கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 14,710 
 
 

வீசியெறிந்த வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்தும், விஷம் தோய்ந்தக் குறுவாள்களுக்கு ஒப்பானவை என்பதை அறியாதவளல்ல, நீ. வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளா மல், விரக்தியை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கான வாய்ப்பாக, வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டாய். மூர்க்கப்பூனையின் நகப்பிறாண்டலாய், அந்தவார்த்தைகள் என் இதயத்தைக் கூறு களாகக் கீறிவிட்டன. மனச்சுவரின் அத்தனை திசைகளிலிருந்தும் ரத்தம் கசிகிறது. வார்த்தை களால் குத்துப்பட்ட என் உடம்பின் ஒவ்வொரு அணுவும் கூசிக்குறுகி மறுகுவதை, நீ உணர முடியாது. எதையும் கேட்கும் மனநிலையில் நீ இல்லை. பிறகெங்கே உணரும் மனநிலை உன்னிடம் இருக்கப்போகிறது. தாபத்திலும் என் மீதானக் கோபத்திலும் ஏமாந்துபோனதாய்க் கருதிய ஆங்காரத்திலுமாக இருக்கிறாய். ஆனால் வலியை, நான் அனுபவித்துக் கொண்டிருக் கிறேன். காயம், சஞ்சலம், வேதனை எல்லாமே இதுதானா? எனக்கு, முதல் தடவை!

யார் மீதும் எதற்காகவும், எப்போதும் நான் கோபப்பட்டது கிடையாது. உன் மீதும் எனக்குக் கோபமில்லை. விவரம் தெரியத் துவங்கிய பத்து வயதிலிருந்து, இந்த இருபத்துதேழு வயதுவரை இப்படித்தான் இருந்துவந்திருக்கிறேன்.
எதிர்பாராத நேரத்தில், யாரேனும் கோபப்படுத்த முயன்றாலும், அந்த இடத்திலிருந்து மானின் துள்ளலாகத் தாவித் தாண்டி வந்து விடுமளவுக்கு, மனசுக்குப் பழகிவிட்டது. வேண்டு மென்றே கோபப்படுத்தப்படும் தருணங்களில், போர்த்திக்கொண்டு தூங்கும் போர்வையை விலக்கி, உதறி மடித்துவைப்பதுபோல, புன்னகைத்தபடி விலகிவந்துவிட அறிவுக்கும் பழகியிருந்தது. கல்லெறியும்போது, குறியிலிருந்து விலகிச்செல்லும் பறவையின் யுக்தி எனக்குள் அமைந்துவிட்டது. கோபப்படுத்தும் எந்த வார்த்தையையும் என் காதுகளைத் தாண்டி, உள்ளே நான் அனுமதித்ததில்லை. இதுவரை, பிறர் யாரும் சொல்லாத வார்த்தைகள்தான், நீ குமுறிக் குமுறி அழுதுகொண்டே சொன்னவை. கல்லடிபட்டப் பறவையாக வீழ்ந்துகிடக்கிறேன். இதயத்தைச் சுக்குநூறாக உடைத்த உன் வார்த்தைகளால் உருவான பதற்றமும் அச்சமும் துயரமும் உள்ளார்ந்து எனக்குள் மண்டிக்கிடக்கிறது.

உன் குற்றச்சாட்டுகளை மறுத்து, உன் மீது நானும் கோபப்பட்டு வார்த்தைகளை வீசுவது, ரொம்பவும் எளிது. எட்டுத்திசையிலும் வெடித்துச்சிதறும் விதைகளைப் போன்றவை குற்றச்சாட்டுகள். அதற்குத் தண்ணீர், சூரிய வெளிச்சம் எதுவுமே தேவையில்லை. வீசினால், காற்றிலேயே முளைத்து விருட்சங்களாகிவிடும். அதைத்தான் நீ செய்துகொண் டிருக்கிறாய். உன்னைப்போல களேபரம் செய்து, ஆண் என்று என்னைத் தற்காத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதேவேளையில் பெருந்தன்மையாக நடந்துகொண்டு, எனது பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் நான் நினைக்கவில்லை. அதுதான், இந்தஅமைதிக்குக் காரணம். என் மௌனத்தை நீ தவறாகக் கணித்துக்கொண்டு, “இவ்வளவு பேசியும் அமைதியா இருந்தா, அது உண்மைனுதானே அர்த்தம்?” என்று எழுப்பியக் கேள்விக்கு, என் எந்த பதிலும் உன்னைச் சமாதானப்படுத்தப் போதுமானதாக இருக்காது. அடக்குமுறை நிறைந்த உன் வார்த்தைகளால் நான் பேச்சற்றவனாக ஆகிவிடவில்லை. உன் வார்த்தைகள் என் உலகத்தை ஊனப்படுத்தியிருக்கிறது. வாழ்வின் தெளிவற்ற அவலத்தன்மை என் முன்னே விரிந்துகிடக் கிறது. என் அக வாழ்க்கையைச் சிரமப்படுத்த அவைபோதும். அவற்றுக்குப் பின்னால் வெளிப்படுத்த முடியாத துயரங்களும், வார்த்தைகளால் ஆன வன்முறையும், பதுங்கிக்கிடக்கின்றன.
அரிதான ஒருவிஷயத்தை, உண்மையைப்போல நீ அற்பமாக அறிவித்துவிட்டாய். அது உடம்பின் மையம்வரை ஊடுருவி உரித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது. வார்த்தைகள் உருவாக் கிய இருள், நமக்குள் பேச்சில்லாததை எண்ணி எள்ளி நகையாடுகின்றது. அதனால், முடமான பிரதேசத்தில் நம் வாழ்க்கை ஸ்தம்பித்து நின்றுவிட்டதாகத் தோன்றுகிறது. உன் வார்த்தைகள் வரைந்த தீற்றல்கள், என் மீது உனக்குப் பகைமையைச் சாட்டியிருக்கின்றன.

உன்னை நானும், என்னை நீயும் முன்னே பின்னே அறிந்தோமில்லை. நீயும் நானும் தொட்டுப்பிடித்து விளையாடியதில்லை. கல்லா – மண்ணா ஆடியதுமில்லை. கள்ளன் – போலீஸ் விளையாட்டு விளையாடும்போது, மற்றவர்களெல்லாம் ஜோடி ஜோடியாகக் காணாமல் போவதுபோல, நீயும் நானும் காணாமல் போனதேயில்லை.

நீ, நிக்காஹ்வுக்கு ஒத்துக்கொள்ளும்வரை, நம்மிடம் நட்பும் பிரியமும் இருந்ததில்லை. அதனால், முன்னெப்போதும் அறிந்திராத நம்மிடையே சிக்கல் வர ஒருபோதும் வாய்ப்பு இருந் ததில்லை.

அதனாலேயே, வேறு யாராலும் வழங்கமுடியாத ஒருதீர்ப்பை, நீ எனக்கு வாரி வழங்கி யிருக்கிறாய் என்று நம்புகிறேன். உன்னால் மட்டுமே அது முடியக்கூடியது. ஏனென்றால் நீ என்னுடன், காலமெல்லாம் வாழ்வதற்கு, ஜமாத் முன்னிலையில் ‘கபுல்‘ சொல்லி, மனைவி யாகி வந்தவள். சகல உரிமைகளும் கொண்ட உன்னால், ஒரே இரவில் என் ஆண்மைக்குத் தீர்ப்பெழுத முடிந்திருக்கிறது. எந்த ஆணையும் சாய்க்க, ‘இந்தாளு ஆம்பளையில்ல‘ என்ற வார்த்தைகள் போதுமானவை.

‘இந்தாளு ஆம்பளையில்ல‘ என்று என்னை, நீ எந்த அளவுகோளில் தீர்மானம் செய்தி ருப்பாய் என்று, என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘ஆம்பளை‘ என்ற அந்தச்சொல்லுக் கான ஒற்றை அர்த்தம், இன்னும் கண்டறியப்படாமல்தான் இருக்கிறது.

நிக்காஹ் முடிந்து, பிற சடங்குகள் துவங்குவதற்கு முன்பு, ‘முலாகத் செஞ்சுக்குங்க‘ என்று, கண்ணாடி வழியாக உன் முகத்தை எனக்குக் காட்டினார்கள். அதுதான் நீயும் நானும் நம்மை முதல்முறையாகப் பார்த்துக்கொண்டது. உன்னைப் பெண் பார்த்துவிட்டு வந்த என் சகோதரிகள், உன்னழகு பற்றிச் சிலாகித்துச் சொன்னபோது, நீ இத்தனை அழகாக இருப்பாய் என்று கற்பனை செய்து கொள்ளவில்லை. உன்னை என் கண்களால் பார்த்தபின்புதான், நிலவைக் கண்ணாடிக்குள் பிடித்துவைக்க முடியும் என்பதை, நான் உறுதிசெய்தேன். சிறுவயதி லிருந்து உன்னை எனக்குத் தெரியும் என்பதுபோலவும், நூறுமுறை… ஆயிரம்முறை… தினம் தினம் பார்த்திருக்கிறேன் என்பதாகவும், அப்போது எனக்குள் எப்போதும் இல்லாதக் கிளர்ச்சி, முதல்முறையாக முளைவிடுவதை உணர்ந்தேன். ஒருநிலவை மனைவியாக்கியிருக்கிறார்கள் என்று அகமகிழ்ந்துக் கிடந்தேன். இனிய கற்பனைகள் விரிந்து பறந்தன. உன்னை என் கைக்குள் அடக்கி, மாரில்சாய்த்து, முகம்பார்த்து, நெற்றியில் அப்போதே முத்தமிடவேண்டும் என்று, உள்ளுக்குள் பரபரத்துப்போனேன்..

முளைவிட்டக் கிளர்ச்சி அந்தநொடியிலேயே வேர்விட்டு வளர்ந்து, பலகிளைகளைக் கொண்ட விருட்சமாகிப் படர்ந்துவிட்டது. அதன் ஒவ்வொரு இலையிலும் உன்னை நான் எழுதிக்கொண்டிருந்தேன். எழுத எழுத, எழுதுவதற்கு நீ இருந்தாய். இருந்துகொண்டே இருந் தாய். இலைகள்தான் போதவில்லை. கிளைகளிலும் மரப்பட்டையிலும் அடிமரத்திலும் வேரி லும்கூட உன்னை எழுதிக்கொண்டே இருந்தேன். சலிப்பு வரவேயில்லை. ஏனென்றால் நீ சலிப்பே தராத கடல் அலை. உடல் தழுவிச்செல்லும் மலைக்காற்று. பூவாய்ப்பொழியும் பனி. சிறுகுழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் வாணியின் சுவை என்று நான் கணித்திருந்தேன்.

பிரியாணி வட்டைகளையும், தாழ்ச்சா தேக்சாக்களையும் கழுவி ஊற்றியபின்புதான், ஜுல்வா (நலுங்கு) தொடங்கியது. உறவுக்காரப்பெண்கள் கூடிஉட்கார்ந்து நம்மைக் கேலியிலும் கிண்டலிலும் ஆழ்த்தினார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை. அதை அவர் கள் நம் மீது சுமத்தினார்கள். நாம் கனவு பாரம் சுமப்பவர்களானோம். அவையெல்லாம் சுமை தராத சுமைகள். எவ்வளவு வேண்டுமானாலும் சுமக்கலாம். அவர்கள் அடுக்கிக்கொண்டே இருந் தார்கள். நீயும் நானும் சுமந்துகொண்டே இருந்தோம். அவை நமக்குள் இன்னும் பலகதவு களைத் திறந்துவைத்தன. கதவுகளுக்கு அப்பாலான வெளி, நாம் முன்னே அறியாதது.

அங்கிருந்த எல்லாப்பெண்களும் அழகுதான். அவர்கள் எல்லோரின் கண்களும் நம் மீது தான் இருந்தன. ஆனால் உன் அழகின் முன்னால், அவர்கள் தூசியாகிப் போனார்கள். என் மனப்பக்கங்களில் உன் பெயருக்கு நேரே அழகு என்று குறித்துவிட்டிருந்தேன்.

ஜுல்வாவில் ஒருவிளையாட்டாக, குடத்துக்குள் மோதிரம் ஒன்றைப்போட்டு, யார் அதை முதலில் எடுப்பது என்ற போட்டி வைத்தார்கள். என் உறவுக்காரப் பெண்கள், “விடாதே… விடாதே!” என்று என்னை உசுப்பேற்றினார்கள். உன் உறவுக்காரர்களும்தான்.

“இப்பவே வளைச் சுப்போட்டுரு” என்று யாரோ ஒருத்தி எனக்குக் கேட்பதுபோல, உன்னிடம் கிசுகிசுத்தாள். அவள் சொல்லித்தான் நீ என்னை வளைக்கவேண்டும் என்பதில்லை. என் கையில் அந்த மோதிரம் சிக்கிவிட்டது. ஆனால் அதை, உள்ளிருந்தவாறே உன் கைக்குள் திணித்துவிட்டேன். ஏனென் றால் உன்னிடம் நான் தோற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று, கண்ணாடியில் உன்நிலவு முகத்தைப் பார்த்த நொடியிலேயே முடிவுக்கு வந்திருந்தேன். அவளிடம், ‘அவன் என் அடிமை‘ என்று நீ புருவம் உயர்த்தி அபிநயித்ததையும் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது, உன் புருவங்களின் நடனம். அந்தமயக்கத்தில், உன் கைக்குள் மோதிரத்தை நான் திணித்தபோது, என்னைப் பார்த்து மெலிதாக நீ சிந்தியப் புன்னகைக்கு, ஏழுலகிலும் எதுவுமே ஈடில்லை.

உன் கையை நான் தொட்ட நொடிகளில், உனக்குள்ளிருந்த எண்ணங்கள் எனக்குள் ஊடுருவின. அந்த நொடிகள் என் வாழ்வி்ன் அற்புதமான நொடிகள். அத்தனை எண்ணங்களையும் சிலநொடிகளுக்குள் கடத்திவிடும் சூட்சுமம் அறிந்தவளாக நீ இருந்ததற்கு, என்னையே நான் சமர்ப்பணம் செய்துகொண்ட, அபாரமான தருணமது. உன் எண்ணங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும் என்னைக் களிப்படையச் செய்தன.

அதில், இங்கே நான் எழுதாத விஷயங்கள், உனக்கும் எனக்குமான நம் சொந்த விஷயங்கள். காலம் முழுவதும் நாம் அதை, தாமரையின் இதழ்கள்போல அவிழ்த்து அவிழ்த்து ரசிக்கலாம். பக்கங்களைப் புரட்டிப்புரட்டி வாசிக்கலாம். இங்கே எழுதக்கூடிய வாசகங்களாக இருப்பவை, “நம்மளத் தனியாவிடாம இந்தப்பாடு படுத்துறாங்களே!” என்பது மட்டுந்தான்.

அப்போது உன் கண்கள் என்னிடம் பேசின, ‘நான் உனக்கானவள்‘ என்று. அந்தநொடி கள்தான் ‘இந்த உலகத்தில் நான் மிக முக்கியமானவன்‘ என்ற நம்பிக்கையைத் தந்தவை. இந்த அதிர்ஷ்டம் வேறு எவருக்கும் கிடைக்காதது.

சூழலை நாம் மறந்திருந்தோம். உலகத்திலுள்ள அத்தனைபேரும் எங்கோபோய் ஒளிந்து கொண்டார்கள். ஏதோவொன்று நம் இருவரை மட்டும் ஒருபோர்வைபோல போர்த்தி, இந்த உலகத்திலிருந்து நம்மைத் தனிமைப்படுத்தியது. அப்படியான இடம் உலக வரைபடத்தில் இல்லாததாக நாம் உணர்ந்தோம். தனிமை, சங்கடங்களற்ற வாய்ப்பை நமக்கு அருளியது. யாரோ ஒருபெண், “ஜாய்… ஜாய்… திஸ் இயர். ஜம்பிங் பாய் நெக்ஸ்ட் இயர்” என்று கோரிக் கைப் பாட்டை நலுங்கில் பாடி, நம்மை உயிர்ப்பித்தாள். அப்போது நீ என்னைப் பார்த்துச் சிரித்த தில், ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. உன் சிரிப்பு வெள்ளி அருவிபோல வழிந்தோடி, என் நெஞ்சை நிறைத்தது, நீ அறியாதது.

சமூகம், சடங்குகளால் காலத்தைக் கடத்துகிறது என்பது, என் அபிப்பராயம். என் தவிப் பும் உனக்கானதுதான். உன் தவிப்பை நான் அறிந்தவனாக இருக்கிறேன். அவர்கள் விடுபவர் களாக இல்லை. சடங்குகளில் ஏதேனும் ஒன்று குறைந்துபோனால், அல்லது விடுபட்டுவிட்டால் உலகம் ஒன்றும் நீருக்குள் அமிழ்ந்துவிடாது என்று, கண்களாலேயே நீ பேசுகிறாய். நான் புரிந்துகொண்டேன்.

என் தவிப்பைப்போலவே இருந்தது, உன் தவிப்பும். இருவரும் ஒரே எண்ணத்தில் பயணம் செய்தோம். ஆணுக்கு இருக்கும் உணர்வுகளைப் போலத்தானே பெண்ணுக்கும் இருக்க முடியும். நம் வாலிபம் எத்தனைக் கனவுகளைக் கொண்டிருக்கும்? வாழ்க்கையின் துவக்கத்தை எதற்காக முதலிரவு அறையிலிருந்து துவங்குகிறார்கள்? என்னைப்போலவே நீயும் பதில் களைத் தேடியடையும் நேரத்துக்குக் காத்திருக்கிறாய். அதற்கான, கவுண்ட் டவுன் துவங்குகிறது…………

நெஞ்சு விம்மவிம்மப் பரவசமாய் என்னைச் சோ்த்தணைத்த நீ, பறத்தல் நிலையிலிருந்தாய். நான், உள்ளும் புறமுமாய் உனக்குள் பிணைந்துகொள்கிறேன். மேகங்களாய்த் தழுவிய தேகங்கள் இரண்டும் ஒன்றில் ஒன்றாய்த் தகவிக்கொள்கின்றன. இருஜோடிக்கால்களும் சிக்கலாய்ப் பின்னி முயங்கின. நான்கு கைகளும் கலைகளில் தோய்ந்திருந்தன. இறுக்கத்தின் கசகசப்பில் கசிந்த வியர்வை ஆறாய்ப்பெருகி, பிணைப்பை நழுவச்செய்து விளையாட்டு காட்டுகிறது. நழுவல், நம்மை மேலும் மூர்க்கமாக்கியது. ஒன்றையொன்று விழுங்கும் ஆனந்த மூர்க்கம். மனசும் உடலும்கூடிக் களியாட்டம் போடுகின்றன. அதில் இயைவும் இன்னும் இன்னும் என்னும் வேகமும் இருக்கிறது. முதிர்ந்த இலந்தை மரத்தின் மீது படர்ந்தேறும் காட்டுக்கொடியின் லாவக சரசத்தில், நீ சுகித்திருந்தாய். ஊறியூறி மேலேறிப் படர்தல் முன்னெப்போதும் அறியாத முயங்குதலின் உச்ச பரவசம். லயமாய்க் கருவி இசைக்கும் என் மீட்டலில், உன் தினவின் துடிப்பு பல்கிப் பெருகியது. வானம் முழுவதையும் வசப்படுத்தும் சிறகுகள், நம் உடம்பில் மெல்ல முளைக்கத் துவங்கின. நொடிகளில் கிளைத்து, உடல்களை மேலெடுத்துச் சென்றன. பறத்தல் புதுசுகம். நீண்ட பயணம். தடைகள் ஏதுமற்ற சுகமானப் பயணம். தேகசுகத்தின் கடைசிப்புள்ளியைத் தொட்டப் பரவசம் துளிர்த்து, எல்லையில்லா வெளி முழுவதையும் ஆண்ட சிலிர்ப்பு. உச்ச உயிர்ப்பை உணர்தல் தேவசுகமாய் உருகி வழிந் தோடியது. ஈர உடம்புகளில் படும் வெப்ப மூச்சும், குளிர்ந்துபோகிறது.

உடல்களின் தளர்வு. இறுக்கம் விலகி உடல்களில் நெகிழ்வு. மெல்ல மெல்ல ஒன்றி லிருந்து ஒன்றுபிரியும் சுகம். விலகலில் அதிர்வு. உடம்புகளின் உயிர்த்துள்ளல். முதல் அனுபவத்தின் இனம் புரியாத சுகரேகைகள் முகத்தில் படர்கின்றன. கலந்து பிரியும் சாரைப் பாம்பின் பெருமூச்சாக உன்னிடமிருந்து பெரிதாக மூச்சு ஒன்று வெளிப்படுகிறது.

உன்னருகில் களைத்துக் கிடக்கும் என் முகத்தை ஏறிடுகிறாய். உன்னை ஒட்டுமொத்த உடலையும் என்னைநோக்கி நகர்த்தி, என் நெஞ்சில் முகம் பரத்தினாய். சிறுபிள்ளைபோல தேய்த்துவிட்டு, அப்படியே அழுத்தமாய் என் நெஞ்சில் முத்தமிடுகிறாய். ‘இச்‘சென்ற சத்தம் அறையின் அமைதியைக் குலைத்தது. ஒரு கையை என் முகத்திலும் மறு கையை என் கால்களுக்கு இடையிலும் பரப்புகிறாய்.

நான் பிணம்போல கிடக்கிறேன். களைப்பு, என்னை அசத்திப் போட்டிருக்கிறது. நீ விழித்துக் கொண்டிருக்கிறாய். சற்றுநேரத்துக்கு முன்புகண்ட அதே உலகத்துக்கு, மறுபடியும் பயணம் போகவேண்டுமென்று, உன் உடம்பு கேட்கிறது. என்னைத் தடவுகிறாய். உன் அணுக்கள் என்னிடம் கெஞ்சுகின்றன. நான் அசையவில்லை. நீ என்னென்ன செய்தும் நான் எழுந்திருக்கவில்லை. வாழ்வின் அத்தனை சுகத்தையும் இப்போதே அனுபவித்துவிட வேண்டு மென்ற தீராதவேகம், உனக்குள் எழுகின்றது. இப்போது இல்லாவிட்டால், வேறு எப்போதும் அதை அடைய முடியாது என்ற எண்ணமும் உனக்குள் உருவாகிவிட்டது.

இரவின் நிமிடங்கள் கழிந்துகொண்டே இருக்கின்றன. நீ தவித்துக்கொண்டே இருக்கி றாய். நேரமாக ஆக உனக்குள் வெப்பம் கூடிக்கொண்டே போகிறது. அதன் அனல் என்னைத் தாக்கியது. அடித்துப்போட்ட அசதியில், சூரியன் கிழக்கில் உதித்த நேரத்தில்தான், என்னாலும் கண் விழிக்க முடிந்தது. நீ முகமலர்ச்சியோடு இரவின் நினைவுகளுடன் என்னை எதிர்கொள்வாய் என்று உன் முகம் பார்த்தேன். உன் பார்வை வேறாக இருந்தது. உன்னை என்னருகில் இழுத்து அணைத்தேன். நீ விலகிக்கொண்டாய். ஊடல் என்று நினைத்து, மீண்டும் நான் இழுத்தபோது, “நீ இவ்வளவுதானா?” என்று ஒருமையில் கேட்டாய்.

‘ஒருமை, ஊடலின் ஒருநிலை‘ என்று சங்க இலக்கியமெல்லாம் சொல்கிறது. ‘தனியறையில் மரியாதை‘, இடைவெளியை அதிகரிக்கும் என்று ஒருபழமொழியும் இருக்கிறது. அதனால் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரே இரவில் நீ என்னை நெருங்கிவிட்ட தாய் மகிழ்ந்துபோனேன். ஆனால் நீ, தாவிக் குதித்தாய். உன் மீது எனக்கு ஆசையில்லை என்று குற்றம் சாட்டினாய்.

நம்மை உள்ளேவிட்டு வெளியே பூட்டியிருந்தார்கள். கதவின் திறப்புக்காகக் காத்திருந்தவள் போல, காற்றின் வேகத்தில் நீ வெளியே போனாய். உன்னை நாலைந்து பெண்கள் சுற்றிக் கொண்டார்கள். நமுட்டாய்ச் சிரித்தார்கள். சங்கேதமாய் என்னென்னமோ கேட்டார்கள். உன் முகத்தை ஒருத்தி ஏந்திப்பார்த்தாள். மற்றொருத்தி, உன்னைச் சுற்றிச்சுற்றி வந்து நீ அணிந்தி ருந்த ஆடைகளைத் தொட்டுத்தொட்டுப் பார்த்தாள். வேறு இரண்டுபேர் உன்னைப் பார்த்து மகிழ்ந்து, அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள.

“என்ன ஆச்சா?” என்று யாரோ கேட்டபின்புதான், உன் குரலை நான் கேட்க முடிந்தது. நீ கேவத் துவங்கியிருந்தாய். நம்மை நாம் பார்வையால் விழுங்கத் துவங்கியதிலிருந்து முயங்கி ஓய்ந்ததுவரையிலிருந்த உன் தேன்குரல், கரகரத்ததாக மாறியிருந்தது. பிசிறி உடைந்து வந்தது. உன் வார்த்தைகள் என் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கின.

வெட்கமின்றிச் சொல்கிறேன், நான் திகைத்துப்போனேன். இருபத்தேழு வயது ஜவான், நான். ‘இந்தாளு ஆம்பளையில்ல‘ என்ற உன் வார்த்தைகள் என்னைப் புழுவாக்கியிருந்தன. வாழ்வு பற்றிய அச்சத்தால் அவதிப்படும் மூடப்பெண்ணாக உன்னை நீயே சித்தரித்துக் கொண்டாய். ஒருபெண்ணை மலடி என்று சித்தரிக்க குறைந்தபட்சம் பத்து மாதங்களாவது தேவைப் படும். எனக்கு அதுகூடத் தேவையில்லை என்பதை உன் மூலமே அறிகிறேன்.

உன்னை மணப்பெண்ணாக அனுப்பியபோது, உன் துணைக்கு வந்திருந்த மாமு மகள், தன் கையிலிருந்த செல் மூலமாக யாரிடமோ பேசினாள். தூரம் என்பதெல்லாம் இப்போது பெரிய விஷயமில்லை. கொஞ்சநேரத்தில், உன் பிறந்த வீட்டு ஆட்கள் கார்களிலும் ஆட்டோக் களிலுமாக வந்துவிட்டார்கள். அவர்களைக் கண்டதும் உன் குரல், நீ மோசம் போய்விட்டதாக உயர்ந்து பதறுகிறது. உன் அழுகையைக் கண்டதும், அவர்களின் குரலும் உயருகிறது. பலகுரல் கள் ஒன்றிணைந்து கேட்கின்றன. சந்தைக்கடைபோல சலசலவென்றானது, வீடு. ஒவ்வொரு வரின் முகமும் மனசாட்சியுடனும் மனசாட்சியற்றும் துலக்கமாகப் புலப்படுகிறது. உன் குற்றச் சாட்டுகளின் மேல், நான் விசாரிக்கப்படுகிறேன். உன்னைப் பெற்றவர்கள் உன்னைச் சமாதானப் படுத்துகிறார்கள். காலம் பல விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும். இங்கு காலமே நிறுத்தி வைக்கப்படுகிறது.

***

‘என்ன… இந்தப்புள்ளை இப்டிப் பேசிக்கிட்டுருக்கு!‘ என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர, பொதுவில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. பெண்கள் இரண்டிரண்டு பேராய் குழுக்குழுவாய் ஒதுங்கினார்கள். “சரியான புள்ளயா இருக்கும்போல!” என்று குசுகுசுத்துக் கொண்டார்கள். அவளை ஒருவித மிரட்சியுடனும் பரிதாபத்துடனுமே பார்த்தார்கள். அவள் எதையும் பொருட்படுத்துபவளாக இல்லாமல், தனித்து உட்கார்ந்திருந்தாள்.

***

பதினாறு வயதிலேயே எனக்குள் ‘அது‘ பற்றிய தூண்டுதல் விதைக்கப்பட்டுவிட்டது. விதையைப் போட்டது, என் சிச்சாதான். அவரது அறைக்குள் எதையோ எடுக்கப்போனபோது, அங்கிருந்தக் கட்டிலில் கிடந்தப் புத்தகத்தில் நான் லயித்துப்போனேன். திறந்தமேனியுடன் கொப்பும் குலையுமாக இருந்தப் பெண்ணழகு, அது. சிச்சாவிடம் இந்தமாதிரியானப் புத்தகங்கள் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. பாவாவைப்போல அவரும் ஐந்துவேளைத் தொழு பவர். திருமணமாகிப் பிள்ளைக்குட்டிகள் பெற்றெடுத்தவர். என் வயதையொத்தப் பெண் அவருக் கும் இருக்கிறாள். சிச்சானி பாதிநாட்களை அவள் அம்மா வீட்டில் கழிப்பவளாக இருந்தாள். கையிலிருந்தப் புத்தகத்தின் அடுத்தப் பக்கத்தைப் புரட்ட முயன்றபோது, “அலிமா, அந்தப் புஸ்தகம் புடிச்சுருக்கா?” என்றபடி சிச்சா நின்றிருந்தார்.

சிச்சாவின் குரலும் அருகாமையும் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. சுவரில் உடம்பை உரசிக்கொண்டு நிற்கும் எருமையின் செயலை ஒத்ததாயிருந்தது, அந்த அருகாமை. குரலாலும் அருகாமையாலும் அதிர்ந்து புத்தகத்தை உதறிவிட்டேன். கட்டிலில் விழுந்தப் புத்தகத்தில் திறந்தமேனிப் பெண் விரிந்துகிடந்தாள். சிச்சா என்னையும் புத்தகத்தையும் மாறிமாறிப் பார்த்துச் சிரித்தார். வழக்கமானச் சிரிப்பு அது இல்லை.

சிச்சாவின் கேள்வியும் அடுத்தடுத்த அவரது செய்கையும் என்னை இம்சித்தன. கையிலிருந்த அசூசையான அந்தப்புத்தகம் மட்டுமே அவரது அருகாமைக்கும் செயலுக்கும் காரணமா என்ற தவிப்பு எனக்குள் அலையாடியது. சிச்சாவின் அன்பை நான் நேசித்திருக்கிறேன். என் சிறு வயதிலிருந்தே எல்லாமே வாங்கித் தருபவராக இருந்தார். ஒருதந்தையின் ஸ்தானம் அது. இப்படியான சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தவராக அவரது நடவடிக்கைகள் இருந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உடல்ரீதியாக என்னைத் தனக்கு அணுக்கமானவளாகப் பாவிக்க முயற்சித்தார். இதற்குமுன்பு வாங்கித்தந்த அத்தனையும் உள்நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டச் செயல்களோ என்று எண்ணும்போது அருவருப்பாகத் தோன்றியது. எனது எதிர்ப்புகளை அவரிடம் காட்டினேன். அதை அவர் பொருட்படுத்துவதாக இல்லை. உறவுமுறை பெரிய தொரு போர்வையாக அவருக்குக் கை கொடுத்தது. சாதானமாக அதைப் போர்த்திக்கொண்டு தன் கோர முகத்தை என்னிடம் தொடர்ந்து காட்டிக்கொண்டேயிருந்தார்.

உடம்பை, அதுகுறித்த ஆராதனையை வீட்டில் மற்றப்பெண்கள் பேசுவதை வைத்தே நான் அறிந்தவளாக இருந்தேன். உடம்பை மாபெரும் வரம் என்பதாக உணர்கிறேன். என் உடம் பும் அது கொண்டிருக்கும் வேட்கையும் தாகமும் எனக்குப் புரிந்தே இருந்தது. சிச்சாவின் இந்த செய்கைகள் என்னை அதுபற்றி யோசிக்கும் இக்கட்டுக்குத் தள்ளியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது. ஓரிரவில் ஏதோ ஓர் அசைவை உணர்ந்து நான் கண்விழித்தபோது, என் உடம்பின்மேல் இயங்கும் முயற்சியில் சிச்சா இருந்ததைக்கண்டு அலறிவிட்டேன். அந்த நிலையைக்கூட சிச்சா தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டது யாருடைய துரதிர்ஷ்டம் என்று தெரியவில்லை. திருடனே திருடனைத் தேடுவதுபோல, “என்னம்மா சத்தம்?” என்று மற்றவர் கள் முன்னால்கேட்டு தன்னைக் காத்துக்கொண்டது, என்மேல் வேறு ஏதாவது பழியைப்போடு வதற்கு என்று உணர்ந்தபோது, யாரிடம் சொல்லி அவரைத் தட்டி வைப்பது என்ற கலக்கம் எனக்குள் மண்டியது. வீட்டில் அவர் மீது போர்த்தப்பட்டிருந்த மரியாதை, எனது குற்றச்சாட்டுகளை பரிசீலிக்குமா என்ற சந்தேகம் எனக்கிருந்தது.

சிச்சா மீது உருவான வெறுப்பு எனக்குள் வேறொன்றாய் உருமாறுவதை என்னாலேயே உணரமுடிந்தது. உருமாறிய வெறுப்பு, எனக்கு ஆதரவாய் என்னை நேசிக்கும் நெஞ்சைத் தேடியது. அப்போது என் நினைவுக்கு வந்தவன், குமார். பத்தாவது படிக்கும்போதே என்னை நேசிப்பதாய், எனக்காக எதையும் செய்வதாய்ச் சொல்லிச்சொல்லி என் பின்னால் அலைந்தவன். நான்தான் அவனை வேண்டாம் என்று நிராகரித்தேன். என் நிராகரிப்பு அவனை தேவதாஸாக ஆக்கிட்டிருந்தது. பின்பு நான் அவனை மறந்துபோனேன். அவன் அப்போது சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் பின்பு மீட்டெடுத்தேன். எத்துணை ஆதுரமான வார்த்தைகள் தெரியுமா, அவை? அவனைத் தேடினேன். சுலபமாகக் கிடைத்தான். ‘என் அன்பை ஏற்றுக் கொள்‘ என்று சொன்னபோது, நெக்குருகினான். சிச்சாவைப் பழிவாங்கிவிட்ட திருப்தியைக் கண்டடைந்தேன். என் பின்னாலேயே குமார் அலைந்தது, தெருவுக்குள் எனக்காகத் திரிந்தான், ‘உயிரே‘ என்று பிதற்றியது, இன்பமாகத்தான் இருந்தது. ‘இப்படியிருக்க வேண்டுமென்று‘ தான் நான் எதிர்பார்த்தது. மனம் விரும்பியதும் அதுதான். இந்த இடத்தில் சிச்சாவுக்கு என்ன வேலை? குமாரின் அன்பில் திளைத்துக்கிடந்தபோது, ஒருநாள் அவன் சொன்னான். ‘உன்னை நான் அனுபவிக்கணும்‘. எனக்கு சிச்சாவின் அருகாமையும் குரலும்போலவே இருந்தது, அவன் கேட்ட விதம். ‘நீயாடா?‘ என்று கேட்டபோது, “உங்கத்தெரு ஹசீனாவையே நான் சுவைச்சுருக் கேன். நீ என்னமோ பிகு பண்ற?” என்றான். இன்னும்பல பெண் பெயர்களைச் சொல்லி எனக்கு அதிர்ச்சியூட்டினான். அதில் சிச்சாவின் சாயல் இருந்தது. என் அன்பைக் காட்டிலும், என் உடம்பை அவன் நேசிப்பதாக வெளிப்படையாகச் சொல்லி, என்னைக் கூசவைத்தான்.

என் உடம்பைப் பார்வையாலும் மனதாலும் தாண்ட முடியாமல் தவித்தவர்களை, அதற்காக என்னை சூசகமாக அணுகியவர்களையெல்லாம் நான் அறிந்தே இருக்கிறேன். ‘அது வொன்றும் பெரிதில்லை‘ என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் பெருகியே இருந்தன. இதில் வயது வித்தியாசம், உறவுமுறைகள் எல்லாமே அடக்கம். என்றபோதும் அத்தனை யையும் தவிர்த்து வந்தேன். உணர்ச்சிகளின் ஊடாக என் உணர்வுகள் ஓர் ஆளுமைக்காகக் காத்திருந்தது. எனக்கே எனக்கேயான ஆளுமை. அது ஆண்தனமானது இல்லை. என்னைப் புரிந்துகொண்டதாக, என்னைப் போற்றுவதாக, என்னை எல்லாவகையிலும் ஆளுவதாக அமையவேண்டுமென்று ஆசைப்பட்டேன். உன்னைப் பற்றிச் சொன்னார்கள். என் மனதை ஆளப் போகும் அந்த ஆளுமையாக, அவர்கள் சொன்னதை வைத்து தெரிந்துகொண்டேன். எனது தேவனுக்காகக் காத்திருந்தேன். அந்தத்தேவனாக நீ வந்தாய்.

இங்கிருக்கும் பெண்களுக்கு அமைந்த ஆண்களெல்லாம் ஆணுறுப்பு கொண்டவர்கள் அவ்வளவுதான். எந்நேரமும் பெண்கள் அவர்களுக்கு இணங்கவேண்டும் என்ற வகைப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் செயல்களுக்கு இங்கே, ‘காஜா எடுப்பது, பட்டன் தைப்பது‘ என்று பல்வேறு பெயர்கள் புழங்குகின்றன.

நான் சந்தித்த, கேட்டுஅறிந்து வைத்திருக்கும் மற்ற ஆண்களைப் போலல்ல நீ என்பதை மற்றவர்கள் சொன்னதை வைத்து உணர்ந்துகொண்டேன்.

காத்திருத்தல் எத்தனை சுகமானது என்பது எனக்குத் தெரியும். இவர்களெல்லாம் என் உடம்பில் எதைக் கண்டடைய முயற்சிக்கிறார்கள் என்பதை உன் மூலமாக அறிந்து கொள்ளும் எதிர்பார்ப்பு எனக்குள் மண்டிக்கிடந்ததை நீ அறியமாட்டாய். காத்திருப்பு பூர்த்தியாகும் நம்பிக்கை, கண்ணாடியில் தெரிந்த உன் முகத்தைப் பார்த்ததும் சுடர்விட்டது. என்னைப் புரிந்துகொள்பவனாக, என்னைப் போற்றுபவனாக, என்னை எல்லாவகையிலும் ஆளுமை செய்பவனாக நீ அமைந்திருக்கிறாய் என்று நம்பினேன். ஆவலில் பொங்கினேன். வேண்டும் வேண்டுமட்டும் அதை அனுபவித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்திருந்ததில் என்ன தவறு இருக்கிறது? ஓர் முறையான வழியைத்தானே நான் தேர்வு செய்திருந்தேன். எனக்கென்ற தேவைகள் இருக்கலாமல்லவா? இருக்கின்றன. அதை மனதுக்குப்பிடித்த ஓர் ஆடவனால் மட்டும்தான் கட்டுடைக்க முடியும். அந்த ஆடவன் நீ. ஆனால், என் காத்திருப்பை நீ கட்டுடைக்கவில்லை.

***

“மாப்ளையப் பத்தி விசாரிச்சோம். ரொம்ப நல்லவரும்மா!” என்று, என்பேரில் சான்றிதழ் தருகிறார்கள். சொல்லப்போனால் கணவனுக்கு மனைவிதான் சான்றிதழ் தரத் தகுதியானவள். ஆனால் நீ தந்த சான்றிதழை, எங்கே சட்டம்போட்டு மாட்டுவது?
அன்று முழுவதும் அவர்கள் இங்கேயே இருந்து, உனக்கு ஆறுதலும் ஊக்கமும் தந்து விட்டுப் போகிறார்கள். என் வீட்டைச் சேர்ந்தவர்கள், உனது வார்த்தைகளால் காயப்பட்டுப் போயிருக்கிறார்கள். நிக்காஹ்வின் சந்தோஷம் அவர்களுக்கு அடுத்தநாள் விடியும்வரைக்கூட நீடிக்கவில்லை.

ஆதங்கப்பட்டுக் கிடக்கிறார்கள். என் மீது நீ வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு, அவர்கள் உடனடியாக எதிர்வினை ஆற்றியிருக்க முடியும். என் அமைதி, அவர்களைக் கட்டிப் போட்டுவிட்டது என்று நினைக்கிறேன். உன் நல்லநேரமா… அல்லது என் வீட்டுக்குக் கெட்ட நேரமா… என்று தெரியவில்லை. ‘என்‘ என்று இப்போது நான் பிரித்ததுகூட மனம் ஒப்பாமல் தான். நம்வீட்டுக்குக் கெட்டநேரமா என்றுதான் சொல்லியிருக்கவேண்டும். எதுவுமே நடக் காததுபோல நம்வீட்டில் நடந்துகொள்கிறார்கள்.

வந்தவர்கள் உன்னிடம் பேசிவிட்டுக் கிளம்புகிறார்கள். இன்றையப் பகல்பொழுது, நிக்காஹ் நடந்தவீட்டின் எந்தவொரு மகிழ்ச்சியுமின்றிக் கழிந்துவிட்டது. உன் மீது எனக்குக் கோபமில்லையே தவிர வருத்தம் இருக்கிறது. நீ இப்படிப் பேசியிருக்கக் கூடாது. உனக்கும் எனக்கும் பொதுவானதுதான் காமம். எடுத்தஎடுப்பிலேயே அதை முடித்துத் தாண்டிவிட முடியாது. அணுஅணுவாக அதை அனுபவித்துச் சுகிக்கவேண்டும். ஆனபோதும் அதற்கு முடி வென்பது இல்லை. நீ ஒவ்வொன்றுக்கும் உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பவளாக இருக்கிறாய்.

மோகத்தின் அவசரமும் எதிர்பாலினத் திசுக்களின் மோதல்களும் நம்முள் வியாபித் திருந்தன. புதிர்த்தன்மை விலகி, இன்ப முடிவையும் நாம் கண்டெடுத்தோம். இன்பம் தரும் சிறுசிறு வாக்கியங்களிலான உரையாடலை நாம் செய்துகொண்டோம். அப்படியான உரையாடல் எனக்கு முற்றிலும் புதிது. உனக்கும் அப்படித்தான் என்பதை யூகித்துக்கொண் டேன். இப்போது உனக்கும் எனக்குமான மௌனத்துக்கு இடையில், உனது வார்த்தைகள் ஊடாடி நம்மைக் குலைக்கின்றன. உணர்வுரீதியான உன் எதிர்பார்ப்பின் தீவிரம் மேலோங்கு கிறது அல்லது மட்டுப்படுகிறது. இந்த ஓரிரவில் நாம் எழுதிக்கொண்ட சொற்பமானப் பக்கங் களில் இறுக்கமான மொழி துயரத்துடன் படிந்திருக்கிறது. உயிரோட்டமான சித்திரங்கள் அதில் எங்கேயும் காணோம். துடிதுடிப்பு நிறைந்த வாழ்க்கையை, துயரமாக ஆக்கியிருக்கிறது, உன் வார்த்தைகள்.

உறைந்துபோன மனப்பதிவுகளுடன் இப்போது, நீயும் நானும் இரண்டாவது இரவின் தனி யறையில். நுட்பமான அர்த்தங்கள் பொதிந்த அகவயத் தன்னுரைகள் என்னுள் அலையாடுகின்றன. உன்னிடமும் அதுவே என்று எனக்குப்படுகின்றது. தன்வயமற்று நாமிருவருமே இருக் கிறோம். உன் வார்த்தைகளால் உருவான தற்செயலற்றத் தன்மை, அறைக்குள் ஆவிபோல உலவுகிறது. லாவகமற்ற இந்தநிலையை நீயே உருவாக்கிக் கொண்டாய். நீ யதார்த்தமாய்ச் சொன்னதாகவே நான் நம்புகிறேன். எதையும் எதிர்கொண்டேயாக வேண்டியிருக்கிறது. நேற்றைய புரிதலின்மை, இன்று வேறுவிதமாக மாறக்கூடும்.

என்னருகில் நீயிருக்கிறாய். முந்தைய இரவின் பரபரப்பும் வெட்கமும் நாணமும் எதிர் பார்ப்பும் இன்று உன் முகத்தில் இல்லை. உன் மனசு பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை. கூடுதல் ஆழம் கொண்டவளாக இருப்பாய் என்று கருதுகிறேன். காலையில் நீ நடந்து கொண்ட தற்கு வருத்தம் தெரிவிப்பதுபோல, அமைதியாக இருப்பதாக நான் எண்ணிக்கொள்கிறேன்.

என் அருகில் வந்து அமருகிறாய். மெல்ல என்கையை எடுத்து, உன் நெஞ்சில் வைத்துக் கொள்கிறாய்.

உன்னிடம் நான், என்னை ‘ஆம்பளை‘ என்று நிரூபிப்பதற்கானக் கட்டாயத்தில் இருக் கிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *