முதல் நாள் போரிலே, பகைவர் தம் யானையைக் கொன்று, தந்தை மடிந்தான்; இரண்டாம் நாள் போரிலே, நிரைகவர்ந்த பகைவரை மறித்துக் கொன்று மடிந்தான் கொழுநன் !
மூன்றாம் நாளும் போர்ப் பறை ஒலித்தது…
கணவனும் தந்தையும் மடிந்த பின்னரும், தன் ஒரே மகனையும் போர்க்கு அனுப்பப் புறப்பட்டாள் அம்மறத்தி .
தன் மகனுக்குப் புத்தாடை உடுத்தினாள்; அவன் தலையில் எண்ணெயிட்டு வாரினாள்;
வேல் ஒன்றை எடுத்துக் கையில் கொடுத்தாள்..
“போ, மகனே, போ…
“போர்க்களம் அழைக்கிறது, போ” என்று அனுப்பினாள்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்