ஐந்து லட்சம் லாட்டரி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 10, 2022
பார்வையிட்டோர்: 11,734 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தலைமை ஆசிரியரின் பியூன் தாமு, ஒரு சீட்டைக் கொண்டு வந்து ஆசிரியரிடம் பணிவாக நீட்டினான், அதைப் படித்துப் பார்த்த ஆசிரியர், “சாட் பீட் கீத்! உங்க மூன்று பேரையும் எச்.எம். உடனே கூப்பிடுகிறார்” என்றார்,

மூவரும் எழுந்து எச்.எம். அறைக்கு விரைந்தனர். வணக்கம் கூறிய மூவரையும் உட்காரச் சொன்ன எச்.எம். எழுந்து சென்று கதவைத் தாளிட்டு வந்தார். அவர் முகத்தில் பெருங்குழப்பம்.

தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டார் எச். எம்.

“முக்கிய காரணமாத்தான் உங்க மூன்று பேரையும் உடனே வரச் சொன்னேன்” என்று கூறிய எச்.எம். “நம்ம பள்ளியில் மாணவர்களுக்காக ஒரு தனி மாணவர் விடுதி நடப்பதும், அதற்கும் நானேதான் வார்டனாக இருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில் நம் பள்ளியின் வெளியூர் மாணவர்கள் மட்டுமே தங்கிப் படிக்கிறார்கள்,” என்று நிறுத்தினார்.

“நம் பள்ளி மாணவர் விடுதியைப் பற்றி எங்களுக்கே நீங்கள் கூற வேண்டுமா சார்? எங்களுக்கே, எல்லா விவரங்களும் தெரியும். எங்களுக்கே அங்கே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்” என்றான் பீட்டா.

“எங்கள் வகுப்பிலேயே படிக்கும் பூபதி, சுந்தர், மாணிக்கம் கூட அந்த விடுதிவாசிகள்தானே? விடுதியின் பெருமைகளைப் பற்றி நாங்கள் நன்கு தெரிந்தவர்கள், அத்தனை பெருமைகளுக்கும் காரணம் உங்களுடைய கண்டிப்பும், மேற்பார்வையும்தான்” என்றாள் கீதா.

“வீட்டில், தேர்வு நெருங்கும் போது, உறவினர்கள் வருகையால் சில சமயம் படிக்க முடியாத நிலை ஏற்படும் போது, நாங்கள் பலமுறை ஹாஸ்டலுக்கும் சென்று, நண்பர்களுடன் விருந்தாளிகளாகத் தங்கிப் படித்திருக்கிறோம். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அருமையான சூழ்நிலை. இந்தக் கட்டுக்கோப்பு குலையாமல் இருப்பதற்கு, உங்கள் மேற்பார்வையும், கண்டிப்பும்தான் காரணம் சார்” என்றான் சாதிக்பாட்சா.

“நீங்கள் மூன்று பேரும் எத்தனைதான் மாறி மாறி எனக்கு ஐஸ் வைத்தாலும், இப்ப என்னால் மகிழ முடியாது. காரணம், நீங்கள் இப்படிப் புகழும் பெருமைக்குரிய நம் மாணவர் விடுதிக்குக் களங்கம் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. அது விஷயமாகப் பேசவே உங்களை வரவழைத்தேன், புகழ்க் காவியம் பாடாமல் பிரச்னையைக் கவனியுங்கள்” என்றார் எச்.எம்.

மூவரும் அதிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

“என்ன ஆச்சு சார்!”

“பூபதி, சுந்தர், மாணிக்கத்தைத் தெரியுமல்லவா உங்களுக்கு?”

“நன்றாகத் தெரியும். எங்கள் வகுப்புத்தானே? நல்ல பண்புடையவர்கள். மூவரும் ஒரே ஊர், விடுதியில் ஒரே அறையில் தங்கி இருப்பவர்கள். மூவரையும் தனித் தனியாகக் காண முடியாது. ஒன்றாகத்தான் காணலாம். அத்தனை ஒற்றுமை!”

“ஏன், அவங்களுக்கு நாம்ப வைச்சிருக்கும் செல்லப் பேரே மும்மூர்த்திகள்தானே?”

“மும்மூர்த்திகளுக்கு என்ன ஆச்சு சார்?”

“இதை நான் கூறுவதை விட, அவர்கள் வாயாலேயே கேட்பது இன்னும் விளக்கமாக இருக்கும்” என்று எழுந்தார் எச்.எம்.

****

மாணவர் விடுதி, பள்ளி இருந்த அதே தெருவில் இன்னொரு கோடியில் அமைத்திருந்தது. காற்றோட்டம் உள்ளதாக, படிக்கக்கூடிய அமைதியான சூழ்நிலையில் என்பது அறைகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டடமாக அது இருந்தது. ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர். தனித்தனி கட்டில், அலமாரி, மேஜை, கண்ணாடி எல்லாம் இருந்தன. பல் துலக்க, குளிக்க மட்டுமே வெளியே வர வேண்டும். பொதுக் குளியலறைகள் ஒவ்வொரு மாடியிலும் உண்டு, பொதுவான நூலகம் ஒன்றும் கீழ்த்தளத்தில் இருந்தது.

மும்மூர்த்திகள் இருந்தது இரண்டாவது மாடியில் முதல் அறை, அறையின் என இருபத்தொன்று.

இவர்கள் போன போது, 21ஆம் எண்ணுள்ள அறை வெளியே பூட்டப்பட்டிருந்தது. எச்.எம். பூட்டைத் திறந்து கதவைத் திறந்தார். சாட் பட இத் திடுக்கிட்டனர். காரணம், அந்த அறைவாசிகளான மும்மூர்த்திகளும் ஆளுக்கு ஒரு திசையைப் பார்த்தபடி எதையோ பறிகொடுத்தது போல் காணப்பட்டனர். விடுதித் தலைவரான எச்.எம். மூவரையும் அறைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வந்திருக்கிறாரே! என்ன காரணமாக இருக்கும்?.

“நான்தான் வேண்டுமென்றே இவர்களை அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டு வந்தேன். என்ன நடந்திருக்கிறது என்பதை உங்கள் அருமை நண்பர்களான இவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார் எச்.எம்.

“போன மாதம் மூவரும் சென்னிமலை முருகன் கோவிலுக்குப் போனோம். அர்ச்சனைக்காகத் தேங்காய் பழத்தட்டு வாங்கினோம். மீதி ஐந்து ரூபாய் கடைக்காரர் தர வேண்டும். அவரிடம் சில்லறை இல்லை, கடைசியில் வேறு வழியில்லாமல் அவர் கடையில ஒரு பரிசுச் சீட்டு வாங்கினோம்”- மும்மூர்த்திகளில் ஒருவனாகிய பூபதி எச்.எம்.மைக் கீழ்ப்பார்வை பார்த்தபடி கூறினான்.

“நம்ம விடுதியில், மாணவர்கள் எந்த பரிகச் சீட்டையும் வாங்கவும் கூடாது, வைத்துக் கொள்ளவும் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு இருக்கிறது,” என்று விளக்கினார் எச்.எம்.

“வேறுவழியில்லாமல் வாங்கினோம். பரிசுச் சீட்டை நம்ம சுந்தரிடம்தான் பத்திரமாக இருக்கக் கொடுத்து வைத்திருந்தோம்” என்றான் மாணிக்கம்.

“நானும் அதை இரகசியமா, வெளியே தெரியாமல் இருக்கும்படி, நம்ப பள்ளி கேலண்டர் புத்தகத்தில், அதற்குப் போட்டிருந்த கனத்த அட்டையில் வைத்து மறைத்திருந்தேன்,” என்றான் சுந்தர்.

“சுந்தர், பரிசுச்சீட்டை எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என்பது எங்களுக்குக்கூடத் தெரியாது. நாங்கள் அதைக் கேட்கவும் இல்லை, அதன் எண்ணை மட்டும் மனத்தில் நினைவு வைத்துக் கொண்டோம். அவன் ஏமாற்ற மாட்டான் என்று அத்தனை நம்பிக்கை” என்றான் பூபதி.

“இன்று காலை, செய்தித்தாளில் அந்தச் சிட்டுக்கு முதல் பரிசு ஐந்து லட்ச ரூபாய் விழுந்திருக்கும் செய்தி வெளிவந்திருக்கு. இதைக் கூட நாங்க மூன்று பேரும் வழக்கப்படி ஒன்றாக டிபன் சாப்பிட்டு, டிரஸ் பண்ணிக்கிட்டு, கதவைப் பூட்டிக்கிட்டு கீழே இறங்கின பிறகுதான் தற்செயலா நூலகத்தின் மேஜை மேல் பிரித்து கிடந்த செய்தித்தாளைப் பார்த்து அறிந்து கொண்டோம். உடனே மூவரும் மேலே ஏறி, மறுபடி அறைக்கு வந்தோம். கதவை உட்பக்கம் மூடிக் கொண்டோம். சுந்தர் பரிசுச் சீட்டைப் பத்திரப்படுத்தி வைத்திருந்த பள்ளி காலண்டர் புத்தக அட்டைக்குள் பார்த்தான். பரிசுச் சீட்டைக் காணவில்லை. உடனே நான் சுந்தரைத் திட்டினேன். பூபதி அடிக்கவே போய் விட்டான்,” என்றான் மாணிக்கம்.

“எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. வராந்தா வழியாக வந்த எச்எம் அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். நாங்கள் நடந்ததைக் கூறினோம். நீங்கள் மூன்று பேரும் உள்ளேயே இருங்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் மறுபடி வருகிறேன் என்று சொல்லி, வெளியே பூட்டிக் கொண்டு போனார்,” என்றான் சுந்தர்.

“சாட் பீட் கீத். இந்த பரிசுச் சீட்டு திருட்டு சமாசாரம் வெளியே தெரிந்தால் நம்முடைய விடுதிக்கு எத்தனை கெட்ட பெயர் தெரியுமா? வேறு வழியில்லை என்றால், கடைசியில் போலீசுக்குப் போவோம். வெளியே செய்தி பரவுமுன் இது போன இடத்தைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்றுதான் உங்களை அழைத்து வந்தேன்” என்றார் எச்.எம்.

“நீங்கள் பரிசுச் சீட்டு வாங்கினது வேறு யாருக்காவது தெரியுமா?” என்று கேடடாள் கீதா.

“யாருக்குமே தெரியாது கீதா. இங்கே வந்த பிறகு மாணிக்கத்திறகும் பூபதிக்கும் கூட நான் சீட்டை மறைத்து வைத்திருந்த இடம் தெரியாது.” என்றான் சுந்தர்.

சுந்தரின் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது.

“உங்கள் அறைக்கு இன்று காலை யாராவது வந்தார்களா?” என்று கேட்டான் பீட்டர்.

“நிறைய நண்பர்கள் அடிக்கடி வருவார்கள், பாடத்தில் சந்தேகம் கேட்பார்கள். இன்று காலை கூடப் பலர் வந்தார்கள்.”

சாட் பீட் கீத் மூவரும் அறையில் இருத்த பொருள்களை எல்லாம் கவனமாகப் பார்த்தனர். அறையில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தனர். எங்கிருந்தோ பற்பசையின் மணம் இலேசாக வீசியது. வெளியே நடந்து மொட்டை மாடிக்குப் போனார்கள்.

மூவரும் விவாதித்தனர். “விஷயம் தெரிந்த ஒருவரே இதை எடுத்திருக்க வேண்டும்.”

“எடுத்தவருக்கு இவர்கள் சீட்டு வாங்கினது, அதற்குப் பரிசு விழுந்திருப்பது, அது பாதுகாக்கப்பட்டுள்ள இடம், எல்லாம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதோட அவர் இவர்களுடைய அறைக்கு அடிக்கடி வரக் கூடியவராகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதை அவர் எடுத்திருக்க முடியும்” என்து விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டனர் சாட் பீட் கீத்.

மூவரும் விவாதித்துக் கொண்டே பார்த்தபோது, 21-வது அறை ஜன்னலுக்கு வெளியே, கீழே சன்ஷேடில் என்னவோ வெளுப்பாகத் தெரிந்தது. கூழ் கொட்டியதைப் போல் ஒரு தோற்றம்!

மூவரும் கீழே இறங்கி, அறைக்குள் வந்து ஜன்னல் வழியாக நோக்கினர். சாதீக் கையை நீட்டி அதை விரலால் தொட்டு எடுத்தான். பசை மாதிரி இருந்தது. முகர்ந்து பார்த்தான். கிராம்பு வாசனை! ஆம் அது பற்பசையேதான்! அத்தனை பற்பசையை யார் வெளியே கொட்டியிருப்பார்கள்? வேண்டுமென்றே செய்ததா? இல்லை, தற்செயலா? என்ன காரணமாக இருக்கும்?

“நீங்கள் மூன்று பேரும் ஒரே பற்பசையைத்தான் பயன்படுத்துவீர்களா? இல்லே தனித்தனியா?” என்று கேட்டான் பீட்டர்.

“தனித்தனியாகத்தான் வைத்திருக்கிறோம். ஆனால் மூன்று பேருமே பிராமிஸ் டூத் பேஸ்ட், பெரிய சைஸ், எகானமி சைஸ்”

“உங்க டூத்பேஸ்ட் எல்லாம் சரியா இருக்கா?”

“இதோ என்னுது.”

“என் பேஸ்ட் இதோ.”

சுந்தரும், மாணிக்கமும் கொண்டு வந்து காட்டினர். பூபதியின் பேஸ்ட் எச்.எம். முக்கு உதவியாக பூபதி என்னவோ பண்ணிக் கொண்டிருந்தான். சாட் பீட் கீத் நெருங்கிப் பார்க்க முயன்ற போது, “பாருங்க இவன் திறமையை! ‘பின்’பண்றதுக்காக நாலைந்து ரசீதுகளை வைத்திருந்தேன், அதோட இங்கே வந்து விட்டேன், எங்கேயாவது பிரிந்து விழுந்து விடப் போகிறதே என்று ‘ஸ்டேப்ளா’ கேட்டேன், ‘ஸ்டேப்ளர் இல்லே. ஆனா, ஏற்கெனவே போட்ட ஸ்டேப்ளர் பின்னைக் கழற்றி, பக்குவமா, குண்டூசில அளத்து ஓட்டை போட்டு, ஸ்டேப்ளர்ல போட்ட மாதிரியே சொருகி, மடக்கித் தரேன்னு, வாங்கிக்கிட்டான் பூபதி, பாருங்களேன்! எத்தனை அருமையா, ஸ்டேப்ளர் பின் அடிச்ச மாதிரியே பண்ணியிருக்கான்” என்று புகழ்ந்து கொண்டார் அந்த நிலையிலும் எச்.எம்.!

“பூபதி, உன்னோட பற்பசை எங்கோ” என்று கேட்டான் பீட்டர்.

பூபதியின் பற்பரை டியூபை வாங்கிய பீட்டர், அதன் மூடியைத் திறந்து அமுக்கினான். “பொஸ்க்” என்று காற்று தான் வெளியே வந்தது. டியூப் காலி! – ஆனால் மென்மையான நெகிழும் தன்மை கொண்ட அதற்குள், என்னவோ தட்டுப் பட்டது. சேப்டி பின்னால் பீட்டர் அதை வெளியே இழுத்தான். மூடப்பட்டு, சுருட்டிய மெல்லிய பிளாஸ்டிக் சுவர் வெளியே வந்தது. அதற்குள் அழகாக மடிக்கப்பட்டு, சுருட்டப்பட்ட பரிசுக் சீட்டு!

ஆமாம் காணாமல் போன அதே லாட்டரிச் சீட்டுதான்!

“சீட்டு கிடைச்சுப் போச்சு. பிரச்னை தீர்ந்தது” என்றார் எச்.எம்.

“யார் எடுத்திருப்பார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டாமா?” என்று கேட்ட கீதா, பிளாஸ்டிக் கவரை வாங்கி, அதன் வாயில் போடப்பட்டிருந்த ஸ்டேப்ளர் பின்னைப் பிரிக்காமல் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள்.

ஏற்கெனவே போடப்பட்டிருந்த ஸ்டேப்ளர் பின்னை எடுத்து விட்டு, மறுபடி போட்ட அடையாளம் தெரிந்தது. சிரித்துக் கொண்டே பிளாஸ்டிக் கவரைப் பிரிக்காமல் சாதிக்கிடம் தந்தான். அவனும் கவனித்து விட்டு, பீட்டரிடம் நீட்டினான். மறுபடி கவர் கீதாவின் கைக்கு வந்தது.

கீதா, கவரைப் பிரித்தாள், மடிக்கப் பட்ட லாட்டரிச் சீட்டுக்குக் கீழே ஒரு மெல்லிய கொப்பரைத் தேங்காய்த் துருவல்! பீடா போட்டு ஸ்டேப்ளரால் மூடப்பட்ட பிளாஸ்டிக் கவர் அது சந்தேகமே இல்லை!

“நேற்று, நம்ம வகுப்பு பாபுவின் அண்ணன் குழந்தைக்குப் பிறந்த நாள், ஓட்டலில் டின்னர், எங்க மூன்று பேரையும் அழைத்திருந்தான். போனோம் அங்கே பீடாவை இப்படி பிளாஸ்டிக் கவரில் தந்தார்கள். நானும், மாணிக்கமும் உடனே பிரித்துத் தின்றோம். பூபதி மட்டும், அறைக்கு வந்து போட்டுக்கப் போறேன்னு எடுத்து வந்தான்,” என்றான சுந்தர்.

பூபதியின் கண்களில் நீர் முட்டியது. ”

எல்லாம்தான் கண்டுபிடித்து விட்டீகளே! நான் மன்னிப்புக் கேட்க வேண்டியது மட்டும்தானே பாக்கி!”

“இன்னும் மூன்று விஷயங்கள் தெரியலையே”

“பரிசு விழுந்த செய்தி, எப்படி முதலில் உனக்கு மட்டும் தெரிந்தது.?”

“பீடாவை சாப்பிட மறந்து விட்டேன், காலையில், மாணிக்ககமும் சுந்தரும் குளிக்கப் போயிருந்தப்போ, நான் கீழே இறங்கி நூலகத்தில் செய்தித்தாளைப் பார்த்து அறிந்து கொண்டேன். உடனே அறைக்கு வந்து சுந்தரின் அலமாரியைக் குடைந் , பரிசுச் சீட்டைக் கண்டுபிடித்து எடுத்தேன். அதை மறைக்க இடம் தேடினேன், புத்தகம், நோட்டுகளில் வைத்தால் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால், பற்பசை டியூபை அப்படியே ஜன்னல் வழியாகப் பிதுக்கிக் கொட்டி காலியாக்கினேன், பீடா கவரில் பரிசுச் சீட்டை வைத்து ஸ்டாப்ளர் பின் போட்டு சுருட்டி காலி டியூபுக்குள் தள்ளி மூடிவைத்து விட்டேன். யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணினேன். ஆனால்…” -பூபதி விம்மினான்.

“இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லலையே? உயிர் நண்பர்களாகப் பழகிவிட்டு திடீரென்று எப்படி இந்த மாதிரி மாறினாய்?”

“வியாபாரத்தைப் பெருக்க பணம் கடன் வாங்க எங்கப்பா தன் நண்பருக்கு பிணைக் கையெழுத்துப் போட்டார். வியாபாரம் நஷ்டமடைய, நண்பர் அதே வருத்தத்தில் மறைய, அப்பா கடனுக்குப் பொறுப்பாளியாகி விட்டார். போன வாரம்தான் கடிதம் வந்தது, இந்த பரிசுப் பணம் அப்பாவுக்கு உதவுமே என்றுதான் இந்தத் துரோகச் செயலைச் செய்தேன்.”

பூபதி அழுதான்.

“பூபதி, உனக்கு ஏற்பட்ட துன்பத்தில் எங்களுக்குப் பங்கு இல்லையா? எங்களை எத்தனை குறைவாக மதித்து விட்டாய்! இந்தப் பரிகப் பணத்தை அப்படியே உன் அப்பாவுக்குக் கொடுத்து உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றான் சுத்தர், ஆமோதித்தான மாணிக்கம்,

“முதல்ல, விடுதி விதிகளுக்கு எதிரா பரிசுச் சீட்டு வாங்கி வைத்ததுக்கு நூறு ரூபாய் கூட்டு அபராதம் கட்டுங்க” என்றார் எச்.எம்.

எல்லோரும் சிரித்தனர்.

– 01-07-1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *