பாடி வந்த பரிசிலர்க்கு யானைகள் தரப்பட்டன. இப்போது கட்டுத் தறிகளில் யானைகள் இல்லை. அங்கு காட்டு மயில்கள் குடி புகுந்தன…..
ஆய் அரண்மனையைப் பாருங்கள். அது, பொருளிழந்து பொலிவற்றுக் காட்சி தருகின்றது.
அவன் மனைவிமாரைப் பாருங்கள். அவர்களும் மங்கல நாண் மட்டுமே அணிந்து, மற்றைய அணிகளை இழந்தனர்…
மற்றவர்களுக்குக் கொடாத மன்னர் தம் அரண்மனைகளிலே அணிகலன்கள் நிறைந்திருக்கின்றன. ஆய் நாட்டில் அவை குறைந்தன…
கொடுக்கப் பிறந்த கைகளைப் பெற்றுள்ள ஆய்; கொடுக்கப் பிறந்தார் போற் பொருள் சேர்க்கக் கருதவில்லை அவன்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்