அணையும் வெள்ளமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 317 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காட்டாறு ஒன்று இருந்தது. அதன் கரையிலே ஒரு சிற்றூர் அமைந்திருந்தது. அந்தக் காட்டாற்றிலே திடீர் திடீர் என்று வெள்ளம் பெருகும். வெள்ளம் பெருக்கெடுக்கும்போது ஊரில் உள்ள குடிசைகளையும், ஆடு மாடுகளையும் அடித்துக் கொண்டு போய்விடும். இந்தத் திடீர் ஆபத்தை எப்படித் தடுப்பதென்று தெரியாமல் அந்த ஊரார் பலமுறை துன்பம் அனுபவித்து விட்டார்கள். கடைசியில் நல்லான் என்ற ஒருவன், அந்தக் காட்டாற்றிற்கு ஓர் அணை கட்டுவதென்று திட்டமிட்டான். ஊர்ப் பெரியார்களின் அன்பும் ஆதரவும், இளந்தோழர்களின் ஒத்துழைப்பும் கொண்டு நல்லான் அந்த அணையைக் கட்டி முடித்தான். 

அணை வெள்ளப் பெருக்கைத் தடுத்ததோடு, தோட்டந் துரவுகளுக்கு நீர் தரவும் பயன்பட்டது. அதற்கு நல்லான் அணையென்று பெயரிட்டு அழைத்தார்கள். ஊரார் அவ்வப்போது பழுது யார்த்து அணை உடையாமல் பார்த்துக் கொண் டார்கள். நல்லான் மூப்படைந்து இறந்த பிறகும் அணை இருந்தது. பாட்டிமார் தங்கள் பேரன் பேத்தியர்க்கு அந்த அணைக்கட்டின் வரலாற்றைக் கதையாகக் கூறுவார்கள். நல்லான் செய்த முயற்சி களைக் கதை கதையாகக் கூறுவார்கள். 

நல்லான் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒருநாள் முனியன் என்ற ஓர் இளைஞன் அந்த அணைக்கட்டின் பக்கம் சென்றான். அதற்கு முந்திய நாள் வெள்ளம் வந்து அணைக்கட்டு நிரம்பியிருந்தது. 

முனியன் நீர் நிறைந்த அந்த அணைக் கட்டைப் பார்த்தான். அவனுக்கு மனத்தில் பொல் லாத ஆசையொன்று தோன்றியது. அந்த அணைக் கட்டை ஓர் இடத்தில் உடைத்துவிட்டு அது எப்படிப் பாய்கிறது என் று பார்க்க வேண்டும் என்பதுதான் அவ்வாசை. ஒரு கடப்பாரையினால் யாரும் பார்க்காதபோது அணைக்கட்டுச் சுவரைப் பெயர்த்தான். சிறு துளையின் வழியாக நீர் குபுகுபு வென்று பாய்ந்தது. சிறிது நேரத்தில் சிறு துளை பெரிதாகி ஓடியது. அந்த வெள்ளப் பெருக்கில் ஊரி லிருந்த பல குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. 

முனியன் பயந்து ஊருக்குள் திரும்பினான். அவன் தாய் தந்தையரும், அவர்கள் வீடும் ஆடும் மாடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. தன்னால் வந்த வினையைக் கண்டு முனியன் பொங்கிப் பொங்கி அழுதான் அழுதால் போனதெல்லாம் திரும்பியா வந்துவிடும்? அதன்பின் அவன் பல துன்பங்களை அனுபவித்துத் திருந்தினான். 

கருத்துரை:- அணை கட்டுவது அரிய செயல் உடைப்பது எளிது. நற்செயல்கள் செய்தல் அரிது ; தீது. செய்தல் எளிது. அரிய செயல் செய்தலே சிறப்பு. 

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *