ஒளவை கண்ட காட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,642 
 
 

ஒளவை கண்ட காட்சி அத்துடன் அழியாத சொல் ஓவியம். பிறந்த சேயைத் தாதியர் ஏந்தி நிற்கின்றனர். மகவினைப் பார்க்க ஓடோடி வருகிறான் மன்னன்.

போர்க்களத்திலிருந்து அப்படியே வருகிறான். கையிலே வேல், காலிலோ வீரக்கழல், மெய்யிலே வியர்வை, கழுத்திலே புதுப்போர்ப்புண் தலையிலே பனம் பூ மாலை, வெண் மலர் மாலையும் வேங்கை மலர் மாலையும் கலந்து கிடக்கின்றன தலையில். புலி போல் சீறி வருகிறான். இன்னுமா சீற்றம் தணியவில்லை. புலியைக் குத்தி வீழ்த்திக் கோபம் அடங்காது நடக்கும் யானை போலல்லவா வருகிறான்.

இன்னும் கோபம் தணியவில்லையே. ஐயோ பாவம் இவனிடம் அகப்பட்டவர் யாரோ, பெற்ற மகனைப் பார்த்தும் சினந் தணியவில்லையே, கண் சிவப்பு நீங்க வில்லையே.

உன்னை எதிர்த்தவன் உயிரோடு இருக்கமாட்டான்” என்று பெருமூச்சு விட்டு இரங்கினாள் ஒளவைப்பாட்டி

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *