அதியமான் அஞ்சுகின்றானா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 1,881 
 
 

அதியமான் போர்க்களம் புக அஞ்சினான். அவ்வை அவனை நோக்கிக் கூறினாள்:

மறப்புலி சீறி எழுந்தால் அதனை எதிர்க்கும் மான் கூட்டம் உண்டோ ? வானத்தில் கதிரவன் எழுந்தால் அதனை எதிர் நிற்கும் இருள் உண்டோ ? பாரம் ஏற்றிய வண்டியை ஆழ் மணலிலும், பாழ் நெறியிலும் இழுக்கும் பகட்டுக்குப் போகமுடியா இடம் உளதோ?….

வீரர் தலைவ! நீ போர்க்களம் சென்றால் உனை எதிர்த்துப் போரிடும் போர் வீரர் உண்டோ.

நின் வீரக் கைகள், வெற்றியை நோக்கி உயர்கின்றன …. நின் மலைத் தோள்கள், வெற்றிச் சிகரம் போல் நிமிர்கின்றன.

நெடுமான் தன் தோளைப் பார்த்தான்; இடையிற் கட்டிய, வாளைப் பார்த்தான்; அவன் மனக் கண் முன் பகைவர் தலைகள் உருண்டன!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *