ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்

 

(1973ல் வெளியான கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் சிறுகதை : ஒரு வாயில்

சிறுகதை ஒரு நவீன கலை வடிவம்: தமிழிற்கோ மிக மிக நவமான கலை வடிவம்

மேனாட்டவரின் ஏகாதிபத்தியப் படை எடுப்பாலும், காலனி ஆதிக்கத்தாலும் – கீழைத் தேசங்களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களினாலும், ஆங்கிலக் கல்வியி; விருத்தியினாலும் – கீழைத்தேய இலக்கிய வடிவங்களிலும், தன்மைகளிலும் அவற்றின் போக்குகளிலும் பலத்த புத்திருப்ப மாற்றங்கள் ஏற்பட்டதுடன், புதிய புதிய இலக்கிய வகைகளும் அறிமுகமாயின.

மேனாட்டவரின் வருகையும், மதம் பரப்பும் அவாவும் இங்கு அச்சு யந்திரங்களையும், செய்தித்தாள்களையும் மக்களிடையே துரிதகதியில் பரப்பி, மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியப் பொருட்களாக மாற்றி விட்டன. இவற்றால், கவிதையின், செய்யுட்களின் முக்கியத்துவம் குறைந்து, உரைநடையின் செல்வாக்கு மிக மிக வளரலாயிற்று.

வாய்மொழியாகவும், ஏடம் எழுத்தாணியுமாக இருந்துவந்த தமிழிலக்கியம் – அச்சின் வருகையினால் புதிய உரு; புதிய கலை; புதிய நடை என மாறத் தொடங்கியது. இத்தகைய மாற்றங்களுக்கு ஆட்சியிலிருந்த அன்னியரின் அரவணைப்பும் உறுதுணையாயிற்று.

கதை எனும் கலை
மனித குலம், உலகின் எந்த ஒரு மூலையில், எப்போ அரும்பத் தொடங்கியதோ, – மக்கள் கூட்டம் கூட்டமாக என்று வாழத் தொடங்கினரோ அன்றே கதை சொல்லும், கதை கேட்கும் பழக்கங்களும் ஆரம்பமாகிவிட்டன எனலாம்.

இப்பழக்கமே நாளடைவில் கதைகளை- பெருங்கதை, நாவல் சிறுகதை என்று தோற்றுவித்தமைக்கு முயற்சிகளாகப் பரிணமித்தன எனவும் கருதலாம். இதற்குதவியாகப் பிரித்தானியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, – அச்சு யந்திர சாதனங்களை வளர்த்து மக்களிடையே கதை கேட்கும் பழக்கத்தை கதை படிக்கும் வடிக்கமாக மாற்றியமைத்தது. இதனால் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வரலாயிற்று.

புதுக்கலையா? மரபுக்கலையா?

ஆயினும், இங்கு கதை என்பது – உருவம், உள்ளடக்கம் என்பனபற்றியவரைவிலக்கணங்கட்கு அப்பாற்பட்ட கதை அளத்தலையே குறிக்கும். எம்மொழியிலாயினும் புதிதாகத் தோன்றுகின்ற எந்தக் கலை வடிவமும் பழைய மரபை ஒட்டியோ, தழுவியோ ஏற்படுவது வழக்கம். இதனாற்றான் உண்மை புரியாத பலரும் –

‘சிறுகதை தமிழிற்குப் புதியதல்ல’ என வாதிடுகின்றனர். இதற்குச் சான்றாகச் சங்கப் பாடற் காட்சிகளையும், தொல்காப்பியச் சூத்திரத்தையும் (தொல் : பொருள் : செய்யுளியல்-17) விக்கிரமாதித்தன் கதை, மதனகாமராஜன் கதை, மகாபாரதக்கதை, பாகவதக்கதை, பஞ்சதந்திரக் கதை, இதோபதேசம், வேத உபநிடதக் கதைகள், கதாசாசுரம் புத்த ஜாதகக்கதைகள், இக்குணிக் கதைகள், தென்னாலிராமன் கதைகள் என்பவற்றைச் சுட்டுவர். இவ்வாறு கூறுவதானால் –

மேனாடுகளில் கூட சிறுகதையின் காலம் பின்தள்ளிப் போடப்பட்டுவிடும். அங்கும் ‘விவிலிய நூற்கதைகள், நாட்டுப்புலவர் பாடிய நாடோடிக் கதைகள், ஹோமர் இதிகாசக்கதைகள், ஈசாப் கட்டுக் கதைகள், கவி சாசர் எழுதிய கந்தர்பரிக்கதைகள், மத்திய பிரெஞ்சுக் கதைகள், லாபோர்த்தேர்ண் கதைகள் போன்ற எத்தனையோ காண்கின்றன.’

சிறுகதை வித்து

ஆனால், நாம் இன்றிறயும்படியான கலையுருவம் படைத்த சிறுகதை பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆரம்பமானது. தற்காலத்தில் வழக்கிலிருக்கும், சிறுகதைப் பண்புகளையும் அவற்றின் போக்கினையும் அவதானிக்கும்போது – சிறுகதை ஒரு கலைவடிவமாயினும், அது விஞ்ஞான பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நவீனகலை என்பதும், அது தமிழிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அறிமுகமானதென்பதும் புலனாகின்றது.

இன்றைய சிறுகதையின் தோற்றம் கொகோல் (1809-1852) என்ற ரூஷிய எழுத்தாளர் உக்ரேனியரின் வாழ்க்கையைப் பரிகசித்து யதார்த்தவாதமாக எழுதிய சிறுகதைகளுடன் ஆரம்பமாவதாக இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர். இவரைத் தொடர்ந்து லியோ டால்ஸ்டாய், ஐவன்துர்க்கனேவ், அன்ரன் செகோவ், மாக்ஸிம் கோர்க்கிய் போன்றவர்கள் எழுதி வந்தனர். இச்சிறுகதை இலக்கியம் ரூ~pய நாட்டில் தோன்றியதாயினும்.

இதனை நவீனப்படுத்தி, சிறுகதைக்கலை உருவம் பெறுவதற்குரிய சாத்தியக் கூறுகளையுணர்ந்து, அதற்கு விதிகளமைத்து வளம் படுத்தும் முயற்சியிலீடுபட்டு உழைத்தவர்கள் அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர்களே.

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர்களில் முதன்மையானவர்களாக வா~pங்டன் இர்விங் (1783-1859). நதானியலட ஹோர் தோர்ண் (1804-1864), எட்கார் அலன்போ (1809-1849) ஆகிய மூவரைக் குறிப்பிடுவர். சிறுகதையானர் இலக்கியத்தில் நிலையான இடம் பெற்றது. இவர்களினால் என்பர். இவர்கள் எழுதியது புதுரகக் கதைகளாகும். சிறப்பாக 1820ல் வா~pங்டன் இர்விங் தான் வெளியிட்ட ஷஸ்கெச் புக்| என்ற நூலில் கலையம்சம் படைத்த சிறுகதைகளை எழுதியிருந்தார். 1837ல் நதானியல் ஹோர்தோர்ணும், 1830ல் எட்கார் அலன்போவும் தத்தம் தொகுப்புகளை வெளியிட்டனர்.

அமெரிக்காவில் இங்ஙனம் உற்பத்தியான சிறுகதை உலகெங்கும் பரந்தது. இங்கிலாந்தில் ஸ்டீவன்சன், கிப்ளிங், காதரைன் மான் ஸ்பீல்ட், கோப்பார்ட், பேட்ஸ் என்போரும், பிரான்சில் எமிலி ஜோலா, மாப்பசான், அனத்Nதூல் பிரான்ஸ் ஆகியோரும் இக்கலையை மேன்மேலும் ஆழமும், இலக்கியத்தரமும் மிக்கதாக வளர்த்தனர்.

சிறுகதைப் பண்பு
சிறுகதைத் தொகுப்புகளும், சிறுகதை வரலாறுபற்றி எழுந்த நூல்களும் இன்று இலட்சக்கணக்கில் வெளிவந்துள்ளன. வந்து கொண்டுமிருக்கின்றன. ஆயினும்,

சிறுகதை என்றால் என்ன? அதன் பண்பு என்ன? அதன் வரை விலக்கணங்கள் யாவை? உருவம் என்ன? – என்பது பற்றி முடிந்த முடியாத எந்தவித கருத்துக்களும் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன், சரியாக வரையறுத்துக் கூறமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுகதையின் மூலபிதா என்று கருதப்படும் எட்கார் அலன்போ கூட, ‘அரைமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் உள்ள காலம்வரையில் படித்து முடித்து மகிழக் கூடியதாகச் சிறுகதை இருக்கவேண்டும்’ – என்று கூறி வாசகனின் வாசிப்பு ஆற்றல், மனநிலைக் காலம், இன்பநுகர்ச்சி என்பனவற்றினடியாக விளக்குகிறாறேயன்றி, சிறுகதைப் பண்பினடியாக விளக்க – முடிய – முயலவில்லை எனலாம்.

‘வாழ்க்கையின் சாளரம் சிறுகதை’ – என்ற புதமைப்பித்தனும் – சிறுகதையின் உருவ, உள்ளடக்கப்பண்பின் ஒரு உருகப்பாணியில் கூறமுடிந்தாலும், இவ்விளக்கம் அவரவர் மனோபாவ, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பொருள் கொள்ள வாய்;ப்பளிக்கிறதேயன்றி, முடிவாகவோ, தெளிவாகவோ விளக்கத் தவறிவிட்டது என்பது தெளிவு.

பேராசிரியர் வெல்ஸ் – ‘பத்தாயிரம் சொற்களுக்கு மேற்போகாமல் சற்றேறக்குறைய அரைமணி நேரத்தில் வாசித்து முடிக்கக் கூடிய தொன்றாக இருக்கவேண்டும்’ – என்பது சிறுகதை வாசிப்பின் காலஅளவையும், எழுத்தாளனின் சொல்லாற்றலையும் கொண்ட கருத்தாகும்.

வாசகனின் கவனத்தை ஒரேயொரு சம்பவத்தில் ஒரு முனைப்படுத்தவேண்டும். அதன் மூலம் பாத்திரங்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்தவேண்டும்… … ஒரேயொரு ராகத்தை எவ்வளவு விஸ்தாரமாக ஆலாபனம் செய்தாலும், அது ஒரே ராகமாகத்தானிருக்கும் – என்று தி.ஜ.ரங்கநாதன் கூறுவது உள்ளடக்கம் பற்றி விளக்கினாலும், சிறுகதையினளவு, உருவம் பற்றிய நிலையில் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்று கூறலாம்.

ஆகவே, ‘சிறந்த சிறுகதையின் அமைப்பே சிறுகதையின் இலக்கணம் எனலாம்’

தமிழில் சிறுகதை
மேனா:களில் சிறுகதையின் தோற்றம் பற்றி ஆராய்ந்த ஒரு சில அறிஞர்கள் – சமூக அமைப்பின் மகத்தான மாறுதல்களே சிறுகதைக் கலைக்கு வித்திட்டன் எனக்கூறுவர். தொழிற்புரட்சியின் யந்திரமயமான வேகமான இயக்க வாழ்வினாரும், அதனாலேற்பட்ட நிலமானிய அமைப்பின் சிதைவினால் உருவான புதிய வாழ்க்கை முறையினாலும், தனிமனித முக்கியத்துவம் அதிகரித்து இதற்கு முன்பமைந்த குடும்பக் கூட்டு வாழ்க்கை சிதைந்ததினால், தனிமனிதனின் ஒவ்வொரு அம்சங்களும், உணர்ச்சி பேதங்களும் .இலக்கியத்தின் முக்கியத்துவமடைந்தன. இதே போன்ற நிலையே ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டதனால், சிறுகதை தோன்றியது என்பர்.

இன்னும் சிலர், தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட பரபரப்பான வாழ்க்கை முறையில் – முன்பு போல் நீண்ட கதைகளைக் கேட்கவோ, படிக்கவோ ஏற்ற மன நிலையில் மக்களில்லாததால், சுருங்கிய நேரத்தில் சுவைப்பதற்கேற்ற கதைகளையே மக்கள் விரும்பியதால் தான் சிறுகதை உற்பவித்தது எனவும் கூறுவர்.

எவ்வாறு இருந்தபோதிலும், சிறுகதைக்கலை 19ஆம் நூற்றாண்டின் சமூக அமைப்பில் எழுந்த தவிர்க்கமுடியாததொன்று என்பதனையும் எவரும் மறுத்திலர்.

முதல் மூவர்
தமிழ் நாட்டில், ஆங்கிலேயரின் ஆட்சியின் பயனாக ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி மக்களின் மனோபாவங்களையும், இலக்கியத் தாகங்களையும் வேறுதிசையில் திருப்பின.

சமுதாயத்தின் மேல்தளத்தில் இருந்தோரே இம் மாற்றங்களினால் பாதிக்கப்பட்டனர். வாழ்க்கை நிலையிலும், கடல் கடந்த படிப்பாலும் இததன்மைமிக்கவராக விளங்கியவர் தான் – தமிழின் சிறுகதையின் தந்தை எனப் புகழப்படும்-

வரசுநேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்

இவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, இலத்தீன், கிரேக்கம், செருமானியம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளை நன்கு சுற்றிருந்ததனால், அம்மொழிகளிலெழுந்த இலக்கியங்களின் பண்புகளையும், அவற்றின் போக்குகளையும், அலை சமூகத்தில் கொண்டிருந்த தொடர்பு, செல்வாக்கு, பாதிப்புக்களை நன்கு யம் திரிபற உணர்ந்திருந்தார்.

ஆயினும், ‘இவர் சிறுகதை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியது எதிபாராததொன்று ஏனெனில் ஐயருக்குத் தமிழிலக்கியத்திற்குத் தொண்டாற்றும் எண்ணத்தைவிட தேபத்தியை, விடுதலையுணர்ச்சியை வளர்ப்பதே மேலோங்கி நின்றது. இதனாற்றான் இவர் பெரும்பாலும் இத்தகைய உணர்ச்சிகளை வளர்க்கும் வரலாற்றுச் சம்பவங்களையும், புராணக்கதைகளையும் தமது சிறுகதைகளின் கருப்பொருளாகக் கொண்டார். அத்துடன் மட்டுமல்லாது ஐயரவர்களுக்குத் தாம் படைப்பது சிறுகதையாக இருந்தாலும்சரி, நீண்ட கதைகளாக இருந்தாலும்சரி தன் எண்ணத்திற்கு ஏற்றதாகக் கருப்பொருள் இருக்கவேண்டும் என்பதே முக்கய நோக்கமாக இருந்தது. என்பதனை, அவரே தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘……. தமிழ் நாட்டுச் சரித்திரமனைத்தும் கற்பனைக் கதைகளாகச் செய்ய வேண்டு மென்றிருக்கின்றேன்…..

……..தீரயுகம் இங்கு பிறக்க, வழிகாட்டியாக நாம் அமைந்து விடுவோம. இந்த நோக்கத்துடனேயே ‘மங்கையர்க்கரசியின் காதல்| முதலிய கதைகளை வெளிப்படுத்தியதோடு லைலி மஜ்னூன், அனார்கலி முதலிய கதைகளும் எழுதிவருகிறேன். நாளாவட்டத்தில் பெரிய சரித்திரத்தை எழுதும் நிலைமைக்கு வரும் என நினைத்தே சிறுகதைகளை எழுதிவருகிறேன்.

இவர் திட்டமிட்டுத் தமிழில் சிறுகதையைக் கலையாக வளர்க்கமுற்படாவிட்டாலும் கூட, இவர்பெற்ற பிறமொழி இலக்கியப் பயிற்சிகளினால், இவரின் சிறுகதைகள் உயர்தரத்தினதாக, சிறந்த கலையுணர்வை எழுப்பியமையாற்றான் புதமைப்பித்தனும், ஷஐயரவர்களின் சிறுகதைகள் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவைகள். அவர் தமது சிரு~;டிகளில் மனிதனின் மேதையை, தெய்வீகத்துயரை, வீரத்தைக் காண்pப்பதில் களித்தார். அவரின் மனம் இலட்சியத்தைச் சிரு~;டிப்பதில் இலயித்தது என்றார்.

இவரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில் உள்ள கதைகளுக்கு இவர் எழுதியுள்ள சூசிகை சிறுகதைமரபை மீறியதொன்றாகும். எவ்வாறு இருப்பினும் இவரின்கதைகளே தமிழில் தோன்றிய சிறுகதையின் ஆரம்பமாக இருப்பதாலும், இவரின் உரைநடையிலே வடமொழியின் காவியத்தின் காம்பீரியம் மேலெழுந்து நின்று கலையழகைக் கொடுப்பதாலும், சிறுகதையின் தந்தை இவர் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை என்றே படுகிறது. இதனாற்றான்.

‘இக்கதைகளுக்கு முன்பே தமிழில் கதைகள் இல்லாமலில்லை. பரமார்த்தகுரு கதை என்றநூலிலும், வீராசாமிச் செட்டியாரின் விநோதரசமஞ்சரியிலும் சுவையற்ற பலகதைகளுண்டு. சுதாசிந்தாமணி எழுதிய ஈழத்துச் சந்திரவர்ணம்பிள்ளை. அபிநவக்கதைகள் எழுதிய செல்வக்கேசவராயமுதலியார் போன்ற அறிஞர்களும் இத்துறையில் முயன்றதுண்டு. எனினும் சிறுகதை என்னும் புதிய இலக்கிய வகைக்கான உத்திகளின் ஓர்மையுடன் தமிழில் முதன் முதல் எழுந்தவை வ.வே.சு. ஐவரின் கதைகளே7 என்பர்.

இவரைத் தொடர்ந்து அ. மாதவையா, சி. சுப்பிரமணிய பாரதியார், ஸ்ரீராமாநுஜலுநாயுடு போன்றோர் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டனர். அ. மாதவையா 1924-25-ம் ஆண்டுகளில் தாம் பதிப்பித்த ஷபஞ்சாம்ருதம்| பத்திரிகையில் பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டுள்யளார். ஷஎன்னைமன்னித்து, மறந்துவிடு ஏட்டுச் சுரைக்காய், முரகன், நிலவரி ஓலம், ஆரூடம் முதலிய கதைகள் குறிப்பிடத்தக்கவைகளே. இக் கதைகள் ஷகுசிகர் குட்டிக்கதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவரின் கதைகளில் சமூகச் சீர்கேடுகள் உணர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், சிறுகதை உருவமும் நன்கு அமைந்துள்ளது. இதனாற்றான் புதமைப்பித்தனும், ஷதமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவர் கதைகளுக்கு முக்கிய இடமுண்டு எனக் கூறியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரான்சியமொழி இலக்கியங்களைத் திறம்படக்கற்றிருந்த சுப்பிரமணிய பாரதியார், கவிதையில் சிறந்ததுபோல், சிறுகதையில் சிறக்க முடியவில்லையாயினும், 1900-1920-ம் ஆண்டுகளின் சிறுகதை முக்கியத்துவரின் இவரும் ஒருவரே பாரதியார் கதைகள் (இருபாகங்கள்), பாரதியார் மொழிபெர்த்த தாகூரின் சிறுகதைகள் என்பனவே இவரின் சிறுகதைப்பணிகளாகும். தாகூரின் சிறுகதை மொழிபெயர்ப்புகள் அக்கால மக்களின் சிறு கதைப்பயிற்சிக்கும், ஈடுபாட்டிற்கும் பெருந்துணையாயின. உரை நடையில் புதியசோபையையும், கவர்ச்சியையும் கொண்டு, பாரதியார் சிறுகதைகளைச் சமூகக் கண்ணோட்டத்தில் சொந்தமாகப் படைத்தபோதிலும், சிறுகதை உருவ அமைதி சீர்குலைந்தே காணப்படுகின்றது. இதற்கு பாரதியார் இவற்றைக் கதைகளாகக் கருதினதேயன்றி – சந்திரிகையின் கதை – நவீனகலையான சிறுகதைகளாகக் கருதாமையே காரணம் என்றுபடுகிறது.

காந்தீயக் கதைகள்
|1920-ம் ஆண்டுகளில் இந்தியக்காங்கிரசின் இயக்க சக்தியாக காந்திமாறியதும். உப்புச்சத்தியாக்கிரகம் (1930) சட்டமறுப்பு இயக்கம் (1932), ஒத்துழையாமை இயக்கம் – போன்ற அரசியலியக்க உணர்ச்சித்தாக்கங்கள் மக்கள் மனதைப்பெரிதும் பாதித்தன. எனவே, நாட்டுமக்களைப் பல நிலைகளிலும் ஒற்றுமையாக்க இந்திய ஒற்றுமை, தொழிற்சங்க ஒற்றுமை, சாதிஒழிப்பு என்பன முன்னணிக்கு வரவே, எழுத்தாளர்களின் கவனமும் இவற்றின் பால் திரும்பின8| ராஜாஜி, தி.ஜ. ரங்கநாதன், ந. பிச்சமூர்த்தி, கல்கி போன்றோர் இவற்றை அடிப்படையாகக்கொண்டு சிறுகதைகள் எழுதலாயினர். 1935-ல் ராஜாஜி நடாத்திய ஷவிமோசனம் பத்திரிகையில் ராஜாஜியும் கல்கியும் இத்தகைய கதைகளையே நிறைய எழுதினர். ஷராஜாஜி கதைகள் தொகுப்பிலிடம் பெற்றுள்ளகதைகள் ஷவிமோசனத்தில்| வெளிவற்தவையே. இவர்கள் பிற்காலத்தில் சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர்- (தி.ஜ.ர-வின் சந்தனக்காவடி, நொண்டிக்கிளி- தொகுப்புகள், ந. பிச்சமூர்த்தியின் மோகினி, பதினெட்டாம் பெருக்கு, முள்ளும் ரோஜாவும், காவல், கல்கியின் கேதாரியின் தாயார், ராஜாஜியின் தேவானை – சிறந்த சிறுகதைகளே) ராஜாஜி நீதிக்கதைகளையும், போதனைவிளக்கச்சிறுகதைகளையும் எழுதித் தம்மை சிறு கதைத்துறையினின்றும் மாற்றிக்கொண்டது போலவே, கல்கியும் நீண்டகதைகளை எழுதி, தம்மை ஒரு நாவலாசிரியராகப் பரிணமித்துக் கொண்டார். எவ்வாறாயினும், தமிழ்மக்களை தமிழ்க் கதைகள் படிக்க வைத்த மாபெரும் தொண்டைச் செய்தவர் கல்கி எனில் மிகையாகாது. இதனாற்றான், ‘சிறுகதையின் அகலவளர்ச்சிக்குக் காரணமானவர் கல்வி: ஆழவளர்ச்சிக்குக் காரணமானவர்கள் மணிக்கொடிக்குழுவினர் என்கின்றனர்.

‘சிறுகதை – மணிக் கொடி
1933-ம் ஆண்டுப் பிற்பகுதியில், கே. சீனிவாசனும், வ. ராமசாமி ஐயங்காரும் தோற்றுவித்த ஷமணிக்கொடிப் பத்திரிகை காலத்திற்குக் காலம் மறைந்தும், புத்துருக்காட்டியும், புதிய புதிய ஆசிரியர்களைக் கொண்டும் வெளிவந்து, இந்தியத் தமிழிலக்கிய வரலாற்றில் தனக்கொரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டது. 1994-ல் டி.எஸ்.சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்ட காந்தி என்ற பத்திரிகையையும், தன்னுடன் இணைத்து மணிக்கொடி வெளிவரலாயிற்று. பின்னர் இந்த மணிக்கொடியும் 1936-ல் மறைந்து 937-ல் பி.எஸ். ராமையாவையும் வ ராவையும் ஆசிரியராகக் கொண்டு சிறுகதை மணிக்கொடியாக 1939வரை வெளிவந்தது.

மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று இன்று சில எழுத்தாளர்களைக் குறிப்பிடுவது வழக்கம். இதனால் இவர்கள் தங்கள் சிறந்த படைப்புக்களை முதன் முதலாக மணிக்கொடியில்தான் வெளியிட்டார்கள். என்றோ, அதிற்றான் எழுத ஆரம்பித்தார்கள் என்றே பொருளில்லை. இவர்களில் பலர் மணிக்கொடி வரமுன்னரே, காந்தி, கலை மகள், ஊழியன் சுதந்திரச்சங்கு, ஆனந்தவிகடன் பத்திரிகைகளில் எழுதித் தமக்கொரு இடத்தை சிறுகதை இலக்கியத்தில் பிடித்துக் கொண்டவர்கள். இவர்களின் தனித்துவம் சுடர்விட்டுப் பிரகாசிக்கவும் இலக்கிய-உரு, உள்ளடக்கப் பரிசீலனை செய்யவும், மணிக்கொடி பெரிதும் பயன்பட்டதாலும். இவ் எழுத்தாளர்கள் ஒன்று கூடித்தமக்குள்ளே விவாதித்தும், குழு முறையில் செயல்பட்டும் வந்தமையினால், பிற்காலத்தில் இவர்களை மணிக்கொடி எழுத்தாளர் என வழங்கினர்.

நவீன இலக்கியச் சிறுகதையின் பரிசோதனைக்களமாக மணிக்கொடி விளங்கியது. புமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜ கோபாலன், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), பி.எஸ். ராமையப, மௌனி (எஸ். மணி). கி.ரா.ந. சிதம்பர சுப்பிரமணியம், ஆர். ~ண்முக சுந்தரம், எம்.வி.வெங்கட்ராம், சி.அ. செல்லப்பா,பி.எம். கணணன், லா.ச. ராமாமிர்தம், க.நா. சுப்பிரமணியம் என்போரை மணிக்கொடி எழுத்தாளர் எனலாம்.

இவர் எல்லாரும் ஒரே காலத்திலோ, ஒரே தரத்திலோ, ஒரே எண்ணத்திலோ எழுதியவர்களல்லர். ஒவ்வொருவரும் தத்தம் வழியே இலக்கியத்திற்கென பார்வையையும், தனித்துவத்தையும் கொண்டவர்கள். தனித்துவம் மிக்கவர்களின் சேர்க்கையாக மணிக்கொடி பத்திரிகை விளங்கியது. இவர்கள் எல்லாரும் சிறுகதைத்துறையி; ஆழ்ந்து ஈடுபட ஷஅப்போதைய பத்திரிகைகளில் பொறுப்பு ஏற்றிருந்தவர்கள் பத்திரிகைக்கு வேண்டிய அம்சங்களில் ஒன்றாக சிறுகதையைக் கருத முன்வந்ததும். மேனாடுகளில் சுமார் முக்கால் நூற்றாண்டு காலமாக வளம்பெற்றுவந்திருந்த சிறுகதை இலக்கியத்துடன் இவர்களுக்கு இருந்த பரிச்சயமும் இதற்குக் காரணம். இதோடு நம் நாட்டில் தாகூர், பிரேம் சந்த், சிறுகதைகள் தமிழுக்கு அறிமுகம் ஆனதும் சேரும். இவையோடு ஐயரின் சிறுகதை முயற்சிகள்தந்த உந்துதலும் காரணம்.

தமிழ்ச் சிறுகதைத்துறையில் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் பலவிதமான சோதனைகளை இவ் எழுத்தாளர்கள் நடாத்தி வந்தனர். இவர்களில் சமூகப் பார்வையில் புதமைப்பித்தனும் பால் உணர்ச்சி அடிப்படையில் கு.ப. ராஜகோபாலனும், மனக்குகை ஓவிய வார்ப்பில் மௌனியும் குறிப்பிடத்தக்கவர்கள்.

‘பாரதி வனத்தின் மூத்த பிள்ளையான புதமைப்பித்தன் வலுவும் வேகமும் கொண்ட, இழுத்து மடக்கும் நடையில், புதப் புதச் சொல்லாட்சிகளைக் கொண்டு சமுதாயத்தின் பச்சை உண்மைகளை, ஆழமும், பரப்பும் கொண்ட சிறுகதைகளைப் படைத்தார்.

தமிழ்ச் சிறுகதைத்துறைகளில் அதிகம் வெற்றியீட்டினவரெனக் கருதப்படும் கு.ப.ரா. மென்மையான, நளினமா உத்திகள் மூலம் ஆண், பெண் இருபாலருடைய பருவ மன அதிர்வுகளை சிறுகதைகள் மூலம் வெளியிட்டார்.

‘சிறுகதையின் திருமூலர் – என புதமைப் பித்தனாலேயே பாராட்டப்பட்ட மௌனி ‘கனமான விடயங்களை ஏற்க மறுக்கின்றன மெலிந்த சொற்களில் ‘மனப்போக்குகளின் நடப்பியல்புகளை பரிபூரணமாக சித்தரித்துள்ளார். நிகழ்ச்சிகளைச் சிக்களப் படுத்தி மனித நிலைமைகளை சிக்கனச் சொற்களிலே அகண்டாரமாகக் காட்டிவிடும் ஆற்றல் மிக்கவர். தமிழில் ஆழமான கதையம்சத்தின் துணையின்றி சாதாரண கதைகளில் ஒரு காவிய உணர்வைத்தருகிறார். சொற்களுக்கு முக்கியம் கொடுப்பவர். இவர் இவரின் கதைகளைத் தமிழிலேயே படித்து, ஆங்கிலத்தி;ல் இவரின் அத்துவானவெளி என்ற கதையை பிரதக்~pணம்ஷ என்ற தலைப்பில் மொழிபெயர்ந்து வெளியிட்ட அமெரிக்க அறிஞர் அல்பர்ட் பி. பிராங்கிளின் ‘மௌனிஒரு மேதை’ என நிர்ணயிக்கிறார். அத்துடன் கேரளப் பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கலாநிதிப் பட்டத்திற்காக, மே. காந்தி என்ற மாணவர் மௌனிகதைகளை (மௌனி மொத்தம் இன்றுவரை இருபத்தி நான்கு கதைகளே எழுதியுள்ளார்) ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதும் மௌனியின் சிறப்பைப் புலப்படுத்தும்.

ந. பிச்சமூர்த்தி ஆழ்ந்த அனுபவங்களை, தரிசனம் நிறைந்த தத்துவச் சரடுகளில், உவகை மிகுந்த சொற்றொடர்கள் நிறைந்த நடைகளில் சிறுகதைகளை வெளியிட்டார்.

பி.எஸ். ராமையா காந்திய அடிப்படையில், சமுதாயச் சீர்கேடுகளைச் சித்தரிக்கும் கதைகளையே பெரும்பாரும் இக்காலத்தில், எழுதினார். இவர்களுடன் ஈழத்தில் சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரும் எழுதிவந்தனர். கலைமகள், ஈழக்கேசரி என்பன இவர்களுக்கு உதவின.

இவர்களுக்கும். இவர்களைச் சார்ந்த மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் தாகூர், பிரேம் சந்த், அன்ரன் செகாவ், டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜொய்ஸ், எமிலிஜோலா, மாப்பசான், டி.ஹெச்.லோறன்ஸ், எட்கார் அலன்போ, ஏர்னஸ்ட் ஹெமிங்வே, நட்காம்சன், செல்மா லாகர்லா – போன்ற மேனாட்டு இலக்கியவாணர்கள் முன்மாதிரியக விளங்கினராகத் தெரிகிறது.

எவ்வாறு இருந்தபோதிலும், மணிக்கொடி கால எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் தனித்துவத்தையும், பூரணத்துவத்தையும் தாபிக்கமுயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர் – எனலாம்.

பல்முனைத் தாக்கங்கள்
இதே வேளைகளில், இத்தமிழ் எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாக பாரதத்தின் பல பாகங்களிலும், பல்லேறு மொழிகளிலும் ஏற்பட்ட இலக்கிய மாற்றங்கள், எழுச்சிகள், மறுமலர்ச்சிகள், புத்வேகம் என்பன பெருந்துணையாக நின்றன.

1936-ம் ஆண்டளவில் பிரேம்சந்த் தலைமையில் ஷஅகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்| தோன்றியது. இச்சங்கத்தின் முல்க்ராஜ் ஆனந்த, லிஜ்ஜத்ஸாஹீர், ய~;பால், கே.ஏ. அப்பாஸ் ஆகிய எழுத்தாளர்களின் புதமை இலக்கியங்கள் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியலடிப்படையில் எழுந்து தமிழ் எழுத்தாளர்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியையும், துடிப்பையும் எழுப்பின.

இக்கால கட்டத் தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர். கல்லூரிகளில் படித்தவர்கள்; தேசிய உணர்ச்சி மிஞ்சியவர்கள்; பழமையின் எதிரிகள்; வாழ்வின் உண்மைகளை நேருக்கு நேர் நின்று தரிசித்து, அவற்றை விமர்சன அடி;படையில் சர்வதெச இலக்கியத்தின் தரத்திற்குக் கலையழகுடன் தமிழில் சிறுகதை எழுதவேண்டுமெனத் துடித்தவர்கள் என்பதனை அவர்களின் படைப்புக்கள் இன்றும் எடுத்துக்காட்டுகின்றன.

1934-35-ல் மஞ்சேரி ஈசுவரன் ளுர்ழுசுவு ளுவுழுசுலு என்ற மாத சஞ்சினையை நடாத்தினார். இதில் லா.ச.ரா. போனறோர் ஈசுவரனுடன் சேர்ந்து எழுதிவந்தனர். சிறுகதை வரலாற்றில் இதற்குத் தனியிடமுண்டு.

மணிக்கொடி மறைவில்
மணிக்கொடி மறைவின்பின் தோன்றிய கிராம ஊழியன், கலாமோகினி, பாரத்தேவி, சூறாவளி போன்ற பத்திரிகைகள், மணிக்கொடிப் பாதையில் முன்னேறின. இப்பத்திரிகைகளில் மணிக்கொடி எழுத்தாளர் பலரும், வல்லிக் கண்ணன், தி, ஜானகிராமன் போன்றாரும் எழுதிவந்தனர். இவர்களுடன் ஈழத்து எழுத்தாள முதல்வர்களும் எழுதிவந்தனர். இக்காலத்திற்கு முன்னரே தோன்றி இயங்கிவந்த ஈழகேசரியை விட, மறுமலர்ச்சி என்ற பத்திரிகை 1945-ல் தோன்றி ஈழத்து எழுத்தாளர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்து வந்தது. இவ்வேட்டினால் வரதர், அ.செ. முரகானந்தம், அ. ந. கந்தசாமி, சு. இராஜநாயகன், சொக்கன், வ.அ.இராசரத்தினம், சு.வே.கனக, செந்திநாதன் போன்றோர் முன்னணிக்கு வந்தனர்.

சுதந்திர இலக்கியங்கள்
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பாரத நாடு சுதந்திரம் பெற்றபின், இலக்கியப் போக்குக்கள் மாற்றமடையத் தொடங்கின. ஆட்சிப் பொறுப்பு அன்னியரின் கையிலிருந்து, சுதெசிகளின் கையில்வந்ததும், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக உணர்வுகள் மாற்றம் பெறலாயின. ஒற்றுமையுணர்ச்சி கன்றி, பிரதேச உணர்ச்சி வலுவடையவே, தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சி ஓங்கி தனித்தமிழ் இயக்கம், திராவிட நாடுதோரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன தோன்றி – சிறுகதைபிரச்சார இலக்கியமாகியது.

இத்தகைய கதைகளை தி.மு. கழகத்தினரே எழுதினர். பெரும் போராட்டத்தின்பின், மக்களிடையே ஏற்பட்ட ஓய்வுக்குகந்த கதைகளை ஆனந்தவிகடன், கல்கி போனற பத்திரிகைகள் வெளியிடலாயின. இதேவேளையில் சமூகச்சீர்திருத்த எண்ணங்கொண்ட பொதுவுடமைக்கட்சியிலிருந்த பழைய எழுத்தாளர்களும், இவ்வணியில் புதிதாகச் சேர்ந்து கொண்ட எழுத்தாளர்களும் முற்போக்குக் கதைகளை எழுதலாயினர். 1948-ல் எம்.வி. வெங்கட் ராமனை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த ஷதேன்| தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகியோரைச் சிறப்பாக அறிமுகம் செய்தது.

1950-ன் பின் ஏற்பட்ட, மனிதன், சாந்தி, சரஸ்வதி, தாமரை போன்ற பொதுவுடமைச் சார்புள்ள பத்திரிகை மூலம், – விந்தன், கு. அழசிரிசாமி, சுந்தர. ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற நல்ல பல சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றினர். இதே போன்றே இலங்கையிலும், முற்போக்கு எண்ணம் கொண்ட பாட்டாளி, பாரதி முதலிய தீவிர ஏடுகள் தோன்றி கே. ராமநாதன், கே. கணே~;, எம்.பி. பாரதி போன்ற எழுத்தாளர்களை நல்கின.

1948 – 2 – 4ல் இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட இலவசக் கல்வித்திட்டத்தினாலும், 1956-ல் ஏற்பட்ட சமூகப் புரட்சியினாலும், இலங்கைத் தமிழரிடையே தேசிய உணர்ச்சி பிறந்ததுடன், வர்க்க உணர்வுகள் தீர்க்கமடைந்தன. தேசிய விழிப்பும், வர்க்கப் போராட்டங்களும் சுதந்திரத்தின் பின் மக்களிடையே பெரியதொரு சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே, இலக்கியமும் அவ்வழியே திசைதிரும்பிற்று. நாட்டின் பிரச்சினைகளை இலக்கியங்கள் முன்னிறுத்த வேண்டும் என்ற துடிப்பில் தேசிய இலக்கியக் கொள்கை தீவிரமடைந்தது. இப்பின்னணியை நன்குணர்ந்தவரான, க. கைலாசபதி 1957-ல் தினகரன் ஆசிரியராக விளங்கியபோது இவ் எழுச்சியைத் தூண்டிவளர்த்தார். புதியதொரு எழுத்தாளபரம்பரையையும் தோற்றுவித்தார். இக்காலகட்டத்தில் எஸ். பொன்னுத்துரை, கே. டானியல், செ. கணேசலிங்கன், என்,கே. ரகுநாதன், காவலூர் ராசதுரை, டொமினிக் ஜீவா போன்றவர்கள் தரமான சிறுகதைகளைப் படைத்தனர். இதே போன்று, இக்காலகட்டத்தில் தென்னி;ந்தியாவில் எழுதத் தொடங்கிய ஆர். சூடாமணி கி. ராஜநாராயணன், கிரு~;ணன் நம்பி போன்றோரும் தரமான சிறுகதைகளைப் படைக்கத் தொடங்கி, இன்றும் நல்ல சிறுகதைகளை எழுதி வருகின்றனர்.

பல்கலைக் கழக எழுத்தாளர்
ஷ190 தொடக்கம் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி தாய் மொழிமூலம் போதிக்கப்படலாயிற்று. சிறப்பாகக்கலைத்துறைப் பாடங்கள் தமிழிலும், சிங்களத்திலும் கற்பிக்கப்படவே, பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பிறமொழிச் சிறுகதைகளையும், அவற்றின் ஆய்வுகளையும் படித்ததோடமையாது தாமும் எழுத ஆரம்பித்தனர். மலையாளம், ரு~pய, வங்காள நவீன எழுத்துக்களுடன், தமிழகச் சிற்சில நவீனத்துவப் போக்குகளும் இவர்களுக்கு ஊக்கியாக அமைந்தன. இவர்களில் செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், துருவன், குந்தலை, மு. பொன்னம்பலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இப் பல்கலைக்கழக எழுத்தாளர்களுக்கு – இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனையின் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்படும் ஆண்டுச் சஞ்சிகையான இளங்கதிர், மாணவர் சங்க ஆண்டுச் சஞ்சிகையாக மும்மொழிகளில் வெளியாகும். ளுவுருனுநுNவுளு ஊழுருNஊஐடு ஆயுபுயுணுஐNநு – என்பன பெருமளவிற்குதவின.

பல்கலை வெளியீடு
இவை மட்டுமன்றி, இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதன் முதலாக பல்கலைக்கழக எழுத்தாளர்களிள் சிறுகதைகளை வெளியிடும் தனியார்தாபனம் ஒன்றை ஷபல்கலைவெளியீடு| என்ற பெயரில், அப்போது பட்டதாரி மாணவர்களாக பயின்றுகொண்டிருந்த செங்கைஆழியான், க.நவசோதி, செம்பியன்செல்வன் ஆகியோர் அமைத்து, தங்கள் பயிற்சிக் காலங்களில் ஆண்டொன்றிற்கு ஒரு சிறுகதைக் கோவையாக மூன்று தொகுதிகளை வெளியிட்டமை ஈழத்து இலக்கிய வரலாற்று முக்கியத்தும் பெற்ற சம்பவங்களே. ஷசெங்கை ஆழியான் – நவசோதி, தொகுத்த ஷகதைப்பூங்கா| ஷசெம்பியன்செல்வன் தொகுத்த ஷவிண்ணும் மண்ணும் கலா பரமேஸ்வரன் தொகுத்த ஷகாலத்தின் குரல்கள் இமையவன் தொகுத்த ஷயுகம்| என்பன பல்கலை வெளியீடுகளே. ஈழத்துப் பெரிய பதிப்பகங்களோ – தாபனங்களோ – துணிந்து முதலிட்டுச் செய்ய முடியாத ஒரு தொண்டை பல்கலைக்கழக மாணவர் ஒரு சிலர் மட்டுமே – (பல்கலை வெளியீடு தாபகர்களும், பின் இரு நூல்களின் அதன் தொகுப்பாசிரியர்கள் இருவரும்) மூலதனமிட்டுச் செய்தார்கள் என்றால் அதற்கு அவர்களின் இலக்கிய ஆhவமும், நிகழ்கால வாழ்வின் சத்திய தரிசனமுமே காரணங்கள் எனலாம். இவ்வாறு இவர்கள் எழுந்தமையால் தான், இப் பல்கலை, வெளியீட்டில் எழுதியவர்களில் பலர் இன்று ஈழத்தின் புதிய யுகத்தின் பூபாளராக எழுத்தாளர்களாக விளங்க முடிகின்றது என்பதும் விமர்சன உண்மையாகும்.

மூன்று நிகழ்ச்சிகள்
1960ஆம் ஆண்டைத் தொடர்ந்து, தென்னகத்திலிருந்து ஈழம் வந்த முக்கிய எழுத்தாளர்கள தெரிவித்த கருத்துக்கள், ஈழத்து எழுத்தாளரின் தன்மான உணர்ச்சியையும், இலக்கிய ஆற்றலையும் கிளர்ந்தெரியச் செய்தன. 1960-ல் இலங்கைவந்த – ஷகங்கை (தற்போது சத்யகங்கை) ஆசிரியர் பகீரதன். ஷஈழம் – இலக்கிய வளர்ச்சியில் தமிழகத்தினைவிட இருபத்தைந்து வருடங்கள் பின் தங்கியுள்ளது| – என்ற அறியாமை நிரம்பிய கருத்தை வெளியிட்டதும், அதன்பின் 1961-ல் ஈழம் வந்த இன்றைய தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி ஷதரத்தின் அடிப்படையில் தமிழகப் பத்திரிகைகளில் ஈழத்து எழுத்தாளர் இடம் கேட்பது நல்லது – என்று தெரிவித்த ஆணவமான ஆலொசனையும், 1966 அளவில் வந்துபோன கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் ஷஈழத்து எழுத்துகளுக்கு அடிக்குறிப்புத் தேவை – என்ற பாமரத்தனமாக கருத்தும் ஈழத்திலே பெரிய இலக்கியச் சூறாவளியைக் கிளப்பிவிட்டது.

புத்துணர்ச்சியையும், எழுச்சியையும் இதனால் பெற்ற ஈழத்து எழுத்தாளர் – உண்மை இலக்கியம் எது? எங்கேயிருக்கிறது அது? – என்பதனை தென்னகத்தாருக்குப் புலப்படுத்தும் வண்ணம் எழுதத் தொடங்கியதும் இக்காலகட்டத்தில் தான். இந்தப் பரபரப்பான சூழலில் – தனது இலக்கியப் பத்திரிகையான ஷசரஸ்வதி|க்கு சந்தா திரட்டவும், ஆதரவு தேடவும் ஈழத்திற்கு வந்திருந்த வ. விஜய பாஸ்கரன் ஈழத்தின் இலக்கியப் போக்கை நன்குணர்ந்து, ஷஈழத்து இலக்கியமே சரியான தடம்பிடித்துச் செல்கிறது என்று கூறியதோடமையாது, தனது சரஸ்வதியி; ஈழத்துப் படைப்புகளுக்கு முக்கிய இடம் கொடுத்தும், ஈழத்து எழுத்தாளர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்திலிட்டும் கௌரவித்தார்.

ஈழ – மலையகம்
தன்க்கொருவாழ்க்கைமுறை, மொழிவழக்கு, பொருளாதார அமைப்பு எனக்கொண்டு, ஒரு நூற்றாண்டுக்குமேலாக மனிதத்துவமில்லா நிலையில் வஞ்சிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த மலையகத்திலும், பற்பல எழுத்தாளர்கள், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த மலையகத்திலும், பற்பல எழுத்தாளர்கள் அவ்வப்போது இனம்; காட்டி வந்தாலும், ஷசிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை ஆகிய இலக்கியத் துறைகளில் மலையக எழுத்தாளர்கள் 1950-ம் ஆண்டிற்குப் பின்னர் காலடி எடுத்துவைத்தனர். என்றாலும் மலையகம் என்ற பிராந்திய பிரக்ஞையோடும், ஒருவகை உத்வேகத்துடனும் எழுதத் தொடங்கியது 1960-ம் ஆண்டுக்குப் பின்னரேயாகும்.

என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தையோசப், சாரல் நாடன், திருச்செந்தூரன், நூரளை சண்முகநாதன், மாத்தளை சோமு, மல்லிகை சி. குமார், பூரணி என்போர் தரமான மலையகச் சிறுகதைகளைப் படைத்துள்ளனர். மலையகத்தில் அவ்வப்போது தோன்றிய சிற்றேடுகளும் இவர்களின் ஆக்க முயற்சிக்கு பெரும் துணைபுரிந்தன. மலைமுரசு, சாரல், செய்தி – பத்திரிகைகளின் தொண்டு குறிப்பிடத்தக்கது. வீரகேசரித்தாபனம் வெளியிட்ட ஷகதைக்கனிகள் சிறுகதைத் தொகுப்பு மலைநாட்டைச் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தியது.

முந்தாய்ப்பு
தற்காலத்தில், தமிழகத்திலும் ஈழத்திலும் புதிய எண்ணங்களும், புதிய பார்வைகளும் கொண்ட புதிய புதிய எழுத்தாளர்கள் தோன்றிவருகிறார்கள். பலபுதியவர்கள் பழையவர்களைக்காட்டிலும் ஆழமானசிந்தனைகளிலும், அவற்றின் கலாபூர்வமான வெளியீடுகளிலும் சிறந்துவிளஙகுகின்றனர். புதிய தலைமுறையினர் மாக்ஸிய லெகிகிசதத்துவார்த்த அடிப்படைகளில் தங்கள் படைப்புக்களை வெளிக்கொணரமுனைகின்றனர்.

தமிழகத்தில் – நீலபத்மனாதன், அசோகமித்திரன், ஆ. மாதவன், பூமணி, சர்ணன், கே. ராமசாமி, ஆதவன், ந. முத்துச்சாமி, சா. கந்தசாமி, அம்பை, ஆர். ராசேந்திரச்சோழன், ராமகிரு~;ணன், நா. சேதுராமன் போன்றோரும் ஈழத்தில் எஸ். பொன்னுத்துரை, டானியல், செ. யோகநாதனட, டொமினிக் ஜீவா, தெணியான், குப்பிளான், ஐ. சண்முகம், சாந்தன், நல்லை, க. பேரன், செங்கை ஆழியான், கே.வி. நடராஜன், மு. பொன்னம்பலம் செம்பியன் செல்வன் போன்றோரும் – தரமான சிறுகதைகளைப்படைப்பதில் பெரிதும் பாடுபட்டுவருகின்றனர்.

– ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள், முதற் பதிப்பு: ஜூலை 1973, முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சகர் குழு.

1 thought on “ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்

  1. நல்ல ஆய்வு இருந்தாலும் பொதுப்படையாக இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *