலத்தில நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கிறதுக்கு நெறைய விஷயம் கெடைக்கும்”

“எதைவெச்சு சொல்றே நீ…! கீதா அழுத்தமாய்க் கேட்டாள் ஸரீனா அவளை ஆழமாய்ப் பார்த்தாள்.

“மகாத்மா காந்தியை உனக்குத் தெரியுமா கீதா..அவரோட மாணவர் பருவத்தில அவரோட வாழ்க்கைய நீ படிச்சிருக்கியா? அவர் காலத்தில இந்தச் சினிமாவெல்லாம் கெடையாது. இந்த மாதிரி மேடை பிரசங்கங்க், நாடகங் கள்னு நடக்கிற விஷயங்களப் பார்த்துக் கேட்டுத்தான் தனக் குள்ளேயே ஒரு சத்திய பிரமாணத்தைப் பண்ணிக்கிட்டு தன்னை வளர்த்து கிட்டதா அவரே எழுதி இருக்காரு.

அரிச்சந்திரன் கதையும், சரவணன் கதையும் உண்மைக் கும் பெற்றோர்கள் மேல பாரம் மரியாதை வெக்கிறதுக்கும் பெரியவழிகாட்டுதலா இருந்ததா, அவரோட சத்திய சோதனை புத்தகத்தில் நான் படிச்சிருக்கேன் இதை விடவா உனக்கு வேறெ- ஆதாரம் வேணும்.

கீதாவுக்கு வியப்பாக இருந்தது. தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கின்ற சக மாணவியான ஸரீனாவுக்கு இவ்வளவு அறிவா என்று வியந்தாள். அவளை முழுமையாய் ஏறிட்டுப் பார்க்கவே வெட்கமாய் இருந்தது.

“நமக்குக் கெடைக்கிற ஓய்வு நேரத்தில் நம்மைவிட பெரியவங்களோட அளவளாவி விஷயங்களைத் தெரிஞ்சுக் கிறது. முக்கியமான பெரியவுங்க பேசற இடங்களுக்குப் போய், அவுங்க பேசறதைக் கேட்கறதில கிடைக்கிற நன்மை களை, நான் சொன்னா உனக்குத் தெரியாது. இதை எல்லாம் சொந்தமா அனுபவிச்சாதான் தெரியும்…புரியும்.

ஸரீனாவின் வார்த்தைகளின் அழுத்தம், கீதாவை வெகுவாய் பாதித்திருக்க வேண்டும். சில நிமிடங்கள் மென்மை யாய் இருந்துவிட்டுப் பிறகு எழுந்தாள்.

“நான் கிளம்பறேன் ஸரீன் உன்னை அப்புறம் பார்க்கிறேன்.

“வாசல்வரை வந்து காலணியை மாட்டத்துவங்கிவிட்ட தோழியைப் பார்த்துப் பதறிப்போனாள் ஸரீனா.

“கீதா….என்மேல கோபமா…ஏன் கிளம்பிட்டே!

உன்மேல எனக்குக் கோபமா வரும்…என்னோட கண்ணைத் திறந்துவிட்ட உனக்கு நானல்லவா நன்றி சொல்லனும்…உன்னை அந்த தமிழ்மொழி மன்றத்தில வந்து பார்க்கணுமில்லியா அதான் கிளம்பிவிட்டேன்.

தோழியை மகிழ்வோடு அனுப்பி வைத்தாள் ஸரீனா.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் (குறள்:416)

விளக்கம்http://www.thirukkural.com/2009/01/blog-post_9406.html#416

– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *